2000ஆம் ஆண்டில் மதிப்புக்குரிய எஸ்.பொ. அவர்கள் உலகப் பயணமொன்றினை ஆரம்பித்து டொராண்டோ வந்திருந்தார். வருவதற்கு முன்னர் என் முகவரிக்குக் கடிதமொன்றினை எழுதியிருந்தார். நான் அதுவரையில் எஸ்.பொ. அவர்களை நேரில் சந்தித்ததில்லை. அவரது படைப்புகள்வாயிலாகவே எனது அவருடனான அறிமுகமிருந்தது. அக்கடிதமானது அவரது பெருந்தன்மையினையும், இளம் எழுத்தாளர்களைச் சந்திக்க அவர் கொண்டிருந்த விருப்பினையும் புலப்படுத்தியது. இதனால் அவர் மீதான மதிப்பு பல மடங்கு அதிகரித்தது. இதற்கு முன்னர் அவரும், எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதியும் இணைந்து வெளியிட்டிருந்த ‘பனியும் பனையும்’ தொகுப்பு நூலில் எனது சிறுகதையான ‘ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை’ சிறுகதையினையும் சேர்த்திருந்தார். அவ்விதம் அவர் அந்தச்சிறுகதையினை அத்தொகுப்பில் உள்ளடக்கியிருந்த விடயம் எனக்கு அந்த நூல் வெளிவந்து பல வருடங்களுக்குப் பின்னரே தெரிய வந்தது. அச்சிறுகதை அத்தொகுப்பில் வெளிவந்ததற்குக் காரணகர்த்தாக்கள் எஸ்.பொ.வும், இந்திரா பார்த்தசாரதியுமே என்று நினைக்கின்றேன். அத்தொகுப்பு மூலம் எஸ்.பொ. புலம் பெயர் தமிழர்களின் இலக்கியத்துக்கு மிகப்பெரிய, ஆக்கபூர்வமான பங்களிப்பினை ஆற்றியிருக்கின்றாரென்பதே என் கருத்து.
இந்த மாதம் இற்றைத் திங்கள் நிகழ்வு: அகநாழிகை புத்தக உலகம், 390 அண்ணா சாலை, KTS வளாகம், (RG Stone மருத்துவமனை அருகில்), சைதாப்பேட்டை, சென்னை – 600 015.
நிகழ்ச்சி நிரல்: தமிழகத்தில் கனிமவள, தாது மணல், ஆற்றுமணல் கொள்ளைகளும் சகாயம் ஆய்வுக்குழு விவகாரமும்: உண்மை என்ன?
சிறப்புப் பேச்சாளர்கள்: முகிலன், ஒருங்கிணைப்பாளர், கனிமவளக் கொள்ளை சகாயம் ஆய்வுக்குழு ஆதரவு இயக்கம் | சிவ இளங்கோ: தலைவர், சட்டப் பஞ்சாயத்து இயக்கம் | தமிழகச் சிறைகளில் கைதிகளின் அவல நிலை: உமர்கயான். தமிழினியன். சே.ஜெ , ஒருங்கிணைப்பாளர், இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம்
30-11-2014, ஞாயிறு, மாலை 5 மணிக்கு. புக் பாய்ன்ட் அரங்கம், ஸ்பென்சர் பிளாசா எதிரில், அண்ணா சாலை, சென்னை. நினைவை பகிர்ந்துக் கொள்பவர்கள்:வேங்கடபதி (முன்னாள் மத்திய அமைச்சர்),…