திரும்பிப்பார்க்கின்றேன்.:ஈழத்து இலக்கிய வளர்ச்சிக்கு தமது கடின உழைப்பினால் தொண்டாற்றிய செங்கை ஆழியான்! கலாநிதி கந்தையா குணராசா விமர்சனங்களுக்குள்ளாகியிருக்கும் மகாவம்சம் வரலாறு பற்றியும் ஆய்வுமேற்கொண்ட பன்னூல் ஆசிரியர்.

செங்கை ஆழியான்முருகபூபதிசமீபத்தில்  இலங்கை  சென்று  திரும்பியிருந்த  மெல்பனில் வதியும் இலக்கிய  நண்பரும்  இளம்  படைப்பாளியுமான  ஜே.கே.  என்ற புனைபெயருடன்   எழுதும்  ஜெயகுமரன்  சந்திரசேகரன் யாழ்ப்பாணத்தில்   நண்பர்  செங்கை  ஆழியானை  சென்று பார்த்ததாகச் சொன்னார். ஈழத்தின்  மூத்த  எழுத்தாளராக  அறியப்பட்ட  எழுதிக்கொண்டே இயங்கிய  செங்கை  ஆழியான்  சுகவீனமுற்று  பேசுவதற்கும் சிரமப்பட்டுக்கொண்டு   வீட்டில்  முடங்கியிருப்பதை  ஜே.கே. சொன்னபொழுது    கவலையாக  இருந்தது. அவருக்கு   நோய்க்குரிய  அறிகுறிகள்  தென்பட்ட 2010 – 2011 காலப்பகுதியில்  சந்தித்த  பின்னர்  மீண்டும்  சந்திப்பதற்கு  எனக்கு சந்தர்ப்பம்  கிடைக்கவில்லை. ஈழத்து   இலக்கிய  வளர்ச்சியில்  செங்கை  ஆழியானுக்கு முக்கியமான   இடம்  இருக்கிறது  என்பதை  எவரும் மறுக்கமுடியாது.    இவரும்  செ.கணேசலிங்கன்  போன்று  நிறைய எழுதியவர்.   யாழ்ப்பாணம்  இந்துக் கல்லூரியின் முன்னாள் மாணவராக  பேராதனைப் பல்கலைக்கழகம்  புகுந்த  கந்தையா குணராசா   என்ற   இயற்பெயர்  கொண்டிருந்த  செங்கை ஆழியான் சிறுகதை,    நாவல்,   தொடர்கதை,  ஆய்வுகள்,  மற்றும்  புவியியல் சம்பந்தப்பட்ட   பாட  நூல்கள்,   ஏராளமான  கட்டுரைகள், விமர்சனங்கள்,    நூல்   மதிப்புரைகள்  எழுதியவர்.     பல இலக்கியத்தொகுப்புகளின்  ஆசிரியராகவும்  பல   நூல்களின் பதிப்பாசிரியராகவும்  விளங்கியதுடன்   சுறுசுறுப்புக்கும் விடாமுயற்சிக்கும்   எடுத்துக்காட்டாகவும்  முன்மாதிரியாகவும் திகழ்ந்தவர். இன்றும்   எமது  நாட்டிலும்  தமிழகத்திலும் விமர்சனங்களுக்குள்ளாகிவரும்  மகாவம்சம் பற்றிய  ஆய்வையும் மேற்கொண்டு   நூல்   எழுதியிருப்பவர்.

நோயின் உபாதை அவரைப்   பேசவும்  எழுதவும் முடியாமல் முடங்கவைத்திருக்கிறது. இளமைத்துடிப்புடன் அவர் இயங்கிய காலங்களில் இன்று போன்று கணினி வசதி  இருக்கவில்லை. வீரகேசரி பிரசுரமாக  வெளியான  அவருடைய  வாடைக்காற்று நாவலை 1973  காலப்பகுதியில்  படித்துவிட்டு, யாழ்ப்பாணம்  பிரவுண் வீதியிலிருக்கும் அவருடைய கமலம் இல்லத்தின் முகவரிக்கு கடிதம் எழுதினேன். அவ்வேளையில்  அவர்  செட்டிகுளம்  உதவி  அரசாங்க  அதிபராக பணியிலிருந்திருக்க வேண்டும். நெடுந்தீவு    தொழில்  வாழ்க்கை  அனுபவங்களிலிருந்து  அவர் எழுதிய அந்த  நாவலில்  வரும் பாத்திரங்களை    எங்கள்  நீர்கொழும்பூர்   மீனவ  மக்கள்  மத்தியிலும்  நான்  பார்த்திருப்பதனால்   அந்த  நாவல்  எனக்கு  மிக  நெருக்கமாகவே இருந்தது.

Continue Reading →

கவிஞர் வைதீஸ்வரனின் பன்முக இலக்கியப்பங்களிப்பு!

கவிஞர் வைதீஸ்வரனுக்கு அகவை எண்பது!

கவிஞர் வைதீஸ்வரனுக்கு இந்த செப்டம்பர் மாதம் 22ஆம் நாள் வயது 80!

- ’ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) -

கவிஞர் வைதீஸ்வரனுக்கு இந்த செப்டம்பர் மாதம் 22ஆம் நாள் வயது 80! அதே வருடம் அதே மாதம் பிறந்த என்னுடைய அம்மாவுடைய பிறந்தநாளுக்கு இரண்டுநாட்கள் கழித்துப் பிறந்தவர். (என்னுடைய அம்மா என்னளவிலோர் அருங்கவிதை!) இன்றளவும் தொடர்ந்து கவிதை, கதை, கட்டுரைகள் எழுதிவருகிறார். எழுத்தின் மூலமாக மட்டுமே தன்னை வெளிப்படுத்திக்கொள்ளத் தெரிந்தவர். அதனாலேயே பல விருதுகளும் அங்கீகாரங்களும் இவரைக் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. விளக்கு விருது கவிஞர் வைதீஸ்வரனுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அம்ருதா இலக்கிய இதழில் கவிஞர் வைதீஸ்வரனின் படைப்பாக் கங்கள் தொடர்ந்து வெளியாகிவருகின்றன. VAIDHEESWARAN VOICES என்ற பெயரில் இயங்கிவரும் அவருடைய வலைப்பூவில் இடம்பெற்றுள்ள படைப்பாக்கங்களும் கோட்டோவியங்களும் (கவிஞர் வைதீஸ்வரன் சிறந்த ஓவியரும் கூட!) குறிப்பிடத்தக்கவை. http://www.vydheesw.blogspot.in/ ) கவிஞர் வைதீஸ்வரனுடைய கவிதைகள் சில THE FRAGRANCE OF RAIN என்ற தலைப்பில் ஆங்கில மொழியாக்கத்திலும் வெளியாகியுள்ளன.

2006ஆம் ஆண்டு தேவமகள் அறக் கட்டளை கவிச்சிறகு விருது வழங்கும் நிகழ்ச்சியின் போது கவிஞர் எஸ்.வைதீஸ்வரன் ஆற்றிய ஏற்புரை அடர்செறிவானது!   வைதீஸ்வரனின் எழுத்தாக்கங்கள், ஓவியங்கள், அவருடைய நேர்காணல், அவருடைய சில கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகள் சில ஆகியவை அவருடைய இலக்கியப் பங்களிப்பை மரியாதையோடு நினைவுபடுத்திக் கொள்ளும் முயற்சியாய் இங்கே தரப்பட்டுள்ளன.