வாசிப்பும், யோசிப்பும் 122 : ‘பதிவுகள்’ இணைய இதழில் வெளியான நூல் மதிப்புரைகள் சில/……

வாசிப்பும், யோசிப்பும் - வ.ந.கிரிதரன்‘பதிவுகள்’ இணைய இதழ் ஆரம்ப காலகட்டத்தில் நூல் மதிப்பரைகளை வெளியிட்டு வந்தது. நூல் மதிஉப்புரைக்காக தமது படைப்புகளின் இரு பிரதிகளை அனுப்பி வைககவும் என்ற எமது வேண்டுகோளினையேற்று, எழுத்தாளர்கள் தமது படைப்புகளைப் ‘பதிவுகள்’ இணைய இதழுக்கு அனுப்பி வைத்தார்கள். நூல் மதிப்புரை பகுதிக்காக அவ்வப்போது பல்வேறு புனைபெயர்களில் மதிப்புரைகள் எழுதுவதுண்டு. அவ்விதம் அவதானி, திருமூலம், மார்க்சியன், ஊர்க்குருவி, வானதி  போன்ற புனைபெயர்களில் எழுதிய நூல் மதிப்புரைககளில் சில ‘வாசித்ததும், யோசித்ததும் பகுதிக்காக மீள்பிரசுரமாகின்றன ஒரு பதிவுக்காக.

பின்வரும் நூல்களுக்கான மதிப்புரைகளை இங்கு நீங்கள் வாசிக்கலாம்: கே.எஸ்.சிவகுமாரனின் ‘அசையும் படிமங்கள் , ஆழியாளின் ‘உரத்துப் பேச…, ‘ நடேசனின் ‘வாழும் சுவடுகள்’, பாரிஸிலிருந்து வெளிவரும் உயிர் நிழல்!,  அசை அரையாண்டிதழ், ஊடறு: பெண்படைப்பாளிகளின் தொகுப்பு, திலகபாமாவின் கவிதைகள்!, பா.அ. ஜயகரனின் ‘எல்லாப் பக்கமும் வாசல்’! , ஆசி. கந்தராஜாவின் ‘பாவனை பேசலன்றி..’, செ.க.வின் ‘சூரியன் கிழக்கில் உதிப்பதில்லை’, நடேசனின் வண்ணத்திக்குளம்: சில குறிப்புகள்! & காஞ்சனா தாமோதரனின் ‘இக்கரையில்..’

மதிப்புரைகளுக்காக நூல்கள் அதிக அளவில் வரத்தொடங்கியதால் அப்பகுதியினை நிறுத்தி வைத்தோம். அதற்குப்பதிலாகத் தற்பொழுது பதிவுகள் இணைய இதழுக்கு நூல்கள் பற்றி அனுப்பப்படும் மதிப்புரைகளை ‘நூல் அறிமுகம்’ என்னும் பகுதியில் வெளியிட்டு வருகின்றோம். ஏற்கனவே ‘பதிவுகளி’ல் வெளியான மதிப்புரைகள் ‘பதிவுகள்’ இணைய இதழில் ஒரு பதிவுக்காக அவ்வப்போது மீள்பிரசுரமாகும்.


1. . கே.எஸ்.சிவகுமாரனின் ‘அசையும் படிமங்கள்’

வெளியீடு: மீரா பதிப்பகம், 191/23 ஹைலெவல் வீதி, கொழும்பு -06, இலங்கை. தொலைபேசி: 826336. விலை: 150 ரூபா
ஆசிரியரின் மின்னஞ்சல்:kssivan.1@juno.com. – பதிவுகள், ஜூன் 2003 இதழ் 42 –

தமிழில் திரைப்படங்கள் பற்றி அண்மைக் காலமாகத் தான் மிகவும் விரிவாக யமுனா ராஜேந்திரன் போன்றவர்கள் எழுதி வருகின்றார்களெனெ நினைத்தேன். ஆனால் அண்மையில் கே.எஸ்.சிவகுமாரனின் ‘அசையும் படிமங்கள்’ நூலினை வாசித்த பொழுதுதான் புரிகின்றது சிவகுமாரன் அறுபதுகளிலிருந்தே திரைப்படக் கலை பற்றி அவ்வப்போது தமிழில் எழுதி வந்துள்ள விடயம். இதுவரை காலமும் இலக்கியப் படைப்புகள் பற்றியே இவர் அவ்வப்போது தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதி வருவதாகக் கருதியிருந்த எனக்கு ‘அசையும் படிமங்கள்’ வியப்பினையே தந்தது.

Continue Reading →