நூல் அறிமுகம்: மானிடம் உயிர் வாழ்கிறது சிறுகதைத் தொகுதி பற்றிய கண்ணோட்டம்!

மானிடம் உயிர் வாழ்கிறது சிறுகதைத் தொகுதி பற்றிய கண்ணோட்டம்!எஸ். முத்துமீரான்நல்ல சிந்தனைகள் மனித மனதை வலுப்படுத்துகின்றன. அவ்வாறு தோன்றும் சிந்தனைகளை ஏனையோருக்கும் தெரியப்படுத்தும் பணியை ஒரு எழுத்தாளன் தன் எழுத்துக்களுக்கூடாக செய்கின்றான். உள்ளத்தில் தோன்றிய உணர்வுகள் ஏனைய வாசகர்களோடு சங்கமிக்கும் போது யதார்த்த வாழ்வியல் குறித்த உண்மையை அறிய அது காரணியாக அமைந்து விடுகின்றது. சிறுகதைகள் அப்பணியை செவ்வனே நிறைவேற்றுகின்றன. சொல்ல வந்த விடயத்தை ஆழமாகவும் நேர்த்தியாகவும் பாத்திரங்களினூடாக அல்லது கதாசிரியரே கதைசொல்லியாக திறம்பட சொல்லும் போது அச்சிறுகதை உயிர் பெறுகின்றது.

இவ்வாறான சிறுகதைகள் மண் வாசனை கலந்த மொழியில் வெளிவரும்போது அது மனதுக்குள் குதூகலத்தை ஏற்படுத்துகின்றது என்பது நிதர்சனம். இலங்கை எழுத்தாளர்களைப் பொறுத்த வரையில் விரல்விட்டு எண்ணிவிடக் கூடிய சிலரால் மாத்திரம்தான் அவ்வாறான மண்வாசனை மணக்கும் சொல்லாடல்களுடன் கூடிய படைப்புக்களைத் தர முடிகின்றது. அந்த வரிசையில் நிந்தவூரைச் சேர்ந்த சட்டத்தரணி முத்துமீரான் அவர்களின் மானிடம் உயிர் வாழ்கிறது என்ற சிறுகதைத் தொகுப்பு அவதானத் துக்குரியது.

இத்தொகுதியில் காணப்படுகின்ற சிறுகதைகள் கிராமிய மணம் கமழ்வதாகவும், யதார்த்தங்களை அப்படியே உள்வாங்கியும் எழுதப்பட்டிருக்கின்றமை கூடுதல் சிறப்பு. மனித வாழ்வோடு ஒன்றிணைந்தவற்றை சிறுகதைகளினூடாக படைப்பாக்கம் செய்வது முத்துமீரான் என்ற படைப்பாளிக்கு கைவந்த கலையாக அமைந்திருக்கின்றது. அதே போல கதைகளில் கதாசிரியரே கதைசொல்லியாக இருக்கின்றார்.

அவனொரு நேசமுள்ள மனிதன் (பக்கம் 23) என்ற சிறுகதையின் முக்கிய பாத்திரம் காதர் என்பவனாவான்.  கதாசிரியரின் வீட்டில் ஒரு ஊழியனாக செயற்பட்டாலும் அவனை எல்லோரும் தங்கள் குடும்ப அங்கத்தவனைப் போல்தான் நினைக்கின்றார்கள். மந்திரங்கள், பேய்கள், ஜின்கள் எல்லாவற்றிலும் அதிக நம்பிக்கையும் ஈடுபாடும் காதரிடம் அதிகமாகவே காணப்பட்டன. கண்ணுக்குத் தெரியாத ஜின்கள் அவனது கனவில் வந்து போவதாக சொல்லிக்கொண்டிருப்பான். அவ்வாறு வரும் ஜின்களில் ஒன்றுதான் சாதிக் ஜின். எனவே எப்போது பார்த்தாலும் ‘ஜின் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வார்’ என்று அடிக்கடி உச்சரித்துக்கொண்டிருப்பான். அவ்லியாக்கள், கூறாணிகள் எல்லாம் தனக்கு மிக நெருங்கியவர்களாக சித்தரித்துக்கொண்டிருப்பான். நல்ல உழைப்பாளியான அவன் கொடுக்கப்படும் எந்த வேலை என்றாலும் சலிக்காமல் செய்வான். மீன் வாங்கி வருமாறு அவனுக்கு பணிக்கப்பட்ட ஒரு சந்தர்ப்பத்தில் அவன் இவ்வாறு பதிலளித்திருப்பது இதழோரத்தில் சிரிப்பை வரவழைத்துவிடுகின்றது.

Continue Reading →