வாசிப்பும், யோசிப்பும் 113: எழுத்தாளர் கெளதம நீலாம்பரனுக்கு எமது அஞ்சலி! Terry Fox: கனடாவின் நாயகர்களிலொருவன்!!

எழுத்தாளர் கெளதம நீலாம்பரனுக்கு எமது அஞ்சலி!

எழுத்தாளர் கெளதம நீலாம்பரன்ஈழவேந்தன் சங்கிலி‘சரித்திர நாவலாசிரியரும், மூத்த எழுத்தாளருமான திரு. கௌதம நீலாம்பரன் இன்று (14.09.2015) அதிகாலை 3.30 அளவில் சென்னையில் காலமானார்’ என்னும் பதிவினைத் தடாகம் அமைப்பாளர் எழுத்தாளர் கலைமகள் ஹிதாயா ரிஸ்வி அவர்கள் தனது முகநூல் பதிவிலிட்டிருந்தார்.

அது எழுத்தாளர் கெளதம நீலாம்பரன் அவர்கள் பற்றிய சிந்தனையை ஏற்படுத்திவிட்டது.  உண்மையில் எழுத்தாளர் கெளதம நீலாம்பரன் அவர்கள் சரித்திரக்கதைகள் எழுதுமோர் எழுத்தாளர் என்பதைப்பார்த்திருக்கின்றேன் ஆனால் அவரது படைப்புகள் தொடர்களாக வெளிவந்த காலத்தில்  படித்ததில்லை. முக்கிய காரணம் நான் வெகுசன ஊடகங்களின் தீவிர வாசகனாக இருந்த காலகட்டத்தில் அவர் கோலோச்சிக்கொண்டிருக்கவில்லை. இதன் காரணமாக என் வெகுசன ஊடக வாசிப்புக்காலகட்டமான என் மாணவப்பருவத்தில் எனக்குப் பிடித்த சரித்த நாவலாசிரியர்களாக கல்கி, சாண்டில்யன், ஜெகசிற்பியன், அகிலன், மற்றும் நா.பார்த்தசாரதி ஆகியோரே விளங்கினார்கள் என்பேன். அக்காலகட்டத்தின் பின்னர் அறிமுகமானவர்களில் ஒருவரே எழுத்தாளர் கெளதம நீலாம்பரன்.  ஆனாலும் அவரது நாவலொன்றினை வாசிக்க வேண்டுமென்று எனக்கு ஆர்வம் பிற்காலத்தில் ஏற்பட்டது. அதற்குக்காரணம் கூகுள் தேடுதலொன்றின்போது ஈழத்து மன்னன் சங்கிலியன் பற்றியொரு சரித்திர நாவலொன்றினை அவர் எழுதியிருந்த விபரம் கிடைத்ததுதான். அந்நாவலை வாசிக்க வேண்டுமென்ற எண்ணம் அதனால்தான் ஏற்பட்டது. ஆனால் அந்த நாவல் இணையத்தில் கிடைக்குமா என்று தேடியபோது முதலில் எனக்கு அப்பெயரில் அவர் எழுதிய நாடகம்தான் கிடைத்தது.

உண்மையில் 1983 இனக்கலவரத்தைத்தொடர்ந்து தமிழகம் நோக்கி ஈழத்தமிழ் அகதிகள் படையெடுத்துக்கொண்டிருந்த காலகட்டத்தில் தமிழகம் கொந்தளித்துக்கொண்டிருந்தது. அதன் விளைவாக எழுந்த உணர்வுதான் ‘ஈழமன்னன் சங்கிலி’ என்னும் நாடகத்தை எழுத அவரைத்தூண்டியதாக அவரே குறிப்பிட்டிருக்கின்றார்.

இந்த நாடகமே எழுத்தாளர் மணியனின் ‘இதயம் பேசுகிறது’ சஞ்சிகையில் தொடர் நாடகமாகப்பிரசுரமாயிற்று. அப்பொழுது எழுத்தாளர் கெளதம நீலாம்பரன் ‘இதயம் பேசுகிறது’ சஞ்சிகையில் உதவி ஆசிரியராக பணிபுரிந்துகொன்டிருந்தார்.

Continue Reading →