இணையத்தில் தமிழ்!

இணையத்தில் தமிழ்!தமிழ் மொழி காலத்திற்கு ஏற்ற வகையில் தன்னை வளர்த்துக் காண்டே வருகிறது. இன்றைய மிகப் பெரிய தகவல் ஊடகமாக விளங்குவது இணையம் ஆகும். இந்தத் தகவல் சாதனத்திலும் தமிழ் அதிக அளவில் பயன்படுத்தப் பெற்று வருகின்றது. ஏறக்குறைய இணையப் பயன்பாட்டில் தமிழ் மொழி குறித்த தகவல் பரிமாற்றம் உலக அளவில் இரண்டாம் இடத்தில் இருப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

இணையத்தில் தமிழ் பற்றி அறிந்து கொள்ள, தமிழ்ச் செய்திகளை அறிந்து கொள்ள பற்பல வாய்ப்புகள் உள்ளன. தமிழில் உள்ள நூல்களை இணையத்தில் வாசிக்கமுடியும். தமிழ் நூல்களை மின்நூல்களாக மாற்றி இணையத்தில் வழியாக அனைவரும் பயன்கொள்ளும்படிச் செய்யப்பட்டு வருகிறது. இவற்றை மின் நூலகம், இணைய நூலகம் என்று அழைக்கின்றனர். கள்வரால் களவாடப்பட முடியாமல், வெந்தணலில் தமிழ் ஏடுகள் தற்போது இணையத்தில் ஏற்றி அழியா நிலைக்குச் சென்றுவிட்டன.

மதுரைத்திட்டம் என்ற இணைய தளம் ஏறக்குறைய பழந்தமிழ் இலக்கியங்கள் அனைத்தையும் தன்னுள் மின்பதிப்பாகக் கொண்டுள்ளது. http://www.project madurai.org” இணையதள முகவரிக்குச் சென்றால் இத்தளத்தைப் பார்வையிடலாம். இத்தளத்தின் சிறப்பு என்னவென்றால் பல தமிழ் அன்பர்கள் ஒன்றுகூடி, அவர்கள் அவர்களாகவே சிலச்சில நூல்களை மின்வடிவமாக மாற்றி ஒட்டுமொத்தமாகத் தந்திருப்பதுதான். இது ஒரு கூட்டு முயற்சியாகும்.

Continue Reading →

பாடசாலை செல்லும் மாணவருக்கான பாலியற் கல்வி (ஒன்ராறியோ பாடத்திட்டத்தில் பாலியற் கல்வி)

பாடசாலை செல்லும் மாணவருக்கான பாலியற் கல்வி (ஒன்ராறியோ பாடத்திட்டத்தில் பாலியற் கல்வி)“மிக ஆரோக்கியமான தொடர்புறுதல் விளக்கம் மிகுந்த உள்நோக்கத்தோடு உள்ளடக்கப்பட்டுள்ளது. எனவே மாணவர்கள் இந்தப் பரப்பினுள் கற்பவை அவர்களது எல்லாவித தொடர்புகொள்ளலுக்கும் பொருந்துவதாகும்.  நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் (மற்றும் அவர்கள் வளர்ந்தவர்களாக குறிப்பிடத்தக்க காதல் விருப்புக்கள்) அல்லது பங்காளர், துணைவர், துணைவி அல்லது மனைவி என்பவர்களோடு எதிர்காலத்தில் அன்புவைக்கவும் பயன்படுத்தக்கூடியதாக அமையும்.”  என பாலியற் கல்விபற்றி ஒன்ராறியோ கல்வி அமைச்சு ஒரு எழுத்துமூல அறிக்கையை வெளியிட்டுள்ளது.

பாலியற் கல்வி என்றவுடன் பலபெற்றோர்கள் ஏதோ தேவையற்ற அல்லது பிள்ளைகளைத் தவறான வழிகளுக்கு இட்டுச் செல்லும் கல்விமுறை என எண்ணுகின்றார்கள். பாலியற் கல்வி என்பது உடலுறவை மட்டும் அடிப்படையாகக் கொண்டது என்ற எண்ணக் கரு பெரும்பாலான பெற்றோர்கள் மத்தியில் காணப்படுகின்றது. அல்லது அப்படியான கருத்து பரப்பப்படுகின்றது. பேசாப்பொருளைப் பிள்ளைகளிடம் பேசக் கல்வி அமைச்சும் பாடாசாலைகளும் முற்படுவதாக கருதப்படுகின்றது. பாலியல் கல்வியைப் பாடசாலைகளில் புகட்டுவதற்குப் பல பெற்றோர்கள் ஆதரவாகவும் சிலர் எதிராகவும் உள்ளனர். சமய அடிப்படை வாதிகள் பாலியற் கல்விக்கு எதிர்ப்புத் தெரிவித்துவருகின்றன.

Continue Reading →