ஜூன் 2014 கவிதைகள்!

ஜூன் 2014 கவிதைகள்!கடற் திராட்சைகள்

மூலம்: டெரெக் வால்காட்
தமிழில்: ரா பாலகிருஷ்ணன்

ஒளியில் சரியும் அப்பாய்மரம்
தீவுகளால் களைப்புற்றுள்ளது
இரு பாய்மரப் படகொன்று கரிபியனை நோக்கி
வீடடைய ஏஜியன் வழி இல்லம் நோக்கி
ஓடிசியுஸ் செல்லலாம்

திராட்சைக் கொத்துகளின் கீழ்
தந்தையும் மகனும் கொண்ட பேராவல்
கல் பறவையின் ஒவ்வொரு ஓலத்திலும்
நசிக்கவின் பெயரை உணரும் காமுகன் போல்

Continue Reading →

பண்டைத் தமிழர் வாழ்வியலில் நிலவிய களவொழுக்கம் – கற்பொழுக்கம்

நுணாவிலூர் கா. விசயரத்தினம் (இலண்டன்)ஆறறிவு படைத்த ஆண், பெண் ஆகிய இரு பாலாரும் மற்றைய ஓரறிவிலிருந்து ஐயறிவு வரையான உயிரினங்களைவிட மிகவும் விஞ்சிய நிலையில் இருந்து வாழ்ந்து வருகின்றனர். ஓரறிவிலிருந்து ஐயறிவு வரையான எல்லா உயிரினங்களிலும் ஆண், பெண் ஆகிய இனங்கள் உள்ளதென்பதும் நாம் அறிந்த உண்மையாகும். இவ்வாறான உயிரினங்கள் நிறைந்ததுதான் உலகம் என்றாகின்றது. இந்த ஆண், பெண் உறவுதான் உலகை நிலைக்க வைக்கின்றது. இவ்வுறவுக்கு ஏதுவான ஆண், பெண் இனங்களில் ஓர் இனம்தானும் இல்லையெனில் எல்லா இனங்களும் அழிந்து விடும். உயிரினங்கள் இன்றேல் உலகமும் இல்லையெனலாம்.

களவொழுக்கம்
பண்டைத் தமிழர் தம் வாழ்வியலை அகம், புறம் என இரு கூறாய் வகுத்து அறநெறியோடு, இயற்கை வழி நின்று வாழ்ந்து காட்டியுள்ளனர். புறம்- புறவாழ்வியலோடு இணைந்த ஆண்மை சார்ந்த பல்வேறு பணிகளும், வீரம் செறிந்த போரியல் மரபு பற்றியும் எடுத்துக் கூறும். இவை பற்றிச் சங்க நூலான புறநானூறு திறம்பட எடுத்துக் கூறுகின்றது. இங்கே ஆண்கள் முன்னிலை வகிப்பர். அகம்- அகவாழ்வான இன்ப உணர்வுகளோடு இணைந்த இல்வாழ்வு பற்றிய தகைமையைக் கூறும். இவை பற்றி அகநானூறு என்ற சங்க நூலில் விவரமான செய்திகளைக் காணலாம். இதில் ஆண்களும் பெண்களும் பங்கேற்பர்.

Continue Reading →

சிறுகதை: மனக்கணிதம்

சிறுகதை: அகதியும்,  சில நாய்களும்! - சுதாராஜ் -தாமரா வீட்டை விட்டுப் போய் பத்து நாட்களாகிறது! இன்றைக்கு வருவாளோ.. இன்றைக்கு வருவாளோ, என எண்ணி ஏமாந்த  பொழுதுகளைப் போலவே இன்றைய நாளும் போய் விடுமோ என்ற ஏக்கம் மனதை ஆக்கிரமித்திருக்கிறது. சோகம் அவனைக் குப்புறப் போட்டு அழுத்தியது. படுக்கையிலிருந்து எழவும் மனதில்லை. அழவேண்டும் போன்றதொரு உணர்வு தொண்டையை அடைத்துக்கொண்டிருக்கிறது. அழுகை எதற்காக? தாமராவுக்காகவா? தாமரா வீட்டை விட்டுப் போன நாளிலிருந்து அவனுக்கு, தான் தனிமைப்பட்டுப்போனது போன்றதொரு விரக்தி மனதை எரித்துக்கொண்டிருந்தது. தன் உணர்வுகளை அவள் புரிந்து கொள்ளவில்லையே என மனம் வெதும்புகிறது. அப்படி அலட்சியப்படுத்தினால் அதற்கு அழுகை ஏன்? தாமரா தனக்கு யார்? என்ன உறவு? உறவு ஏதுமில்லையெனில் ஒன்றுமே இல்லையென்றாகிவிடுமா? அவனுக்குப் புரியவில்லை. எனினும் அழுகை தேவைப்படுகிறது. எதற்காகவோ என்று காரணம் தெளிவாகாவிடினும் அழுது தீர்க்கவேண்டும் போலிருக்கிறது.

Continue Reading →

மெல்பனில் கலை இலக்கியவிழா 2014!

மெல்பனில் கலை இலக்கியவிழா 2014!அவுஸ்திரேலியா    தமிழ்    இலக்கிய  கலைச்சங்கத்தின்    வருடாந்த  தமிழ் எழுத்தாளர்   விழா   இம்முறை    கலை  –  இலக்கிய    விழாவாக நடத்தப்படவிருப்பதாக    சங்கத்தின்     செயற்குழு    அறிவித்துள்ளது. எதிர்வரும்   ஜூலை   மாதம்  26  ஆம்  திகதி   (26-07-2014)    சனிக்கிழமை பிற்பகல்   2  மணிக்கு   மெல்பனில் St.Benedicts College மண்டபத்தில் (Mountain  Highway ,  BORONIA , Victoria)         தொடங்கும் கலை  – இலக்கிய விழா    இரவு  10   மணிவரையில்  நடைபெறும். பகல்   அமர்வில் இலக்கிய   கருத்தரங்கு   மற்றும்    நூல்களின்    விமர்சன   அரங்கும்    மாலை  6    மணிக்கு    தொடங்கும்    நிகழ்வில்  இசை நிகழ்ச்சி மற்றும்    நாட்டியநாடகம்    முதலான    பல்சுவை  நிகழ்ச்சிகளும் இடம்பெறும். இவ்விழாவில்   மெல்பன் –   சிட்னி –  பேர்த் –   பிரிஸ்பேர்ண் ஆகிய நகரங்களிலிருந்து     எழுத்தாளர்களும்    கலைஞர்களும் கலந்துகொள்ளவிருக்கின்றனர்.  பகல் பொழுதில்   நடைபெறவுள்ள இலக்கிய    கருத்தரங்கில்    பார்வையாளர்களும்    கருத்துச்சொல்லி கலந்துரையாடத்தக்கதாக நிகழ்ச்சி ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியா    தமிழ்    எழுத்தாளர்களின்    நூல்கள்   மற்றும் இங்கு முன்பு வெளியான தற்பொழுது வெளியாகும் இதழ்களின் கண்காட்சியும்     இடம்பெறும்.

Continue Reading →

‘திறந்த கதவுள் தெரிந்தவை ஒரு பார்வை’ நூல் வெளியீட்டு விழா!

'திறந்த கதவுள் தெரிந்தவை ஒரு பார்வை' நூல் வெளியீட்டு விழா!எனது 7 ஆவது நூலான  ‘திறந்த கதவுள் தெரிந்தவை ஒரு பார்வை’ நூல் வெளியீட்டு விழா 2014, ஜுன் 07 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு இல 58, தர்மாராம வீதி, வெள்ளவத்தையில் அமைந்துள்ள பெண்கள் கல்வி ஆய்வு நிறுவன கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.  பூங்காவனம் கலை இலக்கிய வட்டம் ஏற்பாடு செய்திருக்கும் இந்நிகழ்வு தர்காநகர் தேசிய கல்வியியல் கல்லூரி முன்னாள் உபபீடாதிபதி தாஜுல் உலூம் கலைவாதி கலீலின் தலைமையில் நடைபெறும். இந்நிகழ்வில் கௌரவ அதிதியாக ஊடக தகவல் ஒளிபரப்பு அமைச்சின் மேற்பார்வை பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் ஏ.எச்.எம். அஸ்வர் அவர்களும், சிறப்பு அதிதிகளாக டாக்டர் புரவலர் அல்ஹாஜ் ஏ.பீ. அப்துல் கையூம் (ஜே.பி., உளவளவியலாளர் யூ.எல்.எம். நௌபர், திரு. திருமதி. சிரிசுமண கொடகே, திருமதி தேசமான்ய மக்கியா முஸம்மில் ஆகியோரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

Continue Reading →

ஜெயந்தி சங்கருடன் ஒரு நேர்காணல்: முடிவை விட பயணமே முக்கியம்

ஜெயந்தி சங்கர்:1. வணக்கம்!  உங்கள் குடும்பப்பின்னணி குறித்துச் சொல்லுங்கள்

ஜெயந்தி சங்கர்: என் பெற்றோரின் பூர்வீகம் மதுரை. நான் பிறந்ததும் மதுரை. இருப்பினும், பள்ளிவிடுமுறைநாட்களுக்குப் போவது தவிர மதுரையுடன் எனக்கு எந்தத் தொடர்பும் குறிப்பிடும் அளவிற்கு இருந்ததில்லை. அம்மா சாதாரண இல்லத்தரசி. இசை அறிந்தவர். புத்தகம் வாசிக்கும் பழக்கம் கொண்ட அப்பா மத்திய அரசாங்கத்தில் ஒரு பொறியாளராக இருந்தார். வாசிப்பு, தொழில்நுட்பம், புகைப்படம், ஓவியம், தோட்டக்கலை போன்ற பல துறைகளில் ஈடுபாடு கொண்டவர். 2-3 ஆண்டுகளுக்கு ஒரு முறை அப்பாவுக்கு மாற்றலாகிக் கொண்டே இருக்கும். ஆகவே, கோவை முதல் ஷில்லாங் வரை பல ஊர்களிலும், மாநிலங்களிலும் வளர்ந்தேன். ஆகவே, பல மொழிகளும் பல்வேறுபட்ட கலாசாரங்களும் எனக்கு சிறு வயது முதலே அறிமுகம். குடும்பத்தில் நானே மூத்தவள். ஒரு தங்கை, லண்டனில் ஆங்கில ஆசிரியையான இருக்கிறாள். இரண்டு தம்பிகள். இருவரும் பொறியாளர்கள். கணவர் ஒரு பொறியாளர். இரண்டு மகன்கள். பெரியவன் ஒரு பொறியாளர். சிறியவன் சட்டம் இரண்டாம் வருடம் படிக்கிறான்.

Continue Reading →

சிறுகதை: பொலிடோல்

 - நடேசன் -ஆண் இளைஞனாக இருக்கும் காலத்தில் தனது காமத்தின் வீரியத்தால் தனக்குரிய பெண்ணை வசப்படுத்தி வைத்திருக்கலாம் என நினைக்கிறான். மத்திய வயதில் பணத்தால் அது முடியும் என மனம் சொல்லுகிறது வயதான காலத்தில் பிள்ளைகள், குடும்பம் என்பன  பெண்களை கட்டுக்குள் வைத்திருக்கும் என அவன் தீர்மானிக்கிறான். இப்படியான ஆண்களின் சிந்தனையைத் தாண்டிச்செல்லும்; அன்னா கரினாக்கள் ரஷ்யாவில் மட்டுமல்ல இலங்கையின் ஒவ்வொரு கிராமங்களிலும் இருக்கிறார்கள். என்பதை புரிந்து கொள்ளும் சந்தர்ப்பம் எனக்கு எண்பதாம் ஆண்டுகளில் கிடைத்தது. அந்த அனுபவம் மிகவும் வித்தியாசமானது. மருத்துவர்களுக்கு மட்டுமே இறந்த மனிதர்களின் உடலை வெட்டி உள்ளுறுப்புகளை கூறாக்கி பார்க்கும் அனுபவம் கிடைக்கும். மற்றவர்களுக்கு சந்தர்ப்பம் கிடைத்தாலும் அது மனதிற்கு உவப்பானதாக இருக்காது. பலரால் கண் திறந்து பார்க்கவும் முடியாதது .

தென்னிலங்கையின் சிறிய நகரம் ஒன்றில் அரசாங்க மருத்துவராக இருந்த நண்பன் குமாரின் வீட்டில் சிலகாலம் இருந்தபோது அவன் இறந்த உடலைக் கூறுபோடும்போது பக்கத்தில் இருந்து பார்க்கும் வாய்ப்பு எனக்குக் ஏற்பட்டது. அது ஒரு விவசாயிகள் வாழும் சிறிய நகரம். நகரத்தைச் சுற்றி பதினைந்து கிலோமீட்டர் சுற்றி உள்ள கிராமங்களுக்கு இந்த நகரமே இதயம். மருத்துவமனை, மருத்துவர்  குடியிருப்பு,  இரயில்வே நிலையம் மற்றும் கடைகள்  இருப்பதனால் அந்த  நகரத்திற்கு விவசாயிகள் தங்களின்  நாளாந்த தேவைகளின் நிமித்தம் அங்கு வருவார்கள். அந்த நகரத்தில்; நான் மிருக மருத்தவராக  இருந்த காலத்தில் அங்கு குமார் அரசாங்க வைத்தியசாலையில் மருத்துவராக இருந்தான்.  ஏற்கனவே பல்கலைக்கழகத்தில்  நாம் நண்பர்களாக இருந்ததால் எமது நட்பு அங்கும் நீடித்தது.

Continue Reading →

புகலிடத் தமிழ் நாவல் முயற்சிகள்!

கவிதை: பேராசை மிக்க கவிஞன்

  – இன்று – மே 31, 2014 -‘டொராண்டோ’வில் எழுத்தாளர் அகில், மருத்துவர் லம்போதரன் ஆதரவில் நடைபெற்ற மாதாந்த இலக்கிய நிகழ்வில் ஆற்றிய உரையின் முழுமையான வடிவம். நிகழ்வில் நேரப் பற்றாக்குறை காரணமாக கட்டுரை முழுவதையும் வாசிக்க முடியவில்லை. அதற்காக இக்கட்டுரை இங்கு முழுமையாக மீள்பிரசுரமாகின்றது. – வ.ந.கி –

புலம் பெயர் தமிழ் இலக்கியமும், புகலிடத் தமிழ் இலக்கியமும், புகலிட நாவல்களும் பற்றி….

இன்று உலகெங்கும் தமிழர்கள் புலம் பெயர்ந்து பரந்து வாழ்கின்றார்கள். சங்க காலத்திலிருந்து காலத்துக்குக் காலம் தமிழர்கள் புலம் பெயர்வது தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது. ‘திரை கடலோடித் திரவியம் தேடினார்கள் அற்றைத் தமிழர்கள். பொருளியல் காரணங்களுகாக அன்று தமிழ் மன்னர்கள் அயல் நாடுகளின் மீது படையெடுத்து தமது ஆட்சியினை விஸ்தரித்தார்கள். அதன் காரணமாகத் தமிழர்கள் புலம் பெயர்ந்தார்கள். அந்நியர் படையெடுப்புகளால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு , நகரங்களுக்குப் புலம் பெயர்ந்தார்கள். பின்னர் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தின்போது தமிழகத்திலிருந்து தமிழர்கள் பலர் இலங்கை, மலேசியா என்று பல்வேறு நாடுகளுக்குத் தோட்டத் தொழிலாளர்களாக அழைத்துச் செல்லப்பட்டார்கள். இவ்விதமாகத் தொடர்ந்த தமிழ் மக்களின் புலம்பெயர்தலில் முக்கியமானதொரு நிகழ்வு கடந்த நூற்றாண்டின் இறுதியிலிருந்து ஆரமபித்த ஈழத்தமிழரின் பல்வேறு திக்குகளையும் நோக்கிய புலம் பெயர்தல்.

Continue Reading →

புகலிடத் தமிழ் நாவல் முயற்சிகள்!

கவிதை: பேராசை மிக்க கவிஞன்

  – இன்று – மே 31, 2014 -‘டொராண்டோ’வில் எழுத்தாளர் அகில், மருத்துவர் லம்போதரன் ஆதரவில் நடைபெற்ற மாதாந்த இலக்கிய நிகழ்வில் ஆற்றிய உரையின் முழுமையான வடிவம். நிகழ்வில் நேரப் பற்றாக்குறை காரணமாக கட்டுரை முழுவதையும் வாசிக்க முடியவில்லை. அதற்காக இக்கட்டுரை இங்கு முழுமையாக மீள்பிரசுரமாகின்றது. – வ.ந.கி –

புலம் பெயர் தமிழ் இலக்கியமும், புகலிடத் தமிழ் இலக்கியமும், புகலிட நாவல்களும் பற்றி….

இன்று உலகெங்கும் தமிழர்கள் புலம் பெயர்ந்து பரந்து வாழ்கின்றார்கள். சங்க காலத்திலிருந்து காலத்துக்குக் காலம் தமிழர்கள் புலம் பெயர்வது தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது. ‘திரை கடலோடித் திரவியம் தேடினார்கள் அற்றைத் தமிழர்கள். பொருளியல் காரணங்களுகாக அன்று தமிழ் மன்னர்கள் அயல் நாடுகளின் மீது படையெடுத்து தமது ஆட்சியினை விஸ்தரித்தார்கள். அதன் காரணமாகத் தமிழர்கள் புலம் பெயர்ந்தார்கள். அந்நியர் படையெடுப்புகளால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு , நகரங்களுக்குப் புலம் பெயர்ந்தார்கள். பின்னர் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தின்போது தமிழகத்திலிருந்து தமிழர்கள் பலர் இலங்கை, மலேசியா என்று பல்வேறு நாடுகளுக்குத் தோட்டத் தொழிலாளர்களாக அழைத்துச் செல்லப்பட்டார்கள். இவ்விதமாகத் தொடர்ந்த தமிழ் மக்களின் புலம்பெயர்தலில் முக்கியமானதொரு நிகழ்வு கடந்த நூற்றாண்டின் இறுதியிலிருந்து ஆரமபித்த ஈழத்தமிழரின் பல்வேறு திக்குகளையும் நோக்கிய புலம் பெயர்தல்.

Continue Reading →