சரியாக இருபது வருடங்கள் ஆகப்போகின்றன. இமையத்தின் எழுத்துடன் முதல் பரிச்சயம் நிகழ்ந்து. கோவேறு கழுதைகள் நாவல் இமையத்தின் எழுத்துடனான முதல் பரிச்சயத்தைத் தந்தது. தலித் சமூகத்திடமிருந்து இன்னம் ஒரு சிறப்பான எழுத்தின் வருகையைக் கண்டு எனக்கு மிகுந்த உற்சாகமும் மகிழ்ச்சியும். வெகுஜன கவர்ச்சியை மீறி தனித்தடம் ஒன்று தனக்கென வகுத்துக்கொண்டு தம் பயணத்தைத் தொடங்கியவர்கள் கணிசமாக வந்துகொண்டிருந்த காலம் அது, கவனிக்கப் பட்டுக்கொண்டிருந்த கால கட்டமும்/. தன்னை ஸ்திரப்படுத்திக்கொண்ட கால கட்டம். ஆனால் வெகு ஜன கவர்ச்சியை ஒதுக்கியது ஒன்று தான் அவர்களை ஒன்று படுத்தியதே தவிர, அதில் உரத்த கோஷங்களும், பிரசாரமும், மிகைப் படுத்தல்களூம், கொள்கைகளே அனுபவங்களாக உருவாக்கப்பட்டவையாகவும் இருந்தவை ஒரு சுவடாகவும், இன்னொரு சுவடு இதுவரை சொல்லப்படாத அனுபவங்களுக்கு எழுத்துரு கொடுக்கப்பட்டனவாகவும், வரத் தொடங்கின. இந்த இரண்டாம் சுவட்டில் தான் பூமணி, சிவகாமி, சோ தருமன் போன்றோருடன் இமையமும் சேர்ந்து கொண்டது தெரிந்தது.
மகாபாரதம், இராமாயணம் ஆகிய இரண்டும் உலகம் போற்றும் உயர்ந்த இதிகாசங்களாகும். மகாபாரதம் இராமாயணத்தைவிடப் பெரியது. அதில் சுமார் முப்பதாயிரம் (30,000) பாடல்கள் உள்ளன. வியாச மகரிசி அவர்களால் மகாபாரதம் எழுதப்பட்டது. இந்நூல் எழுந்த கால எல்லையைக் கணக்கிட்டுக் கூறமுடியாது. ஆனாலும் மகாபாரதம் கி.மு. 1,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட நூலென்று சிலர் கருத்துரைப்பர். வியாசர் பாரதத்தைத் தழுவித் தமிழில் முதன் முதலில் எழுந்த காப்பியம் வில்லிபுத்தாழ்வாரால் இயற்றப்பட்ட வில்லி பாரதம் ஆகும். இதையடுத்து, ‘நல்லாபிள்ளை பாரதம்’, பாரதியாரின் ‘பாஞ்சாலி சபதம்’, மூதறிஞர் ராஜாஜியின் ‘வியாசர் விருந்து’, பல்கலை அறிஞர் ”சோ’ அவர்களின் ‘மஹாபாரதம் பேசுகிறது’, திருமுருக கிருபானந்தவாரியார் சுவாமிகளின் ‘மகாபாரதம்’, அறிஞர் அ. லெ. நடராசன் அவர்களின் ‘மகாபாரதம்’, சுவாமி சித்பவானந்தர் அவர்களின் ‘மகாபாரதம்’, பேராசிரியர் ஜெ. ஸ்ரீசந்திரன் அவர்களின் ‘மகாபாரதம் உரைநடையில்’ ஆகிய நூல்களும் எழுந்தன.
சகோதரர்களான கௌரவர் குடும்பத்துக்கும், பாண்டவர் குடும்பத்துக்கும் இடையில் தோன்றிய குடும்பப் பிரச்சினைகள் பெரும் யுத்தமாக உருக்கொண்டு பதினெட்டு நாட்கள் மகாபாரதப் போர் நடந்தது. அப்போரில் பதினெட்டு அக்ரோணிப் படைவீரர்கள் (முப்பத்தொன்பது இலட்சத்து முப்பத்தாறாயிரத்து அறுநூறு – 39,36,600) பங்கேற்று, அதில் பத்துப் பேர் தவிர மற்றைய அனைவரும் இறந்துபட்டனர். இறுதியாகப் பாண்டவர்கள் வெற்றி பெற்றுத் தருமர் முடிசூடி அத்தினாபுரத்தைத் தன் சகோதரரான பீமன், அருச்சுனன், நகுலன், சகாதேவன் ஆகியோருடன் ஆட்சி புரிந்து வந்தான். அத்தினாபுரத்து மக்களும் மகிழ்ச்சியில் மூழ்கி இன்புற்று வாழ்ந்து வந்தனர்.
இலங்கையின் மூத்த கவிஞரும் விமர்சகருமான நுஃமான் அவர்களுக்கு 70 வயது என்பதை அறிந்து முதலில் எனது நல்வாழ்த்துக்களை அவருக்குத் தெரிவித்துக்கொண்டே இந்தப்பதிவை எழுதத்தொடங்குகின்றேன். நுஃமான் தொழில் ரீதியில் பணியாற்றிய கல்வித் துறையில் எவ்வாறு படிப்படியாக உயர்ந்து இன்று தகைமைசார் பேராசிரியராக விளங்குகிறாரோ அவ்வாறே தாம் சார்ந்த இலக்கியத்துறையிலும் படிப்படியாக உயர்ந்து பலருக்கும் முன்மாதிரியாகியிருப்பவர். அவர் கவிஞர், விமர்சகர், ஆய்வாளர், மொழியியல் அறிஞர், பேராசான், பதிப்பாளர் முதலான பன்முகம் கொண்டவர். இலக்கியப்பிரவேசத்தில் அவர் ஆரம்பத்தில் சிறுகதைகளும் எழுதியிருக்கிறார் என்பதை அறியமுடிகிறது. பின்னாளில் ஆளுமையுள்ள விமர்சகராகத் தோற்றம் பெற்ற பலர் ஆரம்பத்தில் சிறுகதைகள்தான் எழுதியிருக்கின்றனர் என்பது தகவல். அந்த வரிசையில் கைலாசபதி – தொ.மு.சி ரகுநாதன் ஆகியோரையும் குறிப்பிடலாம்.
நுஃமான் பிறந்த ஆண்டு 1944 என்பது மாத்திரமே தெரிந்த நிலையில் அவரது வாழ்க்கைப்பின்புலம் பற்றிய எதுவித தகவலும் இற்றைவரையில் எனக்குத் தெரியாது. அவரை முதன் முதலில் கொழும்பில் இலக்கியசந்திப்புகளிலும் – பின்னர் அவர் ஆசிரியராக பணியாற்றிய கொழும்பு அல்.ஹிதாயா வித்தியாலயத்திலும் சந்தித்தேன். எனது நினைவுக்கு எட்டியவரையில் 1972 காலப்பகுதியில் அவரை ஒரு பாடசாலை ஆசிரியராகவும், அதேசமயம் இலக்கிய விமர்சகராகவும் பார்த்தேன். அவரை கவிஞன் என்ற கவிதைக்காக கிழக்கிலங்கையில் (1969 -1970) வெளியான இதழின் இணை ஆசிரியராகவும் மகாகவி உருத்திரமூர்த்தியின் சில நூல்களை பதிப்பித்த பதிப்பாளராகவும் தெரிந்துகொண்டிருந்தேன்.