தமிழ் எழுத்தாளர்களுள் நீண்டகால வரலாற்றில் ஆண்களே முதன்மை வகித்து வந்துள்ளனர். ஆனால் சில பெண் எழுத்தாளர்களும் தங்கள் எழுத்தாற்றலால் தமது நிலையை இலக்கிய உலகில் தக்க வைத்துள்ளனர். பெண்களை இரண்டாம் படியில் வைத்துப் பார்ப்பவர்கள் இந்திய மரபுவாதிகள். இந்தியப் பாரம்பரியத்தின் விளைவாக பெண்கள் இயல்பு வாழ்க்கையில் காலடியெடுத்துவைத்தால் தானுண்டு தன் குடும்பம் உண்டு என வாழப் பழகிக் கொள்வார்கள். கணவன். பிள்ளைகள், பெற்றோர் என அவர்களின் நலன் சார்ந்து வாழவேண்டியவர்களால் ஆக்கப்பட்ட சமுதாய கட்டுக்கோப்பை மீறமுடியாதவர்களாக குடும்பத்தோடு இணைந்து விடுவார்கள். இந்தியரில் விரல் விட்டு எண்ணக்கூடிய பெண் தமிழ் எழுத்தாளர்களே இருந்துள்ளனர். இந்தச் சூழ்நிலையின் மத்தியில் சடங்கு, சம்பிரதாயம் என அவற்றிற்குக்கட்டுப்பட்டு வாழ்ந்தவர்களின் மத்தியில் ஒரு சிலர் அந்த நிலைமைகளை மீறிக்கொண்டு வெளியே வந்துள்ளனர்.
“நான் எங்கு சென்றாலும்
என் தாய்நாட்டின் காயங்களைச்
சுமந்து செல்கிறேன்
ஓ கோவா
உன் அன்பு இல்லாமல்
உன் வாழ்விலிருந்து விலகி
எப்படி வாழ்வது எனக்குத்தெரியவில்லை” – கொங்கனி கவிஞர் மனோகர்ராய் ஸர்தேசாய்( கோவா) –
என் அம்மாவுக்கு கற்பனை அதிகம்.எந்த இடத்தில் எப்படி நடந்துகொள்ளவேண்டும் ; எப்படிப்பேசவேண்டும் என்பதுபற்றியெல்லாம் ஒரு தெளிவு உண்டு.பேச்சிற்கிடையே பழமொழி,கிராமத்துச்சொலவடை உதிர்வதுண்டு. இவ்வளவு வயாசபின்பும்கூட என்மீது நம்பிக்கை இல்லாமல் இன்னும் முன்னேற்பாடாக நான் நடந்துகொள்ள எனக்கு வழிகாட்டும் வழக்கம் அம்மாவுக்குண்டு. அது எனக்குச் சற்று பிடிக்காது.மேடையில் பேசுகிற மனிதனாக நான் மாறியும்கூட என்மேடைப்பேச்சிற்கும் அம்மா முன்குறிப்புகள் சொன்னதுண்டு. அம்மாவுக்கு தன்னம்பிக்கையும் தன்மதிப்பும் அதிகம்..யாருடைய அலட்சியத்தையும் பொறுத்துக்கொள்ளமுடியாது. யாரையும் அலட்சியம் செய்யும் எண்ணமும் அம்மாவுக்குக்கிடையாது. சின்னவயதில் அம்மாவுக்கு நீரில் நெடுநேரம் முழ்கி விளையாடும் வழக்கம் இருந்ததால் கேட்கும் ஆற்றல் பிற்காலத்தில் கொஞ்சம் குறைந்துவிட்டது. யாருக்கும் உதவிசெய்யவேண்டும் என்பதே எண்ணமாக இருக்கும். சின்னவயதில் அத்திவெட்டி கிராமத்திற்கு திருமண, காதுகுத்து(காதணிவிழா) நிகழ்வுகளுக்காக பத்திரிகை(அழைப்பிதழ்) கொடுக்கப்போகும்போது என்னைப் பெண்கள் யாரென்று விசாரிப்பார்கள்.லட்சுமிமொவனா? ஆத்தாப்பிள்ளைப் பேரனா ?என்று விசாரிப்பார்கள்.அம்மாவுக்கும் அப்பாவுக்கும் இரக்கக்குணம் அதிகம்.