தவில் மேதை தட்சணாமூர்த்தி அவர்களின் மேதமை, ஆளுமை, வாழ்வு பற்றிய ஆவணப்படமும் 24 மணி நேரத்துக்குக் குறையாத மயங்க வைக்கும் தவிற்கச்சேரிகளின் இறுவட்டும் வெளியிடும் நிகழ்வு.

தவில் மேதை தட்சணாமூர்த்தி அவர்களின் மேதமை ஆளுமை வாழ்வு பற்றிய ஆவணப்படமும் 24 மணி நேரத்துக்குக் குறையாத மயங்க வைக்கும் தவிற்கச்சேரிகளின் இறுவட்டும் வெளியிடும் நிகழ்வு. இந்த ஆவணப்படம்…

Continue Reading →

ஆய்வு: மெய்நிகர் உலகில் அடையாளங்கள்

முன்னுரை:

ஆய்வுக்கட்டுரை!

இலக்கியங்களிலும் புராணங்களிலும் பலவகை உலகங்கள் பற்றிப் படித்திருக்கிறோம். ஆனால் நாம் உலகம் தவிர வேறு எவற்றிலும் புலன் உணர்வுகளோடு வாழ இயலும் என்று அறிவியல் அடிப்படையிலும் சான்றுகள் அடிப்படையிலும் நிருவப்படவில்லை. ஆயின் இன்றையத் தொழில்நுட்ப வளர்ச்சியானது மனிதர்களுக்கு வேறொரு உலகத்தைக் கட்டமைத்துத் தந்திருக்கிறது. இதில் வசதியான செய்தியாதெனில் ஞானிகளோ அறிவியல் விஞ்ஞானிகளோ மட்டுமல்லாது சாதாரண மனிதர்கள் யாவரும் அவ்வுலகில் உலாவலாம், தம் இருத்தலை பதிவு செய்யலாம், பிறக்கு அறிவிக்கலாம், பிறறோரு தொடர்பாடலாம். அதுதான் தகவல் தொழில்நுட்பம் நமக்கு வழங்கியிருக்கும் கொடையான மெய்நிகர் உலகம்(Virtuval world) ஆகும். கட்டற்ற களஞ்சியமான விக்கிப்பீடியா “மெய்நிகர் உலகம் (virtual world) என்பது உலகில் உள்ள மக்கள் பலரும் கணினி அடிப்படையிலான ஒப்புச்செயலாக்கச் சூழலில் ஒருவரோடு ஒருவர் செயல்புரிதல் ஆகும்” என்று வர்ணிக்கிறது. இந்த உலகமானது மனிதர்களுக்குக் கிடைத்த வரமா? சாபமா? என பலதரப்பிலும் பட்டிமன்றம் நடத்திக்கொண்டிருக்க, இவ்வாய்வுக் கட்டுரையில் மெய்நிகர் உலகில் மனிதனின் அடையாளங்கள் குறித்து விவாதிக்கின்றது.

Continue Reading →

அன்றிலும் மகன்றிலும்

கவிதை வாசிப்போம் வாருங்கள்!

கடற்கரை மணலில்

கைகளைக் கோர்த்து

கால்புதைய நடப்பதல்ல

காதல்!

நெடிதுயர்ந்த

மரங்கள் அடர்ந்த

பூங்காக்களில்

புதர்களின் ஓரம்

புகலிடம் தேடுவதும் – அல்ல

காதல்!

Continue Reading →

சகோதரிகள் இருவர் (ஆபிரிக்க தேசத்துச் சிறுகதை)

அஹ்மத் ஈஸொப் (Ahmed Essop) –

1931 ஆம் ஆண்டு இந்தியாவில் பிறந்த இவர், தனது மூன்று வயதில் பெற்றோர் தென்னாபிரிக்காவில் குடியேறியதன் காரணமாக அங்கு வளர்ந்தவராவார். 1956 இல் தென்னாபிரிக்கப் பல்கலைக்கழகத்தில் தனது பட்டப்படிப்பைப் பூர்த்தி செய்ததோடு, தொடர்ந்து ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். 1986 ஆம் ஆண்டு தனது ஆசிரியத் தொழிலைக் கைவிட்ட இவர் தொடர்ந்து முழுநேர எழுத்தாளரானார். இவரது படைப்புக்களில் அநேகமானவை, தென்னாபிரிக்க சமூகத்தில் இந்தியர்கள் எதிர்கொள்ள நேரும் சவால்களை விபரிப்பவையாகும். 1959 ஆம் ஆண்டு தொடக்கம் பல தொகுப்புக்களை வெளியிட்டுள்ள இவர், தனது முதலாவது சிறுகதைத் தொகுதியான The Hajji and Other Stories எனும் தொகுப்புக்கு 1979 ஆம் ஆண்டு ‘ஒலிவ் ஷ்ரெய்னர் (Olive Schreiner) பரிசினை வென்றுள்ளார்.-


 

அஹ்மத் ஈஸொப் (Ahmed Essop) -  	1931 ஆம் ஆண்டு இந்தியாவில் பிறந்த இவர், தனது மூன்று வயதில் பெற்றோர் தென்னாபிரிக்காவில் குடியேறியதன் காரணமாக அங்கு வளர்ந்தவராவார். 1956 இல் தென்னாபிரிக்கப் பல்கலைக்கழகத்தில் தனது பட்டப்படிப்பைப் பூர்த்தி செய்ததோடு, தொடர்ந்து ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். 1986 ஆம் ஆண்டு தனது ஆசிரியத் தொழிலைக் கைவிட்ட இவர் தொடர்ந்து முழுநேர எழுத்தாளரானார். இவரது படைப்புக்களில் அநேகமானவை, தென்னாபிரிக்க சமூகத்தில் இந்தியர்கள் எதிர்கொள்ள நேரும் சவால்களை விபரிப்பவையாகும். 1959 ஆம் ஆண்டு தொடக்கம் பல தொகுப்புக்களை வெளியிட்டுள்ள இவர், தனது முதலாவது சிறுகதைத் தொகுதியான The Hajji and Other Stories எனும் தொகுப்புக்கு 1979 ஆம் ஆண்டு 'ஒலிவ் ஷ்ரெய்னர் (Olive Schreiner) பரிசினை வென்றுள்ளார்.- “எனக்கு பந்து விளையாடத் தேவைப்பட்டால், அவங்களுக்கும் தேவைப்படும். எனக்கு கழிப்பறைக்குப் போகத் தேவைப்பட்டால் அவங்களுக்கும் போகத் தேவைப்படும். அவங்க எல்லாவிதத்திலுமே சுயநலவாதிகள். எனது சித்தியும், அப்பாவும் அறைக்குள்ளே புகுந்து கதவை மூடிக் கொண்டிருப்பாங்க. சில நாட்கள்ல நாள் முழுவதுமே அப்படித்தான் இருப்பாங்க. அவங்க என்ன செய்றாங்கன்னு எனக்குத் தெரியாது. வீட்டில சாப்பிடவும் எதுவுமிருக்காது. அப்படி எதுவும் இருந்தாலும் நாங்கதான் சமைக்க வேணும். பிறகு அவங்க ரெண்டு பேரும் அறைக்குள்ளிருந்து வெளியே வந்து நாங்க சமைச்சு வச்ச சாப்பாடு எல்லாத்தையும்  விழுங்கித் தள்ளுவாங்க.”

Continue Reading →

ஆய்வு: தொல்காப்பியமும் பெருமித மெய்ப்பாடும் – மீள் பார்வை

- முனைவர் போ. சத்தியமூர்த்தி, உதவிப்பேராசிரியர், தமிழியல்துறை, தமிழியற்புலம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை -

பண்டைத் தமிழ் இலக்கணமான தொல்காப்பியத்தில் தனி ஒரு இயல் மெய்ப்பாட்டியல் ஆகும். தமிழ் இலக்கியங்களில் வரும் ஒப்பு, உரு, வெறுப்பு, கற்பு, ஏர், எழில், சாயல், நாண், மடன், நோய், வேட்கை, நுகர்வு எனக் கூறப் பெறுகின்ற சொற்கள் எல்லாம்  உலக வழக்கில் மனத்தினால் உணர முடியுமே தவிர அவற்றிற்கு வடிவு கொடுக்க இயலாது. வடிவம் இல்லாத அப்பொருள்களை மனத்தினால் உணர்வதற்கும் பொறிகள் வாயிலாக மனம் கொள்ளுவதற்கும் உடலில் ஏற்படுகிற மாற்றமே மெய்ப்பாடுகளாகும்.  உலக மக்களின் உள்ள உணர்வுகளை வெளிப்படுத்தும் கண்ணீர் அரும்பல், மெய்ம்மயிர் சிலிர்த்தல், வியர்த்தல், நடுக்கம் முதலிய தோற்றங்கள் அதனைக் காண்போர்க்குப் புலனாகும் தன்மையைத் தான் மெய்ப்பாடு என்பர். ஒரு உதாரணமாகப் புலி போன்ற கொடிய விலங்குகளை ஒருவர் காணுகின்ற பொழுது , அவர் மனத்தே நிகழும் அச்சம், அவர் உடம்பில் தோன்றும் நடுக்கம், வியர்த்தல் முதலிய புறக் குறிகள் அவருடைய அச்சத்தைக் காண்போர்க்குத் தெரிவித்து விடுகின்றன.  இதனையே மெய்ப்பாடு என்று இலக்கண உரையாசிரியர்கள் குறிப்பிடுவர்.

மெய் என்ற சொல்லுக்குப் பொருளின் உண்மைத் தன்மை என்று பொருள் கொண்டு மெய்ப்பாடு என்பதற்குப் பொருளின் புலப்பாடு என விரித்தலும் உண்டு என்பர். 1 தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் பின் நான்கு இயல்களுக்கு உரைதந்த பேராசிரியர் , ‘‘மெய்ப்பாடு என்பது பொருட்பாடு. அது உலகத்தார் உள்ள நிகழ்ச்சி ஆண்டு நிகழ்ந்தவாறே புறத்தார்க்குப் புலப்படுவது ஓர் ஆற்றான் வெளிப்படுதல்.  அதனது இலக்கணம் கூறிய ஓத்தும், ஆகுபெயரான் மெய்ப்பாட்டியல் என்றாராயிற்று. ” என்பர்.2

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 87: எல்லாளனின் ‘ஒரு தமிழீழப்போராளியின் நினைவுக்குறிப்புகள்’ தொகுப்பு முக்கியமானதோர் ஆவணப்பதிவு!

– விரைவில் வெளிவரவிருக்கும் எல்லாளனின் ‘ஒரு தமிழீழப்போராளியின் நினைவுக்குறிப்புகள்’ நூலுக்காக எழுதிய அறிமுகக்குறிப்புகள் இங்கு ஒரு பதிவுக்காகப் பிரசுரமாகின்றது. –

வாசிப்பும், யோசிப்பும் - வ.ந.கிரிதரன்

ஈழத்தமிழர்களின் விடுதலைப்போராட்டம் ஆயுதப்போராட்டமாக உருவெடுத்து  இன்று முற்றாக மெளனிக்கப்பட்டுவிட்டது. அகிம்சை வழியில் முன்னெடுக்கப்பட்ட ஈழத்தமிழர்களின் உரிமைப்போராட்டம், இலங்கையை ஆண்ட அரசுகளின் இனவாதக்கொள்கைகளாலும், காலத்துக்குக்காலம் தமிழ் மக்கள் மீது ஏவப்பட்ட அடக்குமுறைகளினாலும், அரசுகளின் ஆதரவுடன் முன்னெடுக்கப்பட்ட இனக்கலவரங்களினாலும் தனிநாட்டுபோராட்டமாக பரிணாமடைந்ததன் விளைவே ஈழ்த்தமிழர்களால் குறிப்பாக இளைஞர்களினால் முன்னெடுக்கப்பட்ட விடுதலைக்கான ஆயுதப்போராட்டமாகும். இவ்விதமாகப்பரிணாமடைந்த விடுதலைப்போராட்டமானது மிகவும் குறுகிய காலத்தில் பல்வேறு குழுக்களாக வீங்கி வெடித்ததற்கு முக்கிய காரணி இந்திரா காந்தி தலைமையிலான பாரத அரசாகும். ஆரம்பத்தில் விடுதலைக்காக ஆயுதம் தூக்கியவர்கள் பல்வேறு குழுக்களாகப் பிளவுண்டு மோதிக்கொண்டதன் விளைவாக விடுதலைப்புலிகள் பலம்பொருந்திய ஆயுத அமைப்பாக உருவெடுத்தார்கள். இறுதியில் அவர்கள் ஆயுதங்களை மெளனிக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் யுத்தத்தில் பலியானார்கள்; காணாமல் போனார்கள். சரண்டைந்த பின் விடுதலைப்புலிகள் அமைப்பின் போராளிகள் பலர் படுகொலை செய்யப்பட்டார்கள். மேலும் பலர் கைது செய்யப்ப்பட்டார்கள். பலர் புனர்வாழ்வு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டு விடுதலையாகியுள்ளார்கள்.  இவ்விதமானதொரு சூழலில் இன்று பல்வேறு அமைப்புகளையும் சேர்ந்தவர்கள் தமது கடந்த கால அனுபவங்களைப்பதிவு செய்து வருகின்றார்கள். இவ்வகையான பதிவுகள் அபுனைவுகளாக, புனைவுகளாக என வெவ்வேறு வடிவங்களில் வெளிவருவதைக்காணக்கூடியதாகவுள்ளது. இவர்கள் தாம் சேர்ந்திருந்த அமைப்புகளில் பல்வேறு நிலைகளில் இயங்கியவர்கள். சிலர் அடிமட்டப்போராளியாக இருந்தார்கள். சிலர் அவ்விதமிருந்து இயக்கத்தின் முக்கிய உறுப்பினர்களாக மாறியவர்கள். சிலர் மாற்று இயக்கங்களினால் சிறைப்பிடிக்கப்பட்டு பல்வேறு சித்திரவதைகளுக்குள்ளாக்கப்பட்டு தப்பியவர்கள்; இன்னும் சிலர் தாம் சார்ந்திருந்த அமைப்புகளில் நிலவிய உள் முரண்பாடுகளால் பாதிக்கப்பட்டவர்கள். இவ்விதமான முன்னாள் போராளிகளின் சுய பரிசோதனைகள் வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. இவற்றில் எவ்வளவு உண்மை, எவ்வளவு பொய் என்பதை நிர்ணையிப்பதற்கு இவை போன்ற போராளிகளின் அனுபவங்களை உள்ளடக்கிய நூல்கள் பல வரவேண்டும். இன்றுதான் ஆயுதப்போராட்டம் தோல்வியடைந்து விட்டதே இனியும் எதற்கு இவை பற்றி ஆராய வேண்டிய தேவை என்று சிலர்  குதர்க்கக்கேள்வி கேட்கலாம். ஆனால் இத்தகைய அனுபவப்பதிவேடுகளின் முக்கியத்துவம் ஒரு குறிப்பிட்ட காலத்தில் நிலவிய ஈழதமிழர்களின் விடுதலைக்கான ஆயுதப்போராட்டம் பற்றிய ஆவணப்படுத்தலில்தான் தங்கியுள்ளது. இவ்விதமான அனுபவப்பதிவேடுகள்தாம் ஆயுதம் தாங்கிப்போராடிய ஈழத்தமிழர்களின் விடுதலை அமைப்புகள் பற்றிய புரிதல்களை, அவற்றின் ஆக்கபூர்வமான , எதிர்மறையான செயற்பாடுகளை விளக்கி நிற்கும் வரலாற்றின் ஆவணப்பதிவுகள்.

Continue Reading →

சிறுகதை ; கடல் யோசித்தது

--  செ.டானியல் ஜீவா -“எனக்கொரு நண்பன் உண்டு, அவன் தனக்கேன வாழாத் தலைவன்!” என்ற கிறிஸ்தவப் பாடல் சின்ன வயதிலிருந்தே எனக்கு பிடித்தமான ஒன்று. இந்தப் பாடலின் வரிகளை என் நண்பன் குமாரைக் காணும் போது அவ்வப்போது எடுத்து விடுவேன். அதை நான் பாடும் போதெல்லாம்  அவன் பதிலுக்கு என்னை கேலியும் கிண்டலும் செய்வதோடு, என்னைப் பார்த்து ‘பன்னாடை பன்னாடை’ என்று திட்டவும் செய்வான்.

குமாருக்கு  நாற்பத்திரண்டு வயதிருக்கும். பொது நிறமும், நல்ல உடல் கட்டோடு உயரமாகவும் இருப்பான். ரொம்பவும் கறாரானவன் போல் தன்னைக் காட்டிக்கொள்வான். நெஞ்சில் அடர்ந்து கிடக்கும் கறுத்த முடியெல்லாம் வெளியில் தெரியும்படியாக சேர்ட்டின் மேற்பக்கப் பட்டனைத் திறந்துவிட்டபடியே எப்போதும் வலம் வருவான். எதிரில் வரும்  பெண்களெல்லாம் தனக்காக அலைகிறார்கள் என்ற நினைப்பு அவனுக்கு. நினைப்பதோடு நின்று விடமால்  நண்பர்களுக்கெல்லாம் அதையே சொல்லித் திரிவான். சிலவேளைகளில் நெஞ்சை நிமித்தியபடி எவருக்கும் அஞ்சாதவன்போல் மிதப்போடு அலைவான். ஆனால் எதுவுமே உருப்படியாக அவன் செய்ததே இல்லை.

Continue Reading →

பேசாமொழி – ஜெயகாந்தன் சிறப்பிதழ்…

நண்பர்களே, தமிழ் ஸ்டுடியோவின் இணைய இதழான பேசாமொழி இந்த மாதம் ஜெயகாந்தன் சிறப்பிதழாக வெளிவந்திருக்கிறது. சினிமாவில் ஜெயகாந்தன் ஏற்படுத்திய மாற்ற்னகள், தாக்கங்கள், ஜெயகாந்தனையும் விட்டுவைக்காத சினிமாவின் வரலாறு,…

Continue Reading →

துயர் பகிர்வோம்: இலக்கிய நண்பர் புதுவை இராமனின் மறைவு.

இழப்புக்கள் ஏற்படுவது இயற்கைதான், ஆனால் இவ்வளவு விரைவாக ஏன் என்பதுதான் புரியவில்லை. ‘இந்த மண்ணில் மாரடைப்பு என்ற சொல்லைக் கேட்டாலே பயமூட்டுவதாகவும், அதிர்ச்சி தருவதாகவும் இருக்கின்றது’ என்று…

Continue Reading →

இர.மணிமேகலை கவிதைகள் மூன்று!

1. மௌனம்

கவிதை வாசிப்போம் வாருங்கள்!மழையை ஏந்திய இலையிலிருந்து

மெதுவாகக்கீழிறங்குகிறது மழைத்துளியொன்று

எண்ணெய்வாசனை கமழும் சமையலறை  தயாராகிறது

நாவின் மொட்டுக்களைத்தூண்டும்

செம்மண் தோட்டத்துக் கத்தரி

கிண்ணங்களில் அடங்குகின்றது

முத்துக்களெனத் திரண்ட மல்லிகை மொட்டுக்களை

நிமிடத்தில் கட்டி முடித்துவிடும் விரல்களின்

களி நடனம் மிளிர்கிறது

இணையின் பெயரை அழகாக உச்சரிக்கும் இதழ்களுக்குள்

உமை விடுபட்டு விடுகிறாள் அவ்வப்போது

அர்த்தநாரி இழந்துபோக

சிவனின் தாண்டவம்

சிந்தையில் செங்கொடி படர்ந்த நாட்களில்

படிந்த நிழல்

சித்தன்ன வாசல் ஓவியமாய்ப் பூத்திருக்கிறது

விழி நோக்கி

உன் பேச்சு அதிகமென்று

வேலியிட்ட மணித்துளிகளில்

பொங்கியெழும் பேரலயென மேலெழுந்து அடங்கும் மனம்

ஆழ்கடல் மௌனத்தைச் சூடிக்கொள்கிறது

மௌனத்தினுள் காளியின் நீண்ட நாக்குத் தொங்கிக் கொண்டிருக்கிறது

சிந்தும் இரத்தத்துளிகளுடன்.

Continue Reading →