வாழ்வு பூத்துக் குலுங்கும்
பூஞ்சோலையாய் மணம்
வீச வேண்டுமா?
பூரிப்புடன் வாழ்வில்
நடை பயில வேண்டுமா?
அறிவு தந்து
உலகை காட்டிய ஆத்மாவை
அடி தொட்டு பாதம் வணங்குவோம்
ஆசி பெற்று நிறையாய் வாழ்வோம்.
வாழ்வு பூத்துக் குலுங்கும்
பூஞ்சோலையாய் மணம்
வீச வேண்டுமா?
பூரிப்புடன் வாழ்வில்
நடை பயில வேண்டுமா?
அறிவு தந்து
உலகை காட்டிய ஆத்மாவை
அடி தொட்டு பாதம் வணங்குவோம்
ஆசி பெற்று நிறையாய் வாழ்வோம்.
காலம்: 18.05.2015 திங்கள் கிழமை, காலை 10.00 மணிக்கு | இடம்: வவுனியா நகரசபை மண்டபம்
கூட்டுப்படை பலம் – கூட்டுச்சதியை பிரயோகித்து, ‘ஒன்றரைக்கிலோமீற்றர்கள்’ நீரேந்து நிலப்பரப்புக்குள் ‘ஐந்தரை இலட்சம்’ மக்களை முடக்கி, மனிதத்துவத்துக்கு எதிரான குற்றங்களுடனும், மனிதகுலப் படுகொலைகளுடனும், மனித உரிமை மீறல்களுடனும் சிறீலங்கா அரசால் நிகழ்த்தப்பட்ட வன்முறைப்போரில் ‘ஒன்றரை இலட்சம் உறவுகள்’ கொல்லப்பட்டுள்ளார்கள்.
‘2009 மே 18 படுகொலைகள்’ தமிழ் தேசிய இனத்தின் ஆத்மாவில் விழுத்தப்பட்ட மிகப்பெரிய வடுவாகும். ஈழதேசத்தின் வரலாற்றில் கறை படிந்த மறக்க முடியாத பெருத்த துயர நிகழ்வாகும். ‘தமிழினத்தின் தேசிய துக்க நிகழ்வாக’ இந்நாளை பிரகடனப்படுத்தி, ‘இனப்படுகொலை’ நினைவேந்தல் எழுச்சி நிகழ்ச்சி,
வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் ஒழுங்கமைப்பில் வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத்தேடியலையும் சங்கத்தின் பங்களிப்புடன் வவுனியா நகரசபை மண்டபத்தில் 18.05.2015 (திங்கள் கிழமை) அன்று காலை 10.00 மணிக்கு இடம்பெறவுள்ளது. மிகவும் நெருக்கடியான கடந்த ஐந்துவருட காலத்தில், மிகவும் மோசமான ‘அச்சுறுத்தல்கள், சவால்களுக்கு’ மத்தியில் போரில் உயிர் குடிக்கப்பட்ட எமது உறவுகளுக்கு ஆத்மசாந்தி பிரார்த்தனை மற்றும் அஞ்சலி நிகழ்ச்சிகளை உணர்வுபூர்வமாக அனுஸ்டித்ததைப்போலவே, இம்முறையும் ‘முள்ளிவாய்க்கால் மானுடப்பேரவலம்’ ஆறாம் வருட நினைவேந்தல் எழுச்சி நிகழ்ச்சியை அனுஸ்டிக்கின்றோம்.
” இயற்கைச் சூழலின் மத்தியில் ஏகாந்தமாயிருந்து கலையம்சம் மிக்க – கலை – இலக்கியங்களைப் படைக்க வேண்டிய மணிக்கரங்கள் இரும்புக்கடையின் மத்தியில் கணக்கு ஏட்டுடன் சதா கருமமாற்றம் நிலை என்றுதான் மாறுமோ… ?” என்று நண்பர் மேகமூர்த்தி பல வருடங்களுக்கு முன்னர் என்.எஸ்.எம். ராமையாவைப் பற்றி மல்லிகையில் எழுதியது நினைவுக்கு வருகிறது. மேகமூர்த்தி இன்று கனடாவில். முன்பு வீரகேசரியில் துணை ஆசிரியராக பணியிலிருந்தவர். தற்பொழுது வீரகேசரி மூர்த்தி என்ற பெயரில் எழுதிவருகிறார். நானும் முதல் முதலில் என்.எஸ்.எம். அவர்களை அந்த இரும்புக்கடையில்தான் சந்தித்தேன். அறிமுகப்படுத்தியவர் மு.கனகராசன். அமைதி – அடக்கம் – பணிவு – மறந்தும் சுடுசொல் பாவிக்கத் தெரியாத அப்பாவித் தனமான குண இயல்புகள் – எதனையும் ரசித்துச் சிரிக்கும் பொழுது குழந்தைகளுக்கே உரித்தான வெள்ளைச் சிரிப்பு இவ்வளவற்றையும் தன்னகத்தே கொண்டிருந்த அந்த வித்தியாசமான மனிதரிடத்தில் நல்ல ரஸனையைக் கண்டேன். தர்மாவேசத்தை என்றைக்கும் கண்டதில்லை. நாம் அவரை இராமையா என்று அழைப்பது அபூர்வம். அவரது முதல் எழுத்துக்கள்தான் இலக்கிய உலகில் பிரபலமானவை. மலைநாட்டு எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக விளங்கிய போதும்கூட தலைவர்களுக்கே உரித்தான கம்பீரம் காத்து இமேஜ் தேட முயலாமல் எளிமையாக வாழ்ந்தவர்.
‘2009ஆம் ஆண்டு மே மாதம் 14 ஆம் தேதி வரை களத்திலிருந்தும் புலத்திலிருந்தும் தொடர்ந்து தொடர்புகள் இருந்ததோடு அங்கு என்ன நடைபெறுகிறது என்பது குறித்த செய்தியும்,ஒளிப்படங்களும் கிடைத்தன.…
07-06-2015 ஞாயிறு மாலை 5 மணி ; மில் தொழிலாளர் சங்கக் கட்டிடம், ஊத்துக்குளி சாலை, திருப்பூர் | தலைமை : இரா. சண்முகம் ( திருப்பூர் மாவட்டத்தலைவர், க.இ.பெ.மன்றம் ) வரவேற்புரை: ரங்கராஜ் ( மேலாளர்,NCBH கோவை ) \ சிறப்புரை: தோழர் ஆர். நல்லக்கண்ணு ( தேசிய நிர்வாகக் குழு, இந்திய கம்யூ .கட்சி)
“இந்த நாவலுக்கு ஈழத்தமிழ் இலக்கிய வரலாற்றில் முக்கிய இடம் உண்டு. ஈழத்துத் தமிழிலக்கியத்தின் ஒரு வளர்ச்சி நிலையான புலம்பெயர் இலக்கிய வரலாற்றிலும் நிலையான இடம் இதற்குக் கிடைக்கும்.…
இயற்கையின் விழியிலே இறைவனும் பார்க்கிறான்
மலர்களின் இதழ்களால் அவனுமே சிரிக்கிறான்
பறவைகள் மொழியிலே பாடலும் இயற்றுவான்
அருவியின் இசையிலே அழகுடன் பாடுவான்
வணக்கம்,மலேசியாவில் மிக முக்கியமான தமிழ் எழுத்தாளர் திரு.பாலகோபால நம்பியார் அவர்கள் புது டெல்லியில் காலமானார்.அவருக்கு இக்கவிதை சமர்ப்பணம்.
பாலா,
எங்களையெல்லாம் விட்டு
திடீரென பிரிந்துவிட்டீரே…..!
இதுவென்ன கொடுமை…..?
நாங்கள் என்ன குறை செய்தோம்……?
பிறந்த நாள் நிகழ்வை குடும்பத்தோடு
இரண்டு நாட்களுக்கு
முன்புதானே கொண்டாடினீர்………?
நேற்று இருந்தோர்
இன்றில்லை என்ற கதையாகிப்போனதே……….!
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி -வட்டத்திற்கு உட்பட்ட பகுதியே சித்தேரியாகும். இப்பகுதியானது. அருரில் இருந்து 26 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மலைப்பகுதியாகும். இங்கு வாழும் பழங்குடியின மக்கள் விவசாயத்தை முதன்மைத் தொழிலைக் கொண்டுள்ளனர். உழவுத்தொழில் செய்யும் பொழுது மரத்தினால் செய்யப்பட்ட ‘ஏர்’ கருவியை, காளை மாடுகளில் பூட்டி உழவுத் தொழிலை மேற்கொள்கின்றனார். அவ்வகையில், அப்பகுதியின் நில அமைப்பு, வேளாண்மை செயல்பாடுகள், காலத்திற்கேற்ப பயிரிடும் முறைகள், உழவுத்தொழிலில் பயன்படுத்தும் கருவிகள் ஆகியவற்றை விரிவாக விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
நில அமைப்பு
சித்தேரி மலைவாழ் பழங்குடியினர் இரண்டு வகையான நில அமைப்பைக் கொண்டுள்ளனர். அவை, நிலஅமைப்பு உழவுக்காடு (நீர் பாயக்கூடியது) , கொத்துக்காடு களைக்கொத்து(வானம் பார்த்த பூமி)
உழவுக்காடு
இப்பகுதியில் அதிகமாக நெல், கம்பு, வெங்காயம், கொத்தமல்லி, வரமிளகாய், தற்பொழுது மஞ்சள் போன்ற பணப்பயிர்கள் அதிகமாகப் பயிரிடுகின்றனர்.
கொத்துக்காடு
கொத்துக்காட்டுப் பகுதியில் தினை, கம்பு, சோளம், மெட்டுநெல், சாமை, ராகி(கேழ்வரகு), பீன்ஸ், கெள்ளு, பச்சைப்பயிறு போன்ற மேட்டுப்பயிர்களை வேளாண்மை செய்கின்றனர்.
மகாபாரதப்போர் நடந்த காலம் கி.மு 3000 ஆண்டுகளுக்கு முன்னர் என்பது இன்றுள்ள கோட்பாடாகும். இன்று நமக்கு கிடைத்துள்ள தொன்மையான சங்கத் தமிழ் இலக்கியம் எல்லாம் மகாபாரத காலத்துக்குப் பிற்பட்டனவாகும். ஆகவே மகாபாரதச் சங்க இலக்கியங்கள் முதலான தமிழ் இலக்கியங்களில் பயின்று வந்திருப்பது நம் அறிந்த ஒன்றாரும். அவை, “உலகப்பெருங்காப்பியங்களுல் மகாபாரதமும் ஒன்றாகும். உலக இலக்கியங்களுல் அளவாற் பெரியது மகாபாரதமே என்பர் மோனியர் வில்லியஸ்.”1 இவை வட நாட்டில் நடந்த மகாபாரப் போரிடைத் தென்னாட்டு மூவேந்தர்களும் ஒப்புக்கொள்ளப்பட்ட செய்தியாகும். அங்ஙனம் வரலாற்றின் மகாபாரதக் கதை தமிழ் இலக்கியங்களான சங்க இலக்கியத்தில் புறநானுறு, பதிற்றுப்பத்து, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, கலித்தொகை ஆகியவற்றுள் மகாபாரதச் செய்திகளையும், நிகழ்ச்சிகளையும் புலவர் பெருமக்கள் கையாண்டுள்ளனர். அவற்றின் தன்மைகளைக் பற்றி விளக்குவதே இக்கட்டுரையில் நோக்கமாகும்.