திரும்பிப்பார்க்கின்றேன் நாவன்மையில் சிறந்து விளங்கிய நாவேந்தன்!

திரும்பிப்பார்க்கின்றேன்  நா வன்மையில் சிறந்து விளங்கிய நாவேந்தன்!          சமகாலத்தில்  இலங்கையிலும்  தமிழர்  புலம்பெயர்ந்த  நாடுகளிலும் தினமும்  பேசப்படும்  ஊராக  விளங்கிவிட்டது  புங்குடுதீவு. இந்தத்தீவுக்கு  இதுவரை  சென்றிராத  தென்னிலங்கை   சிங்கள மக்களும்   மலையக  மக்களும்,  இந்த  ஊரின்  பெயரை  பதாதைகளில்  தாங்கியவாறு  வீதிக்கு  வந்தனர். இலங்கைப்பாராளுமன்றத்திலும்  இந்தத்தீவு  எதிரொலித்தது. ஜனாதிபதியை  வரவழைத்தது. இலங்கையில்   மூவினத்து  மாணவர்  சமுதாயமும்  உரத்துக்குரல் எழுப்பும்   அளவுக்கு  இந்தத்தீவு  ஊடகங்களில்  வெளிச்சமாகியது. இத்தனைக்கும்   அங்கு  ஒரு  வெளிச்சவீடு  நீண்ட  நெடுங்காலமாக நிலைத்திருக்கிறது. பதினைந்துக்கும்  மேற்பட்ட  பாடசாலைகள்,   20   இற்கும்  மேற்பட்ட குளங்களின்   பெயர்களுடன்    இடங்கள்.   20   இற்கும்  மேற்பட்ட சனசமூகநிலையங்கள்  ( வாசிகசாலைகள்   உட்பட)  பல  கோயில்கள் எழுந்திருக்கும்    புங்குடுதீவில்,   இதுவரையில்  இல்லாதது  ஒரு பொலிஸ் நிலையம்தான்.

கலை,  இலக்கியம்,  இசை,  ஊடகம்,  கல்வி,  திரைப்படம்,  நாடகம் முதலான   துறைகளில்  ஈடுபட்ட  பல  ஆளுமைகளின்   பூர்வீகமான பிரதேசம்   புங்குடுதீவு. புங்குடுதீவு  எனப்பெயர்  தோன்றியதற்கும்  பல  கதைகள்.  இங்கு புங்கைமரங்கள்    செறிந்து  வளர்ந்தது  காரணம்  என்றார்கள். தமிழ்நாட்டில் புங்குடியூர்  எங்கே  இருக்கிறது  என்பது தெரியவில்லை.   ஆனால்,  அங்கிருந்தும்  மக்கள்  இங்கு இடம்பெயர்ந்து    வந்திருக்கிறார்கள்.   தமிழக புங்குடியூரில் ஆங்கிலேயர்களுக்கு முற்பட்ட  காலத்தில்   இஸ்லாமியர்களினால் நிகழ்ந்த   படையெடுப்பினால்  மக்கள்  இடம்பெயர்ந்து வாழ்வதற்கு  இந்தத்தீவுக்கு   வந்தனராம்.   முன்னர்  பூங்கொடித்தீவு  என்றும் பெயர்   இருந்ததாம்.   ஒல்லாந்தர்  இங்கு  சங்கு  ஏற்றுமதி வர்த்தகத்திலும்   ஈடுபட்டிருக்கின்றனர்.   அதனால்  சங்குமாவடி என்றும்    இந்த  ஊருக்கு  முன்னர்  பெயர்  இருந்ததாம். சப்ததீவுகளுக்கு    மத்தியில்  புங்குடுதீவு  இருந்தமையால் –   இதற்கு Middle  Burg  என்றும்  ஒல்லாந்தர்  பெயர்  சூட்டியிருக்கின்றனர். இந்தத்தீவைச் சேர்ந்த  சில  எழுத்தாளர்கள்,  கலைஞர்கள், ஊடகவியலாளர்கள் ,  ஆசிரியர்கள்,  பிரமுகர்கள்  எனது நண்பர்களாகவிருந்தும்  எனக்கு  இந்த  ஊருக்குச் செல்லும்   சந்தர்ப்பம்  கிடைக்கவில்லை.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 100: டொமினிக் ஜீவா அவர்களுக்கு அகவை 88! வாழ்த்துகிறோம்!

dominic_jeeva5.jpg - 15.40 Kbமூத்த எழுத்தாளர் டொமினிக் ஜீவா அவர்களுக்கு அகவை 88. ஈழத்தமிழ் இலக்கிய உலகில் அவருக்குச் சிறப்பானதோரிடமுண்டு. குறிப்பாக ஈழத்து முற்போக்கு இலக்கியத்தில் அவரது பங்களிப்பு முக்கியமானது. மேலும் அவரது பங்களிப்பு பல்முனைப்பங்களிப்பாகும். புனைவு, அபுனைவு, சிற்றிதழ் வெளியீடு என அவரது இலக்கிய பங்களிப்பினைப்பிரித்துப் பார்க்கலாம். தீண்டாமைக்கெதிராக ஓங்கியொலித்த குரல் அவரது. அனுபவங்களை, அவை தந்த அவமானங்களைக்கண்டு ஒதுங்கி ஓடி விடாமல், அவற்றைச் சவால்களாக எதிர்கொண்டு, தான் கொண்ட இலட்சியத்தில் உறுதியாக நின்று நடைபயின்றவர் ஜீவா அவர்கள்.

அவரது சிற்றிதழ்ப்பங்களிப்பு அவரது இலட்சியப்பற்றுக்கும், விடாமுயற்சிக்கும் கிடைத்த வெற்றியாகும். மல்லிகை என்னும் சிற்றிதழ்ப் பங்களிப்பு மேலும் பல பயன்களை விளைவித்தன எனலாம். ஈழத்துப்படைப்பாளிகளை (அமரர்களுட்பட) மல்லிகையின் அட்டைப்படத்தில் வெளியிட்டு, அவர்களைப்பற்றிய அட்டைப்படக் கட்டுரைகளையும் வெளியிட்டு வந்ததன்மூலம் அவர் ஈழத்துத் தமிழ் இலக்கியத்துக்கு வளம் அளித்தவர்கள், அளிப்பவர்களைத் தமிழ் வாசகர்களுக்கு குறிப்பாக இளம் தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்தினார்; அவற்றை ஆவணப்படுத்தினார். இளம் எழுத்தாளர் பலரை மல்லிகை சஞ்சிகை மூலம் அறிமுகப்படுத்தினார்; அவர்தம் ஆக்கங்களைப் பிரசுரித்து ஊக்கப்படுத்தினார். கலை, இலக்கியம் மற்றும் சமூக, அரசியல் பற்றி ஆக்கங்களைப் பிரசுரித்தார். பிறமொழி ஆக்கங்களைத்தமிழுக்கு மொழிபெயர்த்து வெளியிட்டார். தன் எண்ணங்களைப்பகிர்ந்துகொண்டார்.

Continue Reading →

படச்சுருள் – அறிமுகக்கூட்டம் – தமிழ்நாடு முழுவதும்…

நண்பர்களே, தமிழ் ஸ்டுடியோவின் புதிய முன்னெடுப்பான படச்சுருள் மாத இதழை தமிழ்நாடு முழுக்க அறிமுகம் செய்யும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பயணம் செய்யவிருக்கிறோம். உங்கள் பகுதியில் நீங்கள்…

Continue Reading →

ஆஸ்திரேலியாவில் பாலேந்திராவுடன் சந்திப்பும் கலந்துரையாடலும்

கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழ் நாடகத் துறைக்குப் பிரமிக்கத்தக்க பங்களிப்பைச் செய்துவரும் பிரபல நாடக இயக்குனர் க. பாலேந்திரா அவுஸ்திரேலியாவுக்கு வருகை தந்துள்ளார். தமிழ் அவைக்காற்றுக்…

Continue Reading →