நூல் அறிமுகம்: உள்ளும் வெளியும் – ஆய்வின் பரவசம்

உள்ளும் வெளியும் - ஆய்வின் பரவசம் ஆய்வெழுத்தின் வரையறை மற்றும் வடிவு ஒழுங்கினைக் குலைத்து தேடலைத் தூண்டும் முனைப்புடன் வெளிவந்திருப்பதுதான் “உள்ளும் வெளியும்” கொண்டிருக்கும் தனித்துவமாகிறது. புலம்பெயர் இலக்கியம் குறித்தான உரையாடலில் தவிர்த்துவிடமுடியாமல் நமக்குமுன் தோன்றுவது குணேஸ்வரனின் விம்பம்தான். அந்தளவிற்கு தாடனம் வந்துவிட்டது அவருக்கு. எந்த வகைப்பாட்டிலும் அவரால் தேய்ந்தெழுதமுடிகிறது. எனது வாசிப்பனுபவத்தில் குறிப்பிடுவதானால் அவர் தன்னையோர் ஆய்வாளனாக முன்னிலைப்படுத்தாமல் வாசகனாகவே தொடர்ந்தும் முன்னிலைப்படுத்தி வருகிறார். உள்ளும் வெளியும் பிரதியில் நேர்ந்திருப்பதுமிதுதான். உள்ளடக்க ரீதியில் வகைப்படுத்தினால் நான்கு உள்ளும் ஐந்து வெளியுமாக ஒன்பது கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இதிலும் இரு கட்டுரைகள் ஆய்வு நோக்கற்றவை. எவ்வாறாயினும் எல்லாக் கட்டுரைகளுமே பொதுநிலைப்பட்ட வாசிப்புக்கேற்றதாகவே எழுதப்பட்டுள்ளன.  ஒவ்வொரு பக்கத்திலும் குணேஸ்வரனின் மெய்யான ஈடுபாட்டையும் அர்ப்பணிப்பையும் உணர முடிகிறது. ஓவ்வொரு கட்டுரையையும் ஓர் ஆய்வாக மட்டும் அணுகாமல் தனது வாசிப்பனுபவத்தில் கிளர்ந்த பரவசத்தையும் திளைப்பையும் வாசகனிடத்தில் தொற்றவைத்துவிடும் முனைப்புடனும் அணுகுகிறார். ஓர் எளிமையானதும் நுட்பமானதுமான புனைவுத் தன்மை  கொண்ட மொழியைக் கையாள்கிறார். இம்மொழியானது வாசகனை முழு ஈடுபாட்டுடன் அணுகச் செய்வதில் பெரும்பாங்காற்றுகிறது என்பதுடன் புதிய தளங்களுக்கும் இட்டுச் செல்கிறது.

Continue Reading →

ஈழத்து அமுதுவின் இலக்கியத் தொண்டுகள்

இளவாலை அமுதுப் புலவர்' பேராசிரியர் கோபன் மகாதேவாஇந்த ஆய்வுக் கட்டுரையின் நாயகர் 2010 மாசியில் தனது 91வது வயதில் மறைந்த ‘இளவாலை அமுதுப் புலவர்’ என்று வழங்கப்பட்டு வந்த ஈழத்தின் பழுத்த நூலாசிரியராகிய (த.) சவரிமுத்து அமுதசாகரன் அடைக்கலமுத்து ஆவார். அவரின் 10-நூல்களுள் சிறந்த மூன்று வரலாற்று நூல்கள், இரண்டு கவிதை நூல்களை அடக்கி, 1200-பக்கங்களுடன் 2008இன் ‘தொகுப்புநூல்’ லண்டனில் 2010-தையில் வெளிவந்தது. எனது இச் சிற்றாய்வு பெருமளவில் அத் தொகுப்பு நூலையும் அவ்வாசிரியருடன் நான் கொண்டிருந்த 10-12 வருட இலக்கியத் தொடர்பையுமே தளமாகக் கொண்டு அத் தொகுப்பிலுள்ள ஐந்து நூல்களையும் அங்குள்ள வரிசையிலேயே திறனாய்வாக விவரிக்கின்றது.

1. அன்பின் கங்கை அன்னை தெரேசா (234-பக்கம்): இப் பகுதி-நூலுக்கு அருட்தந்தை எஸ்.ஜே. இம்மானுவேல், அன்று ஈழகேசரி ஆசிரியரான ஈ.கே. ராஜகோபால், கணக்காளர்-எழுத்தாளர் ஐ. பேதுருப்பிள்ளை, கலாநிதி அ.பி. ஜெயசேகரம் அடிகள் ஆகிய நால்வர் முன்னுரையும், ஆசிரியர், தன் வாசற்படி உரையையும் எழுதியுள்ளனர். கவிஞர் வைரமுத்து ஒரு வாழ்த்துக் கவிதை புனைந்துள்ளார். இந்நூல் ‘பூங்கொடி மாதவன் சபைத்’ துறவிகளுக்கும் தன் மனைவி ஆசிரியை திரேசம்மாவுக்கும் காணிக்கையாக 1997-2002-2005 இல் மூன்றுமுறை பதிப்பித்து வெளிவந்த, அமுதுவின் முதலாவது ‘பஞ்சாமிர்தம்’.

Continue Reading →

ஈழத்து அமுதுவின் இலக்கியத் தொண்டுகள்

இளவாலை அமுதுப் புலவர்' பேராசிரியர் கோபன் மகாதேவாஇந்த ஆய்வுக் கட்டுரையின் நாயகர் 2010 மாசியில் தனது 91வது வயதில் மறைந்த ‘இளவாலை அமுதுப் புலவர்’ என்று வழங்கப்பட்டு வந்த ஈழத்தின் பழுத்த நூலாசிரியராகிய (த.) சவரிமுத்து அமுதசாகரன் அடைக்கலமுத்து ஆவார். அவரின் 10-நூல்களுள் சிறந்த மூன்று வரலாற்று நூல்கள், இரண்டு கவிதை நூல்களை அடக்கி, 1200-பக்கங்களுடன் 2008இன் ‘தொகுப்புநூல்’ லண்டனில் 2010-தையில் வெளிவந்தது. எனது இச் சிற்றாய்வு பெருமளவில் அத் தொகுப்பு நூலையும் அவ்வாசிரியருடன் நான் கொண்டிருந்த 10-12 வருட இலக்கியத் தொடர்பையுமே தளமாகக் கொண்டு அத் தொகுப்பிலுள்ள ஐந்து நூல்களையும் அங்குள்ள வரிசையிலேயே திறனாய்வாக விவரிக்கின்றது.

1. அன்பின் கங்கை அன்னை தெரேசா (234-பக்கம்): இப் பகுதி-நூலுக்கு அருட்தந்தை எஸ்.ஜே. இம்மானுவேல், அன்று ஈழகேசரி ஆசிரியரான ஈ.கே. ராஜகோபால், கணக்காளர்-எழுத்தாளர் ஐ. பேதுருப்பிள்ளை, கலாநிதி அ.பி. ஜெயசேகரம் அடிகள் ஆகிய நால்வர் முன்னுரையும், ஆசிரியர், தன் வாசற்படி உரையையும் எழுதியுள்ளனர். கவிஞர் வைரமுத்து ஒரு வாழ்த்துக் கவிதை புனைந்துள்ளார். இந்நூல் ‘பூங்கொடி மாதவன் சபைத்’ துறவிகளுக்கும் தன் மனைவி ஆசிரியை திரேசம்மாவுக்கும் காணிக்கையாக 1997-2002-2005 இல் மூன்றுமுறை பதிப்பித்து வெளிவந்த, அமுதுவின் முதலாவது ‘பஞ்சாமிர்தம்’.

Continue Reading →

பதிவுகளில் அன்று: HERE IS THE RUB!

‘பதிவுகளில் அன்று’ பகுதியில் திஸ்கி மற்றும் அஞ்சல் எழுத்துருக்களில் பதிவுகளில் அன்று வெளியான படைப்புகள் ஒருங்குறிக்கு மாற்றப்பட்டு அவ்வப்போது பிரசுரமாகும். அந்த வகையில் R.P. ராஜநாயஹம் எழுதிய இக்கட்டுரையும் பிரசுரமாகின்றது. – பதிவுகள் –

பகுதி 1
 R.P. ராஜநாயஹம்Criminals are Creative Artists  என்று சொல்லப்படுகிறதல்லவா? அதை ஜெயமோகனும் நாஞ்சில் நாடனும் மெய்யாக்கியுள்ளார்கள். ‘ஊட்டியில் தளையசிங்கத்திற்கு நடந்த தொழுகையின் ஒரு பகுதி காலச்சுவடு 42ல் வெளி வந்த பிறகு 43வது இதழில் மோகனரங்கன், நாஞ்சில் நாடன் அவதூறுகளுக்கு கண்ணன் எதிர்வினையாற்றிய போது புதுமைப்பித்தன் பிரச்சினையில் சொல்புதிதின் நிலைபாடு பற்றி ஒரு நேரடி விவாதத்திற்கு வருமாறு ஜெயமோகனுக்கும் வேதசகாயகுமாருக்கும் பகிரங்கமாக சவால் விட்டிருந்தார்.  அதை எதிர்கொள்ளும் தைரியம் இல்லாத பெட்டைத்தனம் தான் ‘நாச்சார் மட விவகாரம்’ என்று விகாரமாக வெளிப்பட்டது. அப்போது திண்ணையில் கண்ணனின் விவாதமாக வந்ததில் கீழ்கண்டவாறு ஒரு பகுதியில் குறிப்பிட்டிருந்தார். ‘ராஜநாயஹத்தை இன்றுவரை நான் சந்தித்ததில்லை.  காலச்சுவடின் எந்த அரங்கிலும் அவர் கலந்து கொண்டதில்லை. ஊட்டி தளையசிங்கம் இலக்கிய அரங்கை பற்றிய ராஜநாயஹத்தின் பதிவு காலச் சுவடுக்கு வரும்வரை அவரோடு எந்தத் தொடர்பும் இருந்ததில்லை.  அவரை நாங்கள் அனுப்பி வைத்ததாக ஜெயமோகன் ஆதாரமின்றி அவதூறு செய்து வருகிறார்.  ராஜநாயஹம் அவர் பெயரில் கட்டுரை எழுதினார்.  புனைபெயரில் அல்ல.  கட்டுரையாக எழுதினார். புனைவாக அல்ல. ‘  என்று எழுதி, பின் தொடர்ந்து எழுதும்போது ‘ஆர்.பி. ராஜநாயஹம் பதிவுக்கு எதிர்வினையாக நாஞ்சில் நாடன் காலச்சுவடுக்கு ஒரு கடிதம் அனுப்பினார்.  ஜெயமோகன் அதன்  நகலை நாடனிடமிருந்து பெற்று திண்ணைக்கு மின்னஞ்சலில் அனுப்பி வைத்தார்.  அதில் நாஞ்சில் நாடனின் அனுமதியின்றி ஜெயமோகன் பல சொற்களை நீக்கியும் பல இடங்களில் தன் கருத்துக்களை சேர்த்தும் அனுப்பியுள்ளார்.  நாஞ்சில் நாடனின் கையெழுத்துப் பிரதி என்னிடம் உள்ளது.  திண்ணைக்கு  அதன் புகைப்பட நகலை என்னால் அனுப்பி வைக்க முடியும்.  என்னுடைய இந்தக் குற்றச்சாட்டை ஆதாரத்துடன் மறுக்கும்படி ஜெயமோகனை கேட்டுக் கொள்கிறேன்.’  என்று சவால் விட்டிருந்தார். அப்போது ஜெயமோகன் மூச்சேவிடவில்லை.  தொடர்ந்து அந்தர் தியானம்.  தேள் கொட்டிய திருடனின் நிலை.

Continue Reading →

லண்டனில் நெஞ்சத்தைக் கொள்ளை கொண்ட சமர்ப்பணம்

‘லண்டன் மேடைகள் சனி, ஞாயிறு தினங்களில் கலை, இலக்கியம், நினைவுதின விழாக்கள், பரிசளிப்பு விழாக்கள், பாடசாலை விழாக்கள் என்று களை கட்டி பிரகாசித்துக்கொண்டே இருக்கின்றது. லண்டன் தமிழ் கராசாரத்தை பேணும் வகையில் கலைகளில் ஆர்வம் காட்டி வருவதையும் அவதானிக்க முடிகின்றது. இசைச் சூழல் உடலைத் தட்டி எழுப்புகிறது. பாதிக்கப்பட்ட உணர்ச்சிகளை கிளர்த்திக் குணப்படுத்துகிறது. மனதைக் குவியச் செய்கிறது. ஆரோக்கியமாக வாழ வைக்கின்றது. என்றெல்லாம் இசையின் இனிமையில் மயங்காதவர்கள் யாருமே இல்லை என்பதை எல்லாம் நாம்; அறிவோம். அந்த வகையில் செல்வி பி;ரித்தி மகேந்திரனின் சமர்ப்பணம் அமைந்திருந்தது என சிறப்பு விருந்தினராக வருகை தந்து பேசிய ராமநாதன் குருக்கள் தனது உரையில் கூறியிருந்தார்.’‘லண்டன் மேடைகள் சனி, ஞாயிறு தினங்களில் கலை, இலக்கியம், நினைவுதின விழாக்கள், பரிசளிப்பு விழாக்கள், பாடசாலை விழாக்கள் என்று களை கட்டி பிரகாசித்துக்கொண்டே இருக்கின்றது. லண்டன் தமிழ் கராசாரத்தை பேணும் வகையில் கலைகளில் ஆர்வம் காட்டி வருவதையும் அவதானிக்க முடிகின்றது. இசைச் சூழல் உடலைத் தட்டி எழுப்புகிறது. பாதிக்கப்பட்ட உணர்ச்சிகளை கிளர்த்திக் குணப்படுத்துகிறது. மனதைக் குவியச் செய்கிறது. ஆரோக்கியமாக வாழ வைக்கின்றது. என்றெல்லாம் இசையின் இனிமையில் மயங்காதவர்கள் யாருமே இல்லை என்பதை எல்லாம் நாம்; அறிவோம். அந்த வகையில் செல்வி பி;ரித்தி மகேந்திரனின் சமர்ப்பணம் அமைந்திருந்தது என சிறப்பு விருந்தினராக வருகை தந்து பேசிய ராமநாதன் குருக்கள் தனது உரையில் கூறியிருந்தார்.’   ‘கானடா ராகத்தில் ராமநாத் சீனிவாச ஐயங்கர் இசையமைத்த கண்ட ஜாதி அட தாளத்தில் அமைந்த ‘நேர நம்’ வர்ணத்துடன் கச்சேரியை ஆரம்பித்த செல்வி பிரித்தி மகேந்திரன் முத்துசுவாமி டிக்சிதர் இயற்றிய ஆதி தாளத்தில் – ஹம்சத்தவனி ராகத்தில் அமைந்த வாதாபி கணபதிம், மற்றும் எம்.என். தண்டபாணிதேசிகர் இயற்றிய அமிர்தவக்கினி ராகத்தில் – தாளம் ஆதியில் அமைந்த ‘என்னை நீ மறவாவாதே’, தியாகராஜ சுவாமிகள் கௌளை ராகம் – தாளம் ஆதியில் அமைந்த பஞ்ச ரத்தின கீர்த்தனை ‘தூ டூ கு கல’, மேலும் ‘பரோவா பாரமா’ என்ற பௌகுதாரி ராகத்தில் அமைந்த தியாகராஜ சுவாமிகள் இயற்றிய பாடல், நாகபூஷணி அம்மனுக்கு கே. மணிபல்வனின் தந்தை கனகரட்னம் இயற்றிய ‘எத்தனை காலம்’ என்ற பாடலுக்கு ஆதி தாளம் – காப்பி ராகத்தில் கே. மணிபல்லவம் இசையமைத்த பாடல் ,  பிரித்தியின் குரு மணிபல்லவம் கே. சாரங்கன் இயற்றி இசையமைத்த சிவரஞ்சனி ராகத்தில் – தாளம் ஆதி – தில்லானா போன்ற பல ராகங்களில் அமைந்த பாடல்களை பாடி கச்சேரியை இனிமை, கம்பீரம், குழைவு, சோகம், ஏக்கம் நிறைந்த பாவங்களால் அவரது இசை மாறிமாறி ஒலித்தமை பாராட்டுக்குரியது என மேலும் அவர் பாராட்டினார்.’

Continue Reading →

கணித்தமிழ்: சமூக வலைதளங்கள் – நன்மை தீமைகள்.

கணித்தமிழ்: சமூக வலைதளங்கள் – நன்மை தீமைகள்.வளர்ந்துவரும் அறிவியல் முன்னேற்றத்தில் கணினிப் பயன்பாடுகள் மிக இன்றியமையாத பங்கு வகிக்கின்றது. கணினிப் பயன்பாடுகள் இல்லாத துறைகளே இல்லை எனலாம். இன்று கிராமங்களில் கூட இணையப்பயன்பாடு என்பது மிக சாதாரணமாக உள்ளது. எனவே இணையக் கலாச்சாரம் அதீத வளர்ச்சியடைந்து வருகிறது. இன்று இணையம் ஒரு ரூபாய் நாணயத்தைப்போல நன்மை, தீமைகள் என இரண்டு பக்கங்களைக் கொண்டுள்ளது.

வலைதளங்கள்
உலகளாவிய அளவில் பல்வேறு வலைதளங்கள்  உலகத்தகவல் அனைத்தையும் நம் கண்முன்னே நம் இல்லத்திலேயே அள்ளித்தருகிறது. இதில் பொழுதுபோக்கிறகாக அமைக்கப்பட்ட பல சமூக வலைதளங்களும் அடங்கும்.

சமூக வலைதளங்கள்
இணையம் வழியாக சமூக வலைதளங்கள் அனைத்து வகை மக்களின் வாழ்வில் ஒரு அங்கமாக மாறிவிட்டன. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஈர்க்கும் வகையில் சமூக வலைதளங்களின் பங்கு அமைகிறது. இத்தகைய சமூக வலைதளங்களினால் பல நன்மைகள் இருந்தாலும் தற்சமயம் பல குற்றங்களும் பெருகி வருகின்றன என்பதை மறுக்க இயலாது. பல்வேறு இணையங்களும், சமூக வலைதளங்களும் மக்களின் முன்னேற்றத்திற்காக வடிவமைப்பட்டவையாக அமைந்துள்ளன.

Continue Reading →

கனடாவில் சிற்றிதழ்களின் தேக்கநிலை

நூலாசிரியர் அகில்இலங்கையில் நடந்த யுத்தம் ஈழத்தமிழ் மக்களை பல்வேறு நாடுகளுக்கும் புலம்பெயர வைத்தது. இவ்வாறு புலம்பெயர்ந்த மக்களின் பெரும்பாலானவர்கள் கனடாவில் வாழ்கிறார்கள். நாம் வாழும் கனடாவில் மட்டும் மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்ட ஈழத்தமிழர்கள் வாழ்கிறார்கள். புலம்பெயர் நாடுகளில் வாழும் படைப்பாளிகளில்; கணிசமானோர் கனடாவில் வாழ்கி;றார்கள் எனலாம். கவிஞர்கள், நாவலாசிரியர்கள், சிறுகதையாளர்கள், பத்தி எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் என்று படைப்பாளிகளின் பட்டியல் முடிவற்றது. இவர்களது படைப்புக்களின் தொகையும் எண்ணிலடங்காதது. குறிப்பாக சிற்றிதழ்கள், பத்திரிகைகளின் தோற்றம் சமீப காலத்தில் அதிகரித்துக்கொண்டே வருகிறது. கணினி தெரிந்தவரெல்லாம் பத்திரிகை நடத்தலாம் என்றளவில் இதன் தோற்றம் இருந்தாலும் மழைக்கால விட்டில்களாக மறைந்துவிடுகின்ற இதழ்களே அதிகம். இக்கட்டுரையின் நோக்கம் அவ்வாறான இதழ்களின் ஆழ, அகலங்களை ஆராய்வதல்ல. நிறைய எழுத்தாளர்கள் வாழ்கின்ற இந்த கனடா நாட்டில் சிற்றிதழ்கள் எதுவும் ஏன் தொடர்ந்து  வெளிவரவில்லை என்பது பற்றி நோக்குவதே  ஆகும்.

Continue Reading →