மதிப்பிற்குரியீர், வணக்கம். யாங்கள் ஆய்வாளர் நலன் கருதி இனம் எனும் இணைய ஆய்விதழைத் தொடங்கியுள்ளோம். தங்களுடைய ஆய்வாளர்களுக்கும் பேராசிரியர்களுக்கும் இவ்வாய்விதழை அறிமுகப்படுத்துமாறு கேட்டுக் கொள்கின்றோம். நன்றி! ஆய்விதழை…
இலக்கியம் என்பதென்ன? எழுதுவதெல்லாம் இலக்கியமா? எப்படி இலக்கியத்தை தரப்படுத்தலாம்? . முக்கியமாக தமிழ் இலக்கியத்தில் முக்கிய அணியில் இருந்தோ அல்லது, பணத்தை வாரியிறைத்தோ பரிசுகளைப் பாராட்டுகளை பெறும்போது நியாயமான சந்தேகங்கள் சாதாரணமான வாசகர்களுக்கு எழுவது சகஜம்தானே…? இந்தப் பிரச்சினையை எப்படித் தீர்ப்பது?
ஹெமிங்வேயின் ஒரு முக்கியமான கூற்றைப் படித்தேன். அதில் ‘ இலக்கியம் பனிப்பாறை போன்றது’ என்றார். நீரில் மிதக்கும் பனிப்பாறையில் எட்டில் ஒரு பகுதி வெளியே தெரிவது. மிகுதி நீரின் உள்ளே இருப்பது. அதாவது இலக்கியத்தில் எழுதப்பட்டது: சிறிதாகவும் சொல்லப்படாத விடயங்கள்: பெருமளவில் வசனங்களின் இடையில்; ஊகத்திற்கு விடப்படுபவை. இவை அம்பிகுயிற்றி (ambiguity) அல்லது பொருள்மயக்கம் எனக்கூறலாம். இது சிறுகதை நாவல் கவிதை என்பதற்கு பொருந்துமானதாலும் நான் நாவலையே இங்கு பார்க்கிறேன்.
பொருள்மயக்கத்தை ஹெமிங்வேயின் எழுத்துகளில் பார்க்க முடியும் கிழவனும் கடலும் (Old man and the sea) என்ற பிரபலமான நூலில் சொல்லப்படுபவை. அந்த சன்ரியாகோ கிழவன் மாலின் மீனோடு போராடுவது என்பது மிகவும் சிறிய விடயங்கள். ஆனால் சொல்லப்படாதது ஏராளம். முதுமையில் எதையாவது சாதிக்கவேண்டும் என்பது மட்டுமல்ல. தூண்டில் கயிறை பிடித்திருந்த இடது கரம் களைத்து மரத்தவுடன் இரண்டு கைகளோடு நடத்தும் சம்பாசணையில் கையின்; உரத்திற்காக நான் உணவு உண்கிறேன் என்பது மனித வாழ்க்கையில் உணவு எவ்வளவு முக்கியத்துவம் என்பது வருகிறது.
திடீரென்று மருத்துவர் சுவா அவளை அழைத்தது ஆச்சரியமாக இருந்தது . வெளியிலென்றால் அவரது அப்பாயிண்ட்மெண்டுக்கு காத்திருக்கவேண்டும். ஆனால் இன்று அவர் வரும் நாள் என்றறிந்தும் இவள் அலட்டிக் கொள்ளாமலிருந்ததற்குக் காரணமிருந்தது. . இப்பொழுது புறப்பட்டால் தான் சுலமானைப் போய் பார்த்து சாப்பாட்டுக்குப் பணம் கொடுத்துவிட்டு, இவள் ஜோகூர் சுங்கச்சாவடிக்கு போய், அங்கிருந்து சிங்கப்பூருக்குப் போக சரியாக இருக்கும்.
மருத்துவர் சுவா இந்த திருமணத்துக்கு முழு ஆதரவு தரவில்லை. இது மருத்துவமனை அல்ல. காப்பகம் தான். என்றாலும் இந்த வியாதிக்கு சட்டென்று ஒரு முடிவுக்கும் வர இயலாததற்கான காரணத்தை மருத்துவர் இவளுக்கு விளக்கியாயிற்று.அதற்கு இம்மியும் மாற்றுக் குறையாது சுமித்ரா, தன்னுடைய கருத்தின் நியாயம் பற்றி, அதைவிட எதிர்பார்ப்போடு விளக்கினாள்
“ சோ, திருமணம் இன்னும் ஒரு வாரத்திலா? “ .மருத்துவரின் புன்னகை ஏனோ இவளுக்கு ரசிக்கவில்லை. ..கடந்த பத்தாண்டுகளாக இந்த காப்பகத்துக்கு வரும் இவளுக்கும் மருத்துவர் சுவாவுக்கும் நல்ல நட்பு இருந்தது. ஆனால் இப்போது சில நாட்களாக அப்படியில்லை.
முன்னுரை
சங்ககால மக்களின் வாழ்க்கை முழுவதும் பண்பாட்டு மயமாக்கப்பட்டச் சூழல். அதனால் அவர்கள் பண்பாடு கருதியே குறிப்பால் நிறங்கள் வழி தங்களது பாலியல் செய்திகளை உணர்த்தி வந்தனர். சங்க இலக்கியத்தில் பாலியல் புனைவுகளை வெளிப்படையாகச் சுட்டும் மரபு இல்லை. அவற்றை நிறங்கள் வழிக் கூற முற்பட்டுள்ளனர். சமூகத்தில் படைக்கப்பட்ட நிறம் மொழியமைப்பில் ஓர் ஊடகமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. நிறங்கள் சமூகக் கட்டமைப்பில் குறியீடாகவும், சமுதாயத்தினரின் எண்ணங்களை உள்ளடக்கியதாகவும் திகழ்கின்றன. இத்தகைய சிறப்பு வாய்ந்த வண்ணக்குறியீட்டின் வழியாக சங்க மகளிர் தம் பாலியல் உணர்வுகளை எவ்வாறு வெளிப்படுத்துகின்றனர் என்பதை ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாக அமைந்துள்ளது.
நிறக்குறியீடு
மனிதன் தனது கருத்துகளைப் பிறரிடம் பரிமாறிக் கொள்ளும் கருவியாக மொழியைப் பயன்படுத்துகிறான். இம்மொழியினை நாம் இருவகையாகப் பகுக்கலாம். ஒன்று சைகைமொழி அல்லது குறியீட்டு மொழி, மற்றொன்று பேச்சுமொழி. மேற்கூறியவற்றுள் குறியீட்டு மொழியினை நோக்கும்பொழுது அதில் பலவகை உண்டு. அவற்றுள் ஒன்றாக நிறத்தைக் (வண்ணம்) குறிப்பிடலாம். நிறத்திற்கும் மனிதனுக்குமான உறவு ஆதிகாலம் முதல் இன்று வரை மிக நெருக்கமான ஒன்றாகத் திகழ்கிறது. இந்நிறங்களைக் குறியீடாகப் பயன்படுத்தும் பொழுது அதற்குரிய தன்மை அல்லது பொருண்மையின் அடிப்படையில் பயன்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
யாழ்ப்பாணம், புங்குடுதீவைச் சேர்ந்த சிறுமி வித்யா சிவலோகநாதனின் பாலியல் வல்லுறவுப் படுகொலைச் சம்பவம், வருடக்கணக்காகத் தமிழ்ச் சமூகத்துக்குள் புழுங்கிக் கொண்டிருந்த அழுத்தம் வெடித்து வெளிக்கிளம்புவதற்கான ஒரு சந்தர்ப்பமாக அமைந்துவிட்டமை குறிப்பிடத்தக்கது. அவ்வாறே, அதன் அதிர்வு தெற்கில் உள்ள பல்வேறு சமூகக் குழுமங்களையும் பாதித்தமையைக் காணக்கூடியதாக உள்ளது. எனினும், அது தெற்கில் வழமையாக வழங்கிவரும் “எதிர்ப்புக் கலாசாரத்தின் ” மற்றோர் அங்கமே என்று யாரேனும் கூறுவார்களெனில், அதனை அப்படியே ஒப்புக்கொள்வதற்கு முன் அவர்கள் தத்தமது மனசாட்சியை ஒருதரம் தொட்டுப்பார்த்துக் கொள்ளுமாறு முதற்கண் வேண்டிக் கொள்கின்றோம். இதன் கருத்து, சிறுமி வித்யாவுக்கு நீதி கிடைக்கவேண்டும் என்பதற்காகத் தெற்கில் மேற்கொள்ளப்பட்ட எதிர்ப்புப் பேரணிகள் எந்தப் பயனும் அற்றவை என்பதல்ல. அதன் மூலம், தெற்கில் வாழும் சமூகங்கள் மத்தியில் தமிழ்ச் சமூகத்தின் துன்பியலான வாழ்வியல் துயரம் அவ்வாறேனும் கலந்துரையாடலுக்கு உட்படுவது முக்கியமானதாகும் என எவரேனும் வாதிட்டால், அதனை நாம் புறந்தள்ள முடியாதுதான்.
இலங்கையில் தமிழர்களுக்கும், சிங்களவர்களுக்குமிடையில் நிலவும் முரண்பாடுகள் அண்மைக்காலத்தில் ஏற்பட்டவையல்ல. இரண்டாயிரம் வருடங்களுக்கும் அதிகமானவை. குடங்கிப் படுத்திருக்கும் சிறுவன் துட்டகெமுனு அதற்குக் காரணமாகக் கூறுவான் ” தெற்கில் கடலும், வடக்கில் தமிழரும் இருக்கையில் எவ்விதம் நீட்டி நிமிர்ந்து படுப்பது?” என்று. துட்டகெமுனுவை சிங்கள தேசிய விடுதலை வீரனாகச்சித்திரிக்கும் சிங்கள மக்களின் வரலாற்று நூல்கள் தமிழர்களை எதிரிகளாகவும் சித்திரிக்கும். குழந்தைப் பருவத்திலிருந்தே தமிழர்களைச் சிங்கள மக்களின் எதிரிகளாகச் சித்திரிக்கும் இவ்விதமான வரலாற்று நூல்கள் திருத்தி எழுதப்பட வேண்டியது அவசியம். டெறிக் த சில்வாவின் ‘தொன்மம்’ என்ற இந்தக் கவிதை அந்த வரலாற்றைக் கேள்விக்குள்ளாக்குகின்றது. [இங்குள்ள மொழிபெயர்ப்புக் கவிதைகள் சோ.பத்மநாதனின் ‘தென்னிலங்கைக் கவிதை’ நூலிலுள்ள மொழிபெயர்ப்புக்கவிதைகளாகும்.]
ஒரு பிள்ளையின் அச்சமாகிய
அந்தகாரத்தில்
பளபளக்கும் வாள்கள் தந்த
அழிவு எவ்வளவு?
ஆறாய் ஓடிய குருதி
எவ்வளவு?
அத்தானே அத்தானே!
எந்தன் ஆசை அத்தானே!
கேள்வி ஒன்று கேட்கலாமா…. உனைத்தானே!.. – வான்
ஓலியில் கமழ்ந்து இனித்த அந்தக் குரலின்
துயரம் என்னை அதிர வைத்தது!
புரட்சியில் வடிவெடுத்து
புது யுகங்களில்…
கலை இலக்கியங்களை
வகைப்படுத்தியவளே!
விதைப்புகள் தகர்ந்ததால்
சடுதியாய்
நிசப்தத்தின் பள்ளத்தாக்கில்
புதையுண்டு முனகினாயோ…
அதிசயமான அதிசயனின்
அரவணைப்பில் ஆழ்ந்தவளே…
உயர்ந்த கருத்துக்களில்
பொங்கிய விழுமியங்கள்
ஆழ்கடலின் மௌனம்போல்
அகவயத்தில் தொலைத்து
பூமியின் மடியில் மௌனித்து ஆழ்ந்தாயோ!
1.உத்தரிக்கும் இரவு.
அசமந்தமாக நகரும்
சரக்கு ரயிலாக
எரிச்சலூட்டியபடி
நீளுகின்றது இரவு.
கடைசிக் கையிருப்பும்
முடிந்து போன
அந்தரிப்பில்
முழித்துக் கிடக்கிறது
உறக்கமற்ற விழிகள்.
தீர்ந்து போன
சக்கரை டப்பாவில்
மீதமிருக்கும்
கனவுகளை சேகரிக்கிறது
தவித்துப் போன மனது.
தொல்காப்பியம் இலக்கியநிலையிலும் வழக்குநிலையினையும் எடுத்து இயம்பும் ஒப்பற்ற இலக்கணமாக விளங்குகின்றது. இத்தகைய இலக்கணத்தினை மக்களிடம் பரவவிட்டவர்கள் உரையாசிரியர்கள் எனலாம். இதற்கு அவர்கள் மேற்கொண்ட உரைமுறைகளும் ஒன்றாகும். அவ்வாறு உரைகூறும் பொழுது, உரையாசிரியர்கள் இலக்கியங்களில் இருந்து மேற்கோள்களைக் காட்டுகின்றனர். இவ்வாறான விளக்கத்தின் மூலம் தொல்காப்பியச் சிந்தனைப் பள்ளியினை உரையாசிரியர்கள் வளர்த்துள்ளனர். இத்தகையப் பணியில் குறிப்பிடத்தகுந்தவர் தெய்வச்சிலையார். இவரின் உரையினைத் தொடரியல் நோக்கில் அமைத்துள்ளார். எனவே, இவர் பயன்படுத்திய இலக்கிய மேற்கோள்களில் தொடரியல் சிந்தனையைக் காணும் விதமாக இக்கட்டுரை அமைகிறது.
எச்சங்கள்
எஞ்சி நிற்பன எல்லாம் எச்சம் எனலாம். வினையைக் கொண்டு முடிவது வினையெச்சம். பெயரைக் கொண்டு முடிவது பெயரெச்சம். வினையியலில் கூறப்படும் எச்சங்கள் வினையெச்சம் என்றும் பெயரெச்சம் என்றும் இருவகைப்படும். வினையைக்கொண்டு முடிவன எல்லாம் வினையெச்சம் இல்லை. குறிப்பிட்ட இலக்க அமைப்பிற்கு உட்பட்டுவருவன மட்டும் வினையெச்சம் எனப்படும்.