நூல் மதிப்புரை: “தீ”

By A.N.Kandasamy – அண்மையில் அறிஞர் அ.ந.கந்தசாமி அவர்கள் எழுத்தாளர் எஸ்.பொ.வின் ‘தீ’ நாவல் பற்றி எழுதிய நூல் மதிப்புரையொன்றின் போட்டோப்பிரதி கிடைத்தது. 27/6.1962இல் வெளிவந்த இந்நூல் மதிப்புரை ‘மரகதம்’ சஞ்சிகையில் வெளிவந்ததாகக் கருதுகின்றோம். ஒரு பதிவுக்காக அம்மதிப்புரையினை பிரசுரிக்கின்றோம். மேலும் ‘அறிஞர் அ.ந.கந்தசாமி ஐஸன்ஸ்டைனின் ‘பாட்டில்ஷிப் பாட்டெம்கின்’ என்ற 1905இல் ருஷ்யாவில் நடைபெற்ற புரட்சியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட மெளனத்திரைப்படம் பற்றி எழுதிய விமர்சனமொன்று ‘பாரதி’ சஞ்சிகையில் வெளியாகியுள்ளது. அந்த விமர்சனம் விரைவில் பிரசுரமாகும். – பதிவுகள் –

ank_on_espo5.jpg - 20.50 Kbஒரு நந்தவனத்தில் முன்னேற்பாடு செய்துகொண்டபடி சரசு என்ற வேசியின் வரவை எதிர்பார்த்திருக்கிறான் ஒரு தலை நரைத்துவிட்ட பாடசாலை ஆசிரியன். காத்துக்கிடக்கும் இந்த நேரத்தில் அவனது மனம் பழைய ஞாபகங்கள் என்ற இரையை மீட்ட ஆரம்பிக்கிறது. படிப்படியாகக்காட்சிகள் விரிகின்றன.  பத்துப்பன்னிரண்டு வயதில் கமலா என்ற சிறுமியோடு மாப்பிள்ளை-பெண்பிள்ளை விளையாடியதும், அதனால் ஏற்பட்ட விளைவுகளும் முதலில் தோன்றுகின்றன. அடுத்து பள்ளிக்கூட விடுதி வாசமும், ஜோசப் சுவாமியார் சொல்லித்தரும் அதிவிசித்திர பாடமும் ஞாபகம் வருகின்றன.  பின்னர் பாக்கியம், சாந்தி, லில்லி ஆகியோருடன் கொண்ட காதற் தொடர்புகள் . இதில் லில்லியிடம்தான் உண்மையில் மனம் பறிபோகின்றது.  ஆனால் லில்லியோ அவளது தாத்தாவின் இஷ்டப்படி ஒரு டாக்டரை மணந்து விடுகிறாள். பின்னால் நிர்ப்பந்தச் சூழ்நிலைகளால் புனிதத்தை மணந்ததும், அவளோடு எவ்வித தேகத் தொடர்புமில்லாமலே காலம் கடந்ததும் ஞாபகம் வருகின்றது. ஆனால் மலடன் என்ற இழிவுரை அவனுடைய ஆண்மைக்குச் சவால் விட, மனக்கோளாறால் தோன்றியிருந்த நபுஞ்சக மறைந்தமையும், புனிதம் ஐந்தாறு தடவை கருச்சிதைவுற்று மாண்டதும் மனத்திரையில் நிழலாடுகிறது. இந்த வேளையில் இலக்கிய சேவை அவனை அழைக்கிறது. லில்லியின் காதலுக்கு உலை வைத்த தாத்தா ஒரு தமிழ்ப்பண்டிதர். அவர் மீது கொண்ட வெறுப்பு அவர் காத்த இலக்கிய மரபுகளைச்சிதைக்கும்படி அவனை உந்துகிறது.  சிதைக்கிறான். பின்னர் லஞ்சம் கொடுத்து ஒரு பட்டிக்காட்டு ஆசிரியனாகியமையும், திலகா என்ற சின்னஞ்சிறு பெண்ணோடு பழகி அவளைத்தன் ஆசைக்குப்பலியிட்டமையும் நினைவில் வருகின்றன. இந்நிலையில்தான் சரசுவின் சந்திப்பேற்படுகிறது. இந்த நினைவுப்பாதையின் முடிவில் சரசு எதிர்ப்படுகிறாள். ஆனால் சரசுவின் நாணமற்ற போக்கு பெண்களையே வெறுக்கச்செய்கிறது.  தீ அவிந்து விடுகிறது.  வீடு நோக்கி மீளும் கதாநாயகன் காதில் திலகா பூப்படைந்து விட்டாள் என்ற செய்தி கேட்கிறது.

Continue Reading →