திரும்பிப்பார்க்கின்றேன். நூல்களை ஏந்திய கைகளில் மற்றவர்களின் பாதணிகளை ஏந்திய மலையகத்தின் தாரகை. மௌனமே மொழியாக வாழ்ந்த தன்னடக்கம் மிக்க ஆளுமை என்.எஸ்.எம். ராமையா

முருகபூபதி

” இயற்கைச்   சூழலின்   மத்தியில்   ஏகாந்தமாயிருந்து  கலையம்சம்   மிக்க – கலை – இலக்கியங்களைப் படைக்க    வேண்டிய    மணிக்கரங்கள்  இரும்புக்கடையின்   மத்தியில்     கணக்கு    ஏட்டுடன்   சதா   கருமமாற்றம்   நிலை    என்றுதான்   மாறுமோ… ?”     என்று    நண்பர்     மேகமூர்த்தி     பல வருடங்களுக்கு    முன்னர்    என்.எஸ்.எம்.     ராமையாவைப் பற்றி  மல்லிகையில்    எழுதியது    நினைவுக்கு  வருகிறது. மேகமூர்த்தி     இன்று    கனடாவில்.   முன்பு    வீரகேசரியில்     துணை ஆசிரியராக     பணியிலிருந்தவர்.     தற்பொழுது     வீரகேசரி   மூர்த்தி    என்ற பெயரில்   எழுதிவருகிறார். நானும்   முதல்   முதலில்  என்.எஸ்.எம்.   அவர்களை  அந்த இரும்புக்கடையில்தான்     சந்தித்தேன்.  அறிமுகப்படுத்தியவர்  மு.கனகராசன். அமைதி – அடக்கம் – பணிவு – மறந்தும்    சுடுசொல்    பாவிக்கத்    தெரியாத அப்பாவித்    தனமான   குண    இயல்புகள்  –  எதனையும்    ரசித்துச்   சிரிக்கும் பொழுது    குழந்தைகளுக்கே  உரித்தான    வெள்ளைச் சிரிப்பு  இவ்வளவற்றையும்   தன்னகத்தே    கொண்டிருந்த     அந்த   வித்தியாசமான மனிதரிடத்தில்    நல்ல   ரஸனையைக்  கண்டேன்.     தர்மாவேசத்தை என்றைக்கும்      கண்டதில்லை. நாம்   அவரை   இராமையா    என்று     அழைப்பது   அபூர்வம்.    அவரது முதல்     எழுத்துக்கள்தான்     இலக்கிய     உலகில்     பிரபலமானவை. மலைநாட்டு எழுத்தாளர்     சங்கத்தின்     தலைவராக     விளங்கிய போதும்கூட   தலைவர்களுக்கே     உரித்தான    கம்பீரம்   காத்து   இமேஜ் தேட முயலாமல்   எளிமையாக     வாழ்ந்தவர்.

Continue Reading →

ஓவியர் புகழேந்தியின் முகநூல் குறிப்புகள்: முள்ளிவாய்க்கால்

‘2009ஆம் ஆண்டு மே மாதம் 14 ஆம் தேதி வரை களத்திலிருந்தும் புலத்திலிருந்தும் தொடர்ந்து தொடர்புகள் இருந்ததோடு அங்கு என்ன நடைபெறுகிறது என்பது குறித்த செய்தியும்,ஒளிப்படங்களும் கிடைத்தன.…

Continue Reading →

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் திருப்பூர் மாவட்டக்குழு: நியூ சென்சுரி புக் ஹவுஸ் வெளியிட்ட சுப்ரபாரதிமணியனின் 5 நூல்கள் அறிமுகவிழா

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் திருப்பூர் மாவட்டக்குழு:  நியூ சென்சுரி புக் ஹவுஸ்  வெளியிட்ட சுப்ரபாரதிமணியனின் 5 நூல்கள் அறிமுகவிழா  - தகவல்: சுப்ரபாரதிமணியன் -  07-06-2015 ஞாயிறு மாலை 5 மணி ; மில் தொழிலாளர் சங்கக் கட்டிடம், ஊத்துக்குளி சாலை, திருப்பூர் | தலைமை : இரா. சண்முகம் ( திருப்பூர் மாவட்டத்தலைவர்,  க.இ.பெ.மன்றம் )  வரவேற்புரை: ரங்கராஜ் ( மேலாளர்,NCBH   கோவை ) \ சிறப்புரை: தோழர் ஆர். நல்லக்கண்ணு  ( தேசிய நிர்வாகக் குழு, இந்திய கம்யூ .கட்சி)

Continue Reading →