வாசிப்பும், யோசிப்பும் 66: கடல்புத்திரனின் ‘வெகுண்ட உள்ளங்கள்’ தவிர்க்க முடியாததோர் ஆவணப்பதிவு!

வாசிப்பும், யோசிப்பும் 66:  கடல்புத்திரனின் 'வெகுண்ட உள்ளங்கள்' தவிர்க்க  முடியாததோர் ஆவணப்பதிவு!புலம்பெயர் தமிழ் இலக்கியப் படைப்பாளிகளில் பாலமுரளிக்கும் (கடல்புத்திரன்) ஓரிடமுண்டு.  இவரது சிறுகதைகள் சில  கனடாவில் வெளிவந்த ‘தாயகம்’ சஞ்சிகை / பத்திரிகையில் வெளிவந்திருக்கின்றன. அத்துடன் அவரது சிறு நாவல்களான ‘வேலிகள்’ மற்றும் ‘வெகுண்ட உள்ளங்கள்’ ஆகியனவும் ‘தாயக’த்தில் தொடராக வெளிவந்தன. இவையனைத்தையும் பின்னர் ஒரு தொகுப்பாக மங்கை பதிப்பகம் (கனடா) தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸ் மூலம் , அவர்களுக்குத் தமிழகத்தில் விற்பனை உரிமையினைக் கொடுத்து வெளியிட்டது. இவரது சிறுகதைகள் பல ‘பதிவுகள்’ இணையத்தளத்தில் வெளிவந்துள்ளன.  ‘சிறுகதைகள்.காம்’ இணையத்தளத்திலும் இவரது சிறுகதைகள் சில பிரசுரமாகியுள்ளன. எனது இந்தப் பதிவு கடல்புத்திரனின் ‘வேலிகள்’ தொகுப்பிலுள்ள நாவல்களிலொன்றான ‘வெகுண்ட உள்ளங்கள்’ பற்றியது. ஈழத்துத் தமிழ் அரசியல் நாவல்களென்றால் நிச்சயம் இந்த நாவலும் குறிப்பிடப்பட வேண்டியது அவசியமென்று கருதுகின்றேன்.

Continue Reading →

யாமினி கிருஷ்ணமூர்த்தி (1)

கொஞ்சம் பின்  கதை
யாமினி கிருஷ்ணமூர்த்தி (2)- வெங்கட் சாமிநாதன் -நான் தில்லி வாசியானது, வேடிக்கையாக இருக்கும், 1956-ம் வருடம் டிஸம்பர் மாதம் 30 அல்லது 31-ம் தேதி முதல். இது வருடக் கடைசி மாதக் கடைசி என்ற சுவாரஸ்யத்துக்காகவே இதைக் குறிப்பிடுகிறேன். தில்லி வந்த முதலே எனக்கு தில்லி வாழ்வின், அதன் கலைமுகங்களின், அதன் பத்திரிகைகளின் பங்களிப்பு மிக சந்தோஷம் தருவதாக இருந்தது. நான் கண்விழித்ததும், எனக்கான விருப்பங்களை நான் தேர்ந்துகொள்ள உதவியதும், அல்லது நான் என்னை உணர்ந்து என் தேர்ந்த வழிச்செல்ல உதவியது என்று சொல்லலாம் தில்லைவாழ்க்கை தான். காலையில் எழுந்ததும் எந்த தினசரிப் பத்திரிகை யானாலும் மூன்றாம் பக்கத்தில் அதற்கு முதல் நாள் மாலை அல்லது இரவு நடந்த கலை நிகழ்ச்சிகளின் ரெவ்யூ கட்டாயம் வந்துவிடும். எங்கும் வெள்ளிக்கிழமை தான் புதிய படங்கள் திரைக்கு வரும் நாளாக இருக்கும். மறு நாள் சனிக்கிழமை காலை பத்திரிகைகளின் மூன்றாம் பக்கம் அந்த புதுப்படத்தின் ரெவ்யூ எழுதப்பட்டிருக்கும். அது பெரும்பாலும் ஒரு informed தரத்தில் இருக்கும். கொஞ்சம் தரவேறுபாடு இந்த ரெவ்யுக்களில் இருந்த போதிலும் அது கட்டாயமாக வியாபார வெற்றிக்கு உதவுவதாக இராது சரி நல்ல ரெவ்யூ வந்திருக்கு. பார்க்கலாம் என்று ரசனை உள்ளவன் தேர்ந்து கொள்வதாக இருக்கும்.  இது சினிமாவோ, நடனமோ, ஓவியக் கண்காட்சியோ, ஒரு நாடகமோ எதுவானாலும். அனேகமாக தியேட்டரில் பார்க்கும் சினிமாவைத் தவிர மற்றது எல்லாமே விருப்பமுள்ளவருக்கு இலவச அனுமதி தான்.  தில்லிக்கு வந்த உலகின், இந்தியாவின் எந்த மூலையிலும் காணும்  கலைகள் பெரும்பாலான வற்றோடு நான் பரிச்சயம் பெற்றது தில்லி தந்த வாய்ப்புக்கள் தான். எனக்கு மட்டுமல்ல. செல்லப்பாவின், இ.பா.வின் கே.எஸ் ஸ்ரீனிவாசனின் புதிய நாடக முயற்சிகளும் அவை நிகழ்ந்த அடுத்த நாள் காலை பத்திரிகைகளில் வரவேற்பு பெற்றன. இதற்கு ஈடான ஒரு நிகழ்வை சென்னை ஆங்கில தமிழ்ப் பத்திரிகைகளில் நிகழ்ந்ததை யாரும் சொல்ல முடிந்தால் நான் நன்றியுடையவனாக இருப்பேன். ஒரு நாள் மாலை நிகழ்வு மறு நாள் காலை பத்திரிகையில் ரெவ்யூ எழுதப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இந்த தில்லிக்கே உரிய சிறப்பு இது கடந்த அறுபது எழுபதுக்கள் வரை கூட தொடர்ந்தது. பின்னர். எண்பதுக்களின் பின் பாதியிலிருந்து இந்த நிலை மாறிவிட்டது.

Continue Reading →

ஆய்வுக்கட்டுரை: சங்க இலக்கியத்தில் மடலேற்றமும் வன்முறைப் பதிவுகளும்

ஆய்வுக்கட்டுரை: சங்க இலக்கியத்தில் மடலேற்றமும் வன்முறைப் பதிவுகளும்சங்க இலக்கியம் அச்சமூக மக்களின் வாழ்வியலைப் பிரதிபலிப்பதாக அமைகின்றது. மடலேறுதல், என்பது அக்காலச் சமூக நடைமுறை வழக்காறுகளுள் ஒன்றாக இருந்து வந்துள்ளது. இம்மடலேற்றத்தில் மடல், மடல் ஏறுபவன் தோற்றம், மடல் ஏறுபவரின் நோக்கம் மற்றும் அதன் சூழல் ஆகியவை முதன்மை இடம்பெறுகின்றன. அவ்வகையில் மடலேறுதல், எவ்வகையில் வன்முறையாகக் காட்சியளிக்கிறது என்பது குறித்துச் சங்கப் பாடல்களை முன்வைத்து ஆராய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.

மடலேற்றம் – பெயர்க்காரணம்
பனங்கருக்குப் ‘பனைமடல்’ என்றும் ‘பனை மட்டை’ என்றும் இன்று பெயர் வழங்கப்பெறுகிறது. இப்பனை மடலால் மா செய்ததால் அதாவது குதிரை, யானை போன்ற விலங்கு உருவங்கள் செய்ததால் இதற்கு ‘மடல்மா’ என்றும், இம்மடல்மா மேல் ஏறி வருவதால் ‘மடலேறுதல்’ என்றும் பெயர்பெறுவதாயிற்று. இது மடலூர்தல் என்றும் பெயர்பெறும். இம்மடலேற்றம் காமத்தின் எல்லை தாண்டும்போது நிகழ்கிறது. இது தொல்காப்பியர் காலத்திற்கு முன்பிருந்து அகத்துறைகளுள் ஒன்றாக வைத்துக் கருதப்படுவதாகும். தொல்காப்பியர் ஏறிய மடல் திறத்தை பொருந்தா காமத்தின் பாற்படும் பெருந்தினணயுள் அடக்குவர்.(தொல்.997,ப.273)இத்துறையில் அமைந்த கலித்தொகைப் பாடல் பின்வருமாறு.

Continue Reading →

ஆய்வுக்கட்டுரை: சங்க இலக்கியத்தில் மடலேற்றமும் வன்முறைப் பதிவுகளும்

- பா.சிவக்குமார்,    முனைவர் பட்ட ஆய்வாளர்,  தமிழ்த்துறை,  பாரதியார் பல்கலைக்கழகம் கோவை-46 -ஆய்வுக்கட்டுரை: சங்க இலக்கியத்தில் மடலேற்றமும் வன்முறைப் பதிவுகளும்சங்க இலக்கியம் அச்சமூக மக்களின் வாழ்வியலைப் பிரதிபலிப்பதாக அமைகின்றது. மடலேறுதல், என்பது அக்காலச் சமூக நடைமுறை வழக்காறுகளுள் ஒன்றாக இருந்து வந்துள்ளது. இம்மடலேற்றத்தில் மடல், மடல் ஏறுபவன் தோற்றம், மடல் ஏறுபவரின் நோக்கம் மற்றும் அதன் சூழல் ஆகியவை முதன்மை இடம்பெறுகின்றன. அவ்வகையில் மடலேறுதல், எவ்வகையில் வன்முறையாகக் காட்சியளிக்கிறது என்பது குறித்துச் சங்கப் பாடல்களை முன்வைத்து ஆராய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.

மடலேற்றம் – பெயர்க்காரணம்
பனங்கருக்குப் ‘பனைமடல்’ என்றும் ‘பனை மட்டை’ என்றும் இன்று பெயர் வழங்கப்பெறுகிறது. இப்பனை மடலால் மா செய்ததால் அதாவது குதிரை, யானை போன்ற விலங்கு உருவங்கள் செய்ததால் இதற்கு ‘மடல்மா’ என்றும், இம்மடல்மா மேல் ஏறி வருவதால் ‘மடலேறுதல்’ என்றும் பெயர்பெறுவதாயிற்று. இது மடலூர்தல் என்றும் பெயர்பெறும். இம்மடலேற்றம் காமத்தின் எல்லை தாண்டும்போது நிகழ்கிறது. இது தொல்காப்பியர் காலத்திற்கு முன்பிருந்து அகத்துறைகளுள் ஒன்றாக வைத்துக் கருதப்படுவதாகும். தொல்காப்பியர் ஏறிய மடல் திறத்தை பொருந்தா காமத்தின் பாற்படும் பெருந்தினணயுள் அடக்குவர்.(தொல்.997,ப.273)இத்துறையில் அமைந்த கலித்தொகைப் பாடல் பின்வருமாறு.

Continue Reading →

பால்யகாலத்திலிருந்து புகலிட காலம் வரையில் தொடரும் நினைவுப்பதிகை. காலம் பாதுகாக்கவேண்டிய பொக்கிஷம் நூலகர் நடராஜா செல்வராஜா

'நூல்தேட்டம்' நூலகவியலாளர் என். செல்வராஜா!முருகபூபதிநீர்கொழும்புக்கு    வந்திருக்கிறீர்களா? அந்த   ஊர்   குறித்து   கர்ணபரம்பரைக்கதைகளும்    சுவாரஸ்யமான வரலாற்று    செய்திகளும்    இருக்கின்றன. அங்கிருந்த   தமிழர்கள்   சிங்களவர்களாக    மாறிவிட்டார்கள்    என்று கேள்விஞானத்தில் வாய்க்கு   வந்தபடி   பேசிவருபவர்களும் இருக்கிறார்கள் ஏராளமான கத்தோலிக்க தேவாலயங்கள் அங்கு இருப்பதனால் சின்னரோமாபுரி என்றும் அழைப்பார்கள். அங்கு பூர்வீகமாக   வாழ்பவர்களும் அவர்களின் அடுத்த சந்ததியினரும் சகோதர மொழியான சிங்களத்தை   சரளமாக பேசுவதனால் அம்மக்கள் சிங்களவர்களாகிவிட்டதாக பலர்   கற்பனை    பண்ணிக்கொண்டிருக்கிறார்கள். மேல்நாடுகளுக்கு   வந்து    தமிழை   மறந்து   ஆங்கில   மோகத்தில் ஆங்கிலம்   மாத்திரம்   பேசிக்கொண்டிருப்பவர்கள்   அனைவரும் ஆங்கிலேயர்    என்ற   முடிவுக்கு   வந்துவிடமுடியுமா? அவ்வாறு   நீர்கொழும்பு   வாழ்   தமிழர்கள்   சிங்கள    மோகத்தில் தம்மை    மாற்றிக்கொள்ளவில்லை.   தோப்பு  –   கொச்சிக்கடை முதலான நீர்கொழும்பை    அண்டியிருக்கும் ஊர்களில்   வசித்த தமிழ்  கத்தோலிக்கர் சிலர்    சிங்களம்   கற்றால்   அரச  உத்தியோகம்   கிடைக்கும்  என நம்பி சிங்களம் படித்தனர்.  சில சிங்கள    கத்தோலிக்க  மதகுருமார் நீர்கொழும்பு   பிரதேசத்தில் தேவாலயங்களில்    சிங்கள மொழியில்  பிரார்த்தனை நடத்தினார்கள். இந்தப்பின்னணியிலிருந்து   அவ்வூர்   தமிழர்கள்   சிங்களவர்களாக மாறிவிட்டனர்   என்ற    முடிவுக்கு    வந்தவர்கள்   வாய்க்கு   வந்தபடி பேசிவருகிறார்கள்.

Continue Reading →

பேராசிரியர் செல்வா கனகநாயகம் : புன்னகையைத் தேக்கிவைத்திருந்த உதடுகள்

பேராசிரியர் செல்வா கனகநாயகம் ஓரு சில விஷயங்களில் மட்டும் கருத்து முரண்பாடு கொண்டு நாம் விமர்சித்தவர்கள் அகால மரணமடைகிறபோது நமக்கு ஏற்படும் உணர்வு முதலில் குற்றவுணர்வாகவே இருக்கிறது. அவர்கள் நாம் கண்டு பேசி நம்மை உபசரித்தவர்கள், நம்மோடு கனிவுடன் உரையாடியவர்கள் என்கிறபோது நமது விமர்சனம் அவர்களது இறுதிநாட்களில் அவர்களைச் சிறிதேனும் துன்புறுத்தி இருக்குமா என நினைக்கிறபோது எழுதுவதையும் விவாதிப்பதையும் சிந்திப்பதையும் கூட விட்டுவிடலாமா என்று சமயத்தில் நமக்குத் தோன்றும். தென் ஆசிய இலக்கியம் பயிற்றுவிக்கும் பேராசிரியர், ஆய்வாளர், மொழிபெயர்ப்பாளர், எழுத்தாளர் எனப் பன்முக ஆளுமை கொண்ட கனடிய நண்பரான செல்வா கனகநாயகத்தின் மரணத்தைக் கேள்வியுற்றபோது இவ்வாறான மனநிலைக்கே நான் ஆட்பட்டேன்.

அவருடன் விரிவாகப் பேசுவதற்கான இரண்டு தருணங்கள் எனக்கு வாய்த்தன. இலண்டன் ஐபிசி வானொலியில் ஒலிபரப்பவென இரண்டு மணித்தியாலங்கள் அவருடன் அவரது ஆய்வு நூல்கள் குறித்து உரையாடியிருக்கிறேன். அந்த உரையாடலுக்கெனவே அவரது நூல்கள் அனைத்தையும் இரு வாரங்களில் நான் வாசித்திருந்தேன். அன்று நான்கைந்து மணிநேரங்கள் என்னுடன் இருந்தார். தொரான்றோ பல்கலைக் கழகத்தில் நடந்த தமிழியல் கருத்தரங்கில் ஈழ நாவல்கள் பற்றிய எனது கட்டுரை சமர்ப்பிப்பதற்கான பயணத்தை தனிப்பட்ட முறையில் அவரும் ‘காலம்’ செல்வமும்தான் பொறுப்பெடுத்துச் செய்தனர். அந்த நிகழ்வுக்கும் வந்திருந்து விவாதங்களைத் துவக்கி வைத்தவரும் அவர்தான். நான் மொழிபெயர்த்த மஹ்முத் தர்வீஷ் கவிதைகள் நூல் குறித்தும் அவர் என்னுடன் தனிமையில் நெடுநேரம் பேசிக் கொண்டிருந்தார்.

Continue Reading →

நாட்டுக்குகந்த தொழில் நுட்பம் எழுந்த வரலாறு

நுணாவிலூர் கா. விசயரத்தினம் (இலண்டன்)தொழில் நுட்பம் பற்றி அலசுவதன்முன் அது எழுந்த கால எல்லை, எழவேண்டிய காரணம், அதனால் ஏற்பட்ட நன்மைகள், அதன் தற்போதைய வளர்ச்சி நிலை ஆகியவற்றைப் பார்ப்பது உசிதமென மனம் அவாக் கொள்கின்றது. கதிரவன் 460 கோடி ஆண்டுகளுக்குமுன் ஒரு நட்சத்திரம் தீப்பிடித்து எரிந்து உருவாயிற்று என்பது வானூலாரின் கணிப்பாகும். அதன்பின் கதிரவன் குடும்பத்திலுள்ள ஒன்பது (09) கோள்கள் தோன்றின. அதில், மக்கள் வாழக்கூடிய ஒரேயொரு கோளான பூமியானது 454 கோடி ஆண்டுகளுக்குமுன் தோன்றினாள்.

பூமிக்குரிய ஒரு நிலா 453 கோடி ஆண்டுகளுக்குமுன் தோன்றியது. பூமியில் 400 கோடி ஆண்டளவில் உயிரினங்கள் தோன்றத் தொடங்கின. முதல் மனிதன் 20 இலட்சம் ஆண்டளவில் தோன்றினான். மேலும், இரண்டு (02) இலட்சம் ஆண்டளவில் உறுப்பியல் அமைப்பான புது நாகரிகப் பண்பான மனிதன் தோன்றினான். இன்று பூமியில் ஓரறிவிலிருந்து ஆறறிவுடைய உயிரினங்கள் வாழ்கின்றன. இவற்றில் ஓரறிவு உயிர்களிலிருந்து ஐந்தறிவு உயிர்கள் வரையானவை ஒரே விதமான வாழ்க்கை முறைகளை என்றும் நடாத்திக் கொண்டு, எதுவித முன்னேற்றமுமின்றி மாண்டு மடிவதை எம்மால் பார்க்கமுடிகின்றது.

Continue Reading →

அறிவித்தல்: அவுஸ்திரேலியாவில் இயங்கும் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் உதவி பெறும் மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு முதல் உதவிப்பணம் அதிகரிப்பு. 25 ஆவது ஆண்டுப்பொதுக்கூட்டத்தில் தீர்மானம்.

இலங்கையில்   நீடித்த  உள்நாட்டுப்போரினால்  பெற்றவர்களையும் குடும்பத்தின்   மூல  உழைப்பாளியையும்  இழந்து  பாதிக்கப்பட்ட ஏழைத்தமிழ்   மாணவர்களுக்கு  அவுஸ்திரேலியாவிலிருந்து  உதவிவரும் இலங்கை   மாணவர்  கல்வி   நிதியத்தின்  25  ஆவது  ஆண்டுப்பொதுக்கூட்டம்   மெல்பனில்  அண்மையில் Vermont South  மண்டபத்தில்  நிதியத்தின் தலைவர்   திருமதி  அருண். விஜயராணியின்   தலைமையில்  நடைபெற்றது. நிகழ்ச்சியின்  தொடக்கத்தில்  போர்களில்  உயிரிழந்தவர்களின்   ஆத்ம சாந்திக்காக   ஒரு  நிமிடம்  மௌன   அஞ்சலி  செலுத்தப்பட்டது. நிதிச்செயலாளர்   திருமதி  வித்தியா  ஸ்ரீஸ்கந்தராஜா   நிதியத்தின்  24  ஆவது ஆண்டுப்பொதுக்கூட்ட    குறிப்புகளையும்  2014-2015   ஆண்டறிக்கை    மற்றும்    நிதியறிக்கைகளை   சமர்ப்பித்தார்.

Continue Reading →

ஆய்வுக்கட்டுரை: சோழர்கால பாட்டியல் நூல்களில் புலமைத்துவ செல்நெறி

முன்னுரை  
ஆய்வுக்கட்டுரை: சோழர்கால பாட்டியல் நூல்களில் புலமைத்துவ செல்நெறிதமிழில் வளமான இலக்கண மரபுகள் காலந்தோறும் உருப்பெற்று வந்துள்ளன. அந்த வகையில் பாட்டியல் இலக்கண நூல்கள் தனக்கென தனித்ததொரு மரபினை உடையனவாகத் திகழ்கின்றன. பாட்டியல் இலக்கண நூல்கள் கி.பி.7, 8-ஆம் நூற்றாண்டுகளிலேயே உருப்பெற்றதற்கான சான்றுகள் கிடைத்தாலும், தமிழக வரலாற்றின் இடைப்பட்ட காலமான சோழர் காலத்திலேயே (9-ஆம் நூற்றாண்டு), அவை தனக்கென தனித்ததொரு கோட்பாட்டுத் தளத்தினை நிறுவிக்கொண்டன. அத்தகைய காலப்பகுதியில் தோன்றிய பன்னிருபாட்டியல், வெண்பாப்பாட்டியல் ஆகிய இரு நூல்களின் ஊடாக வெளிப்படும் சோழர்கால புலமைத்துவ செல்நெறிகளைப் பற்றி ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

சோழார் காலப் பாட்டியல் நூல்களில் புலமைத்துவம்
சோழர் காலத்தில் உருவான பாட்டியல் இலக்கண நூல்களாக இரண்டினைக் குறிப்பிடலாம். ஒன்று பன்னிருபாட்டியல், மற்றொன்று வெண்பாப்பாட்டியல். இவையிரண்டும் பொருத்த இலக்கணம், பிரபந்த இலக்கணம் ஆகியவற்றைக் கூறுவனவாயினும், வெண்பாப்பாட்டியல் மட்டும் புலமைக்குரிய இலக்கணத்தைக் கூறுகின்றது. பன்னிருபாட்டியலில் புலமைத்துவ இலக்கணம் கூறாமைக்குக் காரணம் சரிவரத் தெரியவில்லை. எனினும் ‘பின்புலத் தேவைகளே பிரதிகளின் உருவாக்கம்’ என்ற நோக்கில் அது உருவான காலப்பகுதியில் அதற்கான தேவை எழவில்லை என யூகிக்கமுடிகிறது.

Continue Reading →

ஆய்வுக்கட்டுரை: சோழர்கால பாட்டியல் நூல்களில் புலமைத்துவ செல்நெறி

முன்னுரை  
ஆய்வுக்கட்டுரை: சோழர்கால பாட்டியல் நூல்களில் புலமைத்துவ செல்நெறிதமிழில் வளமான இலக்கண மரபுகள் காலந்தோறும் உருப்பெற்று வந்துள்ளன. அந்த வகையில் பாட்டியல் இலக்கண நூல்கள் தனக்கென தனித்ததொரு மரபினை உடையனவாகத் திகழ்கின்றன. பாட்டியல் இலக்கண நூல்கள் கி.பி.7, 8-ஆம் நூற்றாண்டுகளிலேயே உருப்பெற்றதற்கான சான்றுகள் கிடைத்தாலும், தமிழக வரலாற்றின் இடைப்பட்ட காலமான சோழர் காலத்திலேயே (9-ஆம் நூற்றாண்டு), அவை தனக்கென தனித்ததொரு கோட்பாட்டுத் தளத்தினை நிறுவிக்கொண்டன. அத்தகைய காலப்பகுதியில் தோன்றிய பன்னிருபாட்டியல், வெண்பாப்பாட்டியல் ஆகிய இரு நூல்களின் ஊடாக வெளிப்படும் சோழர்கால புலமைத்துவ செல்நெறிகளைப் பற்றி ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

சோழார் காலப் பாட்டியல் நூல்களில் புலமைத்துவம்
சோழர் காலத்தில் உருவான பாட்டியல் இலக்கண நூல்களாக இரண்டினைக் குறிப்பிடலாம். ஒன்று பன்னிருபாட்டியல், மற்றொன்று வெண்பாப்பாட்டியல். இவையிரண்டும் பொருத்த இலக்கணம், பிரபந்த இலக்கணம் ஆகியவற்றைக் கூறுவனவாயினும், வெண்பாப்பாட்டியல் மட்டும் புலமைக்குரிய இலக்கணத்தைக் கூறுகின்றது. பன்னிருபாட்டியலில் புலமைத்துவ இலக்கணம் கூறாமைக்குக் காரணம் சரிவரத் தெரியவில்லை. எனினும் ‘பின்புலத் தேவைகளே பிரதிகளின் உருவாக்கம்’ என்ற நோக்கில் அது உருவான காலப்பகுதியில் அதற்கான தேவை எழவில்லை என யூகிக்கமுடிகிறது.

Continue Reading →