உயிரினப் பிறப்பும் இறப்பும்!

நுணாவிலூர் கா. விசயரத்தினம் (இலண்டன்)

சூரிய குடும்பத்திலுள்ள ஒன்பது கோள்களில், பூமிக் கோளில் மாத்திரம்தான் உயிரினங்கள் பிறக்கின்றன் வாழ்கின்றன் இறக்கின்றன. மற்றைய எட்டுக் கோள்களில் உயிரினங்கள் வாழமுடியாது. பூமிக்கு இஃது ஒரு தனிச் சிறப்பாகும். இதனால் பூமியானது ஒரு பூவுலகாய் மிளிர்கின்றது. பூமியில் உயிரினங்கள் இல்லையெனில் அஃது ஒரு வனாந்தரமே. உயிருள்ள ஒன்றுதான் பிறக்கவும், இறக்கவும் முடியும். உயிரில்லையெனின் பிறப்பும், இறப்பும் இல்லை. மனிதன் மட்டும்தான் பிறக்கின்றான், இறக்கின்றான் என்றில்லை. ஓரறிவுள்ள புல், பூண்டு, செடி, கொடி, மரம் ஆகியவற்றிலிருந்து ஆறறிவுள்ள மனிதன்வரை பிறப்பதும;, இறப்பதும் உலக நியதியாகும்.

பிறப்பும் இறப்பும் இல்லாதவன் இறைவன் என்பர். அவன் அருவானவன்; உருவற்றவன். மனிதன்தான் அவனுக்கு உருவமைத்தவன். தன் சிந்தைக்கெட்டியவரை தன்னைப்போன்ற ஒரு மனித உருவமைத்துக் கடவுளுக்குக் கொடுத்தவன் மனிதன்தான். இறைவனுக்குப் பிறப்பு உண்டென்றால் அவனும் நம்மைப்போல் இறப்பவனாகி விடுவான் அல்லவா? எனவேதான் இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் சிவபெருமான் பெயர் சொல்லி அழைக்காமல் ‘பிறவா யாக்கைப் பெரியோன்’ என்று கூறியுள்ளார். இன்னும் ‘பெம்மான் முருகன் பிறவான் இறவான்’ என்பது அருணகிரியார் வாக்கு. பிறப்பும் இறப்பும் இல்லாதவனிடம் சென்று சேர்ந்தால் நமக்கும் பிறப்பும் இறப்பும் அறும் என்று கூறுகின்றார் பட்டினத்தார்.

‘பிறப்பு இறப்பு என்னும் இரண்டின்
கடற்படாவகை காத்தல் நின் கடனே.’

பிறப்பு, இறப்புப் பற்றித் திருமூலர் கூறும் திருமந்திரங்களின் பாங்கினையும் காண்போம். ‘முடிவும் பிறப்பையும் முன்னே படைத்தவன்’ (20) என்றும், ‘பிறவா இறவாப் பெருமான்’ (25) என்றும், ‘பிறப்பிலி நாதனைப் பேர்நந்தி தன்னை’ (86) என்றும், ‘முட்டை பிறந்தது முந்நூறு நாளினில்… பட்டது பார்மணம் பன்னிரண்டு ஆண்டினில் கெட்டது எழுபதில் கேடு அறியீரே!’  (163) என்றும், ‘பகலும் இரவும் போலப் பிறப்பும் இறப்பும்’ (164) என்றும், ‘பிறப்பின் நோக்கம் பெருமானை வணங்குதல்’ (190) என்றும், ‘பிறப்பது சூழ்ந்த பெருந்தகை நந்தி’ (789) என்றும், ‘பிறப்பை அறுக்கும் பெருந்தவம் நல்கும்’ (1524) என்றும், ‘இறப்பும் பிறப்பும் இருமையும் நீங்கி’ (1614) என்றும், ‘பிறப்பறியார் பல பிச்சைசெய் மாந்தர் … பிறப்பினை நீங்கும் பெருமை பெற்றாரே’ (1626) என்றும், ‘பிறவா நெறிதந்த பேரரு ளாளன்’ (1803) என்றும் கூறிய திருமூலர் முதல்வன் முக்கண்ணன் திருவடிக்கு எம்மையும் ஆற்றுப்படுத்திச் செல்கின்றார்.

Continue Reading →

இலக்கியத்திற்கான நோபல் பரிசு (2001) பெற்ற நாவல் இலக்கியப் படைப்பாளி சிவா நேப்போல்

இலக்கியத்திற்கான நோபல் பரிசு (2001)  பெற்ற  நாவல் இலக்கியப் படைப்பாளி சிவா நேப்போல்“நான் கருப்பொருட்களைக் தேர்ந்துகொள்ள எனது உள்உணர்வுகளிலேயே நம்பிக்கை வைத்துள்ளதோடு என் உள்ளத்து உணர்வுகளுடனேயே எழுதுகின்றேன்” , “நானே எனது புத்தகங்களின் ஒட்டு மொத்தம்” எனவும் குறிப்பிடும் இவ்வருடத்திற்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற இலக்கிய கர்த்தா திரு. வி. எஸ். நேப்போல் அவர்கள், (Trinidad)  ரினினாட் நாட்டிற்குப் பெருமை சேர்க்கும் வகையில் தனது இலக்கியப்படைப்பால் உயர்ந்து நிற்கின்றார். உலகில் காணப்படும் ஒரே ஒரு இந்துமத அரசாகக் காணப்படும்; நேபாள தேசத்தின் பரம்பரையில் உதித்தவர்தான் இன்று உலகளாவிய புகழ் படைத்த நாவல் படைப்பிலக்கிய மேதையாகக் கருதப்பட்டு உயர்விருதினைப் பெற்றுக்கொண்ட சிவா நேப்போல் அவர்கள். தனது பாட்டியார் இந்தியாவிலிருந்து வரும்போது பல இந்துமத நூல்களையும், சாத்திரங்களையும் கொண்டு வந்திருந்தார். அவர்கள் சமய அனுட்டானங்களைத் தொடர்ந்தார்கள் நாமும் பின்பற்றினோம் ஆனால் எமக்கு மொழியை யாரும் கற்றுத்தரவில்லை. இந்தி எழுத்துக்களை இளமையில் யாரோ சொல்லித்தந்ததாக ஞாபகம் ஆனால் தொடர்ந்து படிக்கும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. அத்தோடு எமது மொழியின் இடத்தில் ஆங்கிலம் திணிக்கப்பட்டதால் நாம் எமது மொழியை மறக்கவேண்டிய நிலை ஏற்பட்டது என்று தமது ஆதங்கத்தை நோபல் பரிசு பெறுவதற்காக ஸ்ரக்கோம் சென்றவேளை குறிப்பிட்டிருந்தார். எனது புத்தகங்களின் கூட்டு மொத்தம் நானே என்று கூறும் அவர் தனது தாயாரின் ஊர் நேபாளத்தில் உள்ள ஒரு கிராமம் என்கின்றார்.

Continue Reading →

கனடாவில் இலக்கியக்கலந்துரையாடல்

அவுஸ்திரேலியாவில்   வதியும்  மிருகவைத்தியரும்  எழுத்தாளருமான   டொக்டர்  நடேசன்  கனடாவுக்கு வருகைதந்துள்ளார்.   சிறுகதை,  நாவல், பத்தி  எழுத்துக்கள்  முதலான துறைகளில்  சில  நூல்களையும்  வரவாக்கியிருக்கும் நடேசனுடனான  சந்திப்பு  கலந்துரையாடல் …

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 112: பேராசிரியர் கா.சிவத்தம்பியும், கலாநிதி க.கைலாசபதியும், பிலோ இருதயநாத்: கானுயிர் பயணங்களின் முன்னோடியா? அல்லது மானுடவியல் ஆய்வுகளின் முன்னோடியா? & முகநூலில் எல்லை மீறும் விவாதங்கள்… (மேலும் சில முகநூல் குறிப்புகள்)

பேராசிரியர் கா.சிவத்தம்பியும், கலாநிதி க.கைலாசபதியும்

வாசிப்பும், யோசிப்பும் - வ.ந.கிரிதரன்இருவரையும் நான் ஒருமுறை நேரடியாகச்சந்தித்துள்ளேன். 80 /81 காலகட்டத்தில் மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தமிழ்ச் சங்க வெளியீடான ‘நுட்பம்’ சஞ்சிகைக்காக இருவரிடமும் ஆக்கங்கள் நாடிச்சந்தித்திருந்தேன். அப்பொழுது யாழ் பல்கலைக்கழக விஞ்ஞானபீட மாணவரான நண்பர் ஆனந்தகுமார் என்னை அவர்களது அலுவலகங்களுக்கு அழைத்துச்சென்றார்.

கலாநிதி எங்களிருவரையும் அன்புடன் வரவேற்று வந்த காரணம் பற்றி வினவினார். நான் நுட்பம் இதழ் பற்றிக்குறிப்பிட்டு, அதற்கு அவரது கட்டுரையொன்றை நாடி வந்துள்ள விபரத்தை எடுத்துரைத்தேன். அவர் அதற்கு அவர் மகிழ்ச்சியுடன் தர ஒத்துக்கொண்டதுடன் , குறிப்பிட்ட திகதியொன்றைக்குறிப்பிட்டு அன்று வந்து கட்டுரையினைப்பெற்றுக்கொள்ளவுமென்றும் கூறினார். அதன் பிறகு பேராசிரியர் கா.சிவத்தம்பியின் அலுவலகத்துக்குச் சென்றோம். அவரும் எங்களிருவரையும் வரவேற்று, எங்கள் வருகைக்கான காரணத்தை அறிந்ததும் நுட்பம் சஞ்சிகைக்குக் குறிப்பிட்ட திகதியில் கட்டுரை தர ஒப்புக்கொண்டார்.

குறிப்பிட்ட திகதியில் பேராசிரியர் க.கைலாசபதி ‘அபிவிருத்திக் கோட்பாடு – ஒரு கண்ணோட்டம்’ என்னும் தலைப்பில் நீண்டதொரு ஆய்வுக்கட்டுரையினை ‘நுட்பம்’ சஞ்சிகைக்காகத்தந்திருந்தார். ஆனால் பேராசிரியர் கா.சிவத்தம்பியால் குறிப்பிட்ட திகதியை ஞாபகம் வைத்துக் கட்டுரையினைத்தர முடியவில்லை. அத்துடன் பேராசிரியர் கைலாசபதி ‘நுட்பம்’ இதழ் வெளிவந்து அவரதுக்குக் கிடைத்ததும் மறக்காமல் சிறு விமர்சனக்குறிப்பொன்றினையும் அனுப்பியிருந்தார்.

எவ்வளவோ அலுவல்களுக்கு மத்தியிலும், இதழுக்குக் கேட்ட கட்டுரை பற்றி மறக்காமல், குறித்த திகதியில் கட்டுரையினைத் தயாராக வைத்திருந்த பேராசிரியர் கைலாசபதியின் அந்த ‘காலம் தவறாத பண்பு’ (punctuality) அவரைப்பற்றி எண்ணும் சமயங்களிலெல்லாம் எனக்கு முதலில் ஞாபகத்துக்கு வருவதுண்டு.

Continue Reading →

ரொறன்ரோ தமிழ்ச்சங்கம் மாதாந்த இலக்கிய கலந்துரையாடல்

“மொழிபெயர்ப்பியல் ஆய்வரங்கு” ஒருங்கிணைப்பு: சின்னையா சிவநேசன் நிகழ்ச்சி நிரல் “அன்றாட தமிழாக்கத்தின் இன்றைய நிலவரம்”  – உஷா மதிவாணன்“தமிழாக்கத்தில் வாசகர்களின் எதிர்பார்ப்புகள்” – சுல்பிகா இஸ்மயில்“புனைவிலக்கிய தமிழாக்கத்தில்…

Continue Reading →