கனடாத்தமிழ்ச்சிறுகதைகள்!

குரு அரவிந்தன் – கனடாவில் வெளிவந்த தமிழ் சிறுகதைகளின் கருப்பொருட்கள் என்ற தலைப்பில் எழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்கள் 28-03-2015 அன்று ரொறன்ரோ தமிழ் சங்கம் நடத்திய ஒன்றுகூடலின்போது வாசித்த கட்டுரையில் இருந்து சில பகுதியை மட்டும் இங்கே தருகின்றேன். – குரு அரவிந்தன் –

ஒரு சிறுகதை எழுதியவர்களே தங்களைச் ‘சிறுகதை எழுத்தாளர்கள்’ என்று  சொல்லிக் கொள்பவர்கள் மத்தியில் இக்கட்டுரை எல்லோரையும் திருப்திப் படுத்த மாட்டாது என்பது எனக்குத் தெரியும். ஆனாலும் இப்படி ஒரு கட்டுரையை யாராவது எழுதாவிட்டால் கனடிய சிறுகதை இலக்கியத்தை ஆவணப்படுத்த முடியாமல் போய்விடலாம் என்பதால் ரொறன்ரோ தமிழ் சங்கத்தினரின் விருப்பத்திற்கிணங்க இக்கட்டுரையை இங்கே வாசிக்கின்றேன். நான் வாசித்த என் நினைவில் நிற்கும் அனேகமாகக் கனடாவில் வெளிவந்த சிறுகதைகள் சிலவற்றின் கருப்பொருட்களை மட்டுமே இங்கே குறிப்பிடுகின்றேன்.

ஈழத்தமிழர்கள் புலம் பெயர்ந்த பின்புதான் தமிழ் சிறுகதைகள் அவர்கள் புலம் பெயர்ந்த நாடுகளில் வளர ஆரம்பித்தன. அந்தவகையில் கனடாவில் 1980 களின் பின்தான் தமிழ் இலக்கியம் வளர்ச்சி அடையத் தொடங்கியது எனலாம். கனடாவில் தமிழ் சிறுகதைகளை எழுதுபவர்களில்; அனேகமானவர்கள் இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்த எழுத்தாளர்களாகவே இருக்கின்றார்கள். பொதுவாகத் தமிழ்ச் சிறுகதைகள் தாயக வாழ்க்கை அனுபவங்களையும், இந்த மண்ணில் சுமார் 30 வருடகால வாழ்வியல் அனுபவங்களையும் கொண்டனவாகவும் இருக்கின்றன. குறிப்பாக ஈழத்துப் பொதுச் சூழலில் எழுந்த கதைகள், ஈழத்துப் போராட்டச் சூழலில் எழுந்த கதைகள், புலம் பெயர்தலின் போது ஏற்பட்ட அனுபவங்கள், கனடிய சூழலில் எழுந்த கதைகள், இவை இரண்டையும் கடந்து சர்வதேச சூழலில் எழுந்த கதைகள் எனப் பல்வேறு சூழலை மையமாகக் கொண்ட கனடாவில் வெளிவந்த தமிழ்ச் சிறுகதைகள் சிலவற்றை கடந்த காலங்களில் என்னால் வாசிக்க முடிந்தது.

Continue Reading →