திரும்பிப்பார்க்கின்றேன்: தாமரைக்கு ஒரு செல்வி வன்னிமக்களுக்கு ஒரு வன்னியாச்சி. ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் போர்க்கால இடப்பெயர்வு வாழ்வை அழுத்தமாகப் பதிவுசெய்த ஆளுமை

தாமரைச்செல்விமுருகபூபதிஎங்கள் நீர்கொழும்பில்  நான்  அறிந்தவரையில்  இற்றைக்கு  70 ஆண்டுகளுக்கு  முன்னர்  தோன்றிய  முதலாவது  சைவ உணவகம் கணேசன்  கபேதான்  நீர்கொழும்பில்  வீரகேசரி  பத்திரிகையின் முதலாவது   ஏஜன்ட்.   வீரகேசரிக்கு தற்பொழுது 85 வயது. கணேசன் கபே   இன்றும்   இருக்குமானால்  அதன் வயது  75. இந்த கணேசன்  கபேயில்தான்   ஆளுமையும்   ஆற்றலும்  நிரம்பப்பெற்ற  சாதனைப்பெண்மணி      தாமரைச்செல்வியின்  முதல்  நாவல் –  வீரகேசரி  பிரசுரம்  சுமைகள்  எனக்குக்  கிடைத்தது.  அதனை தாமரைச்செல்வி   எழுதியகாலத்தில்   அவருக்கு 24  வயதுதான்  என்ற தகவல்   நண்பர்  புலோலியூர்   ரத்தினவேலோன்  எழுதிய குறிப்பிலிருந்து   தெரிகிறது. சுமைகள்   நாவலுக்கு   பின்னாலும்  ஒரு  கதை  இருக்கிறது. அதனைப்பின்னர்  சொல்கின்றேன்.

1970 களில்   ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் இடதுசாரிக2ளும் கூட்டணி அமைத்து அரசாங்கம் அமைத்தபொழுது , இந்தியாவிலிருந்து புற்றீசலாக   வந்து குவிந்த  தரமற்ற  வணிக  இதழ்கள்  மீது கட்டுப்பாடு  வந்ததை  வீரகேசரி  நிறுவனம்தான்  தக்கமுறையில் பயன்படுத்திக்கொண்டு  வீரகேசரி  பிரசுரங்களை  வெளியிட்டது. முதலில்  திருகோணமலையிலிருந்து  எழுதிக்கொண்டிருந்த  நா. பாலேஸ்வரியின்  பூஜைக்கு  வந்த  மலர்  வெளியானதாக  நினைவு. அதனைத்தொடர்ந்து  இலங்கையின்  முன்னணி  எழுத்தாளர்கள் பலரின்  நாவல்கள்  வீரகேசரி  பிரசுரமாக  வந்தன.   செங்கை ஆழியான்,   டானியல்,  பால மனோகரன்  (நிலக்கிளி)  தெணியான், அருள். சுப்பிரமணியம்,   செ. கதிர்காமநாதன்,  வ.அ.இராசரத்தினம், யாழ்நங்கை,  செம்பியன் செல்வன்,   தெளிவத்தை ஜோசப்…. இவ்வாறு சுமார் 60  இற்கும்  மேற்பட்ட  படைப்பாளிகளின்  நாவல்கள் வெளியானது. இந்தியாவிலிருந்து  வந்து  இலங்கையில்  மலையகத்தில்  முன்னர் வாழ்ந்த  கோகிலம்  சுப்பையாவின்  தூரத்துப்பச்சை    நாவலும் வெளியிடப்பட்டது.    இந்த  வரிசையில்  நான்   பார்த்த  நாவல் தாமரைச்செல்வி   எழுதியிருந்த  சுமைகள்.

Continue Reading →

இன்றைய தமிழ் நாடகச் சூழலில் சே ராமானுஜம் வெங்கட் சாமிநாதனுடனோர் உரையாடல்.

[ ‘பதிவுகள்’ இணைய இதழுக்கு கலை, இலக்கிய விமர்சகர் திரு. வெங்கட் சாமிநாதன் அவர்கள் 18.10.2015 அன்று அனுப்பிய இறுதிக்கட்டுரையிது. இதன் முடிவில் தொடரும் என்றிருந்தாலும் திரு.வெ.சா.வின் மறைவு காரணமாக இக்கட்டுரை தொடராது என்பதை மிகவும் வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கின்றோம். – பதிவுகள்-]

- வெங்கட் சாமிநாதன் -–  1983 – ல் முல்லைத் தீவில் பிறந்த ஜெயபிரகாஷ்  கொழும்பு பம்பலப்பிட்டி இந்து கல்லூரியில் கல்வி கற்று, அந்த  கல்லூரியிலேயே நாடகம் அரங்கியல் துறையில் ஆசிரியராகப் பணியாற்றுபவர். கடந்த இரண்டு வருஷங்களாக பாண்டிச்சேரி பல்கலைக் கழகத்தில் ஒரு முதுநிலை பட்ட ஆய்வாளராக இருக்கிறார்.. நடிகர். பரதமும் கற்று பட்டம் பெற்றவர். இந்திரா பார்த்த சாரதியின் இராமானுஜர் நாடகத்தில் ராமானுஜராக நடித்தவர். பின் வரும் பேட்டி இரண்டு நிலைகளில் நிகழ்ந்தது. முதலில் பங்களூரில் நேரில் பேட்டி கண்டும் பின் பாண்டிச்சேரியிலிருந்து எழுதி அனுப்பிய கேள்விகளுக்கு எழுதித் தந்த பதில்களுமாக ஒன்றிணைந்தது. –

வெங்கட் சாமிநாதன்: எனக்கு இப்போது வயது  82.  முடிந்து, இரண்டு மாதங்களுக்கு முன் தான் 83- ம் வயதுக்கு  காலடி எடுத்து வைத்திருக்கிறேன்.  இதில் தமிழ் நாட்டில் வாழ்ந்த காலம் மிகக் கொஞ்சம்.  பள்ளிப் படிப்பு முடிந்ததுமே, 16-ம் வயதில் தமிழ் நாட்டுக்கு வெளியே வந்துவிட்டேன். வேலை தேடி. பிழைக்க வேண்டும் மூத்த பிள்ளை, குடும்பத்துக்கு உதவ வேண்டும் என்கிற நிர்ப்பந்தம் ஆக, என்னை உருவாக்கியது தமிழ் நாட்டுக்கு வெளியே எனக்குக் கிடைத்த அனுபவங்கள் தான். அவற்றை நான் உள்வாங்கியதும், எதிர்கொண்டதுமான உறவு தான். ஆக, பொது வாழ்க்கையில் காலடி வைத்து என் மனதுக்குப் பட்ட கருத்துக்களைச் சொல்ல ஆரம்பித்தது, ஒரு பெரியவர் தன் பத்திரிகையில் எனக்கு இடம் கொடுத்ததால் வந்த வினை, இது தொடங்கியது  1959 – லிருந்து. அன்றிலிருந்தே, கிட்டத்தட்ட ஐம்பது ஐம்பத்தைந்து வருட காலமாக, .   நிறைய  அடிபட்டிருக்கிறேன்.  எனக்கு சில  விசயங்களில்  ஈடுபாடும்  ஒரு  தெளிவும்  இயல்பான  அக்கறையும்    இருந்தது – அந்த விழிப்பும் தெளிவும் தோன்றத் தொடங்கியது  தில்லியில் வாழத் தொடங்கிய 1956 லிருந்து.  என் இருபத்து மூன்றாவது வயதிலிருந்து. . சின்ன வயதிலேயே நான்  தமிழ் நாட்டை விட்டு  வெளியில் வந்து விட்டதினால், தமிழ் நாட்டில் அந்த வாய்ப்பு  எனக்குக்  கிடைக்க  இல்லை.  ஏதோ தமிழ் நாட்டிலேயே இருந்திருந்தால் அது கிடைத்திருக்கும் என்பது போல் இது தொனிக்கிறது. இல்லை. தமிழ் நாட்டில் தொடர்ந்திருந்தால், ஒரு வேளை நான் மாறியிருக்க மாட்டேன்.எல்லாருக்கும் நல்ல பிள்ளையாக இருந்திருப்பேன். அத்தோடு ஒரு உதாரணத்துக்கு, ரஜனிசாரின் காபாலி பட ரிலீஸ் அன்றைக்கு அவர் ஃப்ளெக்ஸ் போர்ட் விளம்பரத்துக்கு நடக்கும் பாலாபிஷேகம் பார்த்து மெய்சிலிர்த்து நின்றிருப்பேன். அல்லது, மேடையில் கொலு வீற்றிருக்கும் கலைஞரை நோக்கி, அவரது பராசக்தி படத்திலேயே, அன்றே தான் கண்ட சினிமா தொழில் நுட்பங்களைக் கண்டு வியந்ததையெல்லாம் உலக நாயகன் விவரிக்க மேடையில் நடுநாயகமாக வீற்றிருந்த கலைஞரும் சபையில் நிறைந்திருக்கும் ரசிகப் பெருமக்களூம்  அடைந்த புளகாங்கிதமும் பரவசமும் என்னையும் தொற்றி, மெய்மறக்கச் செய்திருக்கும். . அல்லது  ஒரு வேளை  வெறுப்புற்று  தலை தெறிக்க எங்காவது ஓடியுமிருக்கலாம்.  தெரியாது.  இப்படி எத்தனையோ விஷயங்கள். ஆக, இந்த இரண்டுவித கிறுக்குகளில் ஏதோ ஒன்றாக இருந்திருப்பேன். நிதான புத்தியோடு மாத்திரம் வளர்ந்திருக்க மாட்டேன் என்று தோன்றுகிறது.

Continue Reading →

கவிஞர் கி பி அரவிந்தன் நினைவு இலக்கியப் பரிசு – ‘புலம்பெயர் சிறுகதைப் போட்டி 2016’ – தகவல் பகிர்வு

கவிஞர் கி பி அரவிந்தன் நினைவு இலக்கியப் பரிசு - 'புலம்பெயர் சிறுகதைப் போட்டி 2016' - தகவல் பகிர்வு

காக்கைச் சிறகினிலே மாத இதழ் முன்னெடுக்கும் கவிஞர் கி பி அரவிந்தன் நினைவு இலக்கியப் பரிசு – ‘புலம்பெயர் சிறுகதைப் போட்டி 2016’ – வள்ளுவராண்டு 2047

காக்கைச் சிறகினிலே இதழ் தொடக்க நெறியாளராகப் பணியாற்றி மறைந்த இலக்கியவாதி ‘கி பி அரவிந்தன்’ கனவின் மீதியில் எழும் புதிய தடமாக அமைகிறது இந்தப் போட்டி. பாரதி கண்ட “சென்றிடுவீர் எட்டுத் திக்கும், கலைச் செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் !” என்ற கனவை நனவாக்கும் முயற்சிகளில் ஒன்று. உலகெங்கும் வியாபித்தவர்களாகி தொடரும் வாழ்வில் அடுத்தடுத்த தலைமுறையினர் எண்ணங்களைக் கொண்ட எழுத்துகளையும் படைப்புகளையும் ஊக்குவிக்கும் முகமாக இப் போட்டி அமைகிறது.

Continue Reading →

தமிழ் ஸ்டுடியோ.காம்: இரண்டு நாள் ஒளிப்பதிவு பயிற்சிப் பட்டறை

நிகழ்வுகளைக் கண்டு களிப்போம்!

நவம்பர் 7 (சனி) | நவம்பர் 8 (ஞாயிறு)
இடம்: சென்னை
பயிற்சிக் கட்டணம் : ரூபாய் 3500
முன்பதிவுக்கு : 98406-98236

தமிழ் ஸ்டுடியோவின், படச்சுருள் மாத இதழுக்கு நிதி திரட்டும் விதமாக ஒளிப்பதிவாளர் விஜய் ஆம்ஸ்ட்ராங்க் மற்றும் ஒளிப்பதிவாளர் ஞானம் சுப்ரமணியன் இருவரும் இணைந்து இரண்டு நாள் திரைப்பட ஒளிப்பதிவுப் பயிற்சிப் பட்டறை நடத்திக்கொடுக்கவுள்ளனர்.
பயிற்சிப் பட்டறையின் முதல் நாளில், ஒளிப்பதிவு சார்ந்த விஷயங்கள் யாவும் கோட்பாட்டு ரீதியில் விளக்கப்பட்டு, இரண்டாம் நாள்., திரைப்படத்தில் பயன்படுத்தப்படும் கேமராவைக் கொண்டு செய்முறைப் பயிற்சியாக, சிறப்பு வகுப்பும் நடத்தப்படும். ஒளிப்பதிவில் லைட்டிங்க் பற்றியும், அழகியல் பற்றியும் இதில் விளக்கப்படவிருக்கிறது.

Continue Reading →