மனித வாழ்வில் கண்கள் தனியொருவனின் சொத்தாகும். இது இன்பம், துன்பம் சார்ந்த அழகியல்களை உடலியலால் சிலிர்க்கச் செய்கிறது. நல் நிமித்தக் காட்சிகளைக் கண்டு இன்பம் கொள்வதற்கும், துன்பக்காட்சிகளைக்கான விரைந்து செல்வதற்கும் கருவியாகப் பயன்படுகிறது. காட்சிப்படுத்துகிறது; நினைவூட்டுகிறது; என அனைத்துச் செயல்களிலும் உடலியல்பு கொண்டு இயங்குகிறது கண். ஆகையால் என்னவே! ஐம்புலங்களில் ஒன்றான கண்ணைப்பற்றி, ‘கண்விதுப்பிழிதல்’ எனக் கூறி ‘குறிப்பறிதலை’ இரண்டு முறை அதிகாரப்படுத்தியுள்ளார் வள்ளுவர்.
“காமத்துப்பாலில் அறக்கருத்துக்களை தொகைவகைப் படுத்திக் கூறும் அறங்கூறும் ஆசானாகக் காட்சித் தரவில்லை, கலையுணர்வு மிக்க கலைஞனாகத் தோன்றுகிறரர்.” என்று கு. மோகனராசு கூறுகிறர். கண்கள் மனிதனின் உடல் சார்ந்த அழகியல் வெளிப்பாடு. தனியொருவனின் அடையாளம், குடும்பம், சமூகம் என அனைத்துப் பகிர்வுகளையும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு படுத்தி இயங்கச் செய்கிறது. வள்ளுவர் காலச் சமூக சூழல்களில் இத்தகைய பின்அமைவு நிகழ்வுகளை உள்வாங்கிக் கொண்டு இனைப்புற வாழ்ந்ததால் குறிப்பறிந்து கண்ணிற்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார். முக்கியத்துவம் கொடுக்கப்ட்ட கண்களின் அழகியல் வெளிப்பாடு தனிநிலையிலே பெரிதும் இன்பங்களையும் இன்னல்களையும் சந்தித்திருக்கிறது. மேலும் களவு கற்பு வாழ்க்கையில் கண்ணின் வெளிப்பாடு எவ்வாறு வெளிப்பட்டுள்ளது. கண்ணை எந்தளவிற்கு ஆண்கள் பெண்கள் பயன்பாட்டுப் பொருளாகப் பயன்படுத்தியுள்ளனர்? குடும்பம், சமூக வாழ்வில் எந்தளவிற்கு கண்ணின் ஈடுபாடு இருந்துள்ளது என்பதைப் பற்றி ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.