திருமதி மைதிலி தயாபரனின் படைப்புக்கள் ஓர் அறிமுகம்.

– இந்நிகழ்வு பற்றிய அறிவித்தலைத்தவறவிட்டுவிட்டோம். வருந்துகின்றோம். ஒரு பதிவுக்காக இங்கே பிரசுரமாகின்றது. -பதிவுகள் – ‘01.03.2015பி.ப 3 மணிஅழகியற் கல்லுாரி திருமறைக்கலாமன்றம். டேவிட் வீதி, யாழ்ப்பாணம். தலைமை…

Continue Reading →

பிழைக்க வழிகாட்டுங்கள்

பிழைக்க வழிகாட்டுங்கள்

கூடையினை தலையேந்தும் வள்ளி
கொழுந்துதனை தளிர்விரலால் கிள்ளி
  போடுகிற காரணத்தால்
  பொருள்தேடும் தேசத்தார்
மூடர்களாய் நகைப்பாரே எள்ளி

கோடைஅனல் கொடுமின்னல் காற்று
கொட்டுமழை இடிக்குமிடி ஏற்று
  மாடெனவே தினமுழைத்து
  மண்வெட்டி யாய்தேய்ந்து
பாடுபட்டும் பட்டினியே ஈற்று

Continue Reading →

ஆய்வு: பெயரியலில் தெய்வச்சிலையாரின் தொடரியல் சிந்தனை

ஆய்வு: பெயரியலில் தெய்வச்சிலையாரின் தொடரியல் சிந்தனைதமிழ் மொழி காலத்தால் பழமையுடையது. இத்தகு சிறப்புப் பெற்ற மொழிக்கு கூடுதலாகச் சிறப்புச் சேர்ப்பது தொல்காப்பியம் என்று சொன்னால் மிகையாகாது. தமிழ் இலக்கணிகளும், உரையாசிரியர்களும் சிறந்த மொழியறிஞர்கள் என்பதனை அவரவர் உரையின் வாயிலாக விளங்க முடியும். மேலைநாடுகளில் 17-ஆம் நூற்றாண்டில் தொடங்கி வளர்ச்சி பெற்ற துறையாக விளங்குகிறது மொழியியல். இத்துறையானது மொழியினைப் புரிந்து கொள்வதில் பெரிதும் பங்காற்றுகின்றது. மேலை நாடுகளில் வளர்ச்சி பெற்ற துறை குறித்தான அறிவினை தமிழர்கள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பெற்றிருந்தனர் என்பதைத் தொல்காப்பியத்தின் வாயிலாக அறியலாம். இத்தகு, தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய தெய்வச்சிலையாரின் உரையில் பெயரியலில் இடம் பெற்றுள்ள தொடரியல் குறித்தான சிந்தனையைப் பதிவு செய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகுமாக அமைகிறது.

பெயரியல்
“மொழியியலார் சொற்களை வகைப்படுத்தும் பொழுது Form Class என்ற கலைச்சொல்லை அறிமுகப்படுத்துகின்றனர். தமிழில் இதனை வடிவவகை என்று கூறலாம். வடிவம் என்பது சொல்வடிவத்தையே குறிக்கிறது. ஒரு வகைப்பாட்டில் அடங்கும் சொற்கள் எல்லாம் ஒரு பேச்சுக்கூறு என்றே மொழியியலார் கருதுகின்றனர்”என்று (தூ.சேதுபாண்டியன்:2013:23) ‘தொல்காப்பிய ஆய்வில் மொழியியல் அணுகுமுறைகள்’ என்ற நூலினுள் கூறுகிறார். இந்த ‘Form Class’ என்னும் கலைச்சொல்லை ஹாக்கெட் என்னும் மொழியியல் அறிஞர் தமது நூலில் பின்வருமாறு வரையறை செய்கிறார். “A Class of forms which have similar privileges of occurrence in building larger forms is a Form Class” (Hockett:1958:162). இத்தகைய Form Class இல் பெயர்ச்சொல்லும் ஒன்றாகும். இத்தகைய பெயரினைக் குறித்து ச.அகத்தியலிங்கம் குறிப்பிடும் பொழுது, “பெயர்ச்சொற்கள் எல்லா மொழிகளுக்கும் உரியனவாகும். எல்லா மொழிகளிலும் பெயர்ச்சொற்களைக் காணமுடியும்” (அகத்தியலிங்கம்:1986:145) என்று குறிப்பிடுகிறார்.

Continue Reading →