மாதொருபாகனை முன்வைத்து மேலும் சில கருத்துப்பகிர்வுகள்

லதா ராமகிருஷ்ணன் எழுத்தாளர் ஒருவர் ஏன் இந்தக் கதைக்கருவைத் தெரிவுசெய்துகொண்டார், ஏன் அந்தக் கதைக்கருவைத் தெரிவுசெய்துகொள்ளவில்லை; ஏன் இந்தக்கதைக்கருவை இப்படிக் கையாளவில்லை, ஏன் அந்தக் கதைக்கருவை அப்படிக் கையாண்டார் என்று கேட்பதெல்லாம் ஒருவகையில் அபத்தம்தான். அதேசமயம், ஒரு கருப்பொருளை எழுத எடுத்துக்கொள்வதற்கு ஒரு கதாசிரியருக்கான நோக்கம் என்று ஒன்று இருக்கும்போதுதான் அந்த எழுத்து பொருட்படுத்தக் தக்கதாகிறது. அப்படியொரு நோக்கமிருந்து அது எழுத்துமூலம் நேர்த்தியாக, அழுத்தமாக வெளிப்படும்போதுதான் அந்தப் படைப்பு வாசகரிடையே நேர்மறையான பரிவதிர்வை ஏற்படுத்துகிறது.

தன்னுடைய கருத்தை ‘அடிமைத்தனமாக’ மண்டியிட்டுத் தெண்டனிட்டு ஏற்காத யாரையும் ’வெறியர்களாக’ச் சித்தரிப்பது சில அறிவுசாலிகளின் வழக்கமாக இருந்துவருகிறது. ஆனால், ஒரு சமூகமாற்றத்திற்கான முன்முனைப்பை மெய்யாலுமே மேற்கொள்கிறவர்கள் அந்தச் சமூகத்தைச் சேர்ந்த அனைத்துப் பிரிவினரிடமும் அதற்கான மனமாற்றத்தை உருவாக்கவே முற்படுவார்கள். ஈழத் தமிழர்கள் பிரச்னையில் கூட நிறைய அறிவுசாலிகள் ‘சிங்கள மக்களை’ ஒட்டுமொத்தமாக காடையர்கள், இனவெறியர்கள் என்று முத்திரை குத்தி எழுதிவந்தார்கள். இவ்விதமான அணுகு முறையால் அவ்வப் பிரிவு மக்களிடையே உள்ள ‘மனசாட்சியுள்ள மனிதர்களும் புறக்கணிக்கப் படும், ஒதுங்கிக்கொண்டுவிடும் எதிர்மறை பாதிப்புகளே அதிகம் ஏற்படும்.

Continue Reading →

சுப்பர் சிங்கர் ஜுனியர் – 4

ஜெசிக்கா யூட்சுப்பர் சிங்கர் ஜுனியர் – 4 போட்டி இம்முறை சர்வதேசத் தமிழர்களின் பார்வையை வெகுவாகத் திருப்பியிருக்கின்றது. காரணம் கனடியத் தமிழரான ஜெசிக்கா யூட் அதில் கலந்து கொண்டு சிறந்த பாடகிகளுள் ஒருவராக முன்னணியில் நிற்பதேயாகும். ஏற்கனவே கனடாவில் இருந்து பலர் இப்படியான நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கிறார்கள். சண் தொலைக்காட்சியில் எனது தமிழ் வகுப்பில் தமிழ் கற்ற மாணவனான சுபவீன் சென்ற வருடம் முதலிடத்தைப் பெற்று எமக்குப் பெருமை தேடித்தந்தார். யார், எங்கேயிருந்து வந்தார் என்பதைவிட, திறமைக்குச் சண் தொலைக்காட்சி அங்கே முதலிடம் கொடுத்திருந்ததைப் பலரும் பாராட்டியிருந்தார்கள். அது போலவே கனடாவில் இருந்து பாடக, பாடகிகளான எலிசபெத் மாலினி, விஜிதா, மகிஷா, சரிகா, சாயிபிரியன் போன்றவர்களும் சென்ற வருடங்களில் விஜே தொலைக்காட்சி சுப்பர் சிங்கர் போட்டியில் பங்கு பற்றியிருந்தனர். விஜே தொலைக்காட்சி மூலம் தங்கள் திறமையைக் காட்டியிருந்தனர். இம்முறை 14 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான போட்டியில் ஜெசிக்காவிற்கு நல்ல சந்தர்ப்பம் கிடைத்திருக்கின்றது. அதை எந்த அளவிற்கு அவர் பயன் படுத்துவார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Continue Reading →

ஆய்வு: அகநானூற்றுப்பாடல்களில் உடன் போக்கு

ஆய்வு: அகநானூற்றுப்பாடல்களில் உடன் போக்குஅகத்தையும் புறத்தையும் பதிவு செய்திருக்கும்  சங்க இலக்கியங்கள் பெண்ணுக்கான களவு வெளியை வெகுவாகப் பேசுகின்றன.ஆணுக்கொரு பண்பாட்டையும் பெண்ணுக்கொரு பண்பாட்டையும் கொண்ட தமிழ்ச்சமுதாயத்தில் பெண் தான் மேற்கொண்ட களவு வாழ்வைக் கற்பு வழிப்படுத்தச் சமுதாயம், குடும்பம், சூழல் முதலான அமைப்புகளைக் கடக்கவேண்டியிருக்கிறது.பெண் தான் விரும்பிய வாழ்வை மேற்கொள்ள சில நேரங்களில் உடன்போக்கு மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. இந்த உடன்போக்கை, உடன்போக்கு உணர்த்தும் மெய்ம்மைகளை அகநானூற்றுப்பாடல்கள் வழியாக ஆய்வுசெய்கிறது இக்கட்டுரை.

உடன்போக்கு உணர்த்தும் மெய்ம்மைகள்
 முன்பே குறிப்பிட்டதுபோலத் தலைவி தான் மேற்கொண்ட களவு வாழ்வைக் கற்பு வழிப்படுத்தச் சமுதாயம், குடும்பம், சூழல் முதலான அமைப்புகளைக் கடக்க வேண்டியிருக்கிறது. சிலநேரங்களில் உடன்போக்கு மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. இதற்குப் பெண்ணே உடந்தையாகவும் இருந்திருக்கிறாள். கயமனாரின் பாலைத் திணைப்பாடலில் தோழி, “ நின்னை மிக விரும்பிய அன்னை எய்தும் துன்பத்தை உளத்திற்கொண்டும் நின் தமையன்மாரது புலியை ஒத்த அச்சம் தரும் தலைமையை நோக்கியும் நீதான் கலங்காத மனத்தினையுடையையாகி என் சொல்லை விரும்பி ஏற்றுக் கொள்வாயாக. உடன்போக்கினைத் துணிவாயாக” என்று கூறுகிறாள் (பா.எ.259.)தோழியின் கூற்றின்படி தமையன்மாரது அச்சம்தரும் தலைமையும் இதன் விளைவாக ஏற்பட்டிருக்கும் அன்னையின் துன்பமும் தலைவியின் களவு வாழ்வு கற்பு வாழ்வை நோக்கிப் பயணிக்கத் தடையாயிருக்கின்றன. இத்தடைகளைத் தகர்த்தெறியவே உடன்போக்கு என்ற நிகழ்வு. உடன்போக்குக்குக் காரணமாயிருப்பவள் தோழியே.  கயமனாரின் மற்றொரு பாடலில் தோழி, நம் தாய் தந்தையர் மணத்திற்கு ஆவன செய்துள்ளனர், நான் தலைவனுடன் அரிய காட்டுவழியில் செல்வதை ஏற்றுக்கொண்டுள்ளேன் என்று கூறுகிறாள்1. உடன்போக்குக் காரணமான தோழியே தலைவியின் நிலையைத் தலைவனுக்குஉணர்த்தும் வாயிலாகவும் அமைகிறாள்.

Continue Reading →