பார்வை: பாரதிநாதனின் ‘வந்தேறிகள்’

பாரதிநாதனின் வந்தேறிகள்

தாஜ் (சீர்காழி)ஒரு நாவலை வாசிக்கிற போது, அதனை ரசித்து உள்வாங்கிக் கொள்வதென்பதும் அதன் கதாபாத்திரங்களோடு ஒன்றிப்போவதென்பதும் வேறு வேறு நிலைரசனை கொண்டவை. ஆழ்ந்து அவதானித்தால் இரண்டு ரசனைகளுக்கிடையே நிரம்ப வித்தியாசங்கள் உண்டென்பதைக் கணிக்க முடியும். இவ்விரண்டு நிலையுமே வாசிப்பின் நிறைவை வெளிப்படுதும் பாங்குதான் என்றாலும், நாவலோடு ஒன்றிப்போவதென்பதையே கூடுதல் ஈடுபாடாகக் கருதயிடமுண்டு!. தோழர் பாரதிநாதனின் ‘வந்தேறிகள்’ நாவலை வாசித்த போது என் நிறைவை, கூடுதல் ஈடுபாடுகளுடன்தாம் உணர்ந்தேன்!பேட்டை – மந்தைத்திடல், கள்ளிப்பாளைய முதலாளிகள், அவர்களது கைத்தடிகள், அவர்கள் அழைத்துவந்திருந்த போலீஸ்களென அத்தனை பேர்களோடும் நியாயத்திற்காக முரண்பட்டு சந்துரு களத்தில் முன்நிற்க, மாதேசு, ஏழுமலை, கந்தப்பன் குடும்பம் இன்னும் இன்னும் ஏராளமான ஜனங்கள் குழுமியிருந்த மந்தைதிடல் கூட்டத்தில் நானும் இருந்தேன்! என்ன யோசிக்கின்றீர்கள்! மிகைதான். ஆனாலும் இருந்தேன்! அந்த அளவில் அந்நாவலோடு என் ஐக்கியம் இருந்தது. பேட்டைப் பகுதியில், பெரும் விசைத்தறி உற்பத்தியாளர்களாக அறியப்படும் கொழுத்த முதலாளிகள், தங்களை அண்டிவாழும் சிறு விசைதறி முதலாளிகளை வஞ்சிக்கிறார்கள். அவர்களிடம் பணிபுரிந்த தொழிலாளர்கள் வேலையற்றுப் போய், வீதிக்கு வருகிறார்கள். இச்சூழ்ச்சியில், சிறு முதலாளிகளுக்கு ஆதரவாக விசைத்தறித் தொழிலாளர்கள் களம் காண்கிறார்கள்.

Continue Reading →