‘தொராண்டோ’: மூன்று கவிதை நூல்கள் வெளியீடும், கலந்துரையாடலும்!

நூல்கள்: ‘இன்னும் வராத சேதி – ஊர்வசி | ‘ஒற்றைப்பகடையில் எஞ்சும் நம்பிக்கை’ – கீதா சுகுமாரன் | எதை நினைந்தழுவதும் சாத்தியமில்லை – ஒளவை |…

Continue Reading →

ஆய்வு: கம்பராமாயண அரச மகளிரின் மாண்பும் மாட்சியும்

நுணாவிலூர் கா. விசயரத்தினம் (இலண்டன்)

இராமாயணம், மகாபாரதம் ஆகிய இரண்டும் தலைசிறந்த பழம்பெருங் காப்பியங்களாய்த் திகழ்கின்றன. வால்மீகி என்னும் முனிவர் இராமாயணத்தை வடமொழியில் எழுதியுள்ளார். இதைத் தழுவிக் கி.பி. ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த கவிச்சக்கரவர்த்தியான கம்பர் ‘கம்பராமாயணம்’ என்ற நூலைத் தமிழில் யாத்துள்ளார். ‘கல்விச் சிறந்த தமிழ்நாடு, புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு’ என்று பாரதியார் சிறப்பித்துக் கூறியுள்ளார். கம்பராமாயணத்தில்  ஆறு காண்டங்கள், 112 படலங்கள், 10,569 பாடல்கள் உள்ளன. ஆறு காண்டங்களோடு தெய்வப் புலவர் ஒட்டக்கூத்தர் அருளிய உத்தரகாண்டமும் சேர்த்துக் காண்டங்கள் ஒருமித்து ஏழாகின்றன. இனி, கம்பராமாயணம் பேசும் மகளிர் பெருமை பற்றிக் காண்போம்.

பட்டத்தரசிகள்

கோசலை, கைகேயி, சுமத்திரை ஆகிய மூவரும் கோசல நாட்டின் தசரத மன்னனின் பட்டத்தரசிகளாவர். இவர்களுக்கு மகப்பேறு இல்லாதலால் தசரத மன்னன் கவலையுற்றான். இதையறிந்த கலைக்கோட்டு முனிவர் புத்திர காமேஷ்டி யாகம் செய்து ஒரு கிண்ணத்தில் அமிர்தத்தை மன்னரிடம் கொடுத்துத் தேவியர்களக்குக் கொடுக்கும்படி பணித்தார். தசரத மன்னன் தன் மனைவியர் மூவருக்கும் அமிர்தத்தைப் பகிர்ந்து கொடுத்து, கிண்ணத்தில் ஒட்டியிருந்த அமிர்தத்தைச் சுமந்திரைக்கு மீண்டும் கொடுத்தான். மூவரும் கர்ப்பமுற்று, கோசலை- இராமன் என்ற குழந்தையையும், கைகேயி- பரதன் என்ற குழந்தையையும், சுமத்திரை- இலக்குவன், சத்துருக்கன் என்ற இரு குழந்தைகளையும் பெற்றெடுத்தனர்.

Continue Reading →

சிறுகதை: மழைக்கால இரவு.

1_thamilinijayakumaran5.jpg - 6.60 Kbதமிழினி ஜெயக்குமாரன் தன் கடந்த கால போராட்ட அனுபவங்களை மையமாக வைத்து அண்மைக்காலமாக எழுதும் கவிதைகளினூடு ஈழத்தமிழ் இலக்கிய உலகினுள் காலடி எடுத்து வைத்திருக்கின்றார். இவரது இச்சிறுகதையான ‘மழைக்கால இரவு’ இவரது எழுத்துச்சிறப்பினை எடுத்துரைக்கும் அதே சமயம் அனுபவங்களைப் பதிவு செய்யுமோர் ஆவணமாகவும் விளங்குகின்றது. இந்தச் சிறுகதையில் எம்மைக் கவர்ந்த முக்கியமான அம்சங்களாகப் பின்வருவனவற்றைக்கூறுவோம்: நெஞ்சையள்ளும் எழுத்து நடை, போராளிகளின் போர்க்காலச்செயற்பாடுகளை விரிவாக அதே சமயம் அவர்களது இயல்பான அந்நேரத்து உணர்வுகளுடன் எந்தவிதப்பிரச்சார வாடையுமற்று விபரித்திருத்தல், இக்கதையில் தெரியும் மானுட நேயப்பண்பு (குறிப்பாகக்கீழுள்ள பகுதியைச் சுட்டிக்காட்டலாம்: ‘அன்றையபோரில் ஈடுபட்டு மரித்துப் போன  இராணுவத்தினரதும், போராளிகளினதும் சடலங்கள் ஒன்றன் மேலொன்றாக புரண்டு கிடந்ததை என் கண்களால் கண்டேன். பகைமை, விரோதம், கொலைவெறி இவைகளெதுவுமே அப்போது அந்த முகங்களில்  தென்படவில்லை. உயிர் போகும் தருணத்தின் கடைசி வலி மட்டும் அந்த முகங்களில் எஞ்சியிருந்தது. ‘ஒருவருக்கொருவர் முரண்பட்டு அழிந்து போனவர்களின் உடல்களைப்பற்றிய கதை சொல்லியின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் பகுதி. இக்கதையின் முக்கியமானதோர் அம்சமாக இதனைக் கருதலாம்), மற்றும் போராளிகளின் போர்க்காலச்செயற்பாடுகளை ஆவணப்படுத்தல். தமிழினி ஜெயக்குமாரன் தன் படைப்புகளினூடு முக்கியமான படைப்பாளிகளிலொருவராக உருவாகி வருவதை அவதானிக்க முடிகின்றது. எதிர்காலத்தில் இவரிடமிருந்து மேலும் பல படைப்புகளைத் தமிழ் இலக்கிய உலகு எதிர்பார்க்கின்றது. வாழ்த்துகிறோம். – பதிவுகள் –

அது ஆயிரத்துத் தொள்ளாயிரத்து தொண்ணூற்று மூன்றின், கார்த்திகை பன்னிரண்டாம் நாள், மாரி மழை ஊறி ஊறி பெய்து கொண்டேயிருந்தது. “க்குயிங்” “க்குயிங்” என்ற  சத்தத்துடன் துப்பாக்கி ரவைகள் காதைக் கிழித்துக் கொண்டு பறந்தன. முன்னணிக் கள முனையில் இடை விடாமல் உறுமிக் கொண்டிருந்த கனரக ஆயுதங்களின் வீரியம் கூடிய ரவைகள் திடீர் திடீரென பக்கத்திலுள்ள பூவரசு வேலிகளையும்  பனை மரங்களையும் பிய்த்தெறிந்தன. எறிகணைகள் விழுந்து சிதறும் இடங்களில் கிணறுகளை விடவும் வேகமாகத் தண்ணீர் குமிழி அடித்துக் கொண்டு ஊற்றெடுத்தது. பச்சை இலை குழைகள் கருகும் வாசனையும், கந்தகப் புகை மணமும், இரத்த வாடையும் சேர்ந்து வாந்தி வருமாப்பொல ஒரு கிறுதி மயக்கம் தள்ளாட்டியது.

அன்று அதிகாலை ஒன்றரை மணிக்கு மூண்ட யுத்தம் முழு நாளும் தொடர்ந்து கொண்டிருந்தது. உலங்கு வானூர்திகள் மாறி மாறி வந்து தாக்குதல் நடத்திக் கொண்டேயிருந்தன. போர் விமானங்களும் குண்டுகள் முடிய முடிய நிரப்பிக் கொண்டு வந்து கொட்டிக் கொண்டேயிருந்தன. அப்போது நேரம் நண்பகலைக் கடந்துவிட்டிருக்க வேண்டும். ஆண்டுக் கணக்காக பயிரிடப் பட்டிருக்காத பரந்த வயல் வெளி புல்லுப் பற்றையெழும்பிக் கிடந்தது. செப்பனிடப்படாமல் மெலிந்துபோய்க்கிடந்த  வயல் வரம்புகளைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது. அந்த வயல் வரம்புகளின் தேய்ந்த விளிம்புகளோடு ஒண்டியபடி எனது அணி தற்பாதுகாப்புக்காக நிலையெடுத்திருந்தது.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 89: ‘தொராண்டோ’வில் தேவகாந்தனின் ‘கனவுச்சிறை’ நாவல் வெளியீடு பற்றி……

தேவகாந்தனின் 'கனவுச்சிறை' மகாநாவல் வெளியீடு!

–  எழுத்தாளர் தேவகாந்தனின் ‘கனவுச்சிறை’ நாவல் வெளியீடு பற்றிய எனது முகநூல் குறிப்பும், அது பற்றிய எழுத்தாளர் தேவிபாரதியின் கருத்தும் இங்கு ஒரு பதிவுக்காகப் பதிவு செய்யப்படுகிறது. –

பல வருடங்களாக எதிர்பார்க்கப்பட்டிருந்த தேவகாந்தனின் ‘கனவுச்சிறை’ நாவல் கடந்த மே 16, 2015 அன்று ‘டொராண்டோ’வில் வெளியானது. தேவகாந்தன் திருப்தியும், மன நிறைவும் அடையக்கூடிய விதமாக நூல் காலச்சுவடு பதிப்பக வெளியீடாக, நேர்த்தியான வடிவமைப்பில் வெளிவந்துள்ளது.

அன்று தவிர்க்க முடியாத காரணங்களினால் சிறிது தாமதமாகவே செல்ல முடிந்தது. நான் சென்றுகொண்டிருந்தபொழுது எழுத்தாளர் என்.கே.மகாலிங்கம் நாவலைப்பற்றிய தனது உரையினை ஆற்றிக்கொண்டிருந்தார். எழுத்தாளர் அருண்மொழிவர்மன் தனது உரையினை ஏற்கனவே ஆற்றியிருந்திருக்க வேண்டும். ஏனெனில் அதன்பின் அவர் அங்கு உரையாற்றவில்லை.

நிகழ்வினைத்தலைமை தாங்கி சிறப்புறச்செய்தவர் கலாநிதி மைதிலி தயாநிதி.

என்.கே.மகாலிங்கத்தைத்தொடர்ந்து அடிகளார் சந்திரகாந்தன் அவர்கள் தனது உரையினை ஆற்றினார். அவரது உரையினைத்தொடர்ந்து முனைவர் சேரன் நூலினை வெளியீட்டு வைக்க சட்டத்தரணி மனுவல் ஜேசுதாசன் முதற் பிரதியினை வாங்கினார். அவரைத்தொடர்ந்து சிறப்புப் பிரதிகளைக் குறிப்பிட்ட சிலர் வாங்கினார்கள்.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 88 : நூல் அறிமுகம் – வேலணையூர் தாஸின் ‘மழைக்காலக்குறிப்புகள்’ பற்றி….

வாசிப்பும், யோசிப்பும் - வ.ந.கிரிதரன்

வேலணையூர் தாஸின் ‘மழைக்காலக் குறிப்புக்கள்’ நூலினை அண்மையில் பெற்றுக்கொண்டேன். வேலணையூர் தாஸ் ‘யாழ் இலக்கியக் குவியம்’ அமைப்பின் ஸ்தாபகர். இணைய இதழ்கள், அச்சிதழ்கள் பலவற்றில் இவரது கவிதைகள் வெளியாகியுள்ளன. ‘யாழ் இலக்கியக் குவியம்’ அமைப்பின் அழகிய வெளியீடாக மேற்படி நூல் வெளியாகியிருப்பது திருப்தியைத்தருவது. நூலின் ஆரம்பத்தில் ‘பதிவுகள்’ இணைய இதழுட்பட தனது படைப்புகள் வெளிவந்த ஊடகங்களுக்கு நன்றியினை நூலாசிரியர் தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.

இத்தொகுப்பிலுள்ள கவிதைகள் பல,விடயங்களை பாடுபொருளாகக் கொண்டிருக்கின்றன. யுத்தத்தில் தந்தையை இழந்த, மகனை இழந்த, கணவனைஇழந்த எனப் பல்வேறு இழப்புகளைப் பற்றிக் கவிதைகள் விபரிகின்றன. காதல், மழைக்காலத்து அனுபவங்கள், இழந்த நிலம், அன்னை மீதான அன்பு, மழை அனுபவங்கள் எனக் கவிதைகள் பன்முகத்தன்மை மிக்கவை. கவிதைகளும் சொற் சிக்கனம் மிகுந்தவை, சொற்சிக்கனம் சிறிது தளர்ந்தவை எனப்பன்முகமானவை.

Continue Reading →

முகநூல்: தமிழினி கவிதைகளிரண்டு!

கவிதை வாசிப்போம் வாருங்கள்!

துளி – 02

கட்டளைகள் பறக்கின்றன.

காதோரம் பொருத்திய

சவுக்காரத்துண்டு

“ஹலோ ஹலோ

சொல்லுங்க ஒவர்”

வெலிக்கடைச் சுவர்களையும் கடந்து

விரிகிறது அவளது மனவெளி

Continue Reading →

எழுதுகோல் எடு!

கவிதை வாசிப்போம் வாருங்கள்!

ஆ வரைந்து மொழியறிந்த காலம்

பூ வரைந்து ரசித்ததொரு காலம்

பா வரைந்து திளைப்பதிக் காலம்.

ஆசி நிறைத்து வாழ்த்தட்டும் ஞாலம்.

எழுதுகோல் எடுத்திடு!எழுதுவோம் கவி.

பழுதான பழக்கம் வழக்குகளைப் புவி

கழுவிட வழிகள் பலவாய்க் குவி!

நழுவிடாதே நடுவோம் நற் கவி!

Continue Reading →

ஒரு தீர்மானம்!

கவிதை வாசிப்போம் வாருங்கள்!

ஒரு தீர்மானத்துடன்

உட்கார்ந்திருந்தேன்.

இன்று

எங்கு செல்வதில்லை..

எதுவும் படிப்பதில்லை..

யுத்தம்,மரணம்,

கொலை,வன்முறை

எது

நடந்தாலும்

தெரியாமலேயே

இருக்கட்டும்..

Continue Reading →

குடிகார அப்பாக்கள்!

கவிதை வாசிப்போம் வாருங்கள்!

குடியும் குடித்தனமும்  செந் தமிழும் நாற்பழக்கம்

சில அப்பாக்களின்  மறையா விழுமியங்கள்

வாழ்நாள் முழுதும் சாலையோரம்

வரம் பெற்ற மனிதனாய்

கவலையற்று தூங்குகிறார்கள்

பல அப்பாக்கள்

இவர்களிடம் ஏன்? அப்பா என்றால்?

அகராதியில் இல்லாத செந்தமிழ் பிறந்திடும்

Continue Reading →