தெருக்கூத்து ( 3)

- வெங்கட் சாமிநாதன் -இவையத்தனையும் முதலில் சொல்லிவிட்டு, இப்பொழுது நாம் கூத்தின் முதல் நாளின் அரங்கேற்றத்துக்குத் திரும்பப் போவோம், அதாவது திருவிழாவின் 10வது நாள்.அன்றையச் சம்பவம் திரௌபதியின் திருமணம்.பாஞ்சால மன்னனின் அரண்மனையில் நடக்கும் சுயம்வரத்தில் ஆரம்பிக்கிறது நாடகம்.அரசர் வில்லை எடுத்து வர ஆணையிடும் கட்டத்தில் மேடையில் நாடகம் நின்று போகிறது.இதற்குள் நேரம் நள்ளிரவைத் தாண்டிவிட்டது. மல்லர்கள் போல் வேடமணிந்த சில நடிகர்கள் (பழந்தமிழ் இலக்கியத்தில் பேசப்படும் போர்வீரர்கள்/ மல்யுத்தக்காரர்கள் இவர்கள்) கோவிலுக்குச் சென்று 30 அடிக்கு 40 அடி நீளத்தில் மூங்கிலால் செய்யப்பட்டு பூஜை செய்வித்து புனிதப்படுத்தப்பட்ட ஒரு வில்லை எடுத்து வருகிறார்கள். கிராமத்து மக்களும் பறை மற்றும் சிலம்பு ஒலிக்க இவர்களுடன் வருகிறர்கள். ஆங்கில எழுத்து F  போன்ற ஒரு மரச் சாதனமும் வருகிறது. ஒரு வில்லில் மரத்தாலான ஒரு மீனுடன் ஒரு சின்னச் சக்கரம் உள்ளது. அந்த வில்லைத்தான் அங்கு கூடியுள்ள மன்னர்கள் எடுக்க முயற்சி செய்து தோற்பார்கள், ஆனால் அருச்சுனன் அதைத் தூக்குவதில் வெற்றியடைந்து இலக்கையும் அடித்து விடுவான். கூத்து நிகழ்ச்சி திரௌபதியின் திருமணத்துடன் நிறைவடையும். மறுநாள் திரௌபதியின் திருமணம் மீண்டும் கொண்டாடப்படும், அதாவது தென்னிந்தியக் கோவிலில் இத்தகைய கோவில் விழாக்களில் நடக்கும் அனைத்து சடங்கு முறைகளுடனும் அது நடைபெறும். கோவிலின் கர்ப்பக்கிருகத்தில் திரௌபதியின் சிலைக்கருகே அருச்சுனன் சிலையும் வைக்கப்படுகிறது.அனைத்துத் திருமணச் சடங்குகளும், அம்மனின் கழுத்தைச் சுற்றித் தாலி கட்டுவது உட்பட அனுஷ்டிக்கப்படுகின்றன.மறுபடியும் அந்தச் சிலை கிராமத்தை சுற்றி எடுத்துச் செல்லப்பட்டு, கிராமம் முழுவது விழாக்கோலம் கொள்கிறது.பிறகு அம்மன் கோவிலுக்குத் திரும்புகிறாள்.இங்கே பண்டைய காலத்து அம்மன் மற்றும் காவல் தெய்வத்தை திரௌபதி அம்மனுடன் இணைப்பது மீண்டும் உறுதிப்படுத்தப்படுகிறது.காவியம் (பிரசங்கி), நாடகம் (தெருக்கூத்து) மற்றும் சடங்கு (அம்மன்) என்பவற்றின் ஒருங்கிணைப்பும் இங்கே நடக்கிறது.ஒவ்வொன்றும் அவற்றின் தனி அடையாளத்தைக் கைக்கொண்டிருக்கையிலேயே, அவற்றிடையேயான உறவுடன் ஒன்றிணைவது இது.

Continue Reading →

அறிவித்தல்: கலாசூரி விருது பெறுகின்றார் எழுத்தாளர் ஷைலஜா

அறிவித்தல்: கலாசூரி விருது பெறுகின்றார் எழுத்தாளர்  ஷைலஜாதடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி சர்வதேச அமைப்பு ஒவ்வொரு மாதமும் பிரபல பெண் எழுத்தாளர்களை பன்முக ஆற்றல் கொண்டவர்களை இனம் கண்டு மாதாமாதம் (கலாசூரி விருது )கொடுத்து கௌரவித்து வருகின்றார்கள். அதன் நான்காவது கலாசூரி விருதினை ஜூலை மாதம்(05-07-2015) இன்று பிரபல பெண் எழுத்தாளர் பன்முக ஆற்றல் கொண்டவருமான ஷைலஜா (Shylaja Narayan)அவர்கள் பெறுகின்றார். மழலைகளின் எழுத்தாளர் என புகழ் பெற்ற திருமதி ஷைலஜா அவர்களின் இயற்பெயர் மைதிலி. இந்தியாவில் ஸ்ரீரங்கத்து மண்ணில் பிறந்து வளர்ந்தார். தற்போது இவர் கணவருடனும், தன் இரு பெண்பிள்ளைகளுடனும்  பெங்களூரில் வசித்து வருகின்றார். மறைந்த பிரபல எழுத்தாளர் திரு ஏ.எஸ். இராகவன்அவர்களின் புதல்வி தான் ஷைலஜா அவர்கள் எப்பொழுதும் கலகலப்பாக நகைச்சுவை உணர்வுடன் விளங்கும் இவர் 3 முறை ராஜ் டி.வி.யில் நகைச்சுவை நாடகங்களில் பங்கேற்றுள்ளார். கோவை, திருச்சி, பெங்களூர் வானொலி நிலயங்களில் நிகழ்ச்சி நடத்தி, தனது படைப்புகளை வாசித்திருக்கிறார். விளம்பரப்படம், குறும்படங்களுக்குப் பின்னணிக் குரல் கொடுக்கின்றார் . சிஃபி தமிழ் இணைய தளத்தில் குரல் பதிவுகள் அளிக்கிறார். இணையதள வானொலி ஒலி எஃப் எம்மில் அறிவிப்பாளராய் பகுதி நேரங்களில் பணிபுரிகிறார். ஓவியம், சங்கீதம், ரங்கோலி முதலியவற்றில் ஈடுபாடு கொண்டவர். இவர் ஒரு சமையல் கலைப் பிரியர். புதிய சில கண்டுபிடிப்புகளைப் பத்திரிகைகளில் எழுதி உள்ளார். எழுத்துத் துறையில் ஆழ்ந்த பற்றுள்ள இவர் விகடன், தினமலர், கல்கி, அமுதசுரபி, கலைமகள் ஆகியவைகள் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசுகளும், நாடகம் 2ல் நடித்து இரு முறை சிறந்த நடிகை விருதும் வாங்கி உள்ளார். பொதிகை தொலைக்காட்சி நடத்திய பொங்கல் சிறப்பு விமர்சனக் கவிதையில் சிறப்புப் பரிசும், இணையத்தில் மரத்தடி.காம், தமிழ் உலகம், முத்தமிழ், அன்புடன் குழுமங்கள் நடத்திய கதை கவிதைப் போட்டிகளில் பரிசுகளும் அடைந்துள்ளார். இவர் எழுதி, தினபூமி, தினச்சுடர், கலைமகள் இவைகளில் தொடர் நாவலும், ஒரு சிறுகதைத் தொகுப்பும் சிறுகதைகளும் இடம் பெற்றுள்ளன. ஒரு மூறை திருச்சி எழுத்தாளர் சங்கம் அந்த மாதத்தின் சிறந்த சிறுகதையாக இவரது கதையினைத் தேர்ந்தெடுத்தது. இவரது 3 கதைகள் கன்னடத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளன. 270சிறுகதைகள் .12 நாவல்கள், 2 குறுநாவல்கள்  பலகட்டுரைகள்,பல கவிதைகள் .12 வானொலிநாடகங்கள்  3 தொலைக்காட்சிநாடகங்கள்  என தொடர்கின்றது

Continue Reading →

சிறுகதை: கஸ்தூரி

‘அநாமிகா’”ஏறிக்கொள்ளுங்கள்” என்றவனுக்கு நன்றி கூறியவாறே மூட்டை முடிச்சோடு முண்டியடிக்க முயன்றும் முயலாமலுமாய் உள்ளே ஏறி பதினான்காம் எண் இருக்கைப் பக்கம் போனபோது அங்கே ஏற்கெனவே ஒருவர் தொந்தியும் தொப்பையுமாகப் பொருந்தியமர்ந்திருந்தார்.

“ஸார், இது என்னுடைய இடம்.”

“மன்னிக்கவும், இது என்னுடையது.”

அவரவருடைய இடத்தைக் கண்டுபிடிப்பதுதான் உலகிலேயே அதிசிரமமான காரியமாக இருக்கும் என்று தோன்றியது. ’அவரவர் இடம்’ என்பதிலும் அவரவருக்கு விதிக்கப்பட்ட இடங்கள், வாய்த்த இடங்கள், அவரவர் விரும்பிய இடங்கள் என்று எத்தனை பிரிவுகள்…. விதிக்கப்பட்டதற்கும் வாய்த்ததற்கும் என்ன வேறுபாடு என்ற கேள்விக்கு ‘நிச்சயம் ஏதோ வேறுபாடு இருக்கிறது’ என்பதாக மனம் இடக்காகக் கூறியது. அப்படி வேறுபாடு இருக்கும் பட்சத்தில் விதிக்கப்பட்டதும் சரி, வாய்த்ததும் சரி, விரும்பிய – விரும்பாத என்பதாக வேறு சிலவாகவும் கிளை பிரியும்…..

 “என்ன ஸார், அங்ஙனேயே நிக்கிறீங்க? இந்த வண்டி தானே நீங்க?”

“ஆமாம், ஆனா இவர் என் இடத்தைத் தன்னுடையதுன்னு சொல்றார்.”

”அதெப்படி? என் இடத்தை நீங்கள் தான் உங்களுடையதென்று சொல்கிறீர்கள்.” உட்கார்ந்திருந்தவர் விறைப்பாகக் கூறினார்.

“அட, யார் இடம் யாருக்கு சாசுவதம் சார்…. அதுவும், ஒரு ஆறு மணி நேரத்துக்குப் போய் எதுக்கு இத்தனை எடக்குமுடக்குப் பேச்சு?” சலிப்பாகத் தத்துவத்தைச் சிதறவிட்டபடியே நடத்துனர் வந்துபார்த்து என் பயணச்சீட்டை ‘டபுள் செக்’ செய்வதற்காய் ஓட்டுநர் இருக்கைப்பக்கம் அமர்ந்திருந்தவரிடம் கொண்டு சென்றார்.

Continue Reading →

சிறுகதை: கஸ்தூரி

‘அநாமிகா’”ஏறிக்கொள்ளுங்கள்” என்றவனுக்கு நன்றி கூறியவாறே மூட்டை முடிச்சோடு முண்டியடிக்க முயன்றும் முயலாமலுமாய் உள்ளே ஏறி பதினான்காம் எண் இருக்கைப் பக்கம் போனபோது அங்கே ஏற்கெனவே ஒருவர் தொந்தியும் தொப்பையுமாகப் பொருந்தியமர்ந்திருந்தார்.

“ஸார், இது என்னுடைய இடம்.”

“மன்னிக்கவும், இது என்னுடையது.”

அவரவருடைய இடத்தைக் கண்டுபிடிப்பதுதான் உலகிலேயே அதிசிரமமான காரியமாக இருக்கும் என்று தோன்றியது. ’அவரவர் இடம்’ என்பதிலும் அவரவருக்கு விதிக்கப்பட்ட இடங்கள், வாய்த்த இடங்கள், அவரவர் விரும்பிய இடங்கள் என்று எத்தனை பிரிவுகள்…. விதிக்கப்பட்டதற்கும் வாய்த்ததற்கும் என்ன வேறுபாடு என்ற கேள்விக்கு ‘நிச்சயம் ஏதோ வேறுபாடு இருக்கிறது’ என்பதாக மனம் இடக்காகக் கூறியது. அப்படி வேறுபாடு இருக்கும் பட்சத்தில் விதிக்கப்பட்டதும் சரி, வாய்த்ததும் சரி, விரும்பிய – விரும்பாத என்பதாக வேறு சிலவாகவும் கிளை பிரியும்…..

 “என்ன ஸார், அங்ஙனேயே நிக்கிறீங்க? இந்த வண்டி தானே நீங்க?”

“ஆமாம், ஆனா இவர் என் இடத்தைத் தன்னுடையதுன்னு சொல்றார்.”

”அதெப்படி? என் இடத்தை நீங்கள் தான் உங்களுடையதென்று சொல்கிறீர்கள்.” உட்கார்ந்திருந்தவர் விறைப்பாகக் கூறினார்.

“அட, யார் இடம் யாருக்கு சாசுவதம் சார்…. அதுவும், ஒரு ஆறு மணி நேரத்துக்குப் போய் எதுக்கு இத்தனை எடக்குமுடக்குப் பேச்சு?” சலிப்பாகத் தத்துவத்தைச் சிதறவிட்டபடியே நடத்துனர் வந்துபார்த்து என் பயணச்சீட்டை ‘டபுள் செக்’ செய்வதற்காய் ஓட்டுநர் இருக்கைப்பக்கம் அமர்ந்திருந்தவரிடம் கொண்டு சென்றார்.

Continue Reading →

நினைவேற்றம் 5

 -தேவகாந்தன்-   மாரிகாலத்தில் ஒரு அதிகாலை நேரம் முதல்நாளிரவில் வீசிய காற்றுக்கு முற்றம் முழுக்க இறைந்துகிடந்த பூவரசின் பழுத்த மஞ்சள் இலைகளை அம்மா பெருக்கிக்கொண்டிருக்கää விறாந்தையில் தூக்கம் இன்னும் கலைந்துவிடாத சோம்பேறித்தனத்துடன் படுக்கைப் போர்;வையை இன்னும் மேலிலே சுற்றியபடி எந்த விடுப்புமற்ற அந்தச் செயற்பாட்டில் கண் பதித்து அமர்ந்திருந்தேன். பூவரசமிலைகளின் பல்வேறு தர மஞ்சள்கள் தவிர என் கவனத்தைக் கவர அங்கே வேறெந்த அம்சமும் இருந்திருக்கவில்லை.

“மழை வரப்போகுதுபோல கிடக்கு. எழும்பிப் போய் முகத்தைக் கழுவியிட்டு வா” என்று அம்மா எனக்குச் சொல்லுகிறாள். தூக்கம் கலைந்தாலும் சோம்பல் கலைந்துவிடாத நான்ää “போறனம்மா” என்று சொல்லிக்கொண்டே இன்னும் அந்த இடத்தைவிட்டு அகலாமல்.வெளியே செல்;ல புறப்பட்டு தெருவில் வந்த ஒருவர் அம்மாவுடன் படலையில் நின்று பேசுகிறார். போகும்போது சொல்கிறார்ää ‘கெதியாய் கூட்டி முடியுங்கோ. பருத்துறைக்கடல் இரையிறது கேக்குதெல்லே? நல்ல மழைதான் வரப்போகுது’ என்று. அம்மாவின் கூட்டுகைச் சத்தம் நின்றிருந்த அந்தப் பொழுதில் நான் கேட்கிறேன்ää காற்றின் அசைவு தவிர்ந்து வேறு சத்தமற்றிருந்த அவ்வெளியில் கடலின் உறுமலை.

பருத்தித்துறைக்கும் சாவகச்சேரிக்குமிடையில் பன்னிரண்டு மைல்கள். எங்கள் வீட்டிலிருந்து பத்து மைல்களாவது இருக்கும். அந்தளவு தூரத்திலிருந்து இரையும் கடலின் சத்தம் இவ்வளவு தூரத்துக்கு கடந்துவந்திருக்குமெனில்ää ஆயிரம் தரைவைக் கடல்களைவிடவுமே அது பிரமாண்டமாய் இருக்கவேண்டும்! சாவகச்சேரியில் தரவைக்கடல் பார்த்திருக்கிறேன். அதுபோல் கைதடியிலும் நாவற்குழியிலும் எழுந்திருந்த பாலங்களுக்குக் கீழால் விரிந்திருந்த தரைவையில் அலையசைந்த நீர்ப் பெரும்பரப்பையும் பார்த்திருக்கிறேன். அவை சப்தமெழுப்பியதே இல்லை. ஆனால் கண்டிராத கடல் பத்துக் கட்டை தூரத்திலிருந்து எழுப்புகிற சப்தம் இங்கே கேட்கிறது! கடலின் பிரமாண்டம் காண அன்றைக்கேதான் என் மனத்துள் ஆசை விழுந்திருக்கவேண்டும்.

Continue Reading →