தமிழ்.சி.என்.என்: பிபிசி தமிழ் சேவைக்கு வழங்கிய அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் செவ்வி!

ஆறுமுகம் தொண்டமான்பதுளை, கொஸ்லந்தை பிரதேசத்தில் புதையுண்ட தேயிலைத் தோட்டக் குடியிருப்பு பகுதியில் மண்சரிவு அபாயம் இருந்ததை யாரும் தனது கவனத்திற்குக் கொண்டுவரவில்லை என்று தெரிவித்துள்ள அமைச்சரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் செயலாளருமான ஆறுமுகம் தொண்டமான், அப்படியிருக்கும் போது நான் எவ்வாறு அறிவேன், ஜோதிடம் பார்த்தா அறிவது? எனத் தெரிவித்துள்ளார்.

நேற்று பிபிசி தமிழ் சேவைக்கு வழங்கிய செவ்வியிலேயே அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கிறார். பிபிசிக்கு அவர் வழங்கிய செவ்வி, கேள்வி – பதில் அடிப்படையில் எழுத்து வடிவில் முழுவதும் இங்கு தரப்பட்டுள்ளது.

பிபிசி செய்தியாளர் – கொஸ்லந்தைப் பகுதியில் நிலைமை எப்படி இருக்கிறது?

ஆறுமுகம் தொண்டமான்– இன்னும் மழை பெய்துகொண்டுதான் இருக்கிறது. அதனால், கிளியர் செய்வதில் தாமதம் ஏற்படுகிறது. பாதிக்கப்பட்ட பொதுமக்கள் பாடசாலைகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நிவாரணம் கொடுக்கப்படுகிறது. உடுப்பு, துணிமணி, சாப்பாடு கொடுக்கப்படுகின்றன.

பிபிசி செய்தியாளர் – இதுவரைக்கும் எத்தனை உடல்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன?

ஆறுமுகம் தொண்டமான்– இன்னும் அது கிளியர் இல்லை. மூன்று, நான்கு என்கிறார்கள்…

Continue Reading →

ஒரு சில கணங்களுக்குள் இலங்கை வரைபடத்திலிருந்து காணாமல் போயுள்ள கிராமம்!

இலங்கை, பதுளை மாவட்டத்திலுள்ள கொஸ்லந்தை, ஹல்தும்முல்லை, மீரியபெத்த தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் வசித்து வந்த ஒரு முழுக் கிராமமே நேற்று (29.10.2014) மண்ணுக்குள் புதையுண்டு போயுள்ளது. கிட்டத்தட்ட இருநூறுக்கும் அதிகமான மக்களை, அவர்கள் நேசித்த மண்ணே உயிருடன் விழுங்கிக் கொண்டுள்ளது. சடலங்கள் மீட்கப்படுகின்றன. 2004 இல் ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்திற்குப் பிறகு, இலங்கையில் பல நூறு உயிர்களைக் காவுகொண்ட இயற்கை அனர்த்தம் இதுவாகும். அதே போல இலங்கை, மலையக வரலாற்றில் இதுவரை இடம்பெற்றுள்ள மண் சரிவு அனர்த்தங்களில், இப்போது நிகழ்ந்துள்ள இந்த அனர்த்தத்தை மிகவும் மோசமான ஒன்றாகவும், பாரிய அழிவுகளை ஏற்படுத்தியதாகவும் குறிப்பிடப்படலாம்.இலங்கை, பதுளை மாவட்டத்திலுள்ள கொஸ்லந்தை, ஹல்தும்முல்லை, மீரியபெத்த தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் வசித்து வந்த ஒரு முழுக் கிராமமே நேற்று (29.10.2014) மண்ணுக்குள் புதையுண்டு போயுள்ளது. கிட்டத்தட்ட இருநூறுக்கும் அதிகமான மக்களை, அவர்கள் நேசித்த மண்ணே உயிருடன் விழுங்கிக் கொண்டுள்ளது. சடலங்கள் மீட்கப்படுகின்றன. 2004 இல் ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்திற்குப் பிறகு, இலங்கையில் பல நூறு உயிர்களைக் காவுகொண்ட இயற்கை அனர்த்தம் இதுவாகும். அதே போல இலங்கை, மலையக வரலாற்றில் இதுவரை இடம்பெற்றுள்ள மண் சரிவு அனர்த்தங்களில், இப்போது நிகழ்ந்துள்ள இந்த அனர்த்தத்தை மிகவும் மோசமான ஒன்றாகவும், பாரிய அழிவுகளை ஏற்படுத்தியதாகவும் குறிப்பிடப்படலாம்.

இக் கிராமத்தில் குறைந்தபட்சம் ஐம்பத்தேழு தமிழ்க் குடும்பங்களைச் சேர்ந்த முந்நூற்றைம்பது நபர்களாவது வசித்திருக்கலாம் என நம்பப்படுவதோடு, இந்த அனர்த்தம் நிகழ்வதற்கு முன்னர் வெளிப் பிரதேச பாடசாலைக்குச் சென்ற சிறுவர்,சிறுமியர்,வேலைகளுக்காகச் சென்ற சில தொழிலாளர்கள் என ஒரு சிலரே அனர்த்தத்தில் சிக்கிக் கொள்ளாமல் காப்பாற்றப்பட்டுள்ளனர். இழப்புக்கள் சம்பந்தமாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சரும், போலிஸ் ஊடகப் பேச்சாளரும் ஆளாளுக்கு ஒவ்வொரு கருத்துச் சொல்லி தப்பித்துக் கொள்ள முற்படுகின்றனர். என்ற போதிலும், பல நூற்றுக்கணக்கான மக்களை நேற்று முதல் காணவில்லை. மண்ணுக்குள் புதையுண்டவர்களை மீட்கும் முயற்சி, நேற்று காலநிலையைக் குறிப்பிட்டு கைவிடப்பட்டதோடு, இன்று ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. நேற்றே முழுமையாக நடந்திருந்தால் ஒருவேளை சிலரையாவது உயிருடன் காப்பாற்றியிருந்திருக்கலாம்.

Continue Reading →