(6) யாமினி கிருஷ்ணமூர்த்தி

யாமினி கிருஷ்ணமூர்த்தி (2)- வெங்கட் சாமிநாதன் -யாமினி தன் நடன வாழ்க்கையைத்  தொடங்கிய ஆரம்ப வருடங்களிலேயே, எவ்வளவு  சிக்கலான தாளக் கட்டுகள் கொண்ட ஜதிகளாகட்டும், மிக அனாயாசமாக துரித கதியில் ஆடும் திறமை தனக்குண்டெனக் காட்டியவர் பின் வருடங்களில் அத்திறமை வளர்ந்து கொண்டுசென்றதைக் கண்டார். அது அவருடைய ஆளுமையின் ஒரு அம்சமாக விருந்தது. அவரது மெல்லிய மென்மையான தேகம் அவர் இஷ்டத்துக்கு சிறுத்தையென பாயும், தன் பலத்தைக் காட்ட விரும்பினால்.  தன் சலனத்தில் ஒரு அழகைக் காட்ட விரும்பினால், அந்தப் பாய்ச்சல் மானைப் போன்று ஒரு அழகு கொள்ளும். மானின் அழகான துள்ளலில் கவிதை காணும். யாமினி தன் நடனத்தில் இவற்றைப் பிரதிபலிக்கும் போது அவர் தன்னை வருத்திக்கொள்வதில்லை. வியர்த்து விறுவிறுத்து மூச்சிறைக்கும் காரியமாக இராது. தன்னை மறந்த நிலையின் உற்சாக வெளிப்பாடாகவே அது இருக்கும். இது அவரது நடன நிகழ்ச்சியின் புகைப்படங்களைப் பார்த்தால் தெரியும்.  அவரது சலனத்தில் ஒரு கண்ணிமைக்கும் நேரக் காட்சியே உறைந்து காணும் புகைப்படங்களில், யாமினியின் மகிழ்ச்சி ததும்பும் தோற்றமே பதிவாகியிருக்கும். அவரது முகத்தில் அயர்வின், களைப்பின் சுவடே காணமுடியாது அப்பதிவில். அவரது உற்சாகம் ததும்பும் சிருஷ்டி மனத்தின் ஜீவத் துடிப்பு தான் அவரது அயர்வற்ற நடனத்தை இயக்குகிறது. அதன் பின் மறைந்திருப்பது  ஒரு அசாதாரண ஒழுங்கு, கட்டுப்பாடு, பின், நடனத்துக்கான அர்ப்பணிப்பு உணர்வு எலலாமே தான். இவையெல்லாம் தான் அவரது நடனக்கலையின் குணத்தை உருவாக்கியிருக்கின்றன. அவர் விரும்பினால், அவரது நடனம் மெதுவான இயக்கமும் பெறும். அது அவரது விருப்பத்தையும் நடனத்துக்கு தேர்ந்தெடுக்கும் பதத்தையும் பொருத்தது. தியாகராஜரின் “சாதிஞ்சினே …. ஓ.. மனஸா….”வுக்கு ஆடத்தொடங்கினால், அவரது ஆட்டம் விளம்ப அல்லது மத்திம காலத்துக்கு மாறும். “அதை நான் ஒரு சவாலாகவே எடுத்துக் கொள்வேன்.” என்கிறார் அவர். காரணம் அவரது தன்னியல்பான சலனம் துரித காலத்திலேயே வெளிப்பாடு பெறும். இதைச் சொல்லும் போது அவர் தனது உள்ளார்ந்த இயல்பையும், தேர்ந்த விருப்பையும் தன்னை மறந்து சொல்லிவிட்டார் என்றே சொல்லவேண்டும். பூணை மூட்டைக்குள்ளிருந்து வெளியே குதித்துவிட்டது. அவரது இயல்பானதும் விருப்பமும் துரித கதியில் தான். அவரது அரங்கேற்றத்தின் போதும் நடந்தது இது தான். அன்றிலிருந்து நாம் பார்த்து வந்த நடன நிகழ்ச்சிகள் எல்லாமே இதைத்தான் நமக்குச் சொல்கின்றன, ஒரு வேளை அவர் குரு எல்லப்ப பிள்ளையும், அவர் நடனம் பயின்ற பந்தநல்லூர் பத்ததியும் கூட காரணமாக இருக்கலாம்.. ஆனால், விளம்ப காலத்தில் இருக்கும் எதுவும் அவரது இயற்கைக்கும், இயல்புக்கும் விரோதமானது தான். ஆனால், அவரால் அதையும் ஏற்று, தடையில்லாது, பிசிரற்று, தடுமாற்றம் இல்லாது ஆடிவிடமுடியும்.

Continue Reading →

குடத்து விளக்காகவல்ல…..

vetha_new_7.jpg - 11.42 Kbகுடத்தில் விளக்காய் ஏன் பெண்ணே!
நடக்கும் விளக்கன்றோ நீ பெண்ணே!
தடம் பதிக்க ஆசை கொள்!
சுடர் வீசத் திறமை கொள்!
திடம் கொண்டு சுமைகள் பங்கிடு!
அடங்கும் எண்ணச் சிறகை அரி!
இடப்புளக்கம் உலகில் பரந்தது.
அடம் பிடித்தேனும் அறிவைப் பெருக்கிடு!

நுண்மையாய்ப் பெண் இல்லம்  பேணும்
வண்ணம் கண்டு ஊர் வியக்கும்!
தண்மை அன்பைத் தரும் இவள்
கண்படும் அழகிலும் ரதி மகள்!
ஊன்றுகோலாய்ப் பெண் குடும்பத்திற்கும்
சான்றோனாக வாரிசை வளர்க்கவும் – ஆனால்
பெண் திறனை எல்லோரும் போற்றார்.
புண்பட வைக்கவும் சிலர் பின்னிற்கார்!

Continue Reading →

பேசாமொழி – திரைப்படத் தணிக்கை சிறப்பிதழ்!

பேசாமொழி - திரைப்படத் தணிக்கை சிறப்பிதழ்!தமிழ் சினிமா தோன்றி அதன் நூற்றாண்டை நெருங்கிக்கொண்டிருக்கும் இந்த சூழலில், இதுவரை திரைப்படத் தணிக்கை தொடர்பாக ஒரு விரிவான உரையாடல் நடைபெறாமல் இருந்திருக்கிறது என்பது குறித்து நிறையவே வேதனைப்பட வேண்டியிருக்கிறது. வணிக சினிமா தான் சார்ந்த ஒவ்வொரு நுணுக்கங்களையும், பரவலாக்குவதை விரும்புவதில்லை. அது குறிப்பிட்ட சிலர் மட்டுமே தங்களின் எதேச்சிகாரத்தை கோலோச்ச வழிவகை செய்கிறது.

இந்த நிலையில், திரைப்படத் தணிக்கை தொடர்பாகவும், அதில் இருக்கும் பல்வேறு சிக்கல் குறித்தும் ஒரு நீண்ட உரையாடலை பல்வேறு கட்டுரைகளின் வாயிலாகவும், சில நேர்காணல் வாயிலாகவும், சில மொழியாக்கக் கட்டுரைகளின் வாயிலாகவும் பேசாமொழியின் இந்த இதழில் தொடங்கிவைக்க முயற்சித்துள்ளோம். எனினும் இதன் தொடர்ச்சி அடுத்த இதழிலும் வெளிவரும். தணிக்கை தொடர்பான இந்த சிறப்பிதழை சாத்தியப்படுத்ததில் பல்வேறு நண்பர்களுக்கு முக்கியப் பங்கு இருக்கிறது. பல பணிகளுக்கிடையில் பேசாமொழிக்காக கட்டுரைகளை எழுதியும், மற்றக் கட்டுரைகளை சரிப்பார்த்துக்கொண்டும் தொடர்ந்து இயங்கும் தினேஷ், தனியார் துறையில் வேலை பார்த்துக்கொண்டே, பேசாமொழிக்காக நேரம் ஒதுக்கி தொடர்ச்சியாக எழுதிக்கொண்டிருக்கும் நண்பர் யுகேந்தர், இந்த இதழில் ஐந்துக் கட்டுரைகளை மொழியாக்கம் செய்துக் கொடுத்துள்ளார். ஐந்துக் கட்டுரைகளை குறிப்பிட்ட தேதிக்குள் மொழியாக்கம் செய்துக் கொடுப்பது என்பது அத்தனை எளிதான ஒன்றல்ல. ஒவ்வொரு நாளும் நள்ளிரவில் நண்பர் யுகேந்திரனின் குறுந்தகவல் வரும், கட்டுரையை முடித்து மின்னஞ்சல் அனுப்பி வைத்திருக்கிறேன் என்று. அவரது எத்தனையோ நாட்களின் உறக்கத்தை இந்த மொழியாக்கக் கட்டுரைகள் தின்று செரித்திருக்கும். மேலும், பேசாமொழியில் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கும் யமுனா ராஜேந்திரன், பல்வேறு இடர்பாடுகளுக்கு மத்தியிலும், தணிக்கை தொடர்பான வரலாற்றையும், அதனையொட்டிய அரசியலையும் இந்த இதழில் விரிவாக அலசியுள்ளார். புதிதாக தீக்ஷன்யா இந்த இதழில் ஒரு கட்டுரையை மொழியாக்கம் செய்துள்ளார். புதியவர் என்பதால், அவரது கட்டுரையை நண்பர் செகோ முகுந்தன் மேற்பார்வை செய்து, திருத்தி அனுப்பியுள்ளார். தியடோர் பாஸ்கரன் இந்த இதழுக்காக ஒரு முக்கியமான கட்டுரையை கொடுத்துள்ளார். இவர்கள் இல்லாமல் இந்த இதழ் சாத்தியமில்லை. இவர்கள் அனைவருக்கும் பேசாமொழி சார்பாக நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

Continue Reading →

என்னோடு வந்த கவிதைகள் (8)

“வார்த்தைக்கு தவமிருந்து
வரப்பெற்றவையல்ல
என்கவிதைகள்
பூமி பிளக்க விரைந்தெழும்பும்
விதைகள் போலுமல்ல
அதன் வார்ப்பு
அக்கா படிப்பதுபோல்
அம்மா சமைப்பதுபோல்
காற்றிற்கு நெற்பூக்கள் மடங்குவதுபோலும்
நானும் செய்கிறேன்
எனக்குத்தெரிந்ததை
ஒருவேளை
அவை கவிதைகளாயிருக்கலாம்”
    சே. பிருந்தா
        
- பிச்சினிக்காடு இளங்கோ கவிதை என்ற புதுவனத்திற்குள் நான் நுழையக்காரணம் ஊருக்குள்ளே நடந்த குருகுலம்தான். அங்கேதான் நான் தட்சணை கொடுக்காமல் இலக்கியம் கற்றேன். முன்பு சொன்னதுபோல் ஒரு இலக்கியவட்டம் “தானா” என நாங்கள் அழைக்கும் உறவினர் தங்கவேல் தலைமையில் இயங்கினோம். தங்கவேல் எனும் பெயரில் உள்ள அந்த ‘த’ என்ற எழுத்தை நாங்கள் ‘தானா’ என்றழைப்போம்.  செட்டிநாட்டில் ‘லேனா’, என்று அழைப்பதுபோல் நாங்கள ‘தானா’ என்றழைப்போம். அவர் புலவருக்குப் படித்தவர். நாங்கள் மாலைப்பொழுதை விளையாட்டில்தான் கழிப்போம். பகல் பொழுதை பேசித்தான் தீர்ப்போம். இங்கேதான் புலவர் “தானா” அவர்களின் பங்கு அதிகம். “கற்றலில் கேட்டலே நன்று” என்பது எவ்வளவு உண்மை. ‘தானா’ அவர்கள் கேட்டது அதிகம். ‘தானா’ அவர்கள் படித்தது அதிகம். அவையெல்லாம் எங்களுக்குத் தானாகவே கிடைத்தது.  எங்களூரில் எங்களுக்குக்கிடைத்த முதல் நூலகமே அவர்தான். எனக்குக்கிடைத்த முதல் இலக்கிய நூலும் அவர்தான். எங்கள் ஊரில் நூலகமில்லை. இலக்கிய  அமைப்பு இல்லை. இலக்கியக்கூட்டங்களும் கிடையாது. இந்த நிலையிலிருந்து நான் கவிதையோடு நெருங்கிப்பழக, கவிதையோடு உறவுகொள்ள, கவிதையின் முகவரியைத் தெரிந்துகொள்ள காரணமாக இருந்த காரணங்களுள் “தானா” க்கு முதலிடம் .  அவர்கேட்ட; படித்த இலக்கியச்செய்தியை சொன்னபாங்கு என்னைகவர்ந்தது. புகழ்பெற்ற பேச்சாளர்கள் எப்படிப்பேசுவார்கள், என்னன்ன பேசினார்கள் என்பதை அவர்சொல்ல நாங்கள் கேட்போம்.

Continue Reading →

மட்டுவில் ஞானக்குமாரன் கவிதைகள் இரண்டு

மட்டுவில் ஞானக்குமாரன்1. பிழைக்க வேறு வழியில்லை

கிளிஞ்ச பாய்
பழஞ்சோத்து நீர்
ஆனாலும் கூட
கனவுக்குடித்தனத்துக்கு 
கிளியோபற்றாவை தேடுகிற அண்ணன்;

ஊர் சுற்றும் தம்பியால் 
பீடி சுத்தும் அம்மா

காச நோய் கண்டதனால் 
பேசாப்பொருளான
அப்பா

சீதனம் கேட்டுவரும் 
தவணை முறைத் துன்பத்தால்
வாழாவெட்டியாய் வாழும்
அக்கா

Continue Reading →

எழுத்தாளர் கி.பி.அரவிந்தன் மறைவு!

– எழுத்தாளரும், ஈழத்தமிழர்களின் விடுதலைப்போராட்ட வரலாற்றில் ஆரம்பகாலத்திலிருந்து பங்களிப்பு செய்துவந்தவரான கி.பி.அரவிந்தன் அவர்கள் மார்ச் 8 அன்று மறைந்தார். அவரது நினைவாக அவர் பற்றிய விக்கிபீடியாக் குறிப்பினையும்,   பதிவுகள் மார்ச் 2010  இதழில் எழுத்தாளர் பொ.கருணாகரமூர்த்தியால் எழுதிப்பிரசுரமான கி.பி.அரவிந்தனின் ‘இருப்பும் விருப்பும்’  பற்றிய நூல் அறிமுகக் கட்டுரையினையும் மிள்பிரசுரம் செய்கின்றோம். – பதிவுகள்

aravinthan_k_p_5.jpg - 27.41 Kbகி. பி. அரவிந்தன் (1953 – 8 மார்ச் 2015) விக்கிபீடியாக்குறிப்புகள்!
கி. பி. அரவிந்தன் (1953 – 8 மார்ச் 2015), ஈழத்தின் குறிப்பிடத்தக்க புலம்பெயர் எழுத்தாளரும், கவிஞரும், மூத்த அரசியல் செயற்பாட்டாளரும் ஆவார். நெடுந்தீவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் பி.பி.சி. தமிழோசையின் பாரீஸ் நகர செய்தியாளராகப் பணியாற்றி வந்தார். அத்துடன் ஐரோப்பியத் தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கெடுத்துக் கொண்டுள்ளார். அப்பால் தமிழ் எனும் இணையத் தளத்தினை நடத்தி வந்தார். புதினப்பலகை இணையத்தளத்தின் முக்கிய பங்காளர்.

அரவிந்தனின் இயற் பெயர் கிறிஸ்தோபர் பிரான்சிசு. நெடுந்தீவில் பிறந்தவர். பள்ளிப்படிப்பை ஆரம்ப காலத்தில் நெடுந்தீவிலும் பிறகு மட்டக்களப்பிலும் முடித்தார். 1972 ஆம் ஆண்டில் 1972 அரசமைப்புச் சட்டம் தமிழருக்கு ஏற்றதல்ல என்ற துண்டறிக்கை விநியோகித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு கைதான மூன்று இளைஞர்களில் அரவிந்தனும் ஒருவர். 1976 ஆம் ஆண்டில் மீண்டும் கைதாகி டிசம்பரில் விடுதலையானார். இவர் தோழர் சுந்தர் என்றும் ஈரோஸ் இயக்கத்தின் விடுதலைப் போராளியாக அறியப்பட்டவர். 1977 இல் இலங்கையை விட்டு வெளியேறி, புலம்பெயர்ந்து பிரான்சில் வாழ்ந்து வந்தார். இவரது படைப்புக்களில் ஈழவிடுதலைப் போராட்டமும், ஈழத்தமிழரின் புகலிட வாழ்வியலும் முனைப்புடன் காணப்படுகின்றன.

Continue Reading →