பதுளை, கொஸ்லந்தை பிரதேசத்தில் புதையுண்ட தேயிலைத் தோட்டக் குடியிருப்பு பகுதியில் மண்சரிவு அபாயம் இருந்ததை யாரும் தனது கவனத்திற்குக் கொண்டுவரவில்லை என்று தெரிவித்துள்ள அமைச்சரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் செயலாளருமான ஆறுமுகம் தொண்டமான், அப்படியிருக்கும் போது நான் எவ்வாறு அறிவேன், ஜோதிடம் பார்த்தா அறிவது? எனத் தெரிவித்துள்ளார்.
நேற்று பிபிசி தமிழ் சேவைக்கு வழங்கிய செவ்வியிலேயே அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கிறார். பிபிசிக்கு அவர் வழங்கிய செவ்வி, கேள்வி – பதில் அடிப்படையில் எழுத்து வடிவில் முழுவதும் இங்கு தரப்பட்டுள்ளது.
பிபிசி செய்தியாளர் – கொஸ்லந்தைப் பகுதியில் நிலைமை எப்படி இருக்கிறது?
ஆறுமுகம் தொண்டமான்– இன்னும் மழை பெய்துகொண்டுதான் இருக்கிறது. அதனால், கிளியர் செய்வதில் தாமதம் ஏற்படுகிறது. பாதிக்கப்பட்ட பொதுமக்கள் பாடசாலைகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நிவாரணம் கொடுக்கப்படுகிறது. உடுப்பு, துணிமணி, சாப்பாடு கொடுக்கப்படுகின்றன.
பிபிசி செய்தியாளர் – இதுவரைக்கும் எத்தனை உடல்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன?
ஆறுமுகம் தொண்டமான்– இன்னும் அது கிளியர் இல்லை. மூன்று, நான்கு என்கிறார்கள்…