சரித்திரத்தின் நித்திய உபாசகன் எஸ்.பொன்னுத்துரையின் சுவாசமே எழுதுதல்தான். ஆறுதசாப்த காலத்தையும் கடந்து எழுத்தூழியத்தில் தவமிருந்த எஸ்.பொ.

espo59.jpg - 60.16 Kb

இலங்கையின்  மூத்த  படைப்பாளி  எஸ்.பொ.  அவுஸ்திரேலியாவில் சிட்னியில்  26-11-2014 மறைந்தார்.  கடந்த  காலங்களில்  எனக்குத்தெரிந்த –  நான்  நட்புறவுடன்  பழகிய பல  படைப்பாளிகள்  சமூகப்பணியாளர்கள்  குறித்து எழுதிவந்திருக்கின்றேன்.  வாழும்  காலத்திலும்  அதில்  ஆழமான கணங்களிலும்   அவர்களுடனான  நினைவுப்பகிர்வாகவே  அவற்றை இன்றும்   தொடர்ந்து  எழுதிவருகின்றேன். காலமும்  கணங்களும்  ஒவ்வொருவர்   வாழ்விலும்  தவிர்க்க முடியாதது. எஸ்.பொ.  அவர்களை  1972  ஆம்  ஆண்டு  முதல்  முதலில்  கொழும்பு ஆட்டுப்பட்டித்தெருவில்  ரெயின்போ  அச்சகத்தில்  சந்தித்தேன். அதன்பிறகு  கொழும்பில்  பல  இலக்கியக்கூட்டங்களிலும் சந்தித்திருக்கின்றேன்.   எஸ்.பொ  இரசிகமணி   கனக செந்திநாதன் கலைஞர் ஏ.ரி. பொன்னுத்துரை  உட்பட  பல  இலக்கியவாதிகள்   எமது நீர்கொழும்பு   இந்து  இளைஞர்  மன்றம்  தொடர்ச்சியாக  மூன்று நாட்கள்  நடத்திய  தமிழ்  விழாவிற்கு  வருகை தந்துள்ளனர்.

எஸ்.பொ.  1980  களில்  நைஜீரியாவுக்கு  தொழில்  நிமித்தம்  புறப்பட்ட வேளையில்   கொழும்பு –  ஜம்பட்டா  வீதியில்  மலையக  நாடகக் கலைஞரும்   அவள்  ஒரு  ஜீவநதி  திரைப்படத்தின்   தயாரிப்பாளரும் அதன்  வசனகர்த்தாவுமான   மாத்தளை   கார்த்திகேசுவின்  இல்லத்தில் எஸ்.பொ.வுக்காக    நடந்த   பிரிவுபசார  நிகழ்வில்   சந்தித்தேன். மீண்டும்   அவரை  சில  வருடங்களின்   பின்னர்   1985   இல்   ஒரு விஜயதசமி   நாளில்  வீரகேசரியில்  நடந்த  வைபவத்தின்பொழுது என்னைச்சந்திக்க  வந்த   எஸ்.பொ.வின்   ஆபிரிக்க   அனுபவங்கள் பற்றிய    நேர்காணலை  எழுதி   வெளியிட்டேன்.  1987  இல்  நான் அவுஸ்திரேலியாவுக்கு   வந்த    பின்னர்  –  1989  இல்  எனது  இரண்டாவது  சிறுகதைத்தொகுதி  சமாந்தரங்கள்  நூலின்  வெளியீட்டு  விழாவை  மெல்பனில்  நடத்தியபொழுது  சிட்னியில் மூத்த   புதல்வர்  டொக்டர்   அநுராவிடம்  அவர்   வந்திருப்பது   அறிந்து அவரை    பிரதம பேச்சாளராக   அழைத்தேன்.   அன்றைய   நிகழ்வே அவர்   அவுஸ்திரேலியாவில்   முதல்  முதலில்  தோன்றிய   இலக்கிய பொது நிகழ்வு. 1972 முதல் 2010 வரையில்   சுமார்  38  ஆண்டுகள்  மாத்திரமே அவருக்கும்  எனக்குமிடையிலான  இலக்கிய  உறவு   நீடித்தது.   அந்த உறவு எவ்வாறு   அமைந்தது    என்பதுபற்றிய  தகவல்களை  இந்தத் தொடர்   ஆக்கத்தில்    பதிவுசெய்யவில்லை. கலை  இலக்கிய  ஊடகத்துறையில்   ஈடுபடும்  எவரும்  அன்றாடம் சந்திக்கக்கூடிய   அனுபவங்களே    அவர்தம்  வாழ்வின் புத்திக்கொள்முதலாகும்.    எஸ்.பொ.  குறித்து  நானும்  என்னைப்பற்றி அவரும்   ஏற்கனவே   நிறைய   எழுதிவிட்டோம்.    ஒரு கட்டத்திற்குப்பிறகு  எழுதுவதற்கு   எதுவும்   இல்லை என்றாகிப்போனாலும் –  அவர்தம்   எழுத்தூழிய   ஆளுமை   தமிழ்    சமூகப்பரப்பில்   தவிர்க்க  முடியாதது. மூத்த    இலக்கிய  சகா  எஸ்.பொ. வின் ஆத்மா சாந்தியடையவேண்டும் என பிரார்த்தித்து அன்னாரின் மனைவி மக்கள் மருமக்கள் பேரப்பிள்ளைகள் மற்றும்  அவரது கலை- இலக்கிய ஊடகத்துறை நண்பர்களின்  துயரத்தில் பங்கேற்று   இந்த   ஆக்கத்தை  தொடருகின்றேன்.

Continue Reading →