திரும்பிப்பார்க்கின்றேன்: ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் பிரதிபலன் எதிர்பார்க்காமல் பங்களித்த பரோபகாரி துரை. விஸ்வநாதன்.

துரை. விஸ்வநாதன்  அவர்கள்.    இலங்கை   முற்போக்கு  எழுத்தாளர் சங்கத்தின்   இயங்கு சக்திகளாகவும்  மல்லிகை   கலை  இலக்கிய மாசிகைக்கு  பக்கபலமாகவும்  இவர்கள்  திகழ்ந்தார்கள். 1990   களில்  மல்லிகை  ஜீவா   கொழும்புக்கு  இடம்பெயர்ந்தபொழுது அவரதும்   மல்லிகையினதும்  எதிர்காலம்  கேள்விக்குறியானது. ஆனால்  -  விரைவிலேயே    ஆச்சரியக்குறியாக்கியவர்  துரைவி  என எம்மவர்களினால்   அன்புடன்  அழைக்கப்பட்ட  துரை  விஸ்வநாதன் அவர்கள்.முருகபூபதிகம்பனுக்கு  ஒரு  சடையப்ப  வள்ளலும்  – கார்ல் மார்க்ஸ_க்கு  ஒரு ஏங்கல்ஸ_ம்    இருந்தமையால்   காவியத்திலும்    – காலத்திலும் மானுடம் மேன்மையுற்றது  என்பார்கள். இலங்கையில்   1970  இற்குப்பின்னர்    இலக்கிய  வளர்ச்சிக்கு இலக்கியம்    படைக்காமலேயே   அளப்பரிய  சேவைகள் புரிந்தவர்களாக   சிலர்  எம்மால்  இனம்  காணப்பட்டனர். அவர்களில்  ஓட்டப்பிடாரம்  ஆ. குருசாமி,  எம். ஏ. கிஷார்,  ரங்கநாதன் ஆகியோரின்    வரிசையில்   போற்றப்படவேண்டியவர்  துரை. விஸ்வநாதன்  அவர்கள்.    இலங்கை   முற்போக்கு  எழுத்தாளர் சங்கத்தின்   இயங்கு சக்திகளாகவும்  மல்லிகை   கலை  இலக்கிய மாசிகைக்கு  பக்கபலமாகவும்  இவர்கள்  திகழ்ந்தார்கள். 1990   களில்  மல்லிகை  ஜீவா   கொழும்புக்கு  இடம்பெயர்ந்தபொழுது அவரதும்   மல்லிகையினதும்  எதிர்காலம்  கேள்விக்குறியானது. ஆனால்  –  விரைவிலேயே    ஆச்சரியக்குறியாக்கியவர்  துரைவி  என எம்மவர்களினால்   அன்புடன்  அழைக்கப்பட்ட  துரை  விஸ்வநாதன் அவர்கள். தமது   வாழ்நாள்  முழுவதும்   கலை,  இலக்கிய  ரசிகராகவே  இயங்கி    மறைந்த  துரைவியின்  இழப்பு  ஈழத்து  இலக்கிய வளர்ச்சிப்பாதையில்  ஈடுசெய்யப்பட  வேண்டிய  பாரிய  இழப்பாகும். துரைவி    அவர்கள்  தினகரன்  பத்திரிகையில்  ராஜ  ஸ்ரீகாந்தன் ஆசிரியராக    பணியாற்றிய  காலத்தில்  நடத்தப்பட்ட  சிறுகதைப்போட்டிக்கு    ஒரு   இலட்சத்து  ஒரு   ரூபாய்  வழங்கி ஊக்குவித்த   பெருந்தகை.     மலையக  இலக்கியவாதிகளுக்கும் மலையக    இலக்கிய  ஆய்வுகளுக்கும் ஆதர்சமாகத்திகழ்ந்தவர்.

Continue Reading →

நெய்தல் – நீர்கொழும்பு வாழ்வும் வளமும்

நெய்தல் -   நீர்கொழும்பு   வாழ்வும்  வளமும்   நூல்  வெளியீட்டு அரங்கு; விஜயரத்தினம்  இந்து  மத்திய  கல்லூரியின் வைரவிழாவை  முன்னிட்டு நடைபெறும்  முதலாவது இலக்கியப்பொது   நிகழ்வு கடலும்   கடல்  சார்ந்த  நிலமும்  நெய்தல்  என  சங்க இலக்கியங்களில்   சொல்லப்படுகின்றது.   இலங்கையில் மேற்குக்கரையில்   இந்து  சமுத்திரத்தை  அணைத்தவாறு  விளங்கும் கடற்கரை நகரம்   நீர்கொழும்பு. ஐதீகக்கதைகளும்  வரலாற்றுச்சிறப்பும்  மிக்க  இந்நகரில்  வாழ்ந்த மூத்தகுடியினர்   தமிழர்கள்.   அவர்களினால்  1954  இல் விஜயதசமியின்பொழுது 32   குழந்தைகளுடன்  தொடங்கப்பட்ட பாடசாலையே    இன்று  வடமேற்கில்  கம்பஹா    மாவட்டத்தில்  ஒரே ஒரு   இந்து  தமிழ்  மத்திய  கல்லூரியாக  விளங்கும்  விஜயரத்தினம்   இந்து  மத்திய  கல்லூரி. இதன்   ஸ்தாபகர்  எஸ்.கே. விஜயரத்தினம்    நீர்கொழும்பில் நகரபிதாவாக   (மேயர்)  விருந்த  தமிழராவார்.    தமிழ் மக்களின்  பண்பாட்டுக்கோலங்களுடன்,  வரலாற்றுச்சுவடுகளுடன்  வெளிநாட்டு உல்லாசப்பயணிகளையும்  கவரும்  இந்நகருக்கு  அருகாமையிலேயே    சர்வதேச விமான  நிலையம் கட்டுநாயக்காவில் அமைந்துள்ளது. கல்லூரி 1954 இல் ஆரம்பப் பாடசாலை தரத்திலிருந்தபொழுது  முதல் மாணவனாக  இணைத்துக்கொள்ளப்பட்டவரும்   தற்பொழுது அவுஸ்திரேலியாவில் வதியும் படைப்பிலக்கியவாதியும் ஊடகவியலாளரும் சமூகப்பணியாளருமான  லெ. முருகபூபதி விஜயரத்தினம்    இந்து  மத்திய கல்லூரியின் 60 வருட நிறைவு வைரவிழாவை முன்னிட்டு தொகுத்து  வெளியிட்டுள்ள  நெய்தல் – நீர்கொழும்பு   வாழ்வும்    வளமும்   நூல் நீர்கொழும்பில் அண்மையில் சிறப்பாக  வெளியிடப்பட்டது.

Continue Reading →