நிகழ்வுகள்: பாரிஸ் மாநகரில் நடைபெற்ற விழாவில் மூத்த எழுத்தாளர் வி. ரி. இளங்கோவனுக்குக் கௌரவம்..! தங்கப்பதக்க மாலை அணிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்..!!

elangovan59.jpg - 17.21 Kb‘தமிழ்த் தேசிய உணர்வை, தமிழரசுக் கட்சியை அன்று பட்டினங்கள் முதல் கிராமங்கள் வரை, மேடைகள் முதல் வீடுகள் வரை எடுத்துச் சென்றவர்களில் முதன்மை வகித்தவர் நாவேந்தன். அன்று ஐம்பதுகள் முதல் தனது பேச்சாலும், எழுத்தாலும் தமிழ்மக்களைத் தட்டியெழுப்பியவர். அவரது வீறுகொண்ட இலக்கிய ரசம் பொங்கும் பேச்சாற்றலும், எதிரிகளைச் சுட்டிடும் உணர்வுமிக்க எழுத்தாற்றலும் நிகரற்றவை. அன்று அவரைப்போல பேச வேண்டும் என ஆசைப்பட்டவர்களில் நானும் ஒருவன். அவர் வழியில் சிறுவயதிலேயே பேச்சாற்றல், எழுத்தாற்றலை வளர்த்துக்கொண்டு, முற்போக்குச் சிந்தனையாளராகப் பரி  ணமித்து, இன்று பல்துறை வித்தகராக விளங்கும் அவரது சகோதரர் வி. ரி. இளங்கோவன் சாதனையாளராகக் கௌரவிக்கப்படுவது மகிழ்ச்சிக்குரியதும் பாராட்டத்தக்கதுமாகும்.” இவ்வாறு, பாரிஸ் மாநகரில் அண்மையில் நடைபெற்ற பிரான்ஸ் ‘ஆர். ரி. எம். பிறதர்ஸ்” நிறுவனத்தின் 22 -வது ‘கலைத்தென்றல்” விழாவில் சிறப்புரையாற்றிய ‘கல்விச்சேவையாளர்” சி. காராளபிள்ளை குறிப்பிட்டார்.

Continue Reading →

சங்க இலக்கியங்கள் பேசும் பெண் கூந்தற் பெருமை!

நுணாவிலூர் கா. விசயரத்தினம் (இலண்டன்)பரந்து விரிந்த எல்லையற்ற பெரும் வெட்டவெளியான வானத்தில் ஒரு சூரிய குடும்பம் அந்தரத்தில் மிதந்து குதூகலமாகப் பறந்து திரிந்த வண்ணமுள்ளது. ஆங்கே சூரியன், நிலாக்கள், விண்மீன்கள், ஒன்பது கோள்களாகிய புதன், சுக்கிரன், பூமி, செவ்வாய், வியாழன், சனி, விண்மம் (Uranus – யுறெனஸ்), சேண்மம் (Neptune – நெப்டியூன்), சேணாகம் (Pluto – புளுடோ) ஆகியவை அந்தரத்தில் ஒவ்வொன்றின் ஈர்ப்புச் சக்தியால் மிதந்த வண்ணமும், சுழன்ற வண்ணமும் உள்ளன. இதில் சூரியன் சுமார் 460 கோடி (460,00,00,000) ஆண்டுகளுக்குமுன் தோன்றினான் என்றும், பூமி சுமார் 457 கோடி (457,00,00,000) ஆண்டுகளுக்குமுன் தோன்றினாள் என்றும், பூமி நிலா சுமார் 453 கோடி (453,00,00,000) ஆண்டுகளுக்குமுன் தோன்றினாள் என்றும் அறிவியல் கூறுகின்றது.  மேற்கூறிய ஒன்பது கோள்களில் பூமிக் கோளில் மாத்திரம்தான் உயிரினங்கள் வாழ முடியும். பூமிக் கோளில் சுமார் 400 கோடி (400,00,00,000) ஆண்டளவில் ஒரு கலத்தைக் கொண்ட உயிரினமான அணுத்திரண்மம் (Molecule)  முதன்முதலாகத் தோன்றி உயிர் மலர்ச்சி (Evolution of Life)  முறையை ஆரம்பித்தது. இதையடுத்துப் புல், பூண்டு, செடி, கொடி, தாவரம், மரம், ஊர்வன, நீர்வாழ்வன, பறவை, விலங்கு ஆகிய ஓரறிவிலிருந்து ஐயறிவுவரையான உயிரினங்கள் தோன்றியபின், அவற்றின் உச்சமாக ஆறறிவு படைத்த மனித இனமான ஆண், பெண் ஆகிய இருவரும் இரண்டு இலட்சம் (2,00,000) ஆண்டளவிற் தோன்றி, பூமியில் பல மில்லியனுக்கும் மேற்பட்ட உயிரினங்களுடன் இற்றைவரை தமது ஆட்சியைப் பூமியில் நிலை நிறுத்தி வருகின்றனர்.

Continue Reading →