– ஏப்ரில் 2003 இதழ் 40 – டிசம்பர் 2003 ; இதழ் 48 வரை வெளியான பதிவுகள் இணைய இதழில் வெளிவந்த அம்மூடனார் பக்கத்தில் பிரசுரமான கவிதைகள் மற்றும் குறிப்புகள் ஒரு பதிவுக்காக மீள்பிரசுரமாகின்றன. –
இந்தக்கிழமை -I: எமக்கானது / எம்மாலானது
குழம்பியிருக்கிறேன்
நிரம்ப, உட்குடம் நுரை ததும்பத் ததும்ப.
நிலையால், நிகழ்வால் நீங்காக்குழப்பம்;
மேலாய், எரிநாள் நெடுக்க,
பேசியதை மீள மூளப் பேசவேண்டிய
மிருகவதை மூளை மேல் துரத்திப் படர்வதனால்.
ஓங்கு தான் உள்ளே ஒரு கணம் தயங்கினாலும்,
ஒன்று சொல்லித்தான் ஆகவேண்டும்;
“நான் குழம்பியிருக்கிறேன் – முக்கியமாய்
பேசப்படும் நான் பிம்பமில்லாதானானதினால்.”
இடது வலது எல்லாம் நாணிக் குழைந்தொன்றாய்
தெரு வழிந்தோடிப் போக, சுற்றி அவகதிலயத்திலே
உயிர்கொத்தியள்ளி, அதிர்கிறது சொத்திக்கூத்து.
கொள்ளிக்கையனும் அள்ளித்தின்னியும்
கறைக்கையைக் கோர்த்துக்கொண்டு
துள்ளித் துள்ளி ஆடும் துடிநாட்டியத்துரிதம்.
இடையிடையே எனதென்ற கடிதத்தில்
என்னைக் கொள்ளையடித்தவனுக்கும்
முகமிறுக்கி விட்டோம் முழுக்குத்தென
ஏராளமிட்டுக்கொண்டார் கையொப்பம் –
என் பெயரால், உன் பெயரால்
ஊரிருந்தார், உருவிறந்தார்
நிழல் பெயர்ந்தார், நிலைபெயரார்
எல்லார் பெருகுதுயர் பெயராலும்.
அடுத்தவேளைக்குப் பருப்புத்தேடும் சிறுத்த மனிதப்புள்ளி
அரசச்சு விளம்பரப்பொறி பரந்த தெரு அகல்சுவரில்
மூச்சுத் தப்பொரு பொட்டிடுக்குத் தேடி
மறுப்பறிக்கை சுழித்துக் காட்டமுடியுமா,
மெய் சொல்.
அவனிவன்மேல் ‘கொள்கைக்காரன்’, ‘கொள்ளைக்காரன்’
Continue Reading →