ஆய்வு: சிலம்பில் சொல்லாடல் பண்பாடு

சிலம்பில் சொல்லாடல் பண்பாடுமானிடரின் வாழ்வின் ஏற்ற தாழ்வுகள் பிறரிடம் அணுகும் முறையினையும் அடியொற்றியுள்ளது. உறவுகளின் சொல்லாடலைச் சார்ந்துள்ளது. உரை+ஆடல்=உரையாடல், நீர்+ஆடல்=நீராடல், சொல்+ஆடல்= சொல்லாடல். சொற்களைத் தேவையான இடங்களில் தகுந்த முறையில் ஆளுதல். சொல்லாடல் என்பது ஒரு செயல் போக்கு. பேசுபவர், கேட்பவர் எவராயினும் அவர்களிடையே நடைபெறும் சொற்கூட்டாட்டத்திற்குச் சொல்லாடல் முதன்மைப் பெறுகிறது. சொற்களின் மென்மை தன்மை, கடின தன்மை என்னும் வீச்சுகளைப் பொறுத்தே சொல்லாடலின் வெற்றி தோல்வி தீர்மானிக்கப்படும் நிலையில் ‘சிலம்பில் சொல்லாடல் பண்பாடு’ என்னும் தலைப்பில் இவ்வாய்வு கட்டுரை விவரிக்கின்றது.

 கலித்தொகையில் முல்லை நிலத்தலைவன், தலைவியைப் பற்றி உரைக்கும்போது அவளைச் ‘சொல்லாட்டி’ எனச் சுட்டுகிறான்.

 ‘முல்லை முகையும் முருந்தும் நிரைதந்தன்ன
 பல்லும் பணைத்தோளும் பேரமர் உண்கண்ணும்
 நல்லோன் யான்-என்று நலத்தகை நம்பியே
 சொல்லாட்டி ‘(108 : 15 – 18)

Continue Reading →

புலம்பெயர் படைப்புக்களில் அந்நியமாதல் : திசோ, பார்த்திபன் படைப்புக்களை அடிப்படையாகக் கொண்ட பார்வை

அறிமுகம்

 சு. குணேஸ்வரன்

புலம்பெயர்ந்தோரின் தமிழ்ப்படைப்புக்களில் ‘அந்நியமாதல்’ என்ற உணர்வுநிலை புனைவிலக்கியங்களிலும் ஆற்றுகைக் கலைகளிலும் கருப்பொருளாக எடுத்தாளப்பட்டு வருகின்றது. 80 களின் பின்னர் இலங்கையின் தமிழ்ப் பிரதேசங்களில் இருந்து இனவுணர்வுச் சூழல்களின் தாக்கத்தால் புலம்பெயர்ந்து மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும் அவுஸ்திரேலியா மற்றும் கனடாவிலும் பெருமளவான தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களின்  படைப்புக்களில் அந்நியமாதல்  உணர்வுநிலை தொடர்ச்சியான பேசுபொருளாகியுள்ளது.   குறிப்பாக  தனிமை, அந்நியமாதல் ஆகிய இரண்டு பதங்களும் இலக்கியத்தில் எடுத்தாளப்படுகின்றன. சமூகத்தால் தனித்துவிடப்பட்டோர் பல்வேறுவிதமான உள – உடல் நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். இதனால் அவர்கள் பாரதூரமான விளைவுகளையும்கூட எதிர்கொள்கின்றனர். யுத்தத்தாலும் குடும்பங்களின் பிரிவாலும், சூழலாலும் தனித்து விடப்பட்டவர்களின் கதைகள் இவ்வாறு அதிகமாக இலக்கியத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த உணர்வு நிலையை தமிழ்ச்சூழல் தொடர்ச்சியாக வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது. அசோகமித்திரனின் ‘ஆகாயத்தாமரை’ நாவல், மற்றும் நா. சுந்தரலிங்கத்தின் ‘அபசுரம்’ என்ற அபத்த நாடகம் ஆகியவை சில உதாரணங்கள். இவை குறித்து ஏற்கெனவே தமிழ்ச்சூழலில் உரையாடல்கள் நிகழ்ந்துள்ளன. 

Continue Reading →