அனைவரையும் நினைவு கூர்வோம்!

அனைவரையும் நினைவு கூர்வோம்!அறம் வெல்லுமோ இல்லையோ என்று கவலைப்படுவதற்குப் பதில் நடந்து முடிந்தவற்றிலிருந்து பாடங்களைப் படிப்பதே சரியான நிலைப்பாடாக இருக்க முடியும். இவ்வளவு மனித உரிமை மீறல்களைப் புரிந்த இலங்கை அரசு ஏன் வென்றது? என்பதைச் சிந்திக்க வேண்டும். அவர்களிடம் ஆட்சி அதிகாரமிருந்தது. சர்வதேச, பிராந்திய அரசியலைத் தமக்குச் சார்பாகத் தந்திரமாகக் கையாண்டார்கள். நாம் எமக்குள் முட்டி மோதிக்கொண்டோம். தமிழ் அமைப்புகள் மத்தியில் ஏற்பட்ட மோதல்கள், பிளவுகள்தாம் ஆயுதப் போராட்டம் தோல்வி அடைந்ததற்கு முக்கிய காரணமென்று நினைக்கின்றேன்.

ஐக்கிய தேசியக் கட்சியோ, சிறீலங்கா சுதந்திரக் கட்சியோ இரண்டு கட்சிகளின் அரசியல் நடவடிக்கைகள் வேறானவையாக இருந்த போதிலும், ஆட்சிக் கட்டிலிருக்கும்போது அக்கட்சியினர் தமிழர்களுக்கெதிரான அரசியற் செயற்பாடுகளில் ஒன்றாகவே இருந்தார்கள்.

ஐக்கிய தேசியக் கட்சியினர் ஆட்சியிலிருந்த போதும், சிறீலங்கா கட்சியினர் ஆட்சியிலிருந்த போதும் தமிழ் மக்களுக்கெதிராக வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன். சிங்களம் ஆட்சி மொழியாகி தமிழர்கள் மேல் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன சிறீலங்கா சுதந்திரக் கட்சியினரின் காலத்திலென்றால், ஐக்கிய தேசியக் கட்சியினரின் காலத்தில் பயங்கரவாதத் தடைச்சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு, யாழ் நூலகம் எரிக்கப்பட்டு,  83 இனக்கலவரம் கட்டவிழ்த்து விடப்பட்டு வன்முறைகள் தமிழர்கள் மேல் பிரயோகிக்கப்பட்டன, இருவர் ஆட்சியிலும் தமிழ்ப் பகுதிகளில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் நடைபெற்றன.

Continue Reading →

இனிய நண்பர் செல்வா கனகநாயகம்

பேராசிரியர் செல்வா கனகநாயகம் குரு அரவிந்தன் இனிய நண்பர் பேராசிரியர் செல்வா கனகநாயகத்தின் திடீர் மறைவு இலக்கிய உலகிற்கு ஒரு பேரதிர்ச்சியைத் தரும் செய்தியாகும். இலங்கைத் தமிழறிஞர் பேராசிரியர் வி. செல்வநாயகத்தின் மகனான இவர், தமிழ் இலக்கியத்தில் அதிக ஈடுபாடு கொண்டவராக மட்டுமல்ல, சிறந்த ஆங்கில அறிவு கொண்டவராகவும் இருந்ததால் ஈழத் தமிழர்களின் ஆக்கங்களை ஆங்கிலத்தில் அறிமுகம் செய்வதில் கனடாவில் முன்னோடியாக இருந்தார். பழகுவதற்கு மிகவும் இனிய நண்பரான இவரது அறிமுகம் கனடாவில்தான் எனக்கு முதலில் கிடைத்தது. கனடிய இலக்கிய மேடைகளில் அவரது சொற்பொழிவைக் கேட்டு வியந்திருக்கின்றேன். தொடக்க காலத்தில் ஆங்கில மொழியில் உரையாற்றிக் கொண்டிருந்தவர், காலத்தின் தேவை அறிந்து பின்னாளில் மேடைகளில் தமிழில் உரையாற்றத் தொடங்கியிருந்தார்.  எனக்கு அவர் அறிமுகமானபின் அவ்வப்போது அவரது உரைகளைக் கேட்டு அவரைப் பாராட்டியிருக்கின்றேன். எனக்கு அவர் அறிமுகமானது தற்செயலாக நடந்த ஒரு சம்பவம்தான். அதிபர் பொ. கனகசபாபதி அவர்கள் தனது நூல் ஒன்றிற்கு ஆய்வுரை செய்யும்படி பேராசிரியர் செல்லவா கனகநாயகத்தைக் கேட்டிருந்தது மட்டுமல்ல அந்த நூலை அவரிடம் சேர்ப்பிக்கும் பொறுப்பையும் என்னிடம் தந்திருந்தார். எனது வீட்டிற்கு அருகாமையில் அவரது வீடும் இருந்ததால், அதிபர் என்னிடம் இந்தப் பொறுபப்பை ஒப்படைத்திருந்தார். எனவே பேராசிரியரைச் சந்திக்க ஏற்பாடு செய்திருந்தேன். மறுநாள் மாலை நேரம் 7:00 மணியளவில் தனது வீட்டிற்கு வரும்படி சொல்லியிருந்தார்.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 66: கடல்புத்திரனின் ‘வெகுண்ட உள்ளங்கள்’ தவிர்க்க முடியாததோர் ஆவணப்பதிவு!

வாசிப்பும், யோசிப்பும் 66:  கடல்புத்திரனின் 'வெகுண்ட உள்ளங்கள்' தவிர்க்க  முடியாததோர் ஆவணப்பதிவு!புலம்பெயர் தமிழ் இலக்கியப் படைப்பாளிகளில் பாலமுரளிக்கும் (கடல்புத்திரன்) ஓரிடமுண்டு.  இவரது சிறுகதைகள் சில  கனடாவில் வெளிவந்த ‘தாயகம்’ சஞ்சிகை / பத்திரிகையில் வெளிவந்திருக்கின்றன. அத்துடன் அவரது சிறு நாவல்களான ‘வேலிகள்’ மற்றும் ‘வெகுண்ட உள்ளங்கள்’ ஆகியனவும் ‘தாயக’த்தில் தொடராக வெளிவந்தன. இவையனைத்தையும் பின்னர் ஒரு தொகுப்பாக மங்கை பதிப்பகம் (கனடா) தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸ் மூலம் , அவர்களுக்குத் தமிழகத்தில் விற்பனை உரிமையினைக் கொடுத்து வெளியிட்டது. இவரது சிறுகதைகள் பல ‘பதிவுகள்’ இணையத்தளத்தில் வெளிவந்துள்ளன.  ‘சிறுகதைகள்.காம்’ இணையத்தளத்திலும் இவரது சிறுகதைகள் சில பிரசுரமாகியுள்ளன. எனது இந்தப் பதிவு கடல்புத்திரனின் ‘வேலிகள்’ தொகுப்பிலுள்ள நாவல்களிலொன்றான ‘வெகுண்ட உள்ளங்கள்’ பற்றியது. ஈழத்துத் தமிழ் அரசியல் நாவல்களென்றால் நிச்சயம் இந்த நாவலும் குறிப்பிடப்பட வேண்டியது அவசியமென்று கருதுகின்றேன்.

Continue Reading →