நூல் அறிமுகம்: எனக்கு மட்டும் உதிக்கும் சூரியன்

- மு. நித்தியானந்தன் - “watch our girls march fearless of the fight 
Torch of learning burning ever bright”     – இளவாலை கன்னியர் மடத்தின் பாடசாலைக் கீதம்.

இளவாலைக் கன்னியர் மடத்தில் குளிர் நிழல் பரப்பும் மகோக்கனி மரத்தில் சிறகடித்துத் திரிந்த வானம்பாடி  ஊசிப்பனித் தேசத்தில் தரித்து நின்று தன் வாழ்வின் சோபனங்களைத் தொலைத்துவிட்ட துயரங்களின் துளிகளில் இந்தக் கவிதைத் தாள்கள் நனைந்திருக்கின்றன.

      ‘நடு இரவில்
      எனக்கு மட்டும் சூரியன் உதிக்கிறான்
      சூரியன் உதிக்கும் பொழுது
      இருள் தோன்றுகின்றது’

என்ற நவஜோதியின் வரிகள் ஒரு பெண் கவியின் சூக்கும உலகின் சிக்கலான பரிமாணங்களைக் கோடிட்டுக் காட்டுகின்றன.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 43: முகநூற் குறிப்புகள் சில.

கவிதை: பேராசை மிக்க கவிஞன்

– அவ்வப்போது முகநூல் பக்கங்களில் நண்பர்களுடன் பகிர்ந்து கொண்ட பல்வேறு விடயங்கள் பற்றிய குறிப்புகளில் சிலவற்றை இம்முறை பதிவுகள் வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ளலாமெனக் கருதுகின்றேன்.  –

 

நல்ல எழுத்தும், வாசிப்பும்!
 
நல்ல எழுத்து என்பது எப்பொழுதும் , வாழ்க்கை முழுவதும் ஒரு நண்பரைப்போல் கூட வருவது. இவ்விதம் வரக்கூடிய எழுத்துகளைத்தான் நான் நல்ல எழுத்து என்பேன். என்னைப் பொறுத்தவரையில் தத்தயேவ்ஸ்கியின் ‘குற்றமும், தண்டனையும்’, ‘அசடன்’, ‘கரமசோவ் சகோதரர்கள்’, டால்ஸ்டாயின் போரும், சமாதானமும், அன்னா கரீனினா, புத்துயிர்ப்பு , வால்ட்டயரின் ‘கேண்டிட்’, டானியல் டிபோவின் ராபின்சன் குரூசோ, ஹெமிங்வேயின் ‘கடலும், கிழவனும்’, ஜான் மாட்டலின் ‘பை’யின் வாழ்வு, எம்.டி.வாசுதேவன் நாயரின் ‘காலம்’, எஸ்.கே.பொற்றேகாட்டின் ‘ஒரு கிராமத்தின் கதை’, அதீன் பந்த்யோபாத்யாய’வின் ‘நீல கண்டப் பறவையைத் தேடி’, பாரதியார் கவிதைகள், ‘மோபிடிக்’, ஜானகிராமனின் ‘மோகமுள்’, ‘செம்பருத்தி’, அறிஞர் அ.ந.கந்தசாமியின் எழுத்துகள், ஜெயகாந்தனின் சிறுகதைகள், ‘ஒரு மனிதன், ஒரு வீடு , ஒரு உலகம்’ (நாவல்), ஜேர்சி கொசின்சிகியின் Being There போன்ற புத்தகங்களைக் கூறலாம். இவர்களை ஓர் உதாரணத்துக்குக் கூறினேன்.

Continue Reading →

சிறுகதை: துயர் ஆரஞ்சுகளின் நிலம்

சிறுகதை: துயர் ஆரஞ்சுகளின் நிலம்ஜப்பாவிலிருந்து ஆக்ரிக்கு நாங்கள் புறப்படத் துவங்கும் நிலையில் எங்கள் புறப்பாடு ஏதும் துயர் கொண்டதாயில்லை. விழாக்காலங்களில் மற்றவர்கள் எவ்வாறு அயல் ஊருக்கு ஒவ்வொரு ஆண்டும் செல்வரோ, அவ்வாறே நாங்களும் செல்ல நினைத்தோம்.  ஆக்ரியிலும் எமது நாட்கள் நன்கு கழிந்தன. எவ்விதச் சம்பவங்களுமின்றி. எனக்கு இந்நாட்கள் பிரியமானவை. ஏனெனில் நான் அந்நாட்களில் பள்ளி செல்ல வேண்டியிருந்ததில்லை, சூழல் எதுவாயினும், ஆக்ரியில் அன்றிரவு நிகழ்ந்த பெருந்தாக்குதலைத் தொடர்ந்து பின் நிகழ்ந்தவைகள் வேறொன்றை உணர்த்தின. அவ்விரவு கசப்பாக, கொடூரமாகக் கழிந்தது; ஆண்கள் சோர்வுற, பெண்கள் ஆழ்ந்து பிரார்த்தனை செய்ய என, நீ, நான் நம் வயதொத்தவர்கள் இந்நிகழ்வுகளை உணர்ந்து கொள்ளும் அளவு முதிர்ச்சியற்றவர்களெனினும் ஆதி அந்தம் என எதுவும் விளங்கவில்லை எனினும்- உண்மை மெதுவாக துலங்க ஆரம்பித்தது. காலையில், யூதர்கள் பின்வாங்கும் நிலையில்  அவர்கள் எரிச்சலுடன் மிரட்டல் விடுத்தவாறு இருந்தபோது– ஒருபெரிய லாரி ஒன்று எங்கள் வீட்டின் முன் வந்து நின்றது.. படுக்கைகளின் ஒரு சிறு தொகுப்பு இங்கும் அங்கும் விரைவாக, எரிச்சலுடன் எறியப்பட்டது. நான் வீட்டில் பழஞ்சுவர் ஒன்றின் மீது வியந்து நின்று கண்ட நிலையில் உனது தாய், அத்தை மற்றும் குழந்தைகள் லாரியில் ஏறிக் கொண்டிருப்பதைக் கண்டேன். உன்னுடைய தந்தை ,உன்னை, உனது சகோதரர்கள் மற்றும் சகோதரிகளை பொருட்கள் மீது உள்ளெறிந்தவாரிருந்தார். உனது தந்தை என்னைப் பற்றி ஓட்டுநரின் மேற்புறம் காணப்பட்ட பலகைக்கு மேலாக உயர்த்தினர்; அங்கு எனது சகோதரன் ‘ரியாத்’ அமைதியாக அமர்ந்திருந்தான். நான் ஒரிடத்தில் அமைதியாக அமரும் முன் லாரி நகரத் தொடங்கியது. அன்பிற்குரிய ஆக்ரி, ராஸ் நாகுராவிற்கு செல்லும் சாலை எம்மை அழைத்துச் சென்ற வழியில் வாகனம் கிளம்பியதும் கண்களிலிருந்தும் மறையத் துவங்கியது.

Continue Reading →

ஜூன் 2014 கவிதைகள்!

ஜூன் 2014 கவிதைகள்!கடற் திராட்சைகள்

மூலம்: டெரெக் வால்காட்
தமிழில்: ரா பாலகிருஷ்ணன்

ஒளியில் சரியும் அப்பாய்மரம்
தீவுகளால் களைப்புற்றுள்ளது
இரு பாய்மரப் படகொன்று கரிபியனை நோக்கி
வீடடைய ஏஜியன் வழி இல்லம் நோக்கி
ஓடிசியுஸ் செல்லலாம்

திராட்சைக் கொத்துகளின் கீழ்
தந்தையும் மகனும் கொண்ட பேராவல்
கல் பறவையின் ஒவ்வொரு ஓலத்திலும்
நசிக்கவின் பெயரை உணரும் காமுகன் போல்

Continue Reading →