நூல் அறிமுகம்: வீடு நாவல் பற்றிய இரசனைக் குறிப்பு

வீடு நாவல் பற்றிய இரசனைக் குறிப்பு  - வெலிகம ரிம்ஸா முஹம்மத் -தென்னிலங்கையின் தலைசிறந்த எழுத்தாளர்களுள் மிக முக்கியமான எழுத்தாளராக விளங்கும் திக்வல்லை கமால் அவர்கள் தமிழ் இலக்கிய உலகில் தனது பெயரை ஆழப்பதித்தவர். சாஹித்திய விருதுகள் உட்பட பல பரிசுகளை பெற்றுள்ள இவர், சிறுகதைகள், இலக்கியக் கட்டுரைகள், நாவல்கள், கவிதைகள், வானொலி நாடகங்கள், சிறுவர் இலக்கியங்கள் போன்ற துறைகளில் முனைப்புடன் செயல்பட்டு பல நூல்களை இலக்கிய உலகுக்கு தந்துள்ளார். அதுபோல் மொழியெர்ப்பு துறைகளிலும் ஈடுபட்டு பல நூல்களை பெயர்ப்பு செய்துள்ளார்.

திருமணம் என்பது ஆடம்பரத்துக்காகவும், புகழுக்காகவும் நிகழ்த்தப்படும் காலம் இது. யதார்த்தங்களைத் தொலைத்துவிட்டு மாயையகளுக்குள் ஒளிந்து கொள்ளவே பலரும் பிரியப்படுகின்றனர். சமகால நிகழ்வுகளின் ஓட்டத்தில் காசு பறிக்கும் ஒரு தொழிலாகவே திருமணத்தைப் பார்க்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை காணப்படுகின்றது. இத்தகைய சூழ்நிலையில் சராசரி ஆண்களில் இருந்தும் மாறுபட்டு பெண் வீட்டிலிருந்து ஒரு சதமும் சீதனம் எடுக்காமல் அல்லாஹ்வுக்காக என்ற எண்ணத்துடன் திருமணம் முடிக்கும் கரீம் மௌலவி பற்றிய கதைப் பிண்ணனிதான் வீடு என்ற இந்த நாவல்.

வீடு என்ற ஒற்றை வார்த்தையில் ஒரு தனிமனிதனின் போராட்ட வாழ்க்கை மிக அழகாக அற்புதமாக இந்நாவலில் சித்தரிக்கப்பட்டுள்ளது. நமது சமூகத்தைப் பொறுத்தளவில் மௌலவி என்பவர்கள் வசதி வாய்ப்பற்றவர்கள்.. நன்றாக படிக்காதவர்கள் என்ற எண்ணப்பாடு அதிகமாக காணப்பட்ட போதிலும், அல்லாஹ்வின் தீனைக் கற்றவர்கள் என்ற அந்தஸ்து உரியவர்களுக்கு வழங்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றது.

Continue Reading →

நெய்தல் – நீர்கொழும்பு வாழ்வும் வளமும் நூல் வெளியீட்டு அரங்கு; விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியின் வைரவிழாவை முன்னிட்டு நடைபெறும் முதலாவது இலக்கியப்பொது நிகழ்வு

– இந்நிகழ்வு பற்றிய அறிவித்தலைத்தவறவிட்டுவிட்டோம். வருந்துகின்றோம். ஒரு பதிவுக்காக இங்கே பிரசுரமாகின்றது. -பதிவுகள் –

நெய்தல் -   நீர்கொழும்பு   வாழ்வும்  வளமும்   நூல்  வெளியீட்டு அரங்கு; விஜயரத்தினம்  இந்து  மத்திய  கல்லூரியின் வைரவிழாவை  முன்னிட்டு நடைபெறும்  முதலாவது இலக்கியப்பொது   நிகழ்வு நீர்கொழும்பு   விஜயரத்தினம்  இந்து  மத்திய  கல்லூரி பழையமாணவர்  மன்றம்  ஏற்பாடு  செய்துள்ள  நெய்தல்  நூல் வெளியீட்டு   அரங்கு  எதிர்வரும்  28-02-2015   சனிக்கிழமை   மாலை 3 மணிக்கு    கல்லூரி    மண்டபத்தில்    நடைபெறும். மன்றத்தின்    தலைவரும்  நீர்கொழும்பு  மாநகராட்சி  மன்ற பிரதிநிதியுமான    திரு. சதிஸ் மோகன்    தலைமையில்  நடைபெறவுள்ள  இந்த   அரங்கில்  வெளியிடப்படும்  நெய்தல்  நூல் நீர்கொழும்பின்    வாழ்வையும்  வளத்தையும் விரிவாகப்பதிவுசெய்துள்ளது.    இக்கல்லூரியின்  வைரவிழாவை முன்னிட்டு    கல்லூரியின்    முதல்  மாணவரும் படைப்பிலக்கியவாதியுமான    திரு. லெ. முருகபூபதி  இந்நூலை தொகுத்துள்ளார்.

வெளிநாடுகளில்    புலம்பெயர்ந்து    வாழும்   கல்லூரியின் பழையமாணவர்கள்   எழுதியிருக்கும்  சிறுகதைகள்,   கட்டுரைகள், கவிதைகள்,    விமர்சனங்கள்,   ஆய்வுகளை    உள்ளடக்கியது  இந்நூல். சங்க    இலக்கியத்தில்  இடம்பெறும்  கடலும்  கடல்  சார்ந்த பிரதேசமுமான    நெய்தல் நிலப்பரப்பின்    மகிமையை    பதிவுசெய்யும் வகையில்   ஆக்கங்கள்     இடம்பெற்றுள்ள     இந்நூலில் அவுஸ்திரேலியா,    சிங்கப்பூர்,   பிரான்ஸ்,  ஜெர்மனி,  இங்கிலாந்து, கனடா,   துபாய்,   மற்றும்  இலங்கையில்  வதியும்  பலர் எழுதியுள்ளனர்.

Continue Reading →

கோசின்ரா கவிதை: எனக்கும் பூமிக்குமான தொடர்பு

1

கோசின்ரா (கொல்கத்தா) கவிதைஉன்னை   நினைவு  கூறுவதற்கு
என்னிடம் இருக்கிறது
உன் வெயில் காலத்து அணைப்புகள்
மழைக்காலத்து தீண்டல்கள் 
இதயத்திடம் சொல்லத்தேவையில்லை
அவரை நினைவு கூறு என்று
கோழி எப்படி நினைவு கூறும்
விடியற்காலையை
வாசலை
கோலங்கள் நினைவு கூறுவதாய்
உன்னை நினைக்கின்றேன்

விதைக்குள் மண் நுழைவதில்லை
மண்ணின்றி முளைக்க முடியுமா
நினைவு கூறலால் வளர்கின்றேன் நான்

Continue Reading →

சமஷ்டி அந்தஸ்து ஆட்சேபிக்க முடியாதது! – ‘நாங்கள்’ இயக்கம் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு மின்னஞ்சல்

சமஷ்டி அந்தஸ்து ஆட்சேபிக்க முடியாதது! - ‘நாங்கள்’ இயக்கம் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு மின்னஞ்சல்சர்வதேச அரங்கில் சிறீலங்கா அரசானது, மற்றைய அரசுகளோடு செய்யும் ஒப்பந்தங்களால் தமிழ்மொழி பேசும் மக்களின் தனி அதிகாரம் பற்றிய சமஷ்டி ஆட்சி அந்தஸ்தை கட்டுப்படுத்த முயல்கிறது. இத்தகைய ஒப்பந்தங்களால் சிறீலங்கா அரசு தன்னைச்சட்டபூர்வமாக கட்டுப்படுத்திக்கொள்ள முடியுமே தவிர, மனித உரிமை பற்றிய உலகப்பிரகடனத்தை கட்டுப்படுத்த முடியாது என்று வலியுறுத்தி கூறியுள்ள வடக்கு கிழக்கில் செயல்பாட்டு வலையமைப்பைக்கொண்டுள்ள மாற்று அரசியலுக்கான உந்துசக்தி இயக்கமாகிய ‘நாங்கள்’ இயக்கத்தினர்,

தனி அதிகாரம் பற்றிய சமஷ்டி ஆட்சி அந்தஸ்து குறித்த தமிழ்மொழி பேசும் மக்களின் பொதுஅபிப்பிராயத்தை தெரிந்துகொள்ள வேண்டிய காரியபூர்வமான, தார்மீகமுறையிலான கடப்பாட்டிலிருந்து வழுவி, ஐக்கியநாடுகள் சபை தவறிழைக்க முடியாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர். இன்று (02.03.2015) ஜெனிவாவில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 28வது கூட்டத்தொடர் ஆரம்பமாகியுள்ள நிலையில், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் அவர்களுக்கும், கூட்டத்தொடரில் பங்கேற்றுள்ள அங்கத்துவ நாடுகளின் தலைவர்கள்-பிரதிநிதிகளுக்கும் அனுப்பிவைத்துள்ள மின்னஞ்சலிலேயே ‘நாங்கள்’ இயக்கத்தினர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளனர்.

Continue Reading →

கவிதை: தொலைவிலும் அருகிலும் மிதக்கும் கடல்

துல்லியமான நீர்ப்பரப்புகூழாங்கற்களைப் போர்த்திப் படர்ந்திருக்கிறதுசலனமற்றிருக்கிறது ஈர நிலத்தின் சயனம் போர்வையின் பாசிப் பூக்களும் பசிய அலங்காரங்களும்அசைந்தசைந்துகாற்றின் தாலாட்டுக்களை இசைக்கின்றன மௌனமாய் உன் கையிலொரு மதுக் குவளை‘அதிதிகளாய்ப் பறவைகள்…

Continue Reading →

தோழர் கலைச்செல்வனின் 10வது ஆண்டு நினைவு ஒன்றுகூடல்

அன்புடன் நண்பர்களுக்கு , வணக்கங்கள்! தோழர் கலைச்செல்வனின் மறைவின் 10வது ஆண்டு நினைவையொட்டிய ஒன்றுகூடல் நிகழ்வு எதிர்வரும் மார்ச் மாதம் 28ம் திகதியன்று பாரிஸில் நடைபெற இருக்கின்றது.…

Continue Reading →

ஆய்வு: சிலம்பில் சொல்லாடல் பண்பாடு

சிலம்பில் சொல்லாடல் பண்பாடுமானிடரின் வாழ்வின் ஏற்ற தாழ்வுகள் பிறரிடம் அணுகும் முறையினையும் அடியொற்றியுள்ளது. உறவுகளின் சொல்லாடலைச் சார்ந்துள்ளது. உரை+ஆடல்=உரையாடல், நீர்+ஆடல்=நீராடல், சொல்+ஆடல்= சொல்லாடல். சொற்களைத் தேவையான இடங்களில் தகுந்த முறையில் ஆளுதல். சொல்லாடல் என்பது ஒரு செயல் போக்கு. பேசுபவர், கேட்பவர் எவராயினும் அவர்களிடையே நடைபெறும் சொற்கூட்டாட்டத்திற்குச் சொல்லாடல் முதன்மைப் பெறுகிறது. சொற்களின் மென்மை தன்மை, கடின தன்மை என்னும் வீச்சுகளைப் பொறுத்தே சொல்லாடலின் வெற்றி தோல்வி தீர்மானிக்கப்படும் நிலையில் ‘சிலம்பில் சொல்லாடல் பண்பாடு’ என்னும் தலைப்பில் இவ்வாய்வு கட்டுரை விவரிக்கின்றது.

 கலித்தொகையில் முல்லை நிலத்தலைவன், தலைவியைப் பற்றி உரைக்கும்போது அவளைச் ‘சொல்லாட்டி’ எனச் சுட்டுகிறான்.

 ‘முல்லை முகையும் முருந்தும் நிரைதந்தன்ன
 பல்லும் பணைத்தோளும் பேரமர் உண்கண்ணும்
 நல்லோன் யான்-என்று நலத்தகை நம்பியே
 சொல்லாட்டி ‘(108 : 15 – 18)

Continue Reading →

புலம்பெயர் படைப்புக்களில் அந்நியமாதல் : திசோ, பார்த்திபன் படைப்புக்களை அடிப்படையாகக் கொண்ட பார்வை

அறிமுகம்

 சு. குணேஸ்வரன்

புலம்பெயர்ந்தோரின் தமிழ்ப்படைப்புக்களில் ‘அந்நியமாதல்’ என்ற உணர்வுநிலை புனைவிலக்கியங்களிலும் ஆற்றுகைக் கலைகளிலும் கருப்பொருளாக எடுத்தாளப்பட்டு வருகின்றது. 80 களின் பின்னர் இலங்கையின் தமிழ்ப் பிரதேசங்களில் இருந்து இனவுணர்வுச் சூழல்களின் தாக்கத்தால் புலம்பெயர்ந்து மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும் அவுஸ்திரேலியா மற்றும் கனடாவிலும் பெருமளவான தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களின்  படைப்புக்களில் அந்நியமாதல்  உணர்வுநிலை தொடர்ச்சியான பேசுபொருளாகியுள்ளது.   குறிப்பாக  தனிமை, அந்நியமாதல் ஆகிய இரண்டு பதங்களும் இலக்கியத்தில் எடுத்தாளப்படுகின்றன. சமூகத்தால் தனித்துவிடப்பட்டோர் பல்வேறுவிதமான உள – உடல் நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். இதனால் அவர்கள் பாரதூரமான விளைவுகளையும்கூட எதிர்கொள்கின்றனர். யுத்தத்தாலும் குடும்பங்களின் பிரிவாலும், சூழலாலும் தனித்து விடப்பட்டவர்களின் கதைகள் இவ்வாறு அதிகமாக இலக்கியத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த உணர்வு நிலையை தமிழ்ச்சூழல் தொடர்ச்சியாக வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது. அசோகமித்திரனின் ‘ஆகாயத்தாமரை’ நாவல், மற்றும் நா. சுந்தரலிங்கத்தின் ‘அபசுரம்’ என்ற அபத்த நாடகம் ஆகியவை சில உதாரணங்கள். இவை குறித்து ஏற்கெனவே தமிழ்ச்சூழலில் உரையாடல்கள் நிகழ்ந்துள்ளன. 

Continue Reading →