நாவலின் பின்னணியாகப் பின் வரும் விஷயங்கள் இருந்தன : அருந்ததிராயின் அம்மா மேரி ராய் கேரள சிறியன் கிறிஸ்தவர். அப்பா ராய் வங்காளி. மேரி விவாகரத்தானவர். அருந்ததியின் சகோதரர் லலித். அருந்ததியும் லலித்தும் இரட்டைப் பிறவிகள் அல்ல. கோட்டயம் நகரத்திலிருந்து சில கிலோமீட்டர்கள் தள்ளியிருக்கும் அயமனம் கிராமம் இவர்களது சொந்த ஊர். அருந்ததியின் மாமா ஜியார்ஜ் ஐஸக். அருந்ததியின் தாத்தா ஜான் குரியன். தலைமைப் பொறியியலாளராக இருந்து பாதிரியாக ஆனவர். ஐஸக்கின் விவாகரத்துப் பெற்ற மனைவி ஸிஸிலியா பிலிப்ஸன். பாரடைஸ் ஊறுகாய் பேக்டரி ஐஸக் தொடங்கியதுதான். ஐஸக் இப்போதும் தாயுடன்-அம்மாச்சியுடன் தான் வாழ்கிறார். புள்ளியம்பல்லின் வயல்களுக்கு அப்பால் மிருச்சல் நதியோடுகிறது. அருந்ததி கட்டிடக்கலை பயில்கிறார். கோவாவில் திரிகிறார். குகா என்னும் மார்க்ஸிட்டோடு வாழ்கிறார். பிற்பாடு கிருஷ்ணன் என்பவரை மணக்கிறார். கிருஷ்ணன் ஏற்கனவே மனமானவர். இரண்டு குழந்தைகள் அவரது முதல் மனைவிக்குப் பிறந்தவர்கள். அருந்ததி, இரு பெண் குழந்தைகள், கிருஷ்ணன் ஆகியோர் குடும்பமாக வாழ்கிறார்கள். ராய் பிறந்தது ஷில்லாங்கில். பிற்பாடு அயமனம் வந்தவர். மேரி வழக்கு மன்றம் சென்று தன் சொத்துரிமையை நிலைநாட்டியவர்.
அகவாழ்க்கையைப் பெண்டிர் அடுக்களைகளிலே பெரிதும் கழிக்கின்றனர். அங்கு அவர்கள் அடையும் இன்னல்கள் அளப்பறியன. அவ்வின்னல்களைப் பொருட்படுத்தாது உணவு ஏற்பாடு செய்து தம் கணவரின் பசியைப் போக்கும் மாண்புடையவர்களாகவே விளங்குகின்றனர். அதனைத் தமிழில் குறுந்தொகையும் பிராகிருதத்தில் காதா சப்த சதியும் அறைகூவுகின்றன. இவ்விரு நூல்களில் குறுந்தொகையின் நூற்று அறுபத்தேழாம் பாடலும் காதா சப்த சதியின் பன்னிரண்டாம் பாடலும் மணஉறவுப் பெண்டிரின் அடுக்களைநிலைகளைக் குறிப்பிடுகின்றன. இங்கு அவ்விரு பாடல்களின் ஒத்த சிந்தனைகளையும் வேறுபட்ட சிந்தனைகளையும் இனங்காணப்படுகின்றன.
பொதுவாகப் பெண்டிர் மணவாழ்க்கையை ஏற்ற பின்பு கல்வி கற்றிருந்தாலும் கற்காவிட்டாலும் அடுக்களையில்தான் தம் வாழ்நாட்களைப் போக்குகின்றனர். இப்போக்கைப் பொருளாதாரத்தில் இடைநிலையாகவும் கீழ்நிலையாகவும் உள்ளோரிடத்துக் காணலாம். உயர்குடியில் பிறந்த பெண்டிர் பெரிதும் அடுக்களைப் பக்கம் செல்வது என்பது அரிது. அதற்காக அவர்கள் ஏவலர்களையும் வைத்துள்ளனர். இது இரு வீட்டாரின் இசைவால் நிகழ்ந்த திருமண வாழ்விற்கு ஒத்தது. ஆனால் இரு வீட்டாரின் இசைவில்லாமல் நிகழும் களவு மணப்பெண்டிருக்கு அடுக்களைதான் வாழ்க்கை. அதனையே அகவிலக்கியங்கள் பதிவுசெய்துள்ளன. அதனைக் குறுந்தொகைப் பாடல் (167) குறிப்பிடுகின்றது.

– குறிப்பு – அண்மையில் இலங்கையிலுள்ள மலையகப் பகுதியில் ஏற்பட்ட மண்சரிவின் போது உயிரிழந்த மற்றும் அநாதரவான அனைத்து தமிழ் உள்ளங்களுக்காகவும். –
கன்னத்துக்கு நீயளித்த அறையின் வீச்சில்
உடைந்து தெறித்தது மலையின் சிரசு
இடையறாது குருதியோடும் சதுப்பு நிலமாய் இதயம்
புதைந்தது குளிர்ந்த பள்ளத்தாக்கினிடையே
அருளும் பாதுகாப்பும் தரும்படி நாம்
உருவச் சிலைகளுக்கு மலர் வைக்கும்போதும்
நேசித்த மலை பற்றியே முணுமுணுத்தோம்
கனடாவில் இருந்து வெளிவரும் தமிழ் மிரர் ஆங்கிலப் பத்திரிகையின் வருடாந்த விருது வழங்கும் விழாவும் இரவு விருந்துபசாரமும் சென்ற வெள்ளிக்கிழமை 31-10-2014 அன்று ஸ்காபரோவில் உள்ள கொன்வின்ஷன் சென்ரரில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. பலவேறு துறைகளைச் சார்ந்த திறமை மிக்கவர்கள் சிலர் தெரிந்தெடுக்கப்பட்டு இந்த விருது வழங்கும் விழாவில் அவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. 2014 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான விருதை, ஈழத்தமிழ் எழுத்தாளரான குரு அரவிந்தன் அவர்கள் பெற்றுக் கொண்டார். 2011 ஆம் ஆண்டு தமிழகத்திலிருந்து வெளிவரும் மூத்த தமிழ் இதழான கலைமகள் நடத்திய ராமரத்தினம் நினைவு குறநாவல் போட்டியில் ‘தாயுமானவர்’ என்று குறநாவலுக்கான பரிசைப் பெற்ற குரு அரவிந்தன் 2012 ஆம் ஆண்டு தமிழர் தகவலின் இலக்கியத்திற்கான விருதையும் பெற்றவர் மட்டுமல்ல, இலங்கை இந்தியா கனடா போன்ற நாடுகளில் நடந்த போட்டிகளில் சிறுகதை, புதினம் போன்றவற்றுக்கும் பல விருதுகளையும், பரிசுகளையும் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நீண்ட நெடிய பாரம்பரிய பண்பாட்டை கொண்டது தமிழ் மரபு. அதை ஆய்வு நோக்கில் பயணிக்கிறது. ‘அழிந்த ஜமீன்களும்-அழியாத கல்வெட்டுக்களும்’. பண்டைய காலத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்வாதாரங்கள், நீர்நிலைகள், நாணயங்கள், செப்பேடுகள், போர்முறைகள், இறந்த ஊர்களின் நினைவைப் போற்றும் நடுகற்கள், அவர்களின் பெயர்களும் பெருமைகளும் பேசுகிறது இந்நூல். திண்டுக்கல், தேனி மாவட்டங்களை சார்ந்த ஆய்வை நூலாசிரியர் மேற்கொண்டு பல அறிய செய்திகளையும் ஆதாரங்களையும், கல்வெட்டுக்கள் கொண்ட புகைப்படங்களும் இதில் தெளிவாகவும், அழுத்தமாகவும் பதிவு செய்திருக்கிறார். பொதுவாக வரலாற்றின் வெளிச்சத்திற்கு வராமல் போன பல செய்திகளை ஆதாரங்களுடன் கொண்டுள்ளது இந்நூல். பாண்டிய நாடும் 100 நாடுகளும், பாளையக்காரர்களும் பாண்டியனின் மீன் கொடி உருவாக்கம், 73 பாளையங்களின் பெயர்கள் ஆகியவை இடம் பெற்றுள்ளது. ஜமீன்களின் எல்லைகள், ஊர்பெயர்களின் அர்த்தங்கள், உதாரணமாக: புரம் என்ற சொல்லும் சிறந்த ஊர்களை குறிக்கும். ஆதலால் காஞ்சிபுரம், சோழபுரம், பல்லாவரம், குள்ளப்புரம் போன்ற தகவல்களும், கூடல் என்றால் ஆறுகள் கூடிடும் துறைகளைப் பனிதமான இடங்களாகக் கருதிப் பண்டைய தமிழர்கள் கொண்டாடினார்கள் அவற்றை கூடல் என்று அழைத்துள்ளார்கள். கி.பி.1290-1296 வரை டில்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜி ஆட்சி செய்தார். அலாவுதீனின் படைத்தளபதி மாலிக்கபூர். சந்த்ராம் என்ற திருநங்கை மதம் மாறி மாலிக்கபூர் ஆனார் என்ற செய்தி ஆச்சரியத்தை தரும் செய்தியாக இருக்கிறது. இந்த செய்தியை வெளிக் கொணர நூலாசிரியர் எவ்வளவு மெனக்கிட்டுப்பார் என்பதனையும் உணரமுடிகிறது.
-தமிழ்மொழி வளர்வதற்கான ஊற்றுக் கண்ணாகச்சிற்றிதழ்கள் இக்கால கட்டத்தில் விளங்குகின்றன. தமிழில் வெளிவரும் சிற்றிதழ்கள், மேலைஇலக்கியங்களுக்கு ஒருபடி மேலே சென்று, உலக இலக்கியத் தரத்தைத் தமிழுக்குத் தந்து கொண்டிருக்கின்றன எனலாம். கவிதை, சிறுகதை, குறுங்கதைகள், திறனாய்வுகள், துணுக்குகள் எனப் பல்வகைப்பட்ட இலக்கியங்களைத் தரத்தோடு வெளிவரச்செய்ய முயல்பவைகளாகவும் இச்சிற்றிதழ்கள் அமைந்திருக்கின்றன. இலக்கியத் தாகத்தைக் கொண்டிருக்கும் எழுத்தாளர்களை ஊக்குவித்து, அவர்களின் படைப்பு ஆற்றலுக்கு தீனி போடக் கூடிய மற்றொரு பயனையும் சிற்றிதழ்கள் செய்கின்றன.
சிற்றிதழ் தன்மை
“எதிர்காலத்தில் தமிழ்ச்சூழலில் ஒரு மாற்றம் ஏற்பட வேண்டுமானால் அது சிற்றிதழ்களால் மட்டுமே நிகழும் என்பதை உறுதியாகக் கொள்ளலாம்.” 1
என்கிறது தமிழ் விக்கிப்பீடியா .மேலும் வணிக இதழ்களுக்கு மாறாகச்சிற்றிதழ்கள் அமைந்திருக்கும் தன்மையினைப் “பேச்சுத் தமிழும் ஆங்கிலக் கலப்பும் மலிந்திருக்கும் பெரும் பத்திரிக்கைச்சூழலுக்கு முற்றிலும் மாறுபட்டு, தமிழை வளர்ப்பதில் முக்கியப் பங்காற்றுபவை சிறுபத்திரிக்கைகள் “ 2 என மு.யாழினி வசந்தி கூறுவார்.தமிழக அளவிலும்,உலகில் தமிழர்கள் வாழும் பகுதியிலும் சிற்றிதழ்கள் பெரும்பான்மையாக இன்று வெளியிடப்படுகின்றன.இவ்விதமான சிற்றிதழ்களில் நவீன படைப்புகள் எவ்விதமான தன்மையினைப் பெற்றிருக்கின்றன என்பதை ஆய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.

சாதாரண… இரண்டு சில்லு, ஓர் இருக்கை, பெடல் போன்ற அம்சங்களைக் கொண்ட சைக்கிள்தான்! இருக்கையிலேறி அமர்ந்து பெடலை மிதித்து உளக்கினால் ஜம்மென்று போகும்.. செலவில்லாத பிரயாணம்.. பாரமில்லாத வாகனம். ஒரு கையினால் உருட்டலாம். ரெயில்வே கடவை பூட்டியிருந்தால் அலாக்காகத் தூக்கிக்கொண்டு புகுந்து மறுபக்கம் போய்விடலாம். அவனுக்கு ஒரு சைக்கிள் வேண்ட வேண்டுமென்ற ஆசை நீண்ட காலமாகவே இருந்தது. சுமார் எட்டு, ஒன்பது வருடமாக என்று சொல்லலாம். அதை ஆசை என்றும் சொல்லமுடியாது… நோக்கம்… ஒரு விருப்பம், அல்லது…. ஒரு இலட்சியம் என்று சொல்லலாமோ? அவனுக்கு ஒரு சைக்கிள் தேவைப்பட்டது. அதனால் சைக்கிள் வேண்டுகிற எண்ணம் இருந்தது. அதே எண்ணம் கை கூடாமலே இழுபட்டுக்கொண்டிருந்தாலும்… அவனும் அந்த எண்ணத்தைக் கைவிடுவதாய் இல்லை. ஏனெனில் கட்டாயமாக அவனுக்கு ஒரு சைக்கிள் தேவைப்பட்டது.
அவன் வேலைக்குப் பஸ்சிலேதான் போவான். எட்டு வருடங்களுக்கு முன்னர் ஐம்பது சதமாக இருந்த பஸ் கட்டணம் இப்பொழுது இரண்டு ரூபா நாற்பது சதமாக உயர்ந்திருக்கிறது. அப்பொழுதே மாதத்திற்கு முப்பது ரூபா பஸ் கட்டணமாக அழவேண்டியிருந்ததால்… ‘ஒரு சைக்கிள் வேண்டிவிட்டால்.. ஏழு மைல் தொலைவிலுள்ள தொழிற்சாலைக்கு சைக்கிளிலேயே போய்விடலாம்” என நினைப்பான். இப்பொழுது கிட்டத்தட்ட நூற்றைம்பது ரூபா பஸ்சிற்குச் செலவாகிறது. ஆறுமாத பஸ் செலவை மிச்சம் பிடித்தாலே சுமாரான ஒரு சைக்கிள் வாங்கிவிடலாம். ஆனால் அதை எப்படி மிச்சம் பிடிப்பது என்பதுதான் பிரச்சினை.