அமரர் எஸ்.பொ. ஞாபகார்த்த அனைத்துலகச்சிறுகதைப் போட்டி 2015

அமரர் எஸ்.பொஅவுஸ்திரேலியாவில் இருந்து செயற்படும் அக்கினிக்குஞ்சு இணையத்தளத்தினால் மறைந்த மாபெரும் எழுத்தாளரும், அக்கினிக்குஞ்சு இணையத்தளத்தின் பிரதம இலக்கிய ஆலோசகராக இருந்தவருமான எஸ்.பொ. அவர்களின் ஓராண்டு நினைவினையொட்டி அனைத்துலக ரீதியாக சிறுகதைப் போட்டியொன்று நடாத்தப்பட உள்ளது.

போட்டிகள் பற்றிய பொது விதிகள்

1. உலகெங்கும் வாழும் தமிழ் பேசும், எழுதும் எவரும் இப்போட்டியில் பங்கு பற்றலாம்.
2. ஒருவர் ஆகக்கூடியது மூன்று சிறுகதைகளை அனுப்பலாம். அவை போட்டியாளரின் சொந்தப் படைப்புக்களாக இருத்தல் வேண்டும்.
3. சிறுகதைகள் தமிழ் ஒருங்குகுறி(Unicode) அல்லது பாமினி எழுத்துருவில் – மின்னஞ்சல் இணைப்பாக (Microsoft Word) அல்லது பீடிஎவ் (pdf) வடிவத்தில் அனுப்பப்படல் வேண்டும். மின்னஞ்சலின் subject இல் ’எஸ்.பொ நினைவுச் சிறுகதைப் போட்டி- 2015’ எனக் குறிப்பிட்டு, அஞ்சலின் உட்பகுதியில் சிறுகதையின் தலைப்பு, போட்டியாளரின் பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம் தரப்படல் வேண்டும்.
4. அனுப்பப்படும் சிறுகதை ஏற்கனவே வேறு போட்டிகளுக்கு அனுப்பப்பட்டதாகவோ, பிரசுரிக்கப்பட்டதாகவோ அல்லது வெளியிடப்பட்டதாகவோ இருத்தல் கூடாது.
5. இப்போட்டியில் பங்கேற்க வயதெல்லைகள் இல்லை.
6. போட்டிக்கு அனுப்பப்படும் சிறுகதைகளை இணையத்தளங்களில் பிரசுரிக்கவும், நூலாக வெளியிடவும், வானொலியில் ஒலிபரப்பவும் அல்லது காட்சிக்கிடவும் அக்கினிக்குஞ்சு நிர்வாகத்தினருக்கு உரித்துண்டு.
7. அக்கினிக்குஞ்சு நடுவர் குழுவின் தீர்ப்பே இறுதியானது.
8. சிறுகதைகள் 3000 சொற்களுக்கு மேற்படாமலும் 750 சொற்களுக்கு உட்படாமலும் அமைதல் வேண்டும்.
ப்போட்டிகளுக்கான பரிசு விபரங்கள் பின்வருமாறு:\

முதலாம் பரிசு – 300 அவுஸ்திரேலிய வெள்ளிகள்
இரண்டாம் பரிசு- 200 அவுஸ்திரேலிய வெள்ளிகள்
மூன்றாம் பரிசு – 100 அவுஸ்திரேலிய வெள்ளிகள்

முடிவுத்திகதி: 30.11.2015. இத்திகதிக்கு முன்னர் கிடைக்கக் கூடியதாக ஆக்கங்கள் அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

போட்டி முடிவுகள் 2016 தை மாதம் முதல் வாரம் அக்கினிக்குஞ்சு இணையத்தளத்தில் வெளியிடப்படும்.

Continue Reading →

சாதேவி – நம்மிடையே வாழும் கன்னடத்தமிழ் உலகம்!

- வெங்கட் சாமிநாதன் -ரொம்ப நாட்களுக்குப் பிறகு ஒரு புத்தகம், சிறுகதைத் தொகுப்பு ஒன்று படிக்கக்கிடைத்ததில் மனதுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. சந்தோஷம் என்று சொன்னது பின்னர் இதைப்பற்றி எழுதிச்செல்லும் போது எனக்கு கொஞ்சம் சிக்கலான காரியமாக ஆகப்போகிறது. ஆனாலும் எழுதியதை அழிக்க விரும்பவில்லை. சந்தோஷம் என்று சொன்னது உண்மை.

சந்தோஷம் திறமையாக எழுதும் ஒரு சிறு கதைக்காரரைக் கண்டு கொண்டதில்.. ஆமாம், கண்டு கொண்டதுதான். இதுதான் அவரது முதல் தொகுப்;பு. நன்றாக எழுதியிருக்கிறாரே தவிர அவர் அதிகம் அலட்டிக்கொண்டவராகவோ,  தமிழ்ச் சிறுகதை வானில் ஒரு புதிய நக்ஷத்திரம் உதயமாகி விட்டதாகவோ ஏதும் பேச்சில்லை. சில காலமாக தெரிந்த ;பெயர்தான். இணையத்திலும் புத்தக ;பிரசுரத்திலும் சம்பந்தப்பட்ட பெயராக, எழுத்தாளராக அல்ல. தன்னைப் பற்றி அப்படி அவர் அறிவித்துக் கொண்டதில்லை. எனக்குத் தெரிந்து யாரும் அவரை ஒரு சிறுகதைக்காரராக பிரஸ்தாபிக்க வில்லை. ஆச்சரியமாகத் தான் இருக்கிறது. அதுவும் தமிழ் நாட்டில். இங்கு தெருவுக்குத் தெரு கவிஞர்கள் ஜனத்தொகை கொஞ்சம் அதிகம். சிறுகதைக்காரர்கள் கணிசமாக இருந்தாலும் கொஞ்சம் குறைவு தான்.

இக்கதைத் தொகுப்பில் 34 கதைகள் இருக்கின்றன. இதில் தரப்பட்டுள்ள  இக்கதைகள் 2003 லிருந்து 2013 வரை எழுதி அவர் தன் ப்ளாகில் வெளியிட்டுக்கொண்டவை.  இந்த விவரத்தை இத்தொகுப்பிலிருந்து தான் நான் தெரிந்து கொள்கிறேன். அவ்வப்போது தன் கவிதைகள், சினிமா விமர்சனங்கள் என அவர் தன் ப்ளாகில் எழுதிக்கொண்டிருந்தாலும், அவரையும் அவரது ப்ளாக் பற்றியும் நான் மிக தாமதமாகத் தான் தெரிந்து கொண்டிருக்கிறேன்.  ஒரு சிலவற்றைப் படித்துமிருக்கிறேன். எதுவும் ஒரளவு கணிசமான எண்ணிக்கையில் ஒட்டு மொத்தமாகக் கையில் கிட்டுமானால் தான், எழுத்தின் பின் இருக்கும் ஆளுமையைப் பற்றியும். அந்த எழுத்து நமக்கு பரிச்சயப்படுத்தும் உலகு பற்றி ஏதும் சித்திரமும் பதிவும் நமக்குக் கிடைக்கும்.

Continue Reading →

கவிதை: காடு வளம் பேணு!

கவிதை வாசிப்போம் வாருங்கள்!

காடு வளந்தன்னை கண்போன்றுக் காக்கின்ற
நாடு வளங்கொள்ளும் நற்பேறு –கூடும்
அதுவல்லா மண்மேல் அழிகின்ற வித்து
மெதுவாகக் கொல்லும் எமை.

காயும் இயற்கைக் கனலால் உயிரெல்லாம்
ஓயும் தருணத்தை உண்டாக்க  -நோயும்
நொடியுமாய் நொந்து நுடங்கிடும் நீயோர்
கொடிநாட்டு தோன்றும் வனம்.

Continue Reading →

திரும்பிப்பார்க்கின்றேன்: ஆக்க இலக்கியத்திலும் தமிழர் மருத்துவத்திலும் ஈடுபட்டுழைத்த இலக்கியத்தோழன் இளங்கோவன். பாரதியின் சேவகன் கண்ணன் – டானியலின் சேவகன் இளங்கோவன்

இளங்கோவன்முருகபூபதிகவியரசு  கண்ணதாசன்  பற்றி  ஒருசமயம்  கலைஞர்  கருணாநிதி கவிதை    எழுதியபொழுது ”  யார்  அழைத்தாலும்  ஓடிப்போகும்  செல்லப்பிள்ளை ”    என்று  வர்ணித்தார்.   எனக்கும்  இலக்கியத் தோழன் வி.ரி. இளங்கோவன்  குறித்து  நினைக்கும்தோறும்  அந்த வரிகள்   நினைவுக்கு  வருவது  தவிர்க்கமுடியாதது. கவிஞர்கள்   இயல்பிலேயே  மென்மையானவர்கள்தான்.  அதனால்  அவ்வப்பொழுது  எவருக்கும்   செல்லப்பிள்ளையாகிவிடுவார்கள். இளங்கோவனை  நான்  யாழ்ப்பாணத்தில்  சந்தித்த  காலப்பகுதியில் அவர்   சீனசார்பு  கம்யூனிஸ்ட்   கட்சியின்  முகாமிலிருந்தார். கொழும்பிலிருந்த   தோழர்  சண்முகதாசன்,   யாழ்ப்பாணத்திலிருந்த  மூத்த   எழுத்தாளர்  கே. டானியல்  மற்றும்  கட்சித்தோழர்  இக்பால் ஆகியோருடன்  மிக  நெருக்கமான  தோழமையுடன் இயங்கிக்கொண்டிருந்தார். இத்தனைக்கும்  இவர்  ஆயுர்வேதம்  படித்தவர்.   அத்துடன் பிலிப்பைன்ஸில்   நடந்த  ஆயுர்வேத  வைத்தியர்களின்  மாநாட்டிலும் கலந்துகொண்டவர்.   இயற்கை   வைத்தியத்துறையில்  பல நூல்களையும்   எழுதியிருந்தவர்.   மூலிகைகள்  பற்றிய நுண்ணறிவு கொண்டிருந்தவர். அத்துடன்  சிறுகதை,  கவிதை,  கட்டுரை,  பத்தி  எழுத்துக்கள், விமர்சனங்கள்   எழுதியவர்.  கட்சியின்  தொண்டனாகவே தோழர்களுடன்  ஊர்சுற்றி  பணியாற்றியவர்.  தனக்கென  ஒரு கிளினிக்கை   அவர்   யாழ்ப்பாணத்தில்   தொடங்கியிருந்தாலும் பெரும்பாலன  நேரங்களில்  அவர்  நோயாளருடன்  நேரத்தை செலவிடவில்லை.   அவரது  வாழ்க்கை   கட்சி  சார்ந்த தோழர்களுடனும்    இலக்கியவாதிகளுடனுமே   நகர்ந்தது.

இளங்கோவன்  கலை,  இலக்கியக் குடும்பத்திலிருந்து  வந்தவர். அவருடைய  அண்ணன்  மூத்த  எழுத்தாளர்  நாவேந்தன்.   துரைசிங்கம்   மற்றும் ஒரு  எழுத்தாளர்.  சட்டத்தரணி   தமிழ்மாறன் அரசியல்  ஆய்வாளர்.    இளங்கோவனின்  மனைவி  பத்மா  சிறுவர் இலக்கியம்  படைப்பவர்.  பல  நூல்களை   எழுதியிருப்பவர். இளங்கோவனின்   புதல்வி  ஓவியா  திரைப்படத்துறையில்  ஒரு எடிட்டர். 1983  ஆம்  ஆண்டு  தொடக்கத்தில்  எமது  முற்போக்கு  எழுத்தாளர் சங்கம்   நாடாளாவிய  ரீதியில்  பாரதி  நூற்றாண்டு  விழாவையும் பாரதி   நூல்கள்  கண்காட்சியையும்  ஈழத்து  எழுத்தாளர்களின் ஒளிப்படக்கண்காட்சியையும்  ஏற்பாடு செய்திருந்தது.  இக்கண்காட்சிக்குழுவில்   நான்   இருந்தேன்.  முதல்  விழா  கொழும்பில்  தொடங்கியது.

Continue Reading →