தாமரா வீட்டை விட்டுப் போய் பத்து நாட்களாகிறது! இன்றைக்கு வருவாளோ.. இன்றைக்கு வருவாளோ, என எண்ணி ஏமாந்த பொழுதுகளைப் போலவே இன்றைய நாளும் போய் விடுமோ என்ற ஏக்கம் மனதை ஆக்கிரமித்திருக்கிறது. சோகம் அவனைக் குப்புறப் போட்டு அழுத்தியது. படுக்கையிலிருந்து எழவும் மனதில்லை. அழவேண்டும் போன்றதொரு உணர்வு தொண்டையை அடைத்துக்கொண்டிருக்கிறது. அழுகை எதற்காக? தாமராவுக்காகவா? தாமரா வீட்டை விட்டுப் போன நாளிலிருந்து அவனுக்கு, தான் தனிமைப்பட்டுப்போனது போன்றதொரு விரக்தி மனதை எரித்துக்கொண்டிருந்தது. தன் உணர்வுகளை அவள் புரிந்து கொள்ளவில்லையே என மனம் வெதும்புகிறது. அப்படி அலட்சியப்படுத்தினால் அதற்கு அழுகை ஏன்? தாமரா தனக்கு யார்? என்ன உறவு? உறவு ஏதுமில்லையெனில் ஒன்றுமே இல்லையென்றாகிவிடுமா? அவனுக்குப் புரியவில்லை. எனினும் அழுகை தேவைப்படுகிறது. எதற்காகவோ என்று காரணம் தெளிவாகாவிடினும் அழுது தீர்க்கவேண்டும் போலிருக்கிறது.
அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் வருடாந்த தமிழ் எழுத்தாளர் விழா இம்முறை கலை – இலக்கிய விழாவாக நடத்தப்படவிருப்பதாக சங்கத்தின் செயற்குழு அறிவித்துள்ளது. எதிர்வரும் ஜூலை மாதம் 26 ஆம் திகதி (26-07-2014) சனிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு மெல்பனில் St.Benedicts College மண்டபத்தில் (Mountain Highway , BORONIA , Victoria) தொடங்கும் கலை – இலக்கிய விழா இரவு 10 மணிவரையில் நடைபெறும். பகல் அமர்வில் இலக்கிய கருத்தரங்கு மற்றும் நூல்களின் விமர்சன அரங்கும் மாலை 6 மணிக்கு தொடங்கும் நிகழ்வில் இசை நிகழ்ச்சி மற்றும் நாட்டியநாடகம் முதலான பல்சுவை நிகழ்ச்சிகளும் இடம்பெறும். இவ்விழாவில் மெல்பன் – சிட்னி – பேர்த் – பிரிஸ்பேர்ண் ஆகிய நகரங்களிலிருந்து எழுத்தாளர்களும் கலைஞர்களும் கலந்துகொள்ளவிருக்கின்றனர். பகல் பொழுதில் நடைபெறவுள்ள இலக்கிய கருத்தரங்கில் பார்வையாளர்களும் கருத்துச்சொல்லி கலந்துரையாடத்தக்கதாக நிகழ்ச்சி ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியா தமிழ் எழுத்தாளர்களின் நூல்கள் மற்றும் இங்கு முன்பு வெளியான தற்பொழுது வெளியாகும் இதழ்களின் கண்காட்சியும் இடம்பெறும்.
எனது 7 ஆவது நூலான ‘திறந்த கதவுள் தெரிந்தவை ஒரு பார்வை’ நூல் வெளியீட்டு விழா 2014, ஜுன் 07 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு இல 58, தர்மாராம வீதி, வெள்ளவத்தையில் அமைந்துள்ள பெண்கள் கல்வி ஆய்வு நிறுவன கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது. பூங்காவனம் கலை இலக்கிய வட்டம் ஏற்பாடு செய்திருக்கும் இந்நிகழ்வு தர்காநகர் தேசிய கல்வியியல் கல்லூரி முன்னாள் உபபீடாதிபதி தாஜுல் உலூம் கலைவாதி கலீலின் தலைமையில் நடைபெறும். இந்நிகழ்வில் கௌரவ அதிதியாக ஊடக தகவல் ஒளிபரப்பு அமைச்சின் மேற்பார்வை பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் ஏ.எச்.எம். அஸ்வர் அவர்களும், சிறப்பு அதிதிகளாக டாக்டர் புரவலர் அல்ஹாஜ் ஏ.பீ. அப்துல் கையூம் (ஜே.பி., உளவளவியலாளர் யூ.எல்.எம். நௌபர், திரு. திருமதி. சிரிசுமண கொடகே, திருமதி தேசமான்ய மக்கியா முஸம்மில் ஆகியோரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.