வாசிப்பும், யோசிப்பும் 124 : ‘நிலக்கிளி’ நாவல் பற்றிய சிந்தனைத்துளிகள்…..; சிறிது இலக்கணம் படிப்போமா?;

ஈழத்துத்தமிழ் நாவல்களில் அனைத்துக்குழுக்களாலும் தவிர்க்க முடியாததொரு படைப்பாகக்கருதக்கூடிய படைப்பு அ.பாலமனோரகனின் ‘நிலக்கிளி’. அந்த ஒரு படைப்பின் மூலம் ஈழத்துத்தமிழ் இலக்கியத்தில் தனக்கென்றோரிடத்தைப்பிடித்துக்கொண்டவர் அவர். வன்னி மண்ணின் மணம் கமழும் நல்லதொரு நாவல்.

நிலக்கிளி நல்லதொரு படிமம். நிலத்தில் பொந்துகள் அமைத்து கூடுகட்டி வாழும் அழகிய பறவைகள் நிலக்கிளிகள். இவை தாம் வசிக்கும் வளைகளை விட்டு அதிக உயரம் பறப்பதில்லை. இவ்விதம் நிலக்கிளிகளைப்பற்றிக்குறிப்பிடும் ஆசிரியர் பதஞ்சலியையும் அவ்விதமானதொரு நிலக்கிளியாக நாவலில் உருவகித்திருக்கின்றார்.

இந்த நாவல் என்னைக்கவர்ந்ததற்கு முக்கிய காரணங்கள்: வன்னி மண் வாசனை தவழும் எழுத்து மற்றும்பாத்திரப்படைப்பு (நாவலின் பாத்திரங்கள் அனைத்துமே உயிர்த்துடிப்புடன் படைக்கப்பட்டிருக்கின்றன).

இந்த நிலக்கிளிகளைப்பற்றி நான் இந்நாவலைப்படிப்பதற்கு முன்னர் அறிந்திருக்கவில்லை. எனது பால்ய காலம் வன்னியின் ஒரு பகுதியாக வவுனியாவில் கழிந்திருந்தாலும் அங்கு நான் வாழ்ந்திருந்த காலத்தில் இவ்விதமானதொரு பறவையைப்பற்றிக்கேட்டதேயில்லை. நிலக்கிளி என்பது இன்னுமொரு பறவைக்கு பால மனோகரன் வைத்த பெயரா அல்லது உண்மையிலேயே அப்பெயரில் அழைக்கப்படுமொரு பறவை உள்ளதா? ஏனெனில் இன்று வரை எனக்கு ‘நிலக்கிளி’ என்னும் பறவை பற்றி ‘நிலக்கிளி’ நாவலில் வருவதை விட மேலதிகமான தகவல்களெதுவும் கிடைக்கவில்லை. ‘நிலக்கிளி’ பற்றி வன்னி நண்பர்கள் யாராவது மேலதிகத்தகவல்களிருப்பின் பகிர்ந்து கொள்ளவும்.

இந்த நாவலின் ஆரம்பம் முரலிப்பழம் பற்றிய வர்ணனையுடன் ‘கார்த்திகை மாதத்தின் கடைசி நாட்கள்! அடிக்கடி பெய்த பெரு மழையில் குளித்த தண்ணிமுறிப்புக் காடுகள் பளிச்சென்றிருந்தன. ஈரலிப்பைச் சுமந்துவந்த காலையிளங் காற்றில் முரலிப் பழங்களின் இனிய மணம் தவழ்ந்து வந்தது’ என்று ஆரம்பிக்கின்றது. நல்லதோர் ஆரம்பம். அந்த ஆரம்பமே நாவல் இயற்கை எழில் ததும்பும் வன்னி மண்ணின் மணம் கமழும் நாவலென்பதை எடுத்துக்காட்டி விடுகிறது. தொடர்ந்து வாசிக்க வேண்டுமென்ற ஆர்வத்தை ஏற்படுத்தி விடுகின்றது.

Continue Reading →

கலாநிதி எ.பி.ஜெ. அப்துல் கலாமின் வாழ்க்கையும் சேவைகளும்

கலாநிதி எ.பி.ஜெ. அப்துல் கலாம்-பேராசிரியர் கோபன் மகாதேவா -கலாம் எம்மைப் போல் ஒரு தமிழர். எம்மைப் போல் மத்திய தரக் குடும்பத்தில் பிறந்து, பின் விடாமுயற்சியால் இந்திய ஜனநாயகக் குடியரசின் ஜனாதிபதியாக உயர்ந்து இளைப்பாறியவர். மேலும் ஒரு விஞ்ஞானியாகக் கற்றுத் தொடர்ந்து அவ்வாறே பணி செய்து, பல வகையில் ஒரு அரிய உதாரணராக, பத்மபூஷண், பத்மவிபூஷண், பாரத்ரத்ன பட்டங்களுடன் பெரிதான போட்டி இன்றி மிகவிரும்பி எல்லோராலும் ஏற்கப்பட்டு இந்தியாவின் ஜனாதிபதியாக நியமனம் பெற்றுத் தானாகவே ஒரே ஒரு தவணையின் பின் தன் உயர் பதவியைத் துறந்து பின்னரும் கல்வித் துறையில் தொண்டராகத் தன் மறைவு நாள் மட்டும் வேலை செய்து கொண்டே வாழ்ந்தவர். மேலும்ஒரு பிரமச்சாரியாக நிலைத்து, தன் பிறந்த குடும்பத்துக்கும் பெற்றோருக்கும் பழைய ஆசிரியர்களுக்கும் நன்றிக் கடனும் பயபக்தியும் உடையவராகவும் வாழ்ந்தவர். தன் வாழ்நாள் முழுவதும் நல்லதையே சிந்தித்து, நல்லதையே செய்து, ஒரு சான்றோராகத் தூய்மையுடன் திகழ்ந்தவர். மனிதருள் ஒரு எடுத்துக் காட்டான மாணிக்கம். சில தடவை இவரை நான் எம் ஈழத்து ஆறுமுக நாவலருக்கு ஒப்பிட்டுச் சிந்தித்தேன். எனினும் கலாம் உலகில் நாவலரிலும் மிகக் கூடிய உயற்சியைப் பெற்றவர்.

பிறப்பும் குடும்பமும்:
ஏபீஜே அப்துல் கலாம் என்று பெயர் சூட்டிய ஆண் குழந்தை பிறந்தது, 1931இன் ஒக்தோபர் 15ந் திகதி அன்று, இந்தியாவின் தமிழ்நாட்டு இராமேஷ்வரம் எனும் தீவின் நடுத்தரக் குடும்பம் ஒன்றில். அவரின் தகப்பனார் பெயர் ஜைனுல்லாபுதீன் மரைக்காயர். தனுஷ்கோடி சேதுக்கரையில் இருந்து இராமேஸ்வரம் சிவன் கோவிலுக்கு வந்து செல்லும் யாத்திரீகர்களின் படகுகளை ஓட்டி ஏற்றிச் சென்றும் திரும்பக் கொணர்ந்தும் உழைத்துத் தன் குடும்பத்தைக் கலாமின் தந்தை வளர்த்து வந்தார். அத்துடன் ஒரு சொந்தத் தென்னங்காணியையும் பராமரித்து வந்தார். அவர்களின் வீடு, 1850களில் சுண்ணாம்பு, செங்கற்கள் முதலியவற்றால் கட்டப் பட்டு மசூதித் தெருவில் இருந்த ஒரு பெரிய பழைய வீடு. அப்துல் கலாமின் தாயார் ஆஷியம்மாவின் மூதாதையரில் ஒருவர் பிரிட்டிஷாரின் இந்திய ஆட்சிக் காலத்தில் பகதூர் பட்டம் பெற்றிருந்தார். கலாமின் பெற்றோர் அதிகம் படித்தவர்களல்ல. எனினும் தங்கள் இஸ்லாம் நெறிமுறையைப் பின்பற்றிக் கொண்டு விருந்தினரை உபசரித்து ஆடம்பரங்கள் இல்லாது வாழ்ந்து உதாரணத் தம்பதிகள் என மதிப்புப் பெற்றவர்கள். கலாமை வீட்டில் அபுல் என்று செல்லமாகக் கூப்பிடுவர். கலாம், மூன்று சகோதரர்கள், ஒரு சகோதரியுடன் மூன்றாவது பிள்ளை. கலாமின் பெற்றோர் உயரமானவர்கள். ஆயினும் அவர் உயரத்தில் குள்ளமானவராகவே இருந்தார்.

Continue Reading →

ஆய்வு: பள்ளியெழுச்சி வளர்ச்சியில் மனோன்மணியம் சுந்தரனாரின் பங்களிப்பு

ஆய்வு: ஒளவையாரின் அகமும் புறமும்பண்டைய காலகட்டங்களில் ‘துயிலுணர்பாட்டு’ என்றும், ‘துயிலெழுப்பு பாட்டு’என்றும் பாணர்மரபில் வழங்கி வந்த இவை வாய்மொழியாகப் பாடப்பட்டு வந்தவையாகும். அதுவே, பிற்காலத்தில் புலவர்மரபில் தனிப்பாடல்களாக உருவெடுத்தன. தொல்காப்பியர் காலத்தில் ஒரு துறையாகக் குறிப்பிடப்படுகின்றது. பக்தி இயக்ககாலத்தில்  தனித்த ஒரு வகைமையாக இனங்காணப்பட்டது. மேலும், இது சிற்றிலக்கியங்களில் ஒன்றாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையினை பன்னிருபாட்டியல், தொன்னூல் விளக்கம், பிரபந்த தீபம் முதலான பாட்டியல் நூல்களின் வாயிலாக அறிய இயலுகின்றது. ஆக, தொன்றுதொட்டு வழங்கிவந்த இப்பாட்டு மரபானது பல்வேறு  நிலைகளில், பல்வேறு பொருண்மை நிலையில் பாடப்பட்ட நிலைபாடுகளின் தன்மைகளை எடுத்துரைப்பதாக இக்கட்டுரை அமைகின்றது. குறிப்பாக சுந்தரனாரின் பொதுப்பள்ளியெழுச்சியில் காணப்படும் மாறுபட்ட நிலைபாடுகளை இனங்காண முயன்றுள்ளது.   

இலக்கண மரபில் பள்ளியெழுச்சி
பள்ளியெழுச்சி என்பது இறைவனைத் துயில் எழுப்புவதாகவும்  நம்மில் ஆன்மீக விழிப்பின்றி உறங்கிக் கொண்டிருக்கும் ஆன்மாவைத் துயிலெழுப்பி இறைவனின் கருணையை உணரச் செய்வதாகவும் பாடப்படும் பாடல்கள் ஆகும்.  இலக்கணமரபில் இது துயிலெடைநிலை எனக் குறிப்பிடப்படுகின்றது. இது உறங்குகின்ற மன்னனை உறக்கத்தினின்று எழும்படி வேண்டுவதாகப் பாடப்படுவதாகும். இது துயிலுணர், துயிலெடுத்தல், துயிலெடுப்பு, துயிலெடைநிலை என பல்வேறு சொல்லாடல் நிலையில் தொன்றுதொட்டு வழங்கி வந்திருக்கின்றது. இது கண்ணுறங்கும் வேந்தன் குன்றாத புகழோடு இன்னும் நன்றாக வாழ்ந்தோங்க  வேண்டும் என்றெண்ணி வேந்தனைச் சுற்றி நின்று, அவனை வாழ்த்துவது போன்ற நிலையில் தொல்காப்பியம் குறிப்பிடுகின்றது. இதை,

Continue Reading →

பேராசிரியர் கோபன் மகாதேவா கவிதைகள் இரண்டு!

1. என் மகிழ்வறத்தை உன் சிரிப்பால் மீட்டிடு! {ஒரு காதலனின் இலகு மொழிச் சங்கீதக் கவிதை]                                                      

-பேராசிரியர் கோபன் மகாதேவா -ஜானகி! ஜானகி! ஜானகி! ஜானகி!   
என்னை விட்டுத் தூரம் சென்ற காதலி  
என்னுள் இன்னும் கொலுவிருக்கும் காதலி.

ஜானகி! ஜானகி! ஜானகி! ஜானகி!  
உன் சிரிக்கும் சித்திரத்தைக் காண்கையில்   
என் உளத்தில் வாழ்வின் ஊக்கம் கூடுதே.

ஜானகி! ஜானகி! ஜானகி! ஜானகி!   
என்னை விட்டுத் தூரம் சென்ற காதலி
என்னுள் என்றும் கொலுவிருக்கும் காதலி.

ஜானகி! ஜானகி! ஜானகி! ஜானகி! 
உனை நான் மறவேன். உனை நான் துறவேன்.   
உனை நான் துறவேன். உனை நான் மறவேன்.

ஜானகி! ஜானகி! ஜானகி! ஜானகி!     
என்னை விட்டுத் தூரம் சென்ற காதலி
என்னுள் என்றும் கொலுவிருக்கும் காதலி.

Continue Reading →