இந்த அபலைப் பெண்ணைக் காப்பாற்றப் போகின்றவர் யார்?

case_sikiriya5.jpg - 55.72 Kbஇலங்கையின் தேசிய சொத்தாகக் கருதப்படும் சீகிரியா சுவரின் மீது அறியாமையின் காரணமாக, தனது கூந்தல் பின்னால் தமிழ்ப் பெயரைக் கிறுக்கிய இளம் ஏழைத் தமிழ்ப் பெண்ணுக்கு இரண்டு வருட கடூழியச் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இலங்கை, மட்டக்களப்பைச் சேர்ந்த உதேனி சின்னத்தம்பி எனப் பெயர் கொண்ட 23 வயது இளம்பெண்ணுக்கே இந் நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்தத் தண்டனையானது கடந்த 02.03.2015 அன்று தம்புள்ளை நீதவான் திரு.சஞ்சீவ ரம்யகுமாரால் வழங்கப்பட்டுள்ளது.
 
 வறுமையின் காரணமாக தொழிற்சாலை ஊழியராகப் பணியாற்றி வரும் இவர், தனது தொழிற்சாலை ஏற்பாடு செய்திருந்த சுற்றுலாப் பயணத்தில் கலந்துகொண்டு, சீகிரியா பிரதேசத்துக்கு வந்திருந்தபோதே இச் சம்பவம் நடைபெற்றுள்ளது. அங்கிருந்த சுவரில் ‘நன்றி உதயா’ எனக் கிறுக்கியதோடு, நேர்மையாக தான் செய்த தவறினை ஒப்புக்கொண்டதால் இவர் உடனே கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளார்.

Continue Reading →

‘ரொறன்ரோ’ தமிழ்ச்சங்கம் ; மாதாந்த இலக்கிய கலந்துரையாடல்

தமிழ் சிறுகதை இலக்கியம்

ரொறன்ரோ தமிழ்ச்சங்கம் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்

நிகழ்ச்சி நிரல்
சிறப்பு விருந்தினர்கள் உரை:
சிறுகதைகளும் பின்நவீனத்துவமும் – எழுத்தாளர் அகில்
கனடாவில் வெளிவந்த தமிழ் சிறுகதைகளின் கருப்பொருட்கள் – எழுத்தாளர் குரு அரவிந்தன்
ஆங்கில சிறுகதைகள் பற்றிய நவீன இலக்கிய திறனாய்வுகள் – பேராசிரியர் அ.ஜோசப் சந்திரகாந்தன்       சங்கீதம் சார்ந்த சிறுகதைகள் – பேராசிரியர் சு.பசுபதி

கௌரவ விருந்தினர் உரை:
எழுத்தாளர் அ.முத்துலிங்கம்

பெப்பிரவரி; மாத இலக்கிய நிகழ்வுகள்
தொகுப்புரை: திருமதி ஜெயகௌரி சுந்தரம்பிள்ளை

Continue Reading →

சுப்பர் சிங்கர் ஜூனியர் – 4 ஆசை காட்டி மோசம் செய்யலாமா?

குரு அரவிந்தன் சுப்பர் சிங்கர் ஜ+னியர் – 4 இன் முடிவுகள் வெளிவந்த போது ஆசை காட்டி மோசம் செய்து விட்டார்கள் தொலைக்காட்சியினர் என்று எல்லோருமே புலம்பினார்கள். ஆனால் ஒவ்வொருவரின் புலம்பலும் வித்தியாசமானவையாக இருந்தன. ஒவ்வொருவரும் தாங்கள் எதிர்பார்த்தபடியே நடந்திருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். ஆனால் எல்லாமே தலை கீழாக நடந்து முடிந்து விட்டது. இது ஒரு பொழுது போக்கு நிகழ்ச்சிதான், இதைப் பெரிது படுத்தக்கூடாது என்று நேயர்கள் நினைத்தாலும், இத்தனை மாதங்களாக நடுவர்களை வைத்து மிகவும் சிறப்பாக நடத்திய ஒரு நிகழ்ச்சியைக் கடைசி நேரத்தில் கோட்டை விட்டு விட்டார்கள் என்பதே பலரின் கருத்தாகவும் இருக்கின்றது. போட்டி என்று வந்தால் நேர்மையாக நடக்க வேண்டும் நடுவர்களின் தீர்ப்பபை ஏற்கவேண்டும். இதுதான் சரியான, நேர்மையான போட்டியாக இருக்கும். இதைத்தான் குழந்தைப் பருவத்தில் இருந்து நாம் கற்றுக் கொள்கிறோம், இதைத்தான் சிறுவர்களுக்கும் கற்றுக் கொடுக்கின்றோம். அந்த நேர்மையைத்தான் தொலைக்காட்சி நிறுவனத்தினரிடம் நேயர்களும், சிறுவர்களான போட்டியாளர்களும் எதிர்பார்த்தார்கள். 2010 ஆம் ஆண்டு நடந்த சுப்பர் சிங்கர் ஜூனியர் – 2 இல் அதிரடியாக அஜித்தைத் தெரிவு செய்து எப்படி சுதப்பினார்களோ அதே தவற்றை மீண்டும் செய்ய மாட்டார்கள் என்று நேயர்கள் எதிர்பார்த்தார்கள். மீண்டும் ஒரு தவறுக்கு இடம் கொடுக்க மாட்டார்கள் என்று திரும்பத் திரும்பச் சொல்லப்பட்டது. ஆனால் நினைத்தது ஒன்று நடந்தது வேறாகி விட்டது. பொருளாதார ரீதியாகப் பார்ப்போமேயானால் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு வருமானம் தான் முக்கியம் என்பதை நிலை நிறுத்தியிருக்கிறார்கள். முடிவெடுப்பது அவர்களாகையால், நேயர்களாகிய நாம் விருப்பமோ இல்லையோ அதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

Continue Reading →