மானிடரின் வாழ்வின் ஏற்ற தாழ்வுகள் பிறரிடம் அணுகும் முறையினையும் அடியொற்றியுள்ளது. உறவுகளின் சொல்லாடலைச் சார்ந்துள்ளது. உரை+ஆடல்=உரையாடல், நீர்+ஆடல்=நீராடல், சொல்+ஆடல்= சொல்லாடல். சொற்களைத் தேவையான இடங்களில் தகுந்த முறையில் ஆளுதல். சொல்லாடல் என்பது ஒரு செயல் போக்கு. பேசுபவர், கேட்பவர் எவராயினும் அவர்களிடையே நடைபெறும் சொற்கூட்டாட்டத்திற்குச் சொல்லாடல் முதன்மைப் பெறுகிறது. சொற்களின் மென்மை தன்மை, கடின தன்மை என்னும் வீச்சுகளைப் பொறுத்தே சொல்லாடலின் வெற்றி தோல்வி தீர்மானிக்கப்படும் நிலையில் ‘சிலம்பில் சொல்லாடல் பண்பாடு’ என்னும் தலைப்பில் இவ்வாய்வு கட்டுரை விவரிக்கின்றது.
கலித்தொகையில் முல்லை நிலத்தலைவன், தலைவியைப் பற்றி உரைக்கும்போது அவளைச் ‘சொல்லாட்டி’ எனச் சுட்டுகிறான்.
‘முல்லை முகையும் முருந்தும் நிரைதந்தன்ன
பல்லும் பணைத்தோளும் பேரமர் உண்கண்ணும்
நல்லோன் யான்-என்று நலத்தகை நம்பியே
சொல்லாட்டி ‘(108 : 15 – 18)‘