கடைசிப் பகுதி – தெருக்கூத்து

- வெங்கட் சாமிநாதன் -இத்தகைய உயிரோட்டமுள்ள, தனித்தன்மையுடைய  ஒரு நாடக மரபு  கவனிக்கப்படாமல் விட்டுவிடப்பட்டுட்ள்ளது ஒரு துரதிருஷ்டவசமான விஷயம். உண்மையில் அனைத்து நாட்டார் கலைகளுக்கும் இதே கதிதான், அவற்றில் பலவும் மறக்கப்படும் நிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன. தெருக்கூத்து போன்ற சில ஆங்காங்கே சில இடங்களில் இன்னும் பிழைத்திருக்கின்றன. அவை கலை வெளிப்பாடு களாக, நாடகம் அல்லது நடன வடிவம் என்று கருதப்படுவதினால் அல்ல, சடங்குகளாக அவை பிழைத்திருக்கின்றன. இந்த வடிவங்கள் அவர்களுடைய இனத்தில்/ சமூகத்தில் அவ்வூர் தெய்வங்களுக்கான சடங்குகளுடன் பிணைக்கப்பட்டிருப்பதால் அவற்றை விழாமல் தாங்கி, அவற்றை ரசிப்பவர்கள் கிராமப்புறத்து மக்கள் திரள் தான். இவ்வாறு கோவில் சடங்குகளுடன் பிணைக்கப்படாத நாட்டார்கலைகள் கீழ்நிலைப்பட்ட கேளிக்கைகளாகக் கருதப்படுவதால் அழிந்துபோய்க் கொண்டிருக்கின்றன. தமிழகத்தில் பண்பாட்டு மேட்டுக்குடிகள் (cultural elite?) செவ்வியல் கலைகளுடன் மட்டுமே சம்பந்தமுடையவர்களாக இருக்கிறார்கள், நகரப்புறத்து மக்களின் ஆர்வமோ நவீனமான கலைகளுக்கு அப்பால் போவதில்லை. தெருக்கூத்திலிருந்து அதனிடத்தில் மேடை நாடகம் (Proscenium theater) ஒரு கண்ணைமயக்கும் நவீன நாடக வடிவமாகப் பிறந்தபின் இந்தப் போக்கு வளர்ந்து வருகிறது. நாட்டார்கலைகள் அனைத்துமே வெளிப்பாட்டில் தன்னிச்சையான வெளிப்பாடு பெறும் இயல்புடையவை, அவை எழுத்து வடிவத்தைச் சார்ந்திருப்பதில்லை, அப்படி எழுதி வைக்கப்பட்டுளவைக்கும் அவற்றை நிலைத்திருக்கச் செய்யும் வகையிலான இலக்கிய மதிப்பு கிடையாது. குறவஞ்சியின் தோற்றம் நாட்டார் கலையில்தான் இருந்தது ஆனால் அதற்கு ஒரு இலக்கிய மதிப்புள்ள எழுத்து வடிவம் கிடைத்ததும், அது செவ்வியல் கலையாக உயர்த்தப்பட்டது. மேலே பார்த்தது போல தெருக்கூத்தில் இலக்கியமான வில்லிப்புத்தூராரின் பாரதம் பிரசங்கியின் கதாகாலட்சேபத்திற்கு மட்டுமே உபயோகப் படுத்தப்படுகிறது, கூத்தில் உபயோகப்படுத்தப்படும் உரைநடை வசனங்களுக்கு இலக்கிய மதிப்பு எதுவும் இல்லை. தெருக்கூத்தின் கலையம்சம் அதன் நாடக வெளிப்பாட்டிலிருந்து வருவது (உடலசைவுகள் மற்றும் அதன் காட்சி சம்பந்தப்பட்ட விஷயங்கள்) அதில் உபயோகிக்கப்படும்  பேச்சினால் அல்ல, அது எழுதப்பட்டதா யிருந்தாலும் சரி அல்லது தன்னிச்சையாய் கற்பித்துப் பேசப்படுவ தாயினும் சரி. இது தோற்றத்திலிருந்தே நாட்டார்கலைகள் அனைத்துக்கும் பொதுவானது.

Continue Reading →

பாரதி இதழ்: புரட்சிப்படம்

– திரைப்பட மேதை ஐஸன்ஸ்டைன் (Sergei Eisenstein) அவர்களின் ஆரம்ப கால மெளனத்திரைப்படமான “பாட்டில் ஷிப் பாட்டைம்கின்” (Battleship Potemkin) பற்றி அறிஞர் அ.ந.கந்தசாமி ‘பாரதி’ சஞ்சிகையில் எழுதிய விமர்சனக்குறிப்பொன்றின் ‘போட்டோப்பிரதி’யொன்று அண்மையில் எமக்குக்கிடைத்தது. ’20 வருடங்களுக்கு முன் தயாரித்த இப்படம்’ என்று அ.ந.க இவ்விமர்சனத்தில் குறிப்பிடுவதிலிருந்து இக்கட்டுரை 1945இல் எழுதப்பட்டிருப்பது தெரிகிறது.ஒரு பதிவுக்காக அதனைப் ‘பதிவுகள்’ இணைய இதழில் பதிவு செய்கின்றோம். –

battleshippotemkin5.jpg - 74.81 KbBy A.N.Kandasamy 1905இல் உலகம் முழுவதும் அதிரும்படியான ஒரு சேதியைப் பத்திரிகைகள்  தாங்கி வந்தன. கொடுங்கோல் ஜார் மன்னனைக் கவிழ்த்து ரஷ்ஷிய பொதுஜனங்களின் ஆட்சியை நிறுவ அங்குள்ள மக்கள் நடத்திய முதலாவது மஹத்தான முயற்சி அது. இப்புரட்சியை பின்னால் 1917ல் நடந்த சோஷலிஸ மகா புரட்சிக்குப் பயிற்சிக்கூடமாக விளங்கியது என்று கூறுவார்கள் சரித்திரகாரர்கள். இந்த 1905ம் ஆண்டுப்புரட்சியின் நெஞ்சு சிலிர்க்கும் ஒரு கட்டத்தைக்கொண்டு தயாரிக்கப்பட்டது மெளனப்படமொன்று.  1925ல் தயாரிக்கப்பட்ட இப்படத்திற்கு பின்னால் உயர்தரமான  பின்னணிச் சங்கீதத்தைச்சேர்த்தார்கள். ஐஸன்ஸ்டைன் (Eisenstein) என்ற உயர்தர சினிமாக் கலைமன்னன் இன்று உலக சினிமா அரங்கில்  வகிக்கும் ஸ்தானத்திற்கு அடிகோலியது இதுதான். அமெரிக்கர், ஆங்கிலேயர் எல்லோரும் இன்று ஐஸன்ஸ்டைன்  என்ற பட முத்திரையைக் கண்டதும் சினிமாக் கோபுரத்தினுச்சி மணி இது என்று  முடிவு கட்டுகிறார்கள். அத்தகைய கற்பனா நிறைவு கொண்டது அவன் ‘டைரக்‌ஷன்’.

Continue Reading →