இருக்கிற கடவுள்களும், இனி வரப் போகும் கடவுள்களும்! கை விட்ட தங்கர்பச்சானின் மனிதர்கள். தங்கர்பச்சான் கதைகள் தொகுப்பு

சுப்ரபாரதிமணியன்தங்கர் பச்சானின் முதல் சிறுகதைத் தொகுப்பு ” வெள்ளை மாடு ”  வெளிவந்த போது முந்திரித் தோட்டத்து மனிதர்களின் வாழ்வியலை  அவ்வளவு நகாசு தன்மையுள்ளதாக இல்லாமல் வெளிப்பட்டிருபதாக ஒரு விமர்சனம வந்தது, பின் நவீனத்துவ எழுத்து  தீவிரமாக இருந்த காலகட்டம் அது. பின்நவீனத்துவக் காலகட்டத்தில் கலை அம்சங்களும் நகாசுத்தன்மையும் கூட அவலட்சணமே.காலம் காலமாக ஒடுக்கப்பட்ட மக்களின் விவரிப்பில் இலக்கண நேர்த்தியோ  நகாசோ எதிர்பார்பது ஒரு நாகரீக சமூகமாகாது. அந்தக் குறறச்சாட்டு போல் அக்கதைகள் இல்லை.பசியின் கோரம் அடுப்புக்குத் தெரியாது  தீவிரப் பிரச்சினைக்கு நகாசு தெரியாது. தங்கர்பச்சானின் கதாபாத்திரங்கள்  பின்நவீனத்துவம் கொண்டாடும் விளிம்பு நிலை மனிதர்களே. விவசாயக்கூலிகள், சம்சாரிகள், கரும்புத்தோட்டத் தொழிலாளர்கள், வேதனையிலேயே உழன்று கொண்டிருக்கும் பெண்கள் எனலாம். கொம்புக்கயிறு  இல்லாத மாடு அவலட்சணமாக இருப்பது போல் அவலட்சனமான விளிம்பு நிலை மக்கள் இவருடையது.

குடிமுந்திரி கதையில் முந்திரி   மரத்தின் மீது ஏறி நின்று நெய்வேலி  சுரங்கக கட்டிடங்களை, புகைபோக்கிகளைப்  பார்க்கும் சிறுவர்கள் போல தங்கர்பச்சான் தோளில் ஏறி நின்று வாசகர்கள்  கடலூர்  மக்களின் வாழ்வியலைப் பார்க்க முடிகிறது.இதில் இவர் கையாளும் மொழி  உணர்ச்சிப்பிழமான கதை சொல்லல் மொழியாகும்.அந்த பாதிப்பே அவரின் திரைப்பட மொழியில் பல சமயஙக்ளில் உணர்ச்சி மயமான காட்சி அமைப்புகளால்பாதிப்பு ஏற்படுத்தி பலவீனமாக்குகிறது.. திரை தொழில் நுட்பம் தீவிர இலக்கியத்திலிருந்து பிறந்தது எனப்தையொட்டிய அவரின் காமிராமொழியும், சொல்லும் தன்மையும் குறிப்பிடத்தக்கதாக அமைந்துள்ளன.

Continue Reading →

மாதாந்த இலக்கிய கலந்துரையாடல்

கனடா: மாதாந்த இலக்கிய கலந்துரையாடல் நிகழ்ச்சி நிரல் நிகழ்ச்சி நிரல்
 
தமிழில் காலக்கணித இலக்கியம்

உரை: கலாநிதி பால. சிவகடாட்சம்

கருத்துரை வழங்குவோர்
கலாநிதி கௌசல்யா சுப்பிரமணியன்
வைத்திய கலாநிதி இ.லம்போதரன்
திரு.சிவ.ஞானநாயகன்
திருமதி லீலா சிவானந்தன்

Continue Reading →

சிறுகதை: அறிவு

navajothy_baylon_4.jpg - 21.10 Kb   ‘அறிவு, என்ன செய்துகொண்டிருக்கிறாய்?’

   ‘ஏன் என்ன பிரச்சினை?’

      ‘அப்ப உனக்கு போன்’ எடுக்கக்கூடாதோ?’

   ‘தேவையில்லை என்று சொல்லி அடித்து ‘போன்’ றிசீவரை வைக்கவேணும்போல் இருந்தது அவளுக்கு. நெஞ்சுக்குள்ள  இனம் தெரியாத கவலை,

யோசனை, எல்லாம் தான் அவளுக்கு. என்ன  ஒவ்வொருநாளும் ‘போன்’ செய்து நடக்கிற செய்திகள் எல்லாம் சொல்ல வேண்டும். அதுதான்

அவளுக்குக் கோபம் ஏறியிட்டுது போல இருக்கு.

   ‘யாருக்கு ‘போன்’ எடுத்தனீங்க?’ அவள் கேட்டாள்.

Continue Reading →