யாமினி கிருஷ்ணமூர்த்தி – (4)

யாமினி கிருஷ்ணமூர்த்தி (2)- வெங்கட் சாமிநாதன் -சொல்லப்போனால், யாமினி மனித ரூபத்தில் வந்துள்ள மான் தான். மானின் அத்தனை குணங்களையும், அதன் துள்ளலும் வேகமும், கண்களின் மிரட்சியும், யாமினியிடம் காணலாம். எவ்வளவு வேகத்தில் வெகு இயல்பாக முக பாவங்கள் மாறுகின்றன, எத்தனை உணர்வுகளை அவை சட்டென மாறி மாறிக் காட்டுகின்றன. அத்தனை அழகுடனும் துவளும் கைகள், விரல்கள், வித வித அழகான தோற்றங்களில் காட்சி தரும் உடல்வாகு, சட்டென அழகாக வடித்த சிலையென சலனமற்று உறைந்து காட்சி தரும் பயிற்சியின் லாகவம், அதே போல் மீண்டும்  சட்டென சிலையென உறைந்த நிலையிலிருந்து விடுபட்டு ஒரு துள்ளலில்   மேடையை தன்னதாக்கிக் கொள்ளும் தடையற்றுப் பெருகும் ஆற்றல், எல்லாம் வருஷங்கள் செல்லச் செல்ல, திறனும் வருஷங்களோடு வளர்கின்றன

ஆனால் யாமினியின் ஆரம்ப கட்டத்தில் கண்ட திறனே, அவர் காலத்திய மற்ற நடன கலைஞர்களிடையே, பரத நாட்டியம் மட்டும் அல்ல, மற்ற குச்சிபுடி போன்ற வடிவங்களிலும்கூட  அவர் தனித் திறமையும்  கலை நோக்கும் கொண்டவர் என்ற நமபிக்கையைத் தோற்றுவித்துவிட்டது இங்கு யாமினியின் திறன்கள் அத்தனையையும் கொண்டு யாமினியும் வளர்கிறார். பரதமும் யாமினியின் வளரும் திறன்களுக்கும் கற்பனை வீச்சுக்கும், அவரது தனித்த பார்வைக்கும் ஏற்ப பரதமும் தன் எல்லைகளை விஸ்தரித்துக் கொள்கிறது.

Continue Reading →

ஈரானியக் கவிஞர் மஹ்மூத் ஃபலாகி கவிதைகள் | தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்

ஈரானியக் கவிஞர் மஹ்மூத் ஃபலாகி கவிதைகள் | தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்1. இருண்ட சொற்கள்

உலகின் பார்வைக்குப் புலப்படா நெற்றியிலிருந்து
எமது எண்ணங்களில் துடிப்பவற்றை
ஒரு பெரும் மத்தளத்தின் துணையுடன்
பித்துப் பிடித்தவனொருவன் அம்பலப்படுத்துகிறான்

ஒரு கல் தட்டப்படுகிறது
அதனுடன் ஒப்பிடுகையில்
தண்ணீரும் புற்களும்
எமது துயரங்களின்
விகாரமான வடிவங்களைக் காட்டுகின்றன

‘நாம் ஏன் பிறந்திருக்கிறோம்?’ என
திரும்பவும் கேட்க மாட்டேன்
அப்படிக் கேட்பதன் மூலம்
கற்களின் வரலாற்றின் பின்னாலிருக்கும்a
ளபளப்பான வார்த்தைகளின் மீது
சோர்வுகளை ஊற்ற முடியாது

எளிமையாகவும் பிரகாசமாகவும் இருப்போம்
எனவே யன்னலிலிருந்து உனது
பார்வையைத் திருப்பும்போதெல்லாமோர்
பாடலின் வடிவம் கொள்ளும் யன்னல்

Continue Reading →

சிங்கப்பூர் ஜெயந்தி சங்கரின் படைப்புலகம்: கோவையில் இலக்கியச்சந்திப்பு கூட்டம்!

சுப்ரபாரதிமணியன்இலக்கியச்சந்திப்பு-49 இனிதே நடைபெற்றது. இளஞ்சேரலின் வரவேற்புடன் தொடங்கிய இந்நிகழ்வில் சு.பழனிச்சமி அவர்களின் ‘கருவத்தடி’ கவிதைநூல் குறித்து செல்வி அவர்கள் பேசினார்கள். தொடர்ந்து ஜெயந்தி சங்கர் படைப்புலகம் குறித்துப் பேசப்பட்டது. ஜெயந்தி சங்கரின் ‘நெய்தல்’நாவல் குறித்து அவைநாயகன் அவர்களும் ‘வாழ்ந்து பார்க்கலாம் வா’ நாவல் குறித்து இரா.பூபாலனும் மற்றும் அவரின் நான்கு நாவல்கள் குறித்து சுப்ரபாரதிமணியன் அவர்களும் பேசினார்கள் பின் இரவீந்திரபாரதியின் நாவல் ‘காட்டாளி’ குறித்து அன்புசிவா பேசினார் தொடர்ந்து ஏற்புரை வழங்கி சிறப்பித்தார் இரவீந்திரபாரதி. அடுத்து கவிஞர் வேல்கண்ணனின் ‘இசைக்காத இசைக்குறிப்பு’ கவிதைநூல் குறித்து மதுரை சரவணன் கட்டுரை வாசித்தார் வேல்கண்ணன் ஏற்புரை வழங்கினார்.

சுப்ரபாரதிமணியனின் பேச்சின் ஒரு பகுதி :
தமிழகச்சூழலில் அடையாள அரசியல் பற்றிய விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. சிங்கப்பூர் சூழலில் அடையாள அரசியல் என்பது பற்றிய வரையறை முற்றிலும் வேறுபட்டது. சிங்கப்பூரில் பிறந்து  வாழ்பவரா இல்லை வேலைக்காக சிங்கப்பூர் வந்து குடியேறியவரா என்பதே அவ்விவாதம். வந்தேறிகள், அல்லது குடியேறியவர்களின் இலக்கியம் என்ற பிரிவே இதை ஒட்டி  கிளப்ப்ப்பட்டிருக்கிறது.  ஜெயந்தி சங்கரின் நாவல்களில் மையமாக சிங்க்ப்பூரில் பிறந்து  வாழ்பவர்கள், இல்லை வேலைக்காக சிங்கப்பூர் வந்து குடியேறியவர்கள் பற்றிய அனுபவங்களாகவே  அமைத்திருக்கிறார். அவரின் அய்ந்து நாவல்கள் தொகுக்கப்பட்டு 1100 பக்கங்களில் காவ்யா பதிப்பக வெளியீடாக வந்துள்ளது.

Continue Reading →

சிறுகதை: பிராயச்சித்தம்

- - எம். ரிஷான் ஷெரீப், இலங்கை -தூங்கிக் கொண்டிருந்த அவரது பருத்த வயிற்றின் மேல் யாரோ ஏறி அமர்ந்துகொண்டார்கள். இரு கைகளையும் மாற்றி மாற்றி நெஞ்சில் ஓங்கிக் குத்தினார்கள். கனவில் வந்திருந்த குதிரைப்படைகள் அடி தாங்காது அலறித் திசைக்கொன்றாகத் தெறித்தோடின. புலனுணர்ந்து பதறித் துடித்து விழித்துப் பார்த்தபொழுது மகன் வயிற்றுப்பேரன் அவர் வயிற்றிலமர்ந்து தன் இரண்டரை வயதுப் பிஞ்சுக் கைகளால் அவரது நெஞ்சில் குத்திக் கொண்டிருந்தான். ‘அச்சு அச்சு’ எனத் தன் அக்காவைப் பற்றி ஏதோ குற்றம் சொல்லவிழைந்தான்.

அவசரமாக விழித்ததில் பரபரத்து அவர் மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கினார். தூக்கத்தில் சிவந்த கண்களை அப்படியும் இப்படியுமாக உருட்டினார். குழந்தை பயந்துபோனது. அவரது தொப்பை வயிற்றை நனைத்தபடி அழத் தொடங்கியது. குழந்தையின் அழுகை கேட்டு எட்டிப் பார்த்த அதன் அம்மா திண்ணைக்கு ஓடிவந்து பாயில் காற்றாடப் படுத்திருந்த மாமனாரின் வயிற்றில் அமர்ந்திருந்த குழந்தையைக் கடிந்தவாறே அள்ளித் தூக்கிக் கொண்டாள். சமையலறையில் வேலையாக இருந்திருக்கவேண்டும். உடுத்திருந்த புடவை இழுத்துச் செருகப்பட்டிருக்க, உடலிலும் துணியிலும் அரிசி மாவு வெள்ளை படிந்திருந்தது.

குழந்தையைப் பார்த்துக் கொள்ளாமல் என்ன செய்கிறாயென்பது போன்ற ஏதோவொரு வசவு வெளியே ஊஞ்சலாடிக் கொண்டிருந்த சிறுமியை நோக்கி ஏவப்படுவது மெலிதாகக் கேட்டது. மதியச் சாப்பாட்டிற்குப் பிறகு தினமும் இப்படி திண்ணையில் காற்றாடச் சாய்ந்துகொள்வது அவரது வழமைதான். இன்று சற்று நேரத்துடன் விழித்துக் கொண்டுவிட்டார். குழந்தை வந்து குழப்பாமல் விட்டிருந்தால் இன்னும் நன்றாகத் தூங்கியிருக்கலாம். மூத்திர வீச்சம் நாசிக்கு எட்டத் தொடங்கியது. எழுந்து ஒரு கை ஊன்றி பாயிலேயே அமர்ந்து கொண்டார். துவைத்துக் காய்த்தெடுத்த வெள்ளை சாரமொன்றை மருமகள் கொண்டு வந்து அருகிலிருந்த சாய்வு நாற்காலியில் வைத்து உடை மாற்றிக் கொள்ளச் சொல்லி நகர்ந்தாள்.

Continue Reading →

பிரசிடண்டுக்கும் வால்டருக்குமிடையிலான உரையாடல் அல்லது ஏகாதிபத்தியவாதியின் மக்கள் மீதான பற்று!

தர்மசிறீ பண்டாரநாயக்க– தகவல் உதவி – விக்கிபீடியாமூலம் (சிங்களமொழியில்) – தர்மசிறி பண்டாரநாயக்கவின் ‘ஏகா அதிபதி’ நாடகத்தின் ஒரு பகுதி.\தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை –

நீ காண்டாமிருகம் போன்ற ஒரு மிருகமென உன்னைப் பார்த்த நாளிலேயே நினைத்துக் கொண்டேன். பால் குடித்து வளர்ந்தாலும் அது மிகப் பயங்கரமான மிருகம். ஆனால் அதன் கொம்பு உடையும் நாளில், அதன் விளையாட்டெல்லாம் முடிந்துவிடும் என்பது அதற்குத் தெரியாது. இந்தக் கொஞ்ச நாளாக நீ என்ன செய்தாய்?’

‘ நீங்கள் செய்யாத எல்லாவற்றையும் போலச் செய்தேன்’

‘ நாட்டின் உயிரைக் காப்பாற்றவென்று நீ முன்வந்த நாளிலிருந்து போகத்தொடங்கியது எனது ஊர்’

‘ நீங்கள் என் மீது குற்றம் சுமத்தினாலும், நாட்டு மக்கள் என் பக்கம்தான் சார்ந்திருக்கிறார்கள்.’

‘ அழிவு ஆயுதங்களைக் காட்டினால் அந்த சார்பு நிலையை இல்லாமலாக்க முடியும்’

‘ ஆனால் அழிவு ஆயுதங்களால் செய்ய முடியாதவற்றைத்தான் நான் செய்திருக்கிறேன்’

‘ஆயுதங்களால் செய்ய முடியாதென்பது எனக்குத் தெரியும். ஆனால் ஆயுதத்தை நெஞ்சில் வைத்து எந்தவொரு மனிதனிடமிருந்தும் என்னால் வேலை வாங்க முடியும்’

Continue Reading →

தீராத திமிர்கொண்ட பெண்ணா, எம்சீதை? (பாரதியின் சாயலில் ஒரு பாட்டு)

-பேராசிரியர் கோபன் மகாதேவா -

தீராத திமிர் கொண்ட பெண்ணு — சீதை
வீட்டிலே புருஷனுக்கு மனமெல்லாம் புண்ணு…
தீராத திமிர் கொண்ட பெண்ணு!…   …   …   …   …   (தீராத)

தேத்தண்ணீர் கொண்டுபோய்க் கொடுப்பாள் — அது
நாக்கிலே படுமுன்னர் தட்டிப் பறிப்பாள் — அவர்
ஏனம்மா?… என்ன இது?.. என்றால்…
சீனிபோட மறந்தாச்சு! அதற்கு என்ன? என்பாள்!…     (தீராத)

Continue Reading →