உரை வீச்சு: அரபிக்கடலோரம்…

– பதிவுகள் இணைய இதழில் ஏப்ரல் 2004 இதழ் 52 தொடக்கம் ஜனவரி 2005 இதழ் 61 வரை வெளியான எழுத்தாளர் புதியமாதவி (மும்பை) -எழுதிய கவித்துவம் மிக்க உரை வீச்சு ‘அரபிக்கடலோரம்’. தற்போது ஒரு பதிவுக்காக மீண்டும் இங்கே  பிரசுரமாகின்றது. –

கவிதை: அரபிக்கடலோரம்… அலை…1

puthiyamadhavi_abcde.jpg - 16.63 Kbஎன் கடற்கரைகளை..
நான் மூன்று சக்கர வண்டிகள் ஓட்டி
விளையாடிய புல்தரைகளைக் காணவில்லை.

என் கடற்கரையில்
அன்று அலைவீசியது
உண்மைதான்.
ஆனால்-
அள்ளிவந்தவை முத்துக்கள் அல்ல
சிப்பிகளும் கழிவுகளுமே..
என் கடலலைகள்
மீண்டும் மீண்டும் அள்ளிவந்து
என் மடியில் கொட்டின.

Continue Reading →

அ.முத்துலிங்கத்தின் மூன்று உலகங்கள்: அ.முத்துலிங்கம் பற்றிய கட்டுரைகள் தொகுப்பு!

–  எஸ்.இராமகிருஷ்ணன், சுப்ரபாரதிமணியன்,உமாசக்தி, வெங்கட்சாமிநாதன், ஜெயமோகன், பராசக்தி சுந்தரலிங்கம், தமிழ்மகன், நாஞ்சில்நாடன், பாவண்ணன், மு.இராமநாதன், இல.சைலபதி, மதுமிதா, காயத்ரி சித்தார்த், எஸ். செந்தில்குமார் கட்டுரைகள் –

அ.முத்துலிங்கம் சுப்ரபாரதிமணியன்இலங்கை எழுத்தாளர் அமரர் செ.யோகநாதன் என்னிடம் எண்பதுகளில்   அ.முத்துலிங்கத்தின்   எழுத்தினைப் பற்றி ரசனையோடு சிலாகித்து நிறைய பேசியது அவரைத் தேடிப்படிக்கச் செய்தது. இலங்கை தேசிய இனப்பிரச்சினயில் அவர் இங்கு வந்து தங்கி இருந்தபோது  இலங்கைச்சூழல் பற்றி அவ்வப்போது செய்த இல்க்கியப் பதிவுகள் குறிப்பிடத்தக்கவை. அ.முத்துலிங்கம் அவர்களின் ஆரம்ப நூல்கள் மணிமேகலை பிரசுரம் போன்றவற்றில் வெளிவந்தது அவருக்கு குறையாகவே பட்டதை வருத்தத்துடன் சொல்வார். அது முதல் அவரை தொடர்ந்து வாசித்து வந்திருக்கிறேன்.  பாக்கிஸ்தானில் முத்துலிங்கம்  இருந்த போது எனக்கு வெளிநாட்டு தொலைபேசி வசதியிருந்ததால் நிறைய தொலைபேசியில் கதைத்திருக்கிறோம். அந்த அனுபவங்களின் மூலத்துளிகளை அப்போது அவர் சொல்ல சிலதை அனுபவித்திருக்கிறேன். அந்த சமயத்தில் அவரின் இரு கதைகள் ” கனவு” இதழில் வந்தன. அதில் ஒன்று பிறகு குமுதத்தில் கூட வந்தது. அல்லது அக்கதை கனவிற்கு அவர் அனுப்பி கனவு   வெளிவர தாமதமானதால் குமுதத்தில் வந்த வகையிலும் சேர்த்துகொள்ளலாம். கனவு வெளிவந்த அதே வாரம் குமுதத்திலும் அக்கதை வந்தது. அவர் நிறைய எழுதுவதைப் படித்துக் கொண்டிருக்கிறேன்.அப்புறம் தொடர்பு அவரின் எழுத்து, படைப்புகளின் கதாபாத்திரங்கள்  என்றாகி விட்டது.முத்துலிங்கம் சொல்வது போல “ குரங்கு சாகும் காலம் வந்தால் எல்லா மரமும் வழுக்கும் ‘ என்பது போல அலுவலக நெருக்கடிகளில் தொடர்புகள் இல்லாமல் போய் விட்டது.

Continue Reading →