நடேசன்,பள்ளி விடுமுறையிலே வளர்ந்த பிள்ளைகளுடன் இந்த முறை ‘டொராண்டோ’வைப் பார்க்க வந்திருக்கிறான். விஜயன் வீட்டிலே,அவனுடைய அண்ணன் ரவியும், அவன் இரு பிள்ளைகளும், அக்கா ரதியும் (அவள் மகன் கதிர்,”அம்மா நாளைக்கு வேலையிலே தூங்க வழிய நேரிடும் “என இறக்கி விட்டுப் போய்யிருக்கிறான்) பால்ய வயதில் குடும்பத்தில் ஒருத்தனாக அயலிலே இருந்த… யூரோப்பிலிருந்து வந்திருக்கிற நடேசனை சுமார் 25,30 வருசத்திற்குப் பிறகு சந்திக்க வந்திருக்கிறார்கள் .
அவன் தரப்பில் ,மனைவி… தரப்பில் சில உறவினர்கள் இங்கே இருக்கிறார்கள் தான்.யூரோப்பை விட வெளிநாடுகள் என்ன பெரிதாக வித்தியாசமாக இருக்கப் போகிறது என.. தாயகமான ஈழமாநிலத்தையே முக்கியமாக பார்க்க வேண்டியவர்கள் என அழைத்துச் செல்கிறவன். ‘இறுதி யுத்தம்’ என சிறிலங்காவில் மனிதப் படுகொலைகள் மோசமாக நடந்த போது எல்லா நாடுகளிலும் அதற்கெதிராக ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. வல்லரசு நாடுகள் பாகிஸ்தானில் காலூன்றியது போல சிறிலங்காவிலும் காலூன்றி விட்டன.நிறைகூடிய குண்டுகள், வகை தொகையின்றி சிதறி வெடிக்கும் குண்டுகளை எல்லாம் சிறிலங்காபடையினர் சரிவர கையாளுமா? என்பதே சந்தேகம், சிறிலங்கா அரசின் அனுமதியில்லாமல் கூட,தன்னிச்சையாகவும் ,போடப்பட்டே இந்த மனிதப் பேரவலம் நடந்தன. ஈழத்ததமிழர்கள் மேலும் அதே பாலஸ்தீனர்களின் தலைவிதி கவிந்து விட்டது.
பெரியநாடுகளே போரை நடத்தியது போன்ற தோற்றம். நைஜிரியா அரசாங்கமே ‘பொக்ககராம் போராட்டக்குழுவிற்கு அமெரிக்காவை ஆயுதங்கள் விற்க வேண்டாம்’என கூறுகிறது.சிறிலங்காவிடம் ‘கொத்துக் குண்டுகளை பாவிக்கும்படி,அமெரிக்கா கூறியதை விக்கிலீக்ஸ் ‘லீக்’ பண்ணியிருக்கிறது. அமெரிக்காவின் வியாபாரமே இரண்டு பக்கமும் ஆயுதங்கள் விற்பது தானே..போல இருக்கிறது. இரண்டு உலகப் போர்களிலும் அதிகளவு வியாபாரம் பார்த்தது அமெரிக்கா என்றே சொல்லப்படுகிறது.