லண்டனில் ‘கட்டை விரல்’ ‘சிதறல்’ நூல்களின் வெளியீடு

லண்டனில் ‘கட்டை விரல்’  ‘சிதறல்’ நூல்களின் வெளியீடு

- நவஜோதி ஜோகரட்னம், லண்டன் -‘தேடல்களின் வெளிப்பாடாகவும்,சொந்த அனுபவங்களின் வெளிப்பாடாகவும்  ‘கட்டைவிரல்’ கட்டுரைகளைப் படிக்க முடிந்தது . இலங்கை வீரகேசரியில் வெளியான பல கட்டுரைகள் கட்டை விரலுக்கு அழகு சேர்ப்பதாகவும், ‘தடுத்திடுவார்கள் இன அழிப்பை’,‘போர்க்காலக் காதல்’ போன்ற கவிதைகள் கடந்த கால,சமகால நிகழ்வுகளையும் கோடிட்டுக் காட்டும் சிறந்த கவிதைகள்’ என முன்னாள் லண்டன் தெற்கு லண்டன் சதாக் பகுதியின் நகரசபை முதல்வரும்,தற்போதைய நகரசபை உறுப்பினருமான செல்வி எலிசா மன் அவர்கள் லண்டன் ஈஸ்ற்ஹாம் ரினிற்ரி மண்டபத்தில் மிக அண்மையில் பாரீசிலிருந்து வருகைதந்த திவ்வியநாதனின் நூல்; வெளியீட்டின்போது, தனது தலைமையுரையில்  குறிப்பிட்டிருந்தார். அவர் மேலும் பேசுகையில்: ‘ கட்டைவிரல்’ தொகுப்பில் கவிதை, கட்டுரை,சமையற்குறிப்புகள் என விரிந்து கிடப்பது பாராட்டுக்குரியது. திவ்வியநாதனின் இத்தகைய உழைப்பு  தமிழுலகுக்குச் செய்ய வேண்டிய அளப்பரிய செயற்பாடு. மேலும் இத்தகைய ஈடுபாடு; தொடரவேண்டுமென வாழ்த்துக் கூறினார்;.’

‘ நூலசிரியர் திவ்வியநாதன் பல புத்தங்களின்; தேடல்களினால் பெற்றுக் கொண்ட அறிவையும்,அவரது சொந்த அனுபவங்களையும் ஒன்று சோர்த்து இக் ‘கட்டைவிரலை’ப் படைத்துள்ளார். இக் ‘கட்டைவிரல்’ ஆங்கில மொழியில் வெளிவருமேயானால் மேலும் பயனுள்ளதாக அமையும்’ என இலக்கிய ஆர்வலரும்,இரசாயனப் பொறியியலாளருமான திரு ஜெயதீசன் தனது உரையில் தெரிவித்தார்.’

Continue Reading →

படிக்கட்டு!

கவிதை வாசிப்போம் வாருங்கள்!அன்பு படிக்கட்டு ஆசைப் படிக்கட்டு
இன்பம் பெருகும் படிக்கட்டு – துன்பம்
விலகும் படிக்கட்டு. வெண்ணிலா வந்து
உலவும் படிக்கட்டு நீ.

எண்ணப் படிக்கட்டு எண்ணும் படிக்கட்டு
வண்ணப் படிக்கட்ட மண்விட்டு – விண்ணில்
அடிக்கல் இடுதற்கு அஸ்திவாரம் செய்து
படிக்கட்டுக் கட்டு பயின்று.

கட்டி முடிச்சிடக் கட்டி லகப்பட்டுக்
கட்டில் சுகப்பட்டு கட்டுண்ட – கட்டைநீ
விட்டு விடைபெற்று விண்ணில் கொடிக்கட்ட
கட்டும் படிக்கட் டுயர்த்து.

Continue Reading →

சக்தி சக்திதாசன் கவிதைகள்!

1. அலாரம் அலற விழித்தன விழிகள்

கவிதை வாசிப்போம் வாருங்கள்!இரவெனும் நதியிலேகி வண்ணக்
கனவெனும் படகிலேறி வானில்
மிதந்து சென்ற உணர்வினையேந்தி
வியந்து நின்ற வகையிங்கு பகர

சின்னச் சின்னச் நட்சத்திரங்கள்
சொன்ன பல சுவையான கதைகள்
வண்ண முழு நிலவது தானும்
மெல்லத் தேயும் விந்தை விளக்க

Continue Reading →

கோவிந்த் நிலானி & B. லெனின் – உரையாடல்.!

தமிழ் ஸ்டுடியோவின் லெனின் விருது விழாவிற்காக கோவிந்த் நிலானி சென்னை வந்திருந்தபோது, அவருக்கும் படத்தொகுப்பாளர் லெனினுக்கும் இடையே இரண்டுமணிநேரம் சினிமா பற்றிய விவாதம் நடைபெற்றது. இருபெரும் ஆளுமைகள்,…

Continue Reading →

பாரதியாரின் “புதிய ஆத்திச்சூடி” – வாழ்வியல் சிந்தனைகள்

முன்னுரை

 முனைவர் செ.ரவிசங்கர், உதவிப் பேராசிரியர், ஒப்பிலக்கியத்துறை, தமிழியற்புலம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை -.-‘இந்திய தேசியக் கவிஞர்களுக்கு இடையில் திலகம் போன்றவர் பாரதியார்’ என்று வினோபா பாவேவால் போற்றப் பெற்றவர் பாரதியார். தமிழ் இலக்கிய உலகில் சக்திதாசன் காளிதாசன் ஷெல்லிதாசன் சாவித்திரி என்ற நிருபநேயர் ஒரு உத்தம தேசாபிமானி நித்தியதீரர் போன்ற புனைப்பெயர்களைக் கொண்டவர் பாரதியார் மட்டும் என்றால் மிகையல்ல தான் வாழ்ந்த காலத்தில் உலக உயிர்கள் அனைத்தையும் ஒன்றாகப் பார்த்தவன் பாரதி எனவே தான்

‘எல்லோரும் ஓர்குலம் எல்லோரும் ஓரினம்
எல்லோரும் இந்திய மக்கள்
எல்லோரும் ஓர் நிறை எல்லோரும் ஓர்விலை
எல்லோரும் இந்நாட்டு மன்னர் ஆம்
எல்லோரும் இந்நாட்டு மன்னர்’

என்று தனது கடைசிப் பாடலாக இவற்றை எழுதியுள்ளான் ஆம் இது பாரதியின் இறுதிப்பாடல் ‘இப்போது 1921 ஆம் ஆண்டு பாரதி தனது இறுதிக் காலத்தில் ஒரு கவிதை எழுதுகிறான் அது ஒரு வாழ்த்துக் கவிதை வாழ்த்து வழக்கம் போல நாட்டிற்காக? அல்லது பாரத நாட்டு மக்களுக்கா? என்று கேட்டால் வாழ்த்து பாரத சமுதாயத்திற்கு எழுதப்பட்டுள்ளது. இந்த பாரத சமுதாய வாழ்த்தே பாரதியின் கடைசிப்பபடல் என பாரதியின் நண்பர் ஸ்ரீ சக்கரை செட்டியர் கூறுகிறார்.’ என்று முத்துக்கிருஷ்ணன் பதிவு செய்கிறார். இவ்வாறாக எல்லா உயிர்களையும் ஒன்றாகப் பார்த்த பாரதியார் தமது ஆத்திச்சூடியில் மக்கள் வாழ்ககைக்குத் தேவையான பல்வேறான சிந்தனைகளைக் கூறியுள்ளார். இக்கட்டுரை புதிய ஆத்திச்சூடியின் பன்முகத் தன்மைகளை ஆராய்வதாக அமைகிறது.

Continue Reading →