ஆஸ்திரேலியா: கேசி தமிழ் மன்றம் – ஆடிப்பிறப்பு விழா 2015 – அழைப்பிதழ்

இடம்: Menzies Hall, Menzies Avenue, Dandenong North, Vic 3175 , Australiaகாலம்: Saturday, 18 July 2015  4.00PM to 8.30PM அன்பிற்குரியவர்களே, கேசி…

Continue Reading →

ஆய்வு: சிலப்பதிகாரத்தில் அறம் – மீள் பார்வை

முன்னுரை
 முனைவர் செ.ரவிசங்கர், உதவிப் பேராசிரியர், ஒப்பிலக்கியத்துறை, தமிழியற்புலம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை -.-‘அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்று ஆவதூஉம்’ என்னும் தத்துவம் சிலம்பில் உள்ள மூன்று உண்மைகளில் ஒன்று. அதாவது அரசியல் கற்பு ஊழ் கூற்று என்கிற மூன்று பொருள்களை மையமாகக் கொண்ட காப்பியம் சிலப்பதிகாரம். அவற்றுள் ஊழ் கற்பு ஆகிய சொற்கள் உள்ளே வந்துள்ளன. ஆனால் அரசியல் என்னும் சொல் பாயிரத்தில் மட்டும்தான் வந்துள்ளன. ஆனால் அரசு என்பதன் செயல்பாடுகள் குறித்து நூலில் பல இடங்களில் செயதி வந்துள்ளது. அதிலும் குறிப்பாக ‘கொலைக்களக் காதை வழக்குரை காதை காட்சிக் காதை கால்கோள் காதை நீர்படைக் காதை நடுகற் காதை முதலிய காதைகள் அரசனை மையமாகக் கொண்டுள்ளன. அந்த வகையில் இந்நூலில் அரசியல் தொடர்பு கொண்டுள்ளன என்பதை அறிய முடிகிறது. எனவே சிலப்பதிகாரத்தில் ‘அரசாடசி’ ‘அறம்’ என்னும் பொருண்மையில் இக்கட்டுரை அமைகிறது.

மன்னர்களும் அறமும்
 பொதுவாக அனைத்து அறநூல்களும் அரசன் செய்யவேண்டிய செயல்களை அறமாகக் கூறிச் செல்கின்றன. அந்தவகையில் சுக்கிரநீதி அரசன் நீதியோடு இருக்கவேண்டும் என்பதை கூறுகிறது.

‘அரசவைக்கு எப்பொழுதும் நன்மக்களைக் காத்தலும் கொடியவர்களை யொறுத்தலம் சிறந்த அறங்களாகும். இவ்விரண்டும் நீதியுணர்வின்றி உண்டாகா’. மேலும் நீதியுடைய அரசனை யாவரும் போற்றுவர்ளூ அல்லாதவனை யாரும் போற்றார். ‘எவன்மாட்டு நீதியும் பலமும் உள்ளனவோ அவன்பால் திருமகள் பல்லாற்றானும் வந்தெய்துவள். அரசன் தன் நாட்டிலுள்ளாரனைவரும் ஏவப்படாமலே நல்லன புரியும்படி நீதியைத் தன் நலங்குறித்து மேற்கொள்ளற்பாலன்’ என்று மன்னன் நீதியுள்ளவனாக இருக்க வேண்டும் என்கிறது. அது போலவே நீதி தவறிய மன்னன் எவ்வாறான நிலையை அடைவான் என்பதையும் சுக்கிரநீதி விளக்கியுள்ளது.

Continue Reading →

‘தெணியானின் பார்க்கப்படாத பக்கங்கள்’ இருட்டடிப்பு செய்யப்பட்ட பக்கங்கள் மீதான மார்க்சிய ஒளிவீச்சு

‘தெணியானின் பார்க்கப்படாத பக்கங்கள்’  இருட்டடிப்பு செய்யப்பட்ட பக்கங்கள் மீதான மார்க்சிய ஒளிவீச்சு  - முனைவர் ந. இரவீந்திரன் -வரலாறு என்பது கடந்தகாலத்தோடு சமகால மனிதர்கள் மேற்கொள்ளும் உரையாடல்தான் என்ற ஒரு கருத்து உண்டு. ஐம்பது வருடங்களின் முன்னர் எமது வரலாறு பார்க்கப்பட்ட கோணத்திலிருந்து, அதே விடயங்கள் இன்றும் அணுகப்படும் என்பதற்கில்லை. அன்றைய காலத்தில் வரலாற்றோடு பகிர்ந்துகொண்டு பெற்றிருக்கக்கூடியவற்றிலிருந்து வேறுபல தேவைகள் இன்று எம்மைத் தூண்டும் காரணமாகப் புதிய பல விடயங்களை வரலாற்றுப் பக்கங்களிலிருந்து பெறக்கூடியவர்களாக இருப்போம். ஆயினும் இன்றைய எந்தத் தேவையிலிருந்து அதனை எத்தகைய நலன் அடிப்படையிலான கண்ணோட்டத்தில் அணுகுகிறோம் என்ற நோக்குநிலை காரணமாக நாம் வந்தடைகிற முடிவுகள் வேறுபட இடமுள்ளது. பலரும் காணத்தவறுகின்ற அம்சங்கள் சிலரால் உன்னிப்பாகக் கண்டறியப்படவும், அவை அவர்களால் முதன்முதலாய்ப் பேசுபொருளாக்கப்படுவதும் இதன் காரணமாகவே.

ஆங்கில ஏகாதிபத்திய ஒடுக்குமுறையில் குடியேற்ற நாடுகளாய்ச் சிறுமைப்பட்டிருந்த காலத்தில் எமது கடந்தகால வரலாற்றைப் பார்த்த முறை ஒருவகை; அப்போதும் பாரதி பேசாப்பொருள் பலவற்றைப் பெருமுழக்கமாக்கி “பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே, வெள்ளைப் பறங்கியைத் துரையென்ற காலமும் போச்சே” எனப் பிரகடனப்படுத்தினார். இது பலதடவை கவனிக்கப்பட்டு பழங்கதையாகிவிட்ட போதும், இதனுள் ஊடறுத்துக்காண முயற்சிக்காத பார்க்கப்படாத பக்கங்கள் பல இருந்தபடியே உள்ளன. இத்தகைய “பார்க்கப்படாத பக்கங்கள்” தெணியானின் கட்டுரைகளாக ஜீவநதி வெளியீடாகி அண்மையில் எமது கரங்களை எட்டியுள்ளது. கனடாவில் வாழும் க. நவம் தொகுத்து வெளியிட்டுள்ள இந்நூல் 190 பக்கங்களில் வெளிப்பட்டுள்ளது.

Continue Reading →